Thursday, April 23, 2009

எழுத்துலகில் தொடர்ந்து போராடுங்கள்

அன்பின் பாலமுருகன்,

தங்களின் சிறுகதையை ரசித்துப் படித்தேன். தொடர்ந்து பல நல்ல படைப்புகளை மலேசிய மண்ணில் ஈன்றெடுக்க எனது வாழ்த்துகள்.

அண்மைய காலமாகவே தங்களின் பெயரை கலங்கடிக்கும் வகையில் இணைய ஊடகங்களில் காழ்ப்பு மிகுந்த விவாதங்கள் தலையெடுத்து வருகின்றன. இலக்கிய சர்ச்சை பலருக்கு நன்மையில் முடியும். ஆனால் தனிமனித தாக்குதல்கள் என்றும் யாருக்கு பயனளிக்க போவதில்லை.

தங்களுடைய படைப்புகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவன் என்கிற முறையில் ஒரு சிறிய வேண்டுகோள்.

மனம் தளர வேண்டாம். எழுத்துலகில் தொடர்ந்து போராடுங்கள். வீண் வம்புகளில் நீங்கள் பங்கெடுத்துக் கொள்ள வேண்டாம். தூற்றுவார் தூற்றட்டும்! எழுத்து, பேச்சைவிட கர்மவீரராக இருந்து செயலாற்றுங்கள். உங்கள் மனசாட்சிக்கு சரியென்பதை எண்ணம், எழுத்துகளில் கொண்டுவர துணியுங்கள். பிறரின் தூற்றுதலையும் போற்றுதலையும் உள்வாங்கிக் கொண்டு சுயத்தை இழந்து விடாதீர்கள்!

உங்களை பாலமுருகனாகவே பார்க்கவிரும்புகிறோம். பிறர் வடித்த / வடிக்க நினைக்கும் சிலையாக அல்ல!

என்னைப் போன்ற வாசகர்கள் என்றும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்!

வெற்றி உங்களுக்கே....

அன்புடன்,
கி.சதீசு குமார்

மிகுந்த வருத்தங்களுடன்

அஞ்சடியில் வெளியான ம.நவீனின் தர்கங்களுக்கு எதிர்வினையாற்யிய எனது இரு பதிவுகளிலிருந்தும் சில காத்திரமான கோபத்தில் வெளிவந்த அவதூறு சொற்களை எனது வலைப்பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டேன். சில விசயங்களுக்காக அதில் உள்ள பல விசயங்களையும் சேர்த்து நீக்கியதில் வருத்தகங்கள் ஏற்படப்போவதில்லை. சில நேரங்களில் நாம் சொல்லவரும் செய்தி சொல்லத ஒன்றையும் உள்ளடக்கியிருப்பதை உணர்ந்தும் அறிந்திருந்தும் அந்த நேரத்து அமைதியின்மையில் இன்று பிற எழுத்துக்கள் முன் என்னை அடித்துச்சென்றுவிட்டது.

இனி வருந்துவதாகவோ மன்னிப்பு கேட்பதிலோ அர்த்தம் ஒன்றும் இருக்கப்போவதில்லை. எனது எழுத்து சார்ந்து தர்கங்களுக்கு மட்டும் என்னை ஒருமுகபடுத்த அதீத காலம் தேவைப்படலாம். இனி அதற்கான சிந்தனைகள் மட்டுமே எனக்குள்.

மிகுந்த வருத்தங்களுடன்
பாலமுருகன்