Friday, December 28, 2012

இமையத்தியாகம்- அ.ரெங்கசாமி


சுபாஷ் சந்திரபோஸ் - வரலாற்றின் மறக்கப்பட்ட ஆளுமை. உலகம் முழுக்கச் சென்று இந்திய இளைஞர்களை ஒன்றினைத்து வெள்ளையர்களுக்கு எதிரான சக்திமிகுந்த இராணுவப்படையை உருவாக்கினார். காந்தி அஹிம்சை வழியில்  போராடிக்கொண்டிருந்த அதே காலக்கட்டத்தில்தான் கப்பல் மூலம் டெல்லி வரை சென்று வெள்ளையர்களைத் தாக்கினார். அவர்களின் ஆயுத வருகையைக் கடல் பாதையை ஆக்கிரமித்ததன் மூலம் தடுத்தார். ஆயுதமின்றி போரிட முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளையர் படை பலவீனமானது. இந்திய சுதந்திரம் பெறுவதற்கு முன்பும், அல்லது காந்தியினுடான சுதந்திரப் பேச்சு வார்த்தை தொடங்குவதற்கு முன்பும், வெள்ளையர் படை இந்தியாவில் இருப்பதைக் கேள்விக்குறியாக்கியவர் சுபாஷ் சந்திரபோஸ். காந்தியின் பேச்சு வார்த்தையும் அவரின் அஹிம்சை போராட்டமும்தான் இந்திய சுதந்திரத்திற்குக் காரணம் எனக் கொண்டாடப்படுகின்றது. மிக எளிமையாக பகவத் சிங்-கின் உயிர்த்தியாகம் மறக்கப்பட்டதைப் போலத்தான் இதுவும். சுபாஷ் சந்திரபோஸ் தன் ஆளுமையால் அவர்களை விரட்டியடிக்க அடித்தளம் அமைத்தார். இதைத்தான் இந்திய வரலாற்றின் பின்னணியில் மறக்கடிக்கப்பட்ட விசயமா?


                மலேசியாவின் வரலாற்று நாவலாசிரியர் அ.ரெங்கசாமி 80 வயதுக்கு மேற்பட்டவர். சமீபத்தில்கூட அவருக்கு அனைத்துலக புத்தகப் பரிசு போட்டியில் பரிசு கிடைத்தது. மலேசியாவின் மிக முக்கியமான வரலாற்று நாவல் ஆசிரியர். சுபாஷ் சந்திரபோஸ் மலேசிய வந்து பிரிட்டிஸ் ஆட்சியில் அடிமை சூழலில் வாழ்ந்துகொண்டிருந்த இந்திய இளைஞர்களை தன் இராணுவப்படையில் சேர்த்துக் கொண்டு, அவர்கள் எப்படிப் போராடினார்கள் என்பதை ‘இமையத் தியாகம்’ நாவலின் வழி ரெங்கசாமி பதிவு செய்துள்ளார். தன் தாய்நாட்டின் விடுதலைக்காக இங்குள்ள ஒவ்வொருவரும் போராட வேண்டும் என்ற உணர்வை மையப்படுத்தி இணைத்து ஒரு மாபெரும் இராணுவப்படையை இங்கு உருவாக்கினார். 80 வயதிற்கும் மேலான அ.ரெங்கசாமியின் நினைவு என்பது வரலாற்றால் கட்டமைக்கப்பட்டது. இன்னமும் உயிர்ப்புடன் இவ்வுலகின் கவனிக்கப்படாத வரலாற்று எல்லைகளை நோக்கி இயங்கிக் கொண்டிருக்கிறது.

மலாயா பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த காலக்கட்டத்தில் மரக்காடுகளில் சுற்றி அலைந்து உழைப்புச் சுரண்டப்பட்டு தொய்ந்துபோன பெண்கள் சுபாஷ் சந்திரபோஸ் புரட்சிக் காலத்தில் விடுதலை உணர்வுடன் செயல்பட்டார்கள். இராணுவத்தில் இணைய முன்வந்தார்கள். அப்படி இராணுவத்தில் இணைந்து போராடிய மலேசியப் பெண்கள் குறித்தான பதிவுகள் மிக அரிதே.

-    கே.பாலமுருகன்

No comments: