காலையில் பள்ளிக்குச் சென்றதும், 8.00மணி போல ஓர் ஆசிரியரும், தோட்டக்காரரும் என்னை யாரோ இருவர் தேடி வந்திருப்பதாகக் கூறினர். வெளியில் வந்து எட்டிப் பார்த்தேன். ஒருவர் மோட்டாரில் அமர்ந்திருக்க மற்றொருவன் அருகில் பின்புறமாக திரும்பி நின்றுகொண்டிருந்தான்.
பள்ளியில் பணியில் இருக்கும் ஆசிரியரைச் சந்திக்க சில சட்டத்திட்டங்கள் உண்டு. தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற வேண்டும், பதிவு புத்தகத்தில் கையொப்பமிட வேண்டும். இதை ஏதும் செய்யாமல் ஏன் மறைவாக நின்று கொண்டிருக்கிறார்கள் என்கிற சந்தேகத்துடன் நெருங்கிச் சென்றேன். இது என் மிகப் பெரிய தவறு. அப்படி சென்றிருக்கக்கூடாது.
திரும்பி நின்றவன் தலையில் கவசம் அணிந்திருந்தான், ஆனால் முகம் தெளிவாக தெரிந்தது. என்னைப் பார்த்ததும் தோளில் கையைப் போட்டு, “உங்களிடம் தனியாக பேசனும் அப்படி வாங்க” என்றான். “நீங்க முறைபடித்தான் சந்திக்கனும்” என்று சொல்லி முடிப்பதற்குள் “புளோக்ல பாத்து எழுது / புளோக்ல எழுதாதெ” என்றவாறு தலையின் இடதுபுறம் ஓங்கி ஒரு குத்துவிட்டான். சுதாரிப்பதற்குள், பள்ளியின் தோட்டக்காரர் சத்தம் போட்டு, பிற ஆசிரியர்கள் வெளியே ஓடி வருவதற்குள் மோட்டாரில் தப்பி ஓடிவிட்டான். எதிர்ப்பாராத விதத்தில் நடந்ததால் அந்த மோட்டாரைத் துரட்டிப் பிடிக்க வேண்டும், அல்லது அடியைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்கிற எந்த பிரக்ஞையும் ஏற்படவில்லை. (மோட்டாருக்கு எண்கள் இல்லை) என்னை அவன் அடித்தத்தைப் பள்ளியில் இருவர் நேரடியாகப் பார்த்தனர்.
அவனைப் பார்த்ததும் அவன் யாரென்று தெரிந்துவிட்டது. அவனது கண்களும், அவனது உயரமும், முகமும், ஏற்கனவே எனக்குப் பரிச்சியமானது. மூன்றுமுறை பார்த்திருக்கிறேன். ஆதலால் உடனடியாக அடையாளம்காண்பதில் எந்தச் சிக்கலும் ஏற்படவில்லை.
பள்ளியின் வளாகத்தில் பள்ளி நேரத்தில் நடந்ததால், மேலிடம்வரை தகவல் சென்று அதிகாரிகள் வந்துவிட்டனர். என் செய்வேன் என்று அடி வாங்கிய அதிர்ச்சியில் அமர்ந்திருந்தேன். பிடித்து இழுத்துக் கொண்டு போனார்கள், காவல் நிலையத்திற்கு. . சம்பவத்தைப் பற்றியும் உன்னை அடித்தது யாரென்பதைத் தெரியுமா என்றார்கள். தெரியும், என்னை அடித்துவிட்டுப் போனவனின் பெயர் எனக்கு தெரிந்திருந்ததால், அதையும் குறிப்பிட்டேன். அவன் ஏன் உன்னை அடித்தான் என்ற கேள்விக்கு, சந்தேகத்தின் பெயரில் உருவான காரணத்தையும் மேலும் சில விஷயங்களையும் சொல்லிவிட்டேன். புளோக்கில் எழுதிய எதிர்வினையைப் பற்றியும் சொல்லியிருந்தேன். இதைச் சொல்லிவிட்டதால் அடுத்து யார் வருவாரோ?
தற்காத்துக் கொள்வதைத் தவிர வேறொன்றும் தெரியாமல், அமர்ந்திருந்தேன். தலையில் அடிபட்டதால் வீங்கியிருந்தது. அநேகமாக நரம்பு பாதிப்பு ஏதாவது இருக்க வேண்டுமா என்கிற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதுவரை யாரும் இப்படி என்னை அடித்ததில்லை, யாரிடம் வம்புக்கும் நின்றதில்லை. மருத்துவமனையில் இரண்டு மணி நேர சோதனை நடந்தது. தலையை எக்ஸ் ரேய் எடுத்தார்கள். நாளைத்தான் தெரியும். வலி அளவுக்கு அதிகமாக இம்சிக்கிறது.
