என் கைகளில் பாவத்தின் அறிகுறியும் ஜோனியின் மரணவாடையும் நிலைத்த சூன்யமாய் . . . . . கைகள் இரண்டையும் உதறிப் பார்க்கிறேன் ஜோனி நன்றியுணர்வுடன் என் கைகளைப் பற்றிக் கொண்டு நின்று கொண்டிருக்கிறது. ஜோனியின் வாழ்க்கையின் அரைகுறைகள் என் முதுகிலிருந்து பாவ அடையாளங்களாய் விரிந்துகொண்டிருக்கின்றன. இழந்த சக உயிருக்காக 6 வருடம் கழித்தும் நினைவு கூர்கிறேன். நாய் வளர்ப்பது என்பது நமது பால்ய காலத்தின் மிகப்பெரிய கனவு எனலாம். நாம் வளர்த்த செல்ல பிராணிகளின் வழி நமது பால்யத்தை மீட்டுணரலாம். அதிலும் நாய்கள் காட்டும் நன்றியும் அன்பும் , மனிதர்களோடு ஏன் இந்த இனம் மட்டும் இவ்வளவு நெருக்கமான உறவை வெளிப்ப்படுத்திக் கொள்கிறது என்ற வினாவும் எழுகிறது. சிறுவயது முதல் ஏதாவது ஒரு நாயின் மரணம் நம் வாழ்வின் நீங்க மறுக்கும் பதிவுகளாக பின் தொடர்ந்து வந்திருக்கும். நினைக்கும்போது அது வெறும் நாய்களின் பெயர்கள் அல்ல, அதையும் கடந்த நமது அன்பைப் பகிர்ந்து கொண்ட இன்னொரு உயிரின் அடையாளமாகவே நீள்கிறது. அன்புடன் கே.பாலமுருகன் |
Pages
▼
பத்து வருடங்கள் நாங்கள் வளர்த்த பாபு எனும் நாயின் மரணத்தை நினைத்துப் பார்க்க வைத்து விட்டது இந்தப் பதிவு, இறக்கும் தருவாயில் அது கண்களை அசைக்காமல் என்னையே பார்த்தபடியிருந்தது, அந்தப் பார்வை இன்னும் என் மனதில் இருந்து அகலவேயில்லை.
ReplyDelete