Tuesday, April 7, 2009

நவீன இலக்கியத்தை நோக்கிய வாசகக் குரலும் ஒரு கோப்பை தேநீரும்


நவீன இலக்கியத்தை நோக்கிய வாசகக் குரலும் ஒரு கோப்பை தேநீரும்


அநங்கம் இலக்கிய வட்டம் மிக விரைவில் இயங்கவுள்ளது. அநங்கம் இதழின் ஆசிரியர் குழுவும் அதன் சார்ந்த இளைய எழுத்தாளர்களும் ஒன்றாக இணைந்து இலக்கிய வட்டத்தை வளர்க்க முடிவெடுத்துள்ளோம்.

முதல் கட்டமாக “ஒரு கோப்பை தேநீர்” என்கிற இலக்கிய கலந்துரையாடல் திட்டம் வெகுவிரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்தக் கலந்துரையாடலின் வழி பல இளம் எழுத்தாளர்களை அடையாளம்காணவும், நவீன இலக்கியத்தை அறிமுகப்படுத்தி அவர்களின் வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவும் இந்த அநங்கம் இலக்கிய வட்டம் துணைப்புரியும்.

ஒரு கோப்பைத் தேநீர்

நாட்டின் மூத்த எழுத்தாளர்களுடன் ஒரு நாள் சந்திப்பை ஏற்படுத்தி அவர்களுடன் அன்றைய பொழுதை ஒரு கலந்துரையாடலின் வழியாக வழிநடத்திச் செல்ல வகைப்படுத்தியுள்ளோம். அவர்களுடன் இருக்க போகும் அந்த ஒரு நாளில் குறிபிட்ட அந்த மூத்த எழுத்தாளரின் அனுபவங்களையும் அவரின் வாசிப்பு அனுபவங்களையும், நவீன இலக்கியம் குறித்த அவரின் புரிதல்களையும் மேலும் அவரின் படைப்புகள் குறித்த கலந்துரையாடல்களையும் இருவழி தொடர்பாகப் பகிர்ந்து கொள்ளப் போகிறோம். ஆர்வமுள்ள இளம் வாசகர்கள், எழுத்தாளர்கள் இதில் ஈனைந்து கொண்டால் இந்தத்திட்டத்தை மலேசிய முழுவதும் கொண்டு செல்லலாம். இப்போதைக்கு 10 பேர் அடங்கிய ஒரு குழு தயாராக உள்ளது. விரைவிலேயே ஒரு கோப்பை தேநீர் தொடங்கப்படும். நவீன இலக்கியத்தை நோக்கிய வாசகக் குரலாக வாசிப்பின் தனித்துவத்தை உணர்ந்து கொள்ள இந்தக் கலந்துரைடாடலின் வழி பல மூத்த எழுத்தாளர்களை நேருக்கு நேர் சந்தித்து உரையாட இதுவே வாய்ப்பு.

ஜூன் மாதத்தில் 8ஆம் திகதி தொடங்கி 12ஆம் திகதிவரை எங்கள் ஒரு கோப்பைத் தேநீர் கலந்துரையாடல் வட்டம் கலந்துரையாடலைச் சென்னையில் ஏற்பாடு செய்துள்ளது. மலேசிய இளம் தலைமுறை எழுத்தாளர்கள் கலந்து கொள்ளும் இந்தக் கலந்துரையாடலில், பிரபல தமிழக எழுத்தாளர்கள் கோணங்கி, அய்யப்பன் மாதவன், நவநீதன், மைஅறை இதழாசிரியர் என்று பெரிய வட்டத்தில் இந்தக் கலந்துரையாடல் நிகழ்த்தப்படவுள்ளது. ஆர்வமுள்ளவர் இந்தில் கலந்து கொள்ளலாம். இலக்கிய பகிர்வாக மட்டுமே எளிமையான முறையில் இந்தச் சந்திப்பு நடைபெருவதோடு வாசிப்பைப் பெருக்கிக் கொள்ள தரமான இலக்கிய புத்தகங்களையும் சென்னையில் வாங்கிக் கொள்ளலாம்.

தொடர்புக்கு: அநங்கம் இதழாசிரியர்
கே.பாலமுருகன்
016-4806241 (bala_barathi@hotmail.com)