Thursday, October 27, 2011

ஏழாம் அறிவு – முதல் பார்வை


படம் வெளிவந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆகியிருப்பதால் படத்தை முழுக்க விமர்சித்து பார்வையாளனுக்குக் கிடைக்கவிருந்த அனுபவத்தை நான் வீணாக்க விரும்பவில்லை. ஆகையால் இதை ஒரு சினிமா பார்வையாக மட்டும் மேலோட்டமாக எழுதலாம் என முடிவெடுத்துள்ளேன். காலத்தின் தேவைக்கருதி செயல்படுவதன் மூலம் சில சமயங்களில் சொற்பமாகப் பேசிச் செல்வதே நடைமுறைக்கு ஏற்புடையது.

‘வாகைச் சூட வா’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு சமர்ப்பண வகை சினிமாவைப் பார்த்தேன். ஆகையால் இனி ‘சமர்ப்பண’ வகை சினிமாக்கள் அதிகமாக வரக்கூடும் என அனுமானிக்க முடிகிறது. தமிழர்களின் மையமான பிரச்சனையை அடையாளங்கண்டு, அதன் அனைத்துவிதமான அரசியலையும் புரிந்துகொண்டு சினிமாவின் மூலம் அதைப் படைப்பாக்கி அந்தப் பிரச்சனையுடன் தொடர்புடையவர்களுக்கே அதைச் சமர்ப்பணம் செய்து சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் முயற்சி. இதுவே சமர்ப்பண வகை சினிமா. ஆனால் தமிழர்கள் பிரச்சனை என மட்டுமில்லாமல் இது விசாலமான எல்லையைக் கொண்டது. 

சமூகனத்தின் கவனத்தை ஈர்க்கும் செயலில் இரண்டு வகையான நோக்கங்கள் இருக்கக்கூடும். ஒன்று அந்தப் படத்தை இலாபகரமாக ஓடச்செய்வது, மற்றொன்று சமூகத்திற்கு விழிப்புணர்ச்சியை வழங்குவது ஆகும். இதில் எது மேலோங்கி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதன் மூலமே நாம் அந்தச் சினிமாவை இயக்கியக் குழுவை அணுக ஏதுவாக இருக்கும்.

ஏ.ஆர் முருகதாஸ் கஜினி படத்தை இந்தியில் மெகா ஹிட் ஆக்கி 200 கோடியை ஈட்டித் தந்தவர். அவருக்கு வெறும் பணம் ஈட்டுவது நோக்கமாக இருக்காது என நம்புகிறேன். ஆகையால் முழுக்க ‘ஏழாம் அறிவு’ படத்தின் மூலம் சமூகத்திற்கு மூன்றுவகையான விளைவுகளை ஏற்படுத்த முயன்றுள்ளார். 

1.போதி தர்மன் எனும் வரலாற்று அடையாளத்தைப் பற்றிய போதுமான தகவல்கள். 2.மரபணு தொடர்பான சில தகவல்கள் ( சாதரண மக்களால் சட்டெனப் புரிந்துகொள்ள முடியாத நிலை இருந்தாலும் அறிவியல் தொடர்பான சில கேள்விகளை எழுப்பும்)- மரபணு தொடர்பாக ஆங்கிலத்தில் சில படங்கள் வந்துவிட்டன. 3.பேரினவாதத்தால் அழிக்கப்படும்/அழிக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பான  கோபத்தையும், தன் சுய அடையாளத்தைத் தெரிந்துகொள்ளாமல் மேற்கத்திய அதிகாரங்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் சமீபத்திய தமிழனின் அடிமைப்புத்தியின் மீதான கோபத்தையும் படத்தின் வழி எல்லாரின் மீதும் செலுத்தப்படுகின்றன.

இந்த மூன்றையும் நம்மால் தொடர்ந்து உரையாட முடியும். படத்தில் வழங்கப்பட்டிருக்கும் பலவகையான தகவல்கள் ஒவ்வொன்றும் மிகை கற்பனை எனலாமா? அதன் வரலாற்று நம்பகத்தன்மை என்ன? அல்லது வரலாற்றின் மூலம் தமிழனின் மேன்மையை மீட்டுணர இதில் வரும் சில புனைவுகளைத் தூண்டுதலுக்கான வேலையாக மட்டும் எடுத்துக்கொள்ளலாமா? ஆனால் படத்தின் கதையைவிட போதி தர்மன், மரபணு, வல்லரசு நாடுகளின் அதிகார சதிகள், வரலாறு, அறிவியல், அரசியல் என எல்லாவற்றையும் ஆய்வு செய்து படத்தில் வழங்குவதற்காகவே அதிக சிரத்தையும் உழைப்பையும் மேற்கொண்டுள்ளார்கள். ஆக தாராளமாக முருகதாஸ் நல்ல ஆவணப்படம் வழங்க முயற்சிக்கலாம். ஏழாம் அறிவு படமும்கூட 80 சதவீதம் ஆவணப்படத்திற்கான முயற்சிகள்தான்.

