இரண்டாம் உலக போர் சமயத்தில், தற்காப்புக்காக பிரிட்டிஷாரால் 1930-இல் கட்டப்பட்ட இரகசியக் கோட்டையைத்தான் 2002ஆம் ஆண்டு அருங்காட்சியமாக பொதுமக்களுக்குத் திறந்துவிட்டார்கள்.
சிறைக்கைதிகளை அடைத்து வைக்கும் இடம், தலையைத் துண்டிக்கும் மரக்கட்டை, போர் வீரர்களுக்கு மருத்துவம் பார்க்கும் இடம், சுரங்கப் பாதை, இரகசிய அறை என நீள்கின்றன.
1941க்குப் பிறகு இப்பகுதி ஜப்பான் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டுள்ளது. போர்க் கைதிகளை அடைத்து வைக்கவும் அவர்களைத் தண்டிக்கும் ஒரு கொடூரமான பகுதியாக இது அவர்களால் மாற்றப்பட்டிருக்கிறது. அக்காலக்கட்டத்தில் அந்தப் பகுதி பேய் மலைப்பகுதி என அழைக்கப்பட்டுள்ளது. தலையைத் துண்டிப்பதற்காக ஜப்பான் இராணுவத்தால் கொண்டு போகப்பட்டவர்கள் அதிகம் எனவும் சொல்லப்படுகிறது.
இதிலிருந்து 30 மீட்டர் ஊர்ந்து சென்றால், அங்கே தலைக்கு மேல் 30 அடியில் ஏணி. அதில் ஏறி செல்லும் போது, முதுகு எதிர்ச்சுவரில் இடிக்கிறது. பீதியே வந்துவிட்டது. கடைசிவரை ஏற முடியாமல் இறங்கிவிட்டேன்.
Tunnel- எதிரிகளிடமிருந்து தப்பிக்க இராணுவர்கள் ஒளிந்திருந்த இடம். பல சுரங்கப் பாதைகள் உள்ளே இருக்கின்றன. இருளில் 3 நிமிடம் அந்தச் சுரங்கப் பாதைக்குள் நுழைந்து வெளியேறினேன். இரண்டால் உலகப் போரில் இருப்பது போல திடீர் பிரமை.
கைதிகளை அடைத்து வைத்திருந்த சிறைகளின் சுவர்களில் பதிந்திருக்கின்றன பல்லாயிரம் கொடூரமான சம்பவங்கள். சுவரைத் தொடும்போது மனக் கற்பனையில் உணர முடிகிறது.
பெண்களைச் சித்ரவதை செய்து, கூட்டமாகக் கற்பழித்து கொலை செய்யும் அறை இது. ஜப்பான் இராணுவத்தால் சிதைக்கப்பட்ட பெண்களின் துயர ஓலம் இங்குக் கேட்கிறது. வரலாறு என்பது வெறும் கதை மட்டும் அல்ல, கொடூரமானதாகவும் இருக்கிறது.
கைதிகளின் தலையைத் துண்டிப்பதற்காகப் பாவிக்கப்பட்ட கத்தியும் இடமும்.
தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும் இடம்.
போர்க்கைதிகள்/ போர் வீரர்களுக்கு மருத்துவம் பார்க்கப்படும் இடம். அருகாமையிலேயே அவர்களுக்கு சமைக்கும் இடமும் இருக்கிறது.
பாலியல் கொடுமைக்கு ஆளானவர்களை மன/உடல் ரீதியில் சீர்ப்படுத்துவதற்கான இடம்.
Pictures by : k.balamurugan & Dhinesh Kumar
No comments:
Post a Comment