அண்மையில் வாங்கி வாசித்துக் கொண்டிருக்கும்/ வாசித்துவிட்ட சில குறிப்பிடத்தக்க நாவல்கள் இவை. அநேகமாக மறுவாசிப்பின்றி கவனிக்கப்படாமல் போய்விட்ட நாவல்களாக இவை இருக்கலாம். மீட்டுணர்தல் – மறுவாசிப்பு புதிய களங்களை உற்பத்திக்கும்.
1.மஞ்சள் வெளி
எழுதியவர்: சி.ஆர்.ரவீந்திரன்
தமிழில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை, குறிப்பாக இனக்குழு என்று அறியத்தகும் சமூகத்தை, அதன் பழக்க வழக்கங்களை சித்தரிக்கும் முறையில் சில பதிவுகளுடன் “மஞ்சள் வெளி” குறவர் சமூகத்தின் வாழ்க்கையைச் சொல்லும் நாவல். பாப்பாத்தி என்கிற கதாபாத்திரத்தின் வழியே மார்க்சியமும் ஒரு வகையில் இந்தக் குடும்பத்தில் ஒரு நீருற்றுப் போல குடும்பத்தின் அகப்பண்போடு முரண் இன்றிக் கலக்கிறது.
எழுத்தாளர் சி.ஆர்.ரவீந்திரன் : கொங்கு நாட்டுத் தமிழில் விளைந்த செங்கரும்புப் படைப்பாளி. எனினும் பிற சமூகங்களைப் பற்றிய நாவல்களையும் இவர் எழுதியுள்ளார்.
2.வெயில் மழை
எழுதியவர்: சி.ஆர்.ரவீந்திரன்
மலைப் பிஞ்செனக் கல்லுடைக்கும், மலையைப் பிளக்கும், சுரங்கத் தொழிலாளிகளின் வாழ்க்கையைத் தனக்கே உரிய பாசாங்கற்ற நடையில் கனமாக இந்நாவலில் படைத்துள்ளார்.
3.தொலைந்து போனவர்கள்
எழுதியவர்: சா.கந்தசாமி
எளிய நடை, கூடிய மட்டிலும் குறைவாக எழுதும் இயல்பு. தான் வியக்காமல் பாத்திரங்களைப் படைக்கும் திறமை. மனோபாவங்களாலான மனிதர்களைப் புலப்படுத்தும் கதை. பால்ய காலத்திலிருந்து பிற்காலத்திற்கு நீண்ட பாதையில் ஓரிடத்தில் இணையும் நினைவுகளின் நுட்பத்தைக் கதை விரிவாக்குகிறது. தொலைந்தவர்களின் இருப்பு பலமாக கனக்கிறது கதாபாத்திரிங்களில்.
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி

3 comments:
good intro ...thankx
மிஸஸ் தேவ் @ நன்றி உங்கள் வருகைக்கு
வணக்கம் தோழா
நல்ல பதிவு . சி . ஆர். ரவிந்தர்ருடைய படைப்புகளில் இன்னும் முக்கியமான சில பசியீன் நிறம் , காக்கை பொன் , ஓடை புல் . ஆர் . சண்முகசுந்தரம் இவருக்கு மூத்த கொங்கு எழுத்தாளர் தேடி படியுங்கள் .
Post a Comment