Pages

Saturday, March 26, 2011

கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் இளஞ்செல்வன் இலக்கிய விருதளிப்பு விழாவில் ஆற்றிய உரை

அந்த விழாவில் நான் ஆற்றிய உரையின் ஒரு பகுதி:

நேற்று (25.03.2011) மாலை மணி 4 போல கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கம் இரண்டு மலேசிய எழுத்தாளர்களுக்கு "எம்.ஏ இளஞ்செல்வன் விருது" விருது கொடுத்து கௌரவித்திருந்தது. எம்.ஏ இளஞ்செல்வன் மலேசிய நவீன இலக்கியத்தின் முக்கியமான படைப்பாளி எனத் தொடர்ந்து அடையாளப்படுத்தப்படுவதற்கு இந்த விருதளிப்பு ஒரு சான்றாகும் என இயக்கத் தலைவர் தெரிவித்திருந்தார்.

விருதைப் பெற்ற எழுத்தாளர் சீ.முத்துசாமி மண் புழுக்கள் எனும் நாவலின் மூலம் மலேசியாவின் முக்கியமான நாவலாசிரியராக அறியப்பட்டவர் ஆகும். தன் ஏற்புரையில் விருதுகள் என்பது நெடுந்தூரப் பயணத்தில் இருக்கும் ஓட்டக்காரனுக்குக் களைப்பு ஏற்பட்டால் அவனுக்கு வழங்கப்படும் உற்சாகப் பானம் எனக் குறிப்பிட்டிருந்தார். வயது வித்தியாசம் பாராமல் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்க தான் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

எம்.ஏ.இளஞ்செல்வன் பற்றி உரையாற்ற சிங்கப்பூரிலிருந்து விமர்சகரும் முனைவருமான ஸ்ரீ லக்சுமி வந்திருந்தார். எம்.ஏ இளஞ்செல்வன் பற்றிய குறிப்புகளையும் அவரின் படைப்புகள் குறித்தும் சிறிய உரை நிகழ்த்தினார். மலேசியாவின் இலக்கிய வரலாற்று ஆய்வுகளில் தொடர்ந்து இளஞ்செல்வனின் குறிப்பு இல்லாமல் போவது ஆச்சர்யமாக இருப்பதாகக் குறிப்பிட்டார். மா.இராமையா எழுதிய ஆரம்பக்கால இலக்கிய வரலாற்றில் கூட இளஞ்செல்வன் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லாமல் இருந்ததைத் தெரிவித்தார்.

ந. மகேசுவரியின் உரைக்குப் பிறகு கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் பொதுக்கூட்டம் இனிதே நடைப்பெற்று முடிந்தது.

கே.பாலமுருகன்


http://www.youtube.com/watch?v=DJhoArc5S1Y 


2 comments:

  1. vaalthugal sir... keep on writing..

    *m.a elanselvan avargalai patrri terinthu kolle vizhaigiren... nandri

    ReplyDelete
  2. vaalthugal sir... thangal payanam thodaratum...

    * mr. m.a elanselvan patrri terinthu kolle vizhaigiren.... nandri.

    ReplyDelete

கருத்து