Wednesday, September 14, 2011

மலேசிய - சிலாங்கூர் இளைஞர் கலை கலாச்சார விருது-2011

கடந்த வருடம் முதல் மலேசியாவிலுள்ள சிலாங்கூர் மாநிலம் மலேசிய இளைஞர்களின் கலைத்திறன்களை அங்கீகரிக்கும் வகையில் பல பிரிவுகளில் விருதுகள் கொடுத்து வருகின்றது. இந்த விருதளிப்பை சிலாங்கூர் இளைஞர் முன்னேற்ற இயக்கமும் சிலாங்கூர் மாநில விளையாட்டுத்துறையும் இணைந்து வழங்கி வருகின்றன.

தமிழ், ஆங்கிலம், மலாய் மற்றும் சீன மொழிகளைச் சேர்ந்த கலை இலக்கிய படைப்புகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.


சிலாங்கூஉர் மாநிலத்தை கலை இலக்கிய மையமாக உருவாக்குவதன் மூலம் மலேசியாவிலுள்ள திறன்மிக்க இளைஞர்களை அங்கீகரித்து அவர்களுக்கு ஒரு களத்தை ஏற்படுத்தும் முயற்சியே இந்த விருதுகள். ஒவ்வொரு பிரிவுக்கும் மூன்று நீதிபதிகள் அமர்த்தப்பட்டு, பிறகு இறுதி நீதிபதிகள் சந்திப்பில் ஒவ்வொரு பிரிவுக்குமான படைப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

இந்த வருடம் சிலாங்கூர் இளைஞர் கலை கலாச்சார விருதளிப்பில், நாவல் பிரிவிலும் கவிதை பிரிவிலும் நான் இறுதி சுற்றுக்குத் தேர்வாகிவுள்ளேன். வருகின்ற 17ஆம் திகதி சனிக்கிழமை விருதுகள் அறிவிக்கப்படும்.

ஆஸ்ட்ரோ வானவிலும் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசை வென்ற நாவலான 'நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள்" இவ்வருடம் கரிகாலன் விருதை வென்றதுடன் மீண்டும் இந்த சிலாங்கூர் இளைஞர் திறன் விருதை vellumma? wait and see. அந்த நிகழ்ச்சியில் என்னுடன் வந்து கலந்துகொள்ள நண்பர்கள் அனைவரையும் வரவேற்கின்றேன்.

கே.பாலமுருகன்

No comments: