Pages

Monday, November 24, 2014

சிறுகதை: சில்க் சிமிதா


சிறுகதை: சில்க் சிமிதா

நாலுக்கு எட்டு அடி அறை. வெய்யில் அதிகம் சுடாமல் இருக்க கருப்புக் கண்ணாடி. ஒரு நாற்காலி. பிறகு காசு இயந்திரம். கார்ட் செருகி. ஒரு தன்முணைப்பு வாசகம். ஒரு சில்க் சிமிதா புகைப்படம்.

1

சில்க்குனா ரொம்ப பிடிக்குமா?”
வேற யாரையும் தமிழ் சினிமாலே பெருசா பாராட்ட முடில
கவர்ச்சித்தான் காரணமா?”
இல்லை. தெரில. அதுக்கும் மேல ஓர் ஈர்ப்பு
செத்துட்டனால பரிதாபமோ?”
சே சே. தமிழ் சினிமால ஹீரோயின் சாவறது வழக்கம். ஹீரோ சாவற வயசு வந்தாலும் ஹீரோதானே
ஹீ ஹீ ஹீ...சரியா சொன்ன. இரஜினி தாத்தா?”
ஹா ஹா ஹா...16 வயசுலே இன்னொரு ஐஸ்வர்யா ராய் கேக்குதாம்
டேய்ய்ய். இரஜினி இரசிகர்கள் கொந்தளிப்பாங்க
ஹா ஹா. இன்னும் நம்ப ஊர்ல பாலாபிஷேகம் பண்ணும் பழக்கம்லா வர்ல ப்ரோ

2
சுப்ப்ப்ப்ப்ப்
ஆங்ங்ங்ங்...சொல்லு மச்சான்...டேய்ய்ய் எப்படியாச்சம் ஒரு 10 000 வரைக்கும் கிடைச்சாலும் வட்டி சரியா கட்டிருவேன் மச்சான். தேடிப் பாரேன்...டேய்ய்ய்...எங்க மாமா...”
சுப்ப்ப்ப்ப்ப்ப்


3
சுப்ப்ப்ப்ப்ப்ப்
பாடல்: “sesaat kau datang...sesaat kau hilang...kewujudan dirimu penuh misteri”
சுப்ப்ப்ப்ப்

4
சுப்ப்ப்ப்ப்ப்ப்
ஏன்மா உனக்கு இந்த வேல? நான் வேணாம்னு சொன்ன்னா? என்ன மா இப்படியெல்லாம் பண்றீங்க? நாந்தான்...”
சுப்ப்ப்ப்ப்

5
சுப்ப்ப்ப்ப்ப்ப்
மூஞ்சே பேக்கணும்...விட்டாச்சிலே அதான்...நீ போனை அவன்கிட்ட கொடு, நான் இப்ப பேசுறன்...என்னா?...”
சுப்ப்ப்ப்ப்ப்ப்

6
சுப்ப்ப்ப்ப்ப்ப்ப்
“Eh tambi, sini pendang punya exit berapa Jauh?”
“lagi 5 Kilometer”
“okkk. Terima kasih ah”
சுப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

7
சுப்ப்ப்ப்ப்ப்ப்
பாடல் : ஒருநாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும்...உயிராலும்...”
சுப்ப்ப்ப்ப்ப்ப்

8
சுப்ப்ப்ப்ப்ப்ப்ப்
தூங்காதே ஏஞ்சிரு. சும்மா காடிலே வரும்போது தூங்கிட்டே இருக்க? யேன்...”
சுப்ப்ப்ப்ப்ப்ப்


9
சுப்ப்ப்ப்ப்ப்
இப்பயே சொல்லுங்கடா. தெறிக்க விடுவோம். ப்ரோ...நம்பலாம் ஜாலான்லே இறங்கனும்னா தெரியும்லே...ப்ரோ இருங்க கார்ட்டு வாங்கிட்டுச் சொல்றேன்...ஆங்ங்ங்... ப்ரோ, இப்ப கேளுங்க...”
சுப்ப்ப்ப்ப்ப்

10
சுப்ப்ப்ப்ப்ப்ப்
வீட்டு வேலைக்குத்தான் வந்துச்சி...இப்ப பாரு. தேடிப் போயி கூப்டணும்...எல்லாம் நீ விட்ட இடம்கா, அதான்...அன்னிக்கே...”
சுப்ப்ப்ப்ப்ப்ப்

11
சுப்ப்ப்ப்ப்ப்ப்ப்
அமைதி.
சுப்ப்ப்ப்ப்ப்ப்ப்

12
சுப்ப்ப்ப்ப்ப்ப்ப்
புன்னகை.
“sudah Makan tambi?”
சுப்ப்ப்ப்ப்ப்ப்ப்

13
சுப்ப்ப்ப்ப்ப்ப்ப்
ஆங்ங்ங் அப்படியே தொறந்து வச்சிட்டு வாங்க வாங்கனு நம்பலைலாம் கூப்டறானுங்க. போங்க. என்னக்கா பேசற? 10 கெடைச்ச தமிழ பிள்ளைங்களுக்கே...”
சுப்ப்ப்ப்ப்ப்ப்ப்


14
சுப்ப்ப்ப்ப்ப்ப்
“Bull shit...bull shit.. you dare to talk? Yes..ye..”
சுப்ப்ப்ப்ப்ப்ப்
15
சுப்ப்ப்ப்ப்ப்ப்ப்
சும்மா இருங்க. கார்ட் வாங்குங்க முதல்ல...”
சுப்ப்ப்ப்ப்ப்ப்ப்

16
சுப்ப்ப்ப்ப்ப்ப்
இங்க பாரு. பெரும்பாலும் பொம்பளைங்கத்தான் இங்க வேலைக்கு இருப்பாங்க...வணக்கங்க... அதான் பாத்தியா?...”
சுப்ப்ப்ப்ப்ப்ப்

17
சுப்ப்ப்ப்ப்ப்
“ha ha ha. Nie yao shen me? Wo yao ca fei...”
சுப்ப்ப்ப்ப்ப்ப்

18
சுப்ப்ப்ப்ப்ப்ப்
வானொலி: “சொல்லுங்கமா...நீங்க கேட்டுக்கொண்டிருப்பது தி.எச்.ஆர் ராகா...ஹா ஹா
சுப்ப்ப்ப்ப்ப்ப்

19
சுப்ப்ப்ப்ப்ப்ப்
தொடர் தும்மல்.
சுப்ப்ப்ப்ப்ப்ப்


20
சுப்ப்ப்ப்ப்ப்
ஏன் இப்ப? அவனுக்குத் தெரியாதா? சொல்ல வேண்டியதுதானே...வாயிலெ என்னா...”
சுப்ப்ப்ப்ப்ப்

21
சுப்ப்ப்ப்ப்ப்
 “சரி சயாங்...நம்ப அவ்ள சீக்கிரம் விட்டுக் கொடுத்துர முடியுமா? இதெல்லாம் தெரியும்தானே நடக்கும்ணு
சுப்ப்ப்ப்ப்ப்

22
சுப்ப்ப்ப்ப்ப்
“Maaa...you know ah what Thanessa ask to dad...she...”
சுப்ப்ப்ப்ப்ப்

23
சில்க் சிமிதாவையேதான் பாத்துக்கிட்டு இருப்பியா?”
தெரில.. அந்தச் சிரிப்பு...மனசுக்கு இதமா இருக்கு
கடுப்பா இல்ல இங்க? ஒன்னுமே இல்லையா?”
ரேடியோ இருக்கு. பாட்டு இருக்கு...பிடிக்கலைனா அடைச்சிட்டுத் தூரமா பாப்பேன்
வர்றவங்கலாம் எதும் பேச மாட்டாங்களா?”
ஹா ஹா...இங்க யாரும் யார்கிட்டயும் பேசறெ மாதிரி இல்ல. நைட் வேலைனா யாராச்சம். எப்பவாச்சம். ஒரு அவசரமான சிரிப்பு. ஹா ஹா, பழகிருச்சி ப்ரோ

22
சுப்ப்ப்ப்ப்ப்
கார்ட் பிளிஸ்
சுப்ப்ப்ப்ப்ப்ப்

பின்குறிப்பு: சுப்ப்ப்ப்ப்ப்ப்கார் கண்ணாடி திறந்து மூடும் சத்தம்

கே.பாலமுருகன்




No comments:

Post a Comment

கருத்து