Friday, October 28, 2011

ஆஸ்திரேலிய சினிமா: திருடப்பட்டத் தலைமுறை (Rabbit Proof Fence

1500 மைல்
நிலத்தை எரிக்கும் வெயிலை மிதித்தப்படி
ஊர் தேடி அலையும் பறவைகள் போல
வேலிகளைக் கடக்க முடியாத ஒரு பயணம்”

பிலிப் னோய்ஸ் 2002 ஆம் ஆண்டு இப்படத்தை இயக்கி வரலாற்றில் ஒளிந்திருந்த சில உண்மைகளை உலகிற்குக் கொடுத்தார். சமீபத்தில் பினாங்கு மாநிலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் போர் அருங்காட்சியகத்துக்குச் சென்றபோது, எப்படிப் பிரிட்டிஷாரால் மலாயாவைப் பிரிக்கும் எல்லையாகப் பயன்படுத்தப்பட்ட இடம், ஜப்பானிய காலக்கட்டத்தில் சிறையாகவும் வதை செய்யும் இடமாகவும் மாற்றப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது. அங்கிருக்கும் சுவர்களில் துப்பாக்கி குண்டுகளும் மரணித்தவர்களின் கதறல்களும் குருதி காய்ந்த வாடையும் எப்பொழுதும் பதிந்து கிடப்பது போன்ற சூழலை அதன் மௌனத்தை வைத்து உணர முடிந்தது. ஒவ்வொரு பிரதேசமும் இப்படியொரு வரலாற்றின் மரண ஓலத்தை தனக்குள் ஒளித்து வைத்திருக்கிறது. ஏதோ ஒரு பாசிச அரசு தனது

Thursday, October 27, 2011

ஏழாம் அறிவு – முதல் பார்வை


படம் வெளிவந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆகியிருப்பதால் படத்தை முழுக்க விமர்சித்து பார்வையாளனுக்குக் கிடைக்கவிருந்த அனுபவத்தை நான் வீணாக்க விரும்பவில்லை. ஆகையால் இதை ஒரு சினிமா பார்வையாக மட்டும் மேலோட்டமாக எழுதலாம் என முடிவெடுத்துள்ளேன். காலத்தின் தேவைக்கருதி செயல்படுவதன் மூலம் சில சமயங்களில் சொற்பமாகப் பேசிச் செல்வதே நடைமுறைக்கு ஏற்புடையது.

‘வாகைச் சூட வா’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு சமர்ப்பண வகை சினிமாவைப் பார்த்தேன். ஆகையால் இனி ‘சமர்ப்பண’ வகை சினிமாக்கள்

Saturday, October 22, 2011

குறுநாவல் தொடர்:தனிமையின் ஆயிரம் குரல்கள்


மிக விரைவில் குறுநாவல் தொடர் எழுதவிருக்கிறேன். வெகுநாட்களுக்குப் பிறகு இதை எழுத வேண்டும் எனத் தோன்றியிருக்கிறது. என் வலைப்பூவிலும் முகநூலிலும் இடம்பெறும். “தனிமையின் ஆயிரம் குரல்கள்”. ஒரு நகரத்தின் சிதைக்கப்பட்ட மனங்களின் எல்லையற்ற ஒழுங்கற்ற பதிவுகளும்.. மர்மங்களும் தற்கொலைகளும் நிரம்பிய கதைக்களம். குறிப்பு: வழக்கம் போல இது மாணவர்களோ அல்லது சிறுவர்களோ படிக்க வேண்டிய கதை அல்ல. உயிரோடு அல்லது மரணித்த யாரையும் குறிப்பிடும் நோக்கமும் இல்லை. 

கே.பாலமுருகன்

Sunday, October 9, 2011

தனி – சிங்கப்பூர் இலக்கிய சிற்றிதழ்நண்பர் பாண்டித்துரை, பூங்குன்றன் பாண்டியன், அப்துல்காதர் ஷாநவாஸ் அவர்களின் முயற்சியில் இவ்வருடம் அக்டோபர் முதல் தனி இலக்கிய இதழ் வெளிவரத்துவங்கியுள்ளது. கடந்த வருடங்களில் வெளிவந்துகொண்டிருந்த ‘நாம்’ சிங்கப்பூர் இலக்கிய சிற்றிதழ்தான் இப்பொழுது மாற்று அடையாளங்களுடன் மேலும் பல மாற்றங்களுடன் வெளிவருகின்றது. அய்யப்பன் மாதவன், மாதங்கி, எம்.கே குமார், இராம கண்ணபிரான், ஷாநவாஸ் எனப் பலர் எழுதியிருக்கின்றனர்.

