எப்பொழுது திறந்துவிட்டாலும்
ஏதோ ஒரு கதையை
உள்ளே அனுமதிக்கிறது
தனிமையின்
உக்கிரத்தில் உலர்ந்து போயிருந்த
என் சன்னல்
2.
இருள் அகன்று
வெளியே விரிந்திருக்க
அருகாமையில்
ஓர் இருக்கை
அதற்கும் அப்பால்
இயங்கிக் கொண்டிருக்கிறது
சன்னல்
3.
எவரோ
ஆவேசமாக
புணர்கின்ற ஓசையையும்
சேர்த்தே
கொண்டு வந்து போடுகிறது
சன்னல்
கே.பாலமுருகன்
மலேசியா
2 comments:
இன்னுமின்னும் சொல்லப்படாத ஆயிரம் கதைகளை ஜன்னல்கள் சுமந்தவண்ணம் இருக்கின்றன.
சில அழகான வரிகளில் உங்கள் கவிதையாகியிருக்கின்றன.
//எப்பொழுது திறந்துவிட்டாலும்
ஏதோ ஒரு கதையை
உள்ளே அனுமதிக்கிறது
தனிமையின்
உக்கிரத்தில் உலர்ந்து போயிருந்த
என் சன்னல்//
தனிமை தோய்ந்த எனதறையின் ஜன்னலை ஞாபகப்படுத்துகின்றன..
நன்று!
Post a Comment