இனி புளோக்கில் என்ன எழுத போகிறேன்?
1.வடை சுடுவது எப்படி
2.ஆவிகள் உலகம்
3 காதல் கவிதைகள்
4. அன்பைப் பற்றி ஓஷோ என்ன சொல்கிறார்
5. ஏதாவது ஒரு சிறுகதை
இப்படியாக என்னை நான் சுருக்கிக் கொள்ளலாமோ? என்ற கேள்வியும் எழுந்தது. யார் வம்புக்கும் இனி போக வேண்டாம் என்பது போல. வீட்டிற்கு வந்ததும் அம்மாவிடம் சொன்னதும் அவர் பதறி அழுதபோது, இந்த எழுத்துலகை விட்டே போய்விடலாம் என்பது போல் ஆகிவிட்டது. நமது அன்பிற்க்குரியர்வளுக்காக. பிறகு கோழை என்ற வசைக்கும் ஆளாக வேண்டி வருமே. .
அடுத்து போலிஸ் விவகாரம் எங்கு போய் முடியும் என்பதும் தெரியவில்லை. பள்ளி வளாகத்தில் நடந்ததால் நடவடிக்கை எடுத்தாக வேண்டிய சூழல். தலைமை ஆசிரியர் கடைசிவரை உடனிருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார். 3 மணிவரை பசியுடன் அலைந்துகொண்டிருந்தேன். போலிஸில் புகார் கொடுக்கும்போது “இதை நீதிமன்றம் வரை கொண்டு போகிறாயா?” என்று கேட்டார்கள். “ஐயா சாமி வேண்டாம். . “ என்று சொல்லிவிட்டேன். சந்தேகத்தின் பெயரில் பதிவு செய்கிறேன். எனக்கு பாதுகாப்பு வேண்டும். . அவ்வளவே.
குறைந்தபட்சம் என்னை அடிக்க வந்தவன், ஏன் இப்படியெல்லாம் புளோக்கில் எழுதுகிறாய் என்று கேட்டிருக்கலாம், அல்லது பேசியிருக்கலாம். நான் என்ன அப்படியொரு தெர்ரர்ரா?
கே.பாலமுருகன்

32 comments:
சே... ஏன் இந்த அக்கிரமம்??? வருந்துகிறேன் :( அடித்தவர்களின் நோக்கம் என்னவே? நீங்கள் நீதிமன்றம் எடுத்து செல்லாம் அல்லவா? தப்புக்கு தண்டனை கொடுக்கபடவேண்டும்...
வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய நிகழ்வு.
தலையில் பட்ட அடி பெரிய விளைவுகள் ஏற்படுத்தாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக......
வாங்க துபாய் ராஜா, உறங்க முடியாத அளவிற்கு வலி. ஆனாலும் வன்மையாக என்னை நான் பாதுகாத்துக் கொள்ள வேண்டியதுதான் இப்போதைக்கு சரி. வேறு ஏதும் செய்ய முடியாது.
பிரார்த்தனைக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி
கண்டிக்கப்பட வேண்டிய நிகழ்வு
ஆனாலும் உள்நோக்கிய சிந்தனையை தூண்டி விடும் நிகழ்வு,
இது ஏன், எதனால், எதிர்காலத்தில் இனி எப்படி என பொறுமையாக சிந்தியுங்கள் வழி கிடைக்கும்
வாழ்க வளமுடன்
விரும்புவதை எழுதுவதற்கான சுதந்திரம் இலங்கை போன்ற நாடுகளில்தான் இல்லையென்றால், மலேசியாவிலுமா...?
உங்களைக் கவனமாகத் தற்காத்துக்கொள்ளுங்கள் என்பதைத் தவிர வேறு என்ன இப்போது சொல்வதென்றும் தெரியவில்லை :-(
keetkavee kashdamaaka uLLathu. take care...get well soon.(sorry for english. im in office)
வருத்தங்களுடனும் வலிகளுடனும். மிக்க நன்றி நண்பர்களே.
இனி நான் விரும்புவதை மட்டும்தான் எழுத வேண்டும் போல.
வீட்டில் அப்பாவிற்கு பல கடுமையான நோய்கள். ஏதோ எங்களுடன் அவர் இருக்க போகும் சொற்ப நாட்களில் மகிழ்ச்சியாக வாழட்டுமே. எந்தப் பிரச்சனையும் வேண்டாம்.
