1
ஒரு முதியோர் இல்லத்தில்
பிறந்த கிழவனாக
விடப்பட்டேன்.
காலம் பின்னோக்கி
நகர்கையில்
என் உடலில் இருந்த
முதுமை மெல்ல
உதிர துவங்கின.
உடனிருந்தவர்களின் காலம்
அவர்களைக் கடத்தி செல்கையில்
எனக்கான காலம்
மிகப் பழைய புள்ளியிலிருந்து
மலர்ந்து கொண்டிருந்தன.
தோல் சுருக்கம்
களைந்து
தளர்ந்த உடல்
வீரியமடைந்தன.
உறுப்புகள் பசிக்கொள்ள
என் புறத்தோற்றதைத் தாவி
கடந்தேன் புதுபுது
வயதுகளை.
2
எப்பொழுதும் பழக்கமாகிபோன
ஒரு விருந்தாளி வீடுவரை
வந்துவிடும்.
காலையில் விழித்ததும்
நேற்றைய இரவு முழுவதும்
அந்த விருந்தாளி கதவைத் தட்டி
தன்னுடைய வருகையை
உறுதி செய்திருக்கும்.
மரணம்.
முதியோர் இல்லத்தின்
மிக சாமர்த்தியமான விருந்தாளி
வேறு யாராக இருக்க முடியும்.
-தொடரும்-
கே.பாலமுருகன்
ஒரு முதியோர் இல்லத்தில்
பிறந்த கிழவனாக
விடப்பட்டேன்.
காலம் பின்னோக்கி
நகர்கையில்
என் உடலில் இருந்த
முதுமை மெல்ல
உதிர துவங்கின.
உடனிருந்தவர்களின் காலம்
அவர்களைக் கடத்தி செல்கையில்
எனக்கான காலம்
மிகப் பழைய புள்ளியிலிருந்து
மலர்ந்து கொண்டிருந்தன.
தோல் சுருக்கம்
களைந்து
தளர்ந்த உடல்
வீரியமடைந்தன.
உறுப்புகள் பசிக்கொள்ள
என் புறத்தோற்றதைத் தாவி
கடந்தேன் புதுபுது
வயதுகளை.
2
எப்பொழுதும் பழக்கமாகிபோன
ஒரு விருந்தாளி வீடுவரை
வந்துவிடும்.
காலையில் விழித்ததும்
நேற்றைய இரவு முழுவதும்
அந்த விருந்தாளி கதவைத் தட்டி
தன்னுடைய வருகையை
உறுதி செய்திருக்கும்.
மரணம்.
முதியோர் இல்லத்தின்
மிக சாமர்த்தியமான விருந்தாளி
வேறு யாராக இருக்க முடியும்.
-தொடரும்-
கே.பாலமுருகன்
அடா... அடா.. அடா...!! உண்மையாலுமே அருமையான கதைங்க....!! போன மாசம்தான் பார்த்தேன் ...!!! டைரக்டர் டேவிட் ஃபிந்சரிந் அபார சிந்தனையின் படைப்பு.....!!! ஒரு குழந்தை கிழவனாக பிறந்து...... படிப் படியே வயது குறைந்து ... தன மனைவியின் மடியில் குழந்தையாக உயிரை விடுவது .... கண்ணீர் வந்து விட்டது......!!!
ReplyDeleteதன தந்தையால் கைவிடப் பட்டு , ஒரு நீக்ரோ தாயால் வளர்க்கப் படும் ஒரு மனிதனின் கதை.....!!!! ஒரு கிழவனை காதலிக்கும் சிறுமி ( நட்பு கலந்த காதல் ) அவன் இளைஞன் ஆனவுடன் அவனை மனம் முடித்து வாழ்வது...!!!!! ஸ்கிரீன் ப்ளே எரிக் ரோத் பட்டைய கெலப்பீருக்குராரு .........!!!!!
வித்தியாசமான சிந்தனையின் படைப்பு...!!!!
அருமையான பதிவு....!! வாழ்த்துக்கள்....!! வாழ்க வளமுடன்.....!!!!!!
வாங்க லவ்டேல். பதிவுக்க நன்றி. உண்மையில் அருமையான படம்தான். அதனால்தான் ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது
ReplyDeleteஇரண்டு கவிதைகளும் மிக மிக அருமையான கவிதை.
ReplyDelete|உடனிருந்தவர்களின் காலம்
அவர்களைக் கடத்தி செல்கையில்
எனக்கான காலம்
மிகப் பழைய புள்ளியிலிருந்து
மலர்ந்து கொண்டிருந்தன|
இவ்வரிகள் சிறந்தது.
(இப்படம் அப்பவே பார்த்தது. நடிப்பு, திரைக்கதை, ஒளிப்பதிவு என்று ஒவ்வொன்றையும் சிறப்பாக செய்திருப்பார்கள். ஒரு கற்பனையான கதை. அதை நம்பும் படியும் புது அனுபவத்தை உண்டாக்குவதுமே அப்படத்தின் வெற்றி)
வாங்க நண்பரே. ஆ.முத்துராமலிங்கம். பதிவுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteநல்லா இருக்கு பாலு... பகிர்விற்கு நன்றி...
ReplyDeleteஅருமையான கவிதை. அந்த படமும் நல்ல படம். ஒஸ்காரை தவறவிட்ட படம் :-)
ReplyDelete