கோலா மூடா யான் மாவட்டத்தில் உள்ள எல்லாம் தமிழ்ப்பள்ளிகளுக்கும் அதன் மாவட்ட அதிகாரியின் மூலம் கவிதைக் கருத்தரங்கம் குறித்து அறிக்கையும் மின்னஞ்சல் மூலமாகவும் செய்திகள் அனுப்பியும் நேற்று நிகழ்வில் கெடா கோலா மூடா யான் மாவட்டத்திலுள்ள 23 தமிழ்ப்பள்ளிகளிலிருந்து 4 ஆசிரியர்கள் மட்டுமே இலக்கிய ஆர்வத்துடன் வந்து கலந்துகொண்டது வரவேற்க்கத்தக்க ஒன்று என்றும் சொல்லலாம்.
நிகழ்வில் கலந்துகொண்ட பலர் எழுப்பிய கேள்வி எங்கே தமிழாசிரியர்கள்? கொடுக்கப்பட்ட பதில்கள்:
ஒருவேளை : 1. தீபாவளி நெருக்கம் என்பதால் அலைச்சல்
2. இலக்கிய ஆர்வம் இல்லாமல் போய்விட்டது
3. கட்டாயப்படுத்தாதவரை எனக்கெதற்கு இலக்கியம் என்கிற
மனோநிலை
(குறைந்தபட்சம் கலந்துரையாடலில் கலந்துகொண்டு விவாதம் செய்திருக்கலாம், தனது எதிர்க் கருத்துகளைப் பதிவு செய்திருக்கலாம்-)
மூன்று மலேசிய தமிழ் நாளிதழ்களில் அறிக்கை கொடுத்தும் ஏன் தகவல் சேராமல் இருந்திருக்கும்? வாய்ப்பில்லை, காரணம் ஒருசிலர் அதிகபட்சமாக வாசிப்பதே இந்த நாளிதழ் மட்டும்தான். கல்வி இலாகா தொடர்புடைய ஒருவர் இலக்கிய நிகழ்வுகளுக்கும் நமது ஆசிரியர்களுக்கும் தொடர்பில்லாமல் போய்விட்டது போல என்று வருத்தப்பட்டுக் கொண்டார்.
கடந்தமுறை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் “சிறுகதைக் கருத்தரங்கம்” நடத்தும்போதும் அதில் கட்டாயத்தின்பேரில் கலந்துகொண்ட சில ஆசிரியர்கள் வெளிப்படையாகவே குறைப்பட்டுக் கொண்டனர். அந்த ஆசிரியர்கள் முன்வைக்கும் கேள்விகள் இதுதான்.
“எதுக்கு எங்களெல்லாம் இந்த நிகழ்ச்சில்லெல்லாம் கலந்துக்க சொல்றாங்க”
“நாங்க எதுக்கு இதையெல்லாம் தெரிஞ்சிக்கனும்?”
“எதுக்கு இலக்கியம் இலக்கியம்னு அறுக்கறாங்க?”
அதன் பிறகு இனி கட்டாயத்தின் பேரில் எந்த ஆசிரியர்களையும் இலக்கிய நிகழ்விற்கு அழைப்பது மீண்டும் ஒரு இனப்படுகொலைகளுக்கு ஒரு ஹிட்லரை அழைப்பது போன்ற உணர்வைக் கொடுத்துவிடும் என்று பயம் ஏற்பட்டது. கட்டாயப்படுத்தி கொடுக்கப்படும் இலக்கியம்கூட ஒரு வன்முறைத்தான். அறிமுகம் செய்து பார்க்கலாம், அதில் ஈர்ப்புக் கொண்டவர்கள் நிச்சயம் தனக்கான நேரத்தைத் தாராளமாக இலக்கியத்திற்காகச் செலவழிப்பார்கள்.