கண்டிக்கப்பட வேண்டிய நிகழ்வு
கருத்தை கருத்தின் மூலம் எதிர்கொள்ளாமல் வன்முறையில் இறங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது. எப்படி இயங்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டியது உங்கள் முடிவே!
ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். ஒரு தற்காலிக இடைவெளி உங்கள் தொடர்ச்சியான இயக்கத்தை தீர்மானிக்க உதவியாக இருக்கும்.
முறையான சட்டப்பாதுகாப்பு கேளுங்கள்.
நிறைய சொல்லத்தோன்றினாலும் தீர்மானிக்க வேண்டியவர் நீங்களே.
ராதாகிருஷ்ணன் @ முத்துகுமரன் வருகைக்கு மிக்க நன்றி.
இப்போதைக்கு கண்டிக்கத்தக்கது என் எதிர்வினைத்தான் போல. சில சமயங்களில் கருத்து முரண்பாடுகள் வன்முறைவரை செல்வதுண்டு. அரசியலில் நடப்பது போலத்தான்.
என் தீர்மானம் அமைதியாக திரும்புதலே.
புளோகில் எழுதுவதைப் பற்றி உங்களைத் தாக்கியவன் குறிப்பிட்டிருக்கிறான் என்றால், நிச்சயம் இச்சம்பவத்துக்குப் பின்னால் எழுத்துலகைச் சார்ந்த யாரோ இருக்கிறார்கள் என்று தெளிவாக புரிகிறது. பண்பட்ட மனிதன் மற்றவர்களையும் பண்பட எழுதுவான் என்றல்லவா இத்தனை நாள் நினைத்திருந்தேன்? எழுத்துலகைச் சேர்ந்தவர்களே அடியாளாய் அல்லது அடியாளை ஏவிவிடும் ஆளாய் இருப்பது இந்நாட்டுத் தமிழ் எழுத்துலகில் நிகழ்ந்த பெரும் இழுக்கு!
தாங்கள் தாக்கப்பட்டது அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
வன்முறையை வரைமுறையாய் பயில்கிற பயில்வான்கள் இன்னும் இருக்கிறார்கள்!
மருத்துவரிடம் பார்த்து உடல் நிலையை கவனித்துக் கொள்ளவும்.
கடுமையாக கண்டிக்கப்படவேண்டிய ஒன்று.
அன்பின் பாலா,
இயலாமையின் காரணமே வன்முறையின் வெளிபாடு... உங்களிடத்தில் ஏதோ ஒரு நியாயத்தை சரியான வழியில் எதிர் கொள்ள முடியாததின் விளைவாகவே இதை காண முடிகிறது. கோலைகளின் செயலைக் கண்டு அச்ச வேண்டாம். தொடர்ந்து எழுதுங்கள்...
படிக்கவே மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது :(
ஆனா இது போல் செயல்கள் கண்டிக்க வேண்டியதுதான்.
உடல் நிலையையும் கவனத்துக் கொள்ளுங்கள் சகோதரா!
மருத்துவர் கூறுவதை தவறமால் கடை பிடிக்கவும்.
தலையில் அடி என்கிறீர்கள் உஷாரா இருங்க.
விரைவில் குணம் அடைய பிரார்த்தனை செய்கிறேன்.
கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறது. என்ன சொல்வதென்றே தெரியவில்லை பாலு... மிகவும் வருந்துகிறேன். உடல் நலனைக் கருத்தில் கொள்ளுங்கள்.
அன்புடன்,
கிருஷ்ண பிரபு
திரைப்படத்தில் வலம் வருகின்ற குண்டர்களைப் போன்று இருக்கிறது அவர்களின் செயல். நம் நாட்டில் இவ்வாறான அவலங்கள் கூட நடக்கின்றது என்று நினைத்தால் மனம் வேதனையடைகிறது.
நண்பர்களுக்குக் @ கடுமையான தாக்குதல் வேண்டாம். சென்ஷி @ ஒற்றன் @ தமிழ்வானன் உங்களின் பின்னூட்டங்கள் மிகவும் கோபத்தின் வெளிப்பாடாக இருக்கின்றன. என் பாதுகாப்பு கருதி அதனை இங்கு பிரசுரிக்க முடியாமைக்கு வருந்துகிறேன் நண்பர்களே.
@ என் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்துள்ளார்கள் காவல்துறையினர், மேலும் என் பணியிடத்து மேலதிகாரிகள் அடிக்கடி தொலைப்பேசியின் மூலமும் நேரிலும் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள்.
@வசிப்பிடத்தில் உள்ள இரண்டு காவல்துறை அதிகாரிகளும் கண்கானிப்பதாக சொல்லியுள்ளார்கள். ஆகையால் கவலை வேண்டாம்.