மேலும் இப்படத்தில் சூர்யாவின் உடல் கட்டமைப்பு ஒரு மூலதனம். வரலாற்று நாயகனுக்குரிய உடல் கட்டுகள், முக்கியமாக தற்காப்பு கலையின் வல்லுனரான போதி தர்மன் எனும் ஒன்றை உயிர்ப்புடன் மீட்டெடுக்க வேண்டியக் கடப்பாடு. இவை இரண்டும் சூர்யாவின் உடல் அமைப்பையே நம்பியிருக்கிறது. அவரும் கடுமையாக உழைத்துள்ளார். ஆனால் அதன் வெளிப்பாடு சொற்ப அளவே படத்தில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது.

நம்முடைய முன்னோர்களால் சொல்லப்பட்ட கற்பிக்கப்பட்ட அனைத்தையும் மதம் நம்பிக்கை எனச் சொன்னதை நிறுத்திவிட்டு, அவை அனைத்திலும் உள்ள அறிவியலை உலகிற்கும் நம் சமூகத்திற்கும் உணர வைக்கவேண்டுமேன்று சூர்யா கடைசி நேர்காணலில் சொல்கிறார். இது முழுக்க சமூகத்தை நோக்கிய அரைக்கூவல் என்பதனுடன் படம் ஒரு ஆவணப்படத்திற்கான அடிப்படை தகுதிகளைப் பெற்றுவிடுகிறது.

கடைசியில் என்னத்தான் சொல்ல வர்றீங்க? படத்தைப் பற்றி நான் எந்தத் தீர்ப்பும் சொல்லும் தருணம் இதுவல்ல. முதலில் படம் பரவலாகப் பார்க்கப்படட்டும். பிறகு இதைப் பற்றி மேலும் விவாதிக்கலாம், கலந்துரையாடலாம். எல்லாம் சினிமாக்களும் ஆய்வு செய்து எடுக்கப்பட வேண்டியதுதான். ஆனால் அந்த ஆய்வு சினிமாவின் புனைவைத் தோற்கடித்துவிட்டு முதண்மை பெற்றுவிடக்கூடாது. எல்லாம் சினிமாக்களும் ஏதோ ஒருவகையில் மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். ஆனால் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதை மட்டும் செய்துவிட்டுப் போய்விடக்கூடாது. எல்லாம் சினிமாக்களும் ஏதோ சில தகவல்களைத் தரவேண்டியது நியாயம்தான். ஆனால் தகவல்களைத் திணிப்பதையே முதண்மையாகச் செய்துவிடக்கூடாது.

-பார்வை தொடரும்-

கே.பாலமுருகன்

5 comments:

Philosophy Prabhakaran said...

வாகை சூட வா படத்தையும் ஏழாம் அறிவையும் ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது...

கே.பாலமுருகன் said...

@ Prabakaran:

i am not comparing the whole cinema of 7am ariwu with vaagai chudawa. can you understand?

1. vaagai chudawa is samarppanam to kulanthai tolilaalargal (kind of issue)

2. 7am ariwu is samarppanam to alikkapaae tamilargal, alikke mudiyaate tamilargal (kind of issue also)

i just compared both cinema in this types of samarppanam. They announced very directly that these movies samarppanam to someone. thats all my comparism. not with story line or other things. Both cinema happening in different platform.

குமரன் said...

கருணாநிதியின் பேரன்களும், உறவுகளும் தந்த எல்லா படங்களும் கல்லா கட்டுகிற நோக்கில் எடுக்கப்பட்டவை தான்.

இப்பொழுது படம் டிக்கெட் விற்பனை பெரும்பாலான திரையரங்குகளில் தாறுமாறாக விற்கிறார்கள். நான் படம் பார்க்க, சில நாட்களாகவது ஆகும்.

படத்தின் கதையும் கூட கவனித்தவரையில், பக்கா கமர்சியல் தான். முருகதாஸ் இல்லாத நோக்கத்தை எல்லாம் நாம் கற்பித்துகொள்கிறோம் என கருதுகிறேன்.

மற்றபடி, விரிவாக படம் பார்த்த பிறகு எழுதுகிறேன்.

கே.பாலமுருகன் said...

@nonthakumaran: its just my 1st view. still have time for more views. I am realy dont bother Murugadass. It'z Just my prediction about film manners.

Kanni Koil said...

7 am Arivu is a very goog movie