முன்பெல்லாம் தமிழாசிரியர்கள்தான் இலக்கியம் ஆர்வம் கொண்டவர்களாக இலக்கியத்தை முன்னெடுத்துச் சென்றவர்களாக, இலக்கிய விவாதங்கள், புதிய களம் உருவாக்குவது என்று தீவிரமாக இயங்கியவர்கள், இப்பொழுது எல்லாம் ஒரு பொருளியல் சிந்தனைக்குள் சுருங்கி மங்கிவிட்டது போல. ஒருசிலரிடம் அறிக்கைகள் வந்ததா என்று கேட்டதற்கு, “வந்துச்சி அதை தலைமை ஆசிரியர் மேசை மேலே போட்டு வைத்திருந்தார்” என்றதும் நிகழ்வில் எந்தத் தலைமை ஆசிரியர்களும் கலந்து கொள்ளாததும் அதிர்ச்சியே. ஒரு சில தலைமை ஆசிரியர்கள் தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டு வரமுடியாததைத் தெரிவித்தது பாராட்டக்கூடிய விசயம். மற்றபடி பொதுமக்கள் ஆதரவுடன் சில வாசகர்களின் வருகையால் நேற்றைய கவிதைக் கருத்தரங்கம் 25 பேருடன் நடந்தேறியது. கோலா மூடா மாவட்ட தமிழ்ப்பள்ளிகளின் மேலாளர் உயர்திரு.ப.அர்ச்சுணன் கலந்துகொண்டு சிறப்பித்தார். இவர் தொடர்ந்து இலக்கிய நிகழ்விற்கு ஆர்வத்துடன் வந்து கலந்துகொள்வது ஒரு முன்னுதாரணம்)
-தொடரும்-
கே.பாலமுருகன்
6 comments:
தமிழ் இலக்கிய ஆர்வமா?தமிழ பற்றே இல்லாத போது தமிழ் இலக்கியம் எங்கிருந்து வரும்? பெரும்பாலான தமிழ்ப் பள்ளி தமிழ் ஆசிரியர்கள் பாடத்திட்டத்தின் அடிப்படையில் தான் தமிழை போதிக்கின்றனர்.தமிழ் இலக்கியம் எதற்க்கு? தமிழ் புலமை எதற்கு? போதக்குறைக்கு தலைமை ஆசிரியரின் தொல்லை வேறு.இதை செய், அதை செய் என்று ஆதிகாரம் வேறு. தமிழ் பள்ளியில் பெருன்பான்மை ஆசிரியர்கள் பெண்கள் தான். வீடு வந்து சேர்வதற்குள் சக்கையாய் பிழிந்து விசி எறிய்ப்படுகின்றனர்.ஒருப்பக்கம் தலைமை ஆசிரியரின் தொல்லை, மறுப்பக்கம் பெற்றோர்களின் அர்ச்னை. கல்வி இலக்காவின் தொல்லை.சில சமயம் திமிர்ப் பிடித்த் மாணவர்களின் தொல்லை. பாவம் ஐயா தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள்.இலக்கியம் ப்டிப்பதற்கு அவர்களுக்கு ஏது நேரம்?
தமிழ் என்பது வாழ்வியலுக்குத் தேவை எனும் அளவில் பாடத்திட்டம் இல்லை. அது மதிப்பெண் எடுப்பதற்காக அறிமுகப் படுத்தப் பட்டதாகத்த்தான் மாணவர்கள் நினைக்கின்றனர். அதை புரியவைக்கக் கூட ஆசிரியர்கள் இல்லை.
மனோகரன் @ ஆசிரியர்கள் தன் மீது சுமத்தப்படும் அல்லது பாவிக்கப்படும் அதிகாரத்துவங்களுக்கு எதிர்க்குரலை முன்வைக்க வேண்டும். அவர்கள் என்ன விளிம்புநிலை மனிதர்களா ஒடுங்கி ஒடுங்கி வாழ? மொழியும் இலக்கியமும் ஆசிரியர்களுக்கு வீரியத்தைக் கொடுக்கவல்லது.
அதிகாரங்களுக்கு முன் மண்டியிடவே கூடாது. தனது உரிமையை கேட்பதில் திராணி வேண்டும்.
உண்மையை வெளிப்படையாக கூறும் நண்பர் பாலா அவர்களே, உங்களுக்கு எனது பாராட்டுக்கள்! நாளைய இலக்கிய வளர்ச்சி எப்படி இருக்க போகிறது என்பதற்கு தமிழாசிரியர்கள்தான் 'மைல்கல்' என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை!ஒரு இலக்கிய ஆர்வமோ அல்லது வாசமோ இருந்தால்தான் தமிழாசிரியர்கள் உருவாக்கவிருக்கும் மாணவர்களும் தமிழார்வத்துடனும் இலக்கிய ஆர்வத்துடனும் வளர்வார்கள்! அதை விடுத்து ஒரு சில ஆசிரியர்கள் அனைத்திற்கும் காரணம் கூறிக்கொண்டெ இருந்தால்,நாளைக்கு மாணவர்களின் நிலை ????
வாங்க @புலவன் புலிகேசி @ தமிழினியன், உங்கள் கருத்திற்கும் பகிர்விற்கும் மிக்க நன்றி.
வணக்கம் பாலா அண்ணா அவர்களே , இனி வரும் காலங்களில் கெடாவில் ஏதாவது இலக்கிய நிகழ்வுகள் நடந்தால் தயவு செய்து எனக்கும் ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள். எனக்கு இலக்கியத்தைப் பற்றி ஆழமாகத் தெரிந்துக் கொள்ள அதிக விருப்பம். என்னால் இயன்றவரை வருகைப் புரிவேன்.
நன்றி
Post a Comment