@மேலும் எனக்கு நம்பிக்கை உண்டு இந்தப் பிரச்சனை தீரும் என்று.
@ நலம் விசாரித்த புதிய நண்பர்களுக்கும் இனிய நண்பர்களுக்கும் மிக்க நன்றி.
@அன்பின் முனிஸ்வரன்
அடியாள், அடியாளை ஏவிவிடுவதென்பது சரியான வார்த்தை உபயோகம் கிடையாது நண்பரே. நான் சந்தேகத்தின் பெயரில் மட்டுமே புகார் கொடுத்துள்ளேன். இந்தப் பிரச்சனையை நீட்டிக்க எனக்கு விருப்பமும் இல்லை. பகையை வளர்த்துக் கொள்வதில் என்ன நன்மை இருக்கப் போகிறது?
மேலும் என்னை அடிக்க வந்தவன் யார் என்பது மட்டுமே தெரியும். ஏன் வந்தானனென்றறல், "புளோக்கில் எழுதியதை ஒட்டி எச்சரித்துவிட்டுப் போக" ஆக மொத்தம் இதன் பின்னனியில் என்ன உள்ளது என்பதை காவல்துரையினர்தான் கண்டறிய வேண்டும்.
@முடிந்தால் சுமூகமாக இதைத் தீர்த்துக் கோள்வதுதான் நல்லது
சமீபத்தில் தான் உங்கள் பதிவு படித்து “அருமையாக எழுதுகிறாரே” என்று நினைத்தேன். அதற்குள் இப்படி ஒரு நிலைமையா. வருந்துகிறேன் நண்பரே. முடிந்த வரையில் சுதாரிப்புடன் பாதுகாப்பாக இருங்கள். முடிந்தால் உங்கள் புகைப்படத்தைப் பதிவில் இருந்து எடுத்துவிடுங்கள்
கவனம் சகோதரா..........
கருத்து வேறுபாடுகள் எங்கும் எப்படியும் முளைக்கலாம். அதற்கெல்லாம் தீர்வு இப்படியான துன்புறுத்தல்கள் அல்ல.
வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய செயலாகும் இது.
இந்தச் சூழலை முறையாக அணுகி மீண்டு வாருங்கள்.
அதிர்ச்சி மற்றும் வருத்தமாக இருக்கிறது
சீரமைகப்பட்ட பின்னூட்டங்கள்:
1. பாலா வருத்தமாக இருக்கிறது.
வன்மையாக இதைக் கண்டிக்கிறேன் என்று எழுதிவிட்டுச் செல்வதோடு எனது பங்களிப்பு முடிந்துவிடப்போகிறது என நினைக்கையில்?(இதற்காகவும் வருத்தம்)
தமிழகத்தில்தான் இப்படியென்றால் இங்குமா!
@பாண்டித்துரை-சிங்கப்பூர்
2. //அன்பிற்க்குரியர்வளுக்காக. பிறகு கோழை என்ற வசைக்கும் ஆளாக வேண்டி வருமே. .//
சில காலம் தணிந்து இருப்பது தன் பலத்தை பாதுகாப்பை அதிகரித்துக் கொள்ள சிலரை யாரென்று அறிந்து கொள்ள உதவும். இது கோழைத்தனம் அல்ல.
உங்களின் மனவலிமையும் எழுத்து வலிமையும் அதிகரிக்க பிரார்த்திக்கிறேன்.
தமிழ்வாணன்
3.மனந்தளர வேண்டாம் அன்பரே..
உடல் நலத்தையும் பாதுகாப்பையும் கவனித்துக் கொள்ளுங்கள்..
வருந்துகிறேன்..
ஆறுதலுடன்,
கி.சதீசு குமார்
ராஜா @ சுப.நற்குணன் @ தயாஜி
வருத்தங்களுக்கும் வருகைக்கும் நன்றி.
எல்லாம் பிரச்சனைகளும் தீர வேண்டும் என்றே எதிர்ப்பார்க்கிறேன்.
Take care
அனுதாபம் என்று சொல்லலாமா என்று தெரியவில்லை. கவனமாக இருக்கவும்.
கருத்தைச் சொன்னால் அடியா ? என்ன கொடுமை இது :(
அநியாயம். மலேசியாவில் இப்படி நடப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
பத்திரமாக இருங்கள். பெரிய விளைவுகள் இருக்காது.
ரா.கிரிதரன்
Dear Bala,
I am sorry, take care
varuthamaga irukkirathu
(thamiz font varavillai)
Post a Comment