Tuesday, November 19, 2013

வாசிப்புத் திறன் : சோர்ந்து போகும் தலைமுறை

வாசிப்புத் திறன் என்றதும் அதைப் பள்ளியின் பாடநூல் வாசிப்போடு மட்டும் தொடர்ப்படுத்திப் பார்க்கும் பழக்கத்திற்கு நம் சமூகம் ஆளாகியிருக்கின்றது. அதைக் கடந்து மாணவர்களின் மனநிலை, அனுபவத்திற்கேற்ப அவர்களின் கற்பனையாற்றையும் மொழியாற்றலையும் வளர்க்கும்படியான நூல்களைத் தேர்ந்தெடுத்து வாசிக்கும் நிலையிலிருந்து இன்றைய தலைமுறை சோர்ந்து போயிருக்கின்றன.

இன்றைய சமூகத்தின் கற்பனையாற்றல் சோர்ந்து போய்விடாமல் இருக்க வாசிப்பை மீண்டும் ஊக்கப்படுத்த வேண்டும். பாடநூல் வாசிப்பைக் கடந்து பல்வகை வாசிப்பை முன்னெடுக்க வேண்டும். குழந்தைகள் வாசிப்பு என்றாலே பயப்படுகிறார்கள். சிறுவர்கள் அவர்களின் மனநிலை, வயதுகேற்ப அவர்களின் வாழ்வைச் சொல்லும் கதைகள் அடங்கிய நூல்கள் இல்லாமல் தவிக்கிறார்கள். ஆகவேதான் வாசிப்பைவிட்டு காணாமல் போய்விடுகிறார்கள்.

Harry potter , bed time stories எனப் பலவகை சிறுவர் நூல்கள் மேற்கத்திய வாசிப்புச் சூழலில் கவனத்திற்குரிய வகையில் செயலாற்றி வருவதைப் போல, மலேசிய சிறுவர்களின் வாழ்வைச் சொல்லும் கற்பனையாற்றல் மிகுந்த நூல்கள் இங்கும் வரவேண்டும்; எழுதப்பட வேண்டும்.


உங்கள் பிள்ளைகளின் கற்பனையாற்றலை, வாசிப்புத் திறனை வளர்க்க நீங்கள் என்ன முயற்சியெல்லாம் எடுத்துள்ளீர்கள்? பாடநூலை வாசித்துவிட்டு பயிற்சிகளைச் செய்துவிடுவதால் வாசிப்புத் திறன் வளர்ந்துவிடும் என நினைப்பது சரியல்ல. அதே போல தினசரி  நாளிதழ்களை வாசிப்பது மட்டும்தான் சிறந்த வாசிப்பு எனப் பெற்றோர்கள் நினைப்பதும் சரியல்ல.

சிறுவர்களுக்காக எழுதப்படும் நூல்களை ஆதரிக்க முன் வர வேண்டும். அதன் மூலமே நம் நாட்டு சிறுவர்களின் உலகை எழுதவும் பதிக்கவும் எழுத்தாளர்கள் முன் வருவார்கள். தமிழ் நூலை எழுதும் எவரும் பொருளாதார ரீதியில் தோல்வி அடைந்துவிடக்கூடாது.

கே.பாலமுருகன்


3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை தான்...

மாற்றங்கள் விரைவில் வர வேண்டும்...

நங்கூரம் said...

நல்ல குழந்தை இலக்கியங்கள் என்பது அரிதான ஒன்றாகிவிட்டது இன்று. என் காலத்தில் வந்ததில் பாதியளவு கூட இன்று வரவில்லை என்றே எண்ணுகிறேன். குழந்தை இலக்கியங்களை வளர்க்க தனி அமைப்