சிங்கப்பூர் மலேசிய இலக்கியத் தொடர்பிற்கு பல சமயங்களில்  களமாக இருந்து வருவது இது போன்ற சிற்றுதழ் முயற்சிகள்தான். கடந்த வருடம் சிங்கப்பூர் வாசகர் வட்டம் மலேசிய அநங்கம் சிற்றிதழை அங்கு அறிமுகப்படுத்த களம் அமைத்துக் கொடுத்தது வரை அந்த உறவு எப்பொழுதும் தொடர்கிறது. அதற்கும் முன்பு காதல் இதழ் ஒருமுறை அங்கு அறிமுகம் கண்டுள்ளது என்பதையும் நினைவுக்கூர்கிறேன். தனி இதழில் தொடர்ச்சியான மலேசிய இலக்கியவாதிகளின் பங்களிப்பு அவசியமானது. படைப்புகளை அனுப்ப விரும்புவோர் இந்த மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்:

கவிஞர் பாண்டித்துரை : thanimagazine@gmail.com

Thursday, October 6, 2011

திரை விமர்சனம்: வாகை சூட வா (கண்டெடுத்தான் காடும் கண்டெடுக்க முடியாத கலையுணர்வும்)


கண்டெடுத்தான் காடு எனும் ஒரு குக்கிராமத்தின் கதை இது. ஒரு பூர்வகுடி சாயலில் வாழும் மக்கள். செங்கல் அறுத்து அதை ஒரு சிறு முதலாளியிடம் விற்று வாழ்க்கையைக் கடத்துகிறார்கள். செங்கல் சூரையில் பெரியவர்கள் முதல் பிள்ளைகள்வரை வெயிலில் காய்ந்தவாறு வேலை செய்கிறார்கள். அவர்கள் கடைசிவரை நம்பி வாழ்வதே அந்த மண்ணையும் மண் கொடுக்கும் செங்கலையும்தான். படம் 1966 ஆம் ஆண்டில் தொடங்குகிறது. புழுதி பறக்கும் கிராமத்தின் மூலையில் இலையுதிர்ந்து நிற்கிறது ஒரு மரம். அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் என்கிற இலட்சியத்துடன் வாழும் விமல், ஒரு தனியார் அமைப்பின் மூலம் கண்டெடுத்தான் காட்டிற்கு வாத்தியாராக வந்து சேர்கிறார்.

Tuesday, October 4, 2011

இலக்கியத்தைக் கொல்பவனின் சாட்சியம்: றியாஸ் குரானாவின் கவிதைகள்

“நான் கவிதை சொல்லி, கவிஞனில்லை”- றியாஸ் குரானா
ஒரு கவிதையைக் கொல்ல முடியுமா? அல்லது கவிதை என நாம் நம்பிக்கொண்டிருக்கும் ஒரு வெளியை வேரறுத்து புதிய கதைப்பரப்பை அதற்குள் நுழைக்க முடியுமா எனக் கேட்டால், அந்தக் கேள்வி சமக்காலத்துக் கவிதையைப் புரிந்துகொள்வதற்கான ஒரு முறைமையாக இருக்கும் என நினைக்கிறேன். மேற்கண்ட கேள்விகளுக்கான பதிலைத் தேட முயன்ற நான் அதை றியாஸ் கவிதைகளுக்குள் கண்டடைந்திருப்பதாக ஒரு குற்றசாட்டை முன்வைக்கிறேன். கவிதைக்கு ஒரு கூட்டுப் புரிதலை நோக்கிய ஒரு களம் அவசியம் தேவைப்படும் எனச் சொல்வதற்கில்லை. ஒரு கவிதை இன்று பல்வேறு சமயங்களில் பலவகைகளில் புரிந்துகொள்ளப்படுகின்றது. மனதின் அந்தரங்கமான மொழித்தான் கவிதை எனச் சொல்லப்படுகிறது. அந்தரங்கமான ஒன்று ஒரு மனிதனின் ஆழ்மனதுடன் பேசும் உரையாடலை எப்படிப் பொதுவிற்குக் கொண்டு வந்து கலந்தாலோசிப்பது? அல்லது விவரமாகக் கருத்துரைப்பது? இதுவே இக்காலக்கட்டத்தின் கவிதையை நோக்கி நாம் முன்வைக்கும் சவாலாகக்கூட இருக்கலாம்.

Sunday, October 2, 2011

வரலாறும் புகைப்படமும் 4


கோலாலம்பூரின் புகைப்படங்கள்

ஜாலான் அம்பாங் - 1910. ஜாலான் அம்பாங் எனக்கு மிக நெருக்கமான பயணங்களை அளித்த ஒரு பகுதி. 13ஆவது வயதில் கோலாலம்பூரில் மாமா வீட்டில் தங்கிப் படித்தப் போது 2 வருடம் இந்தச் சாலையில்தான் பள்ளிக்குப் பொது பேருந்து பிடித்துச் செல்வதும் வருவதுமாய் இருந்தேன். மேலும் அம்பாங் பாய்ண்ட் அருகாமையிலுள்ள மாமாவின் வீடியோ கடையில் வேலை செய்தபோது இரவில் அம்பாங் முழுக்கவும் எப்படி விழித்திருந்து ஓய்கிறது என்பதை நேரில் பார்த்திருக்கிறேன்.