“படைப்பிலக்கியத்தின் குரல் கூர்மையானது”
1.
உங்களுக்குள் ஓர் இலக்கியவாதி
இருப்பதை எப்போது உணர்ந்தீர்கள் பாலா?
பதில்: என்னுடைய
இலக்கிய செயல்பாடு 15 வயதிருக்கும்போது நயனத்தில் பிரசுரமாகிய ஷோபியின் உண்மை கதையின்
வாசகனாக இருக்கும்போதே தொடங்கிற்று எனத்தான் சொல்ல வேண்டும். வெள்ளிக்கிழமை வந்ததும்
நயனம் இதழ் வாங்குவதற்காகச் சைக்கிளில் நகரத்தை நோக்கி பயணிப்பேன். ஆனால் அப்பொழுது
நான் ஒரு வாசகனாக மட்டுமே இருந்தாலும்கூட கதை மீதான ஆர்வம் மிகுதியாக இருந்தது. கதைகளைத்
தேடி அலைந்திருக்கிறேன். புனைவு மீதான அழுத்தமான ஈடுபாடு எனக்குள் இருக்கும் ஓர் இலக்கியவாதியை
மெல்ல வளர்த்திருக்கிறது. 2004ஆம் ஆண்டில் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் சேர்ந்த பிறகு
சிறுகதைகள் எழுதி வெற்றிப்பெற்று இலக்கிய வெளிக்குள் எனக்கொரு அடையாளத்தை ஏற்படுத்திக்
கொண்டேன். கல்லூரியில் நடைப்பெற்ற ‘இளவேனில்’ நூல் வெளியீட்டு விழாவில் என் முதல் சிறுகதைக்கான
பரிசும் அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றது. என்னுடைய தமிழ் விரிவுரையாளர் திரு.ப.தமிழ்மாறன்
அவர்களே எனக்குள் இருக்கும் எழுத்தாற்றளுக்கு வலு சேர்த்தவர். எனக்குள் நான் கண்டடைந்த
மாற்று மனம் நிஜ உலகிற்குள்ளிருந்து புனைவை நோக்கி அப்பொழுதிலிருந்தே செயல்படத் துவங்கியது.
2.
உங்களுடைய இலக்கியப் பயணத்திற்கு
தங்களின் குடும்ப சூழல் உறுதுணையாக (இப்போதும் அப்போதும்) இருந்ததா?