Monday, February 8, 2010

சொல்வனம்- சிங்கப்பூர் தமிழிலக்கியத்தில் அடையாள அரசியல்- (எழுத்தாளர் ஜெயந்தி சங்கருடன் உரையாடல்)

17-12-09

இலக்கிய சூழலில் அதிகாரங்களையும் ஆக்கிரமிப்புகளையும் விவாதிக்க ஏற்ற களமாக உரையாடலே மிகச் சிறந்த வடிவம் என்கிற நம்பிக்கையில் சிங்கப்பூரில் வெறும் வாய்மொழி சாடல்களாகவும் விமர்சனமாகவும் நிலவி வந்த அடையாள அரசியலின் பரிசீலனையின் முதல் கட்டமாக, சிங்கப்பூரில் வசிக்கும் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்களுடன் எதார்த்தமாக நிகழ்த்தப்பட்ட உரையாடலின் சிறு பகுதியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இதை இங்கேயே இப்படிவிட்டுவிடுவது, அல்லது எங்களின் உரையாடல் முடிவடைந்த புள்ளி தீர்வாகவோ பரிந்துரையாகவோ அடையாளப்படுத்த இயலாமல் தொடர்ந்து அடையாள அரசியலின் அடுத்தகட்ட உரையாடலாக முன்னகர்த்திக் கொண்டு செல்லலாம் என முடிவெடுத்துள்ளேன்.

படைப்பாளியின் புற அடையாளங்களை வரையறுத்து, அவற்றின் மூலம் அடையாள அரசியலை முன்னெடுக்கும் புதிய மதிப்பீடுகள், படைப்பாளர்களின் மீதான அதிகார கட்டமைப்பாகப் பிரயோகிக்கப்படுவது பலவீனமான இலக்கிய பார்வை என்பது என் கருத்து.

உரையாடல்

கே. பாலமுருகன்: தாங்கள் சிங்கப்பூருக்கு குடிப்பெயர்ந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டதாக அறிகிறேன். சிங்கப்பூர் இலக்கிய வரலாற்றைப் பற்றி இதுவரை எத்துணை விமர்சனங்கள் அல்லது கட்டுரை எழுதியுள்ளீர்கள்? சிங்கப்பூருக்கு குடி பெயர்ந்து வரும் தமிழக எழுத்தாளர்கள் சிங்கப்பூர் இலக்கியம் குறித்து அக்கறை காட்டுவதில்லை எனவும், மேலும் அதன் வரலாறையும் வளர்ச்சியும் பற்றிய அவாதானிப்புகளும் இல்லாமல் இருப்பதாகவும் நான் கருதுகிறேன்.

மேலும் படிக்க...»

சொல்வனம்
மாதமிருமுறை வெளிவரும் இணைய இதழ் :.
சொல்வனம் 05-02-2010 இதழ்‏

2 comments:

Unknown said...

உங்கள் ஆளுமை நன்றாய் உள்ளது பாலமுருகன் தொடருங்கள் , தொடர்கிறேன் ..
நம்பிக்கையுடனும் தேடலுடனும்
தேவராஜ் விட்டலன்
http://vittalankavithaigal.blogspot.com/

Tamilvanan said...

//முன்பெல்லாம் குடி, சூது, குற்றச்செயல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக சிறைவாசம், மணவிலக்கு போன்ற காரணங்களுக்காக உடைந்த குடும்பங்களும் சிதறிய குடும்பங்களும் சிங்கப்பூரின் தமிழ்ச் சமூகத்தில் அதிகமிருந்தன. இதனால், பதின்பருவத்து தமிழ் மாணவர் பள்ளிப்படிப்பை நிறுத்திவிடுவதும் முன்பு அதிகம் இருந்து வந்தது.

கடந்த பல வருடங்களாக விழிப்புணர்வும் பொருளுதவியும் உளவியல் ஆலோசனை/சட்ட ஆலோசனை போன்ற பல்வேறு வழிகளிலும் சிண்டா (SINDA) மிகச்சீரிய முறையில் இந்தியச் சமூகத்துக்கு உதவி வருகிறது. இந்தியக் குடும்பங்கள் உடையாமலும் சிதையாமலும் பேணப்பட்டால் இந்தியச்சமூகம் மேம்படும் என்ற நுண்ணிய சூத்திரத்தின் அடிப்படையில் மிகமிகச் சிறப்பாக இயங்கி சமூகத்தில் குறுகிய காலத்திலேயே மிகப் பெரும் மாற்றங்களைக் கொணர்ந்தது சிண்டா. அதனால், பெரும்பான்மையான இந்தியர்கள் ஒரு சதாப்தத்திற்கு முன்னால் இருந்ததைவிட வாழ்வில் மேம்பட்டு வருகிறார்கள். ஒட்டுமொத்தமானதொரு பார்வையில் தான் நான் இதைச் சொல்கிறேன்.//

இதே நிலையில்தான் இன்றைய‌ ம‌லேசிய‌ த‌மிழ‌ர்க‌ள். போன்ற‌ ஒரு இய‌க்க‌ம் இங்கேயும் உருவாக‌ட்டும்.

இல‌க்கிய‌ ஆர்வகளுக்கு ந‌ல்ல‌ விருந்து உங்க‌ளுடைய‌ இந்த‌ பேட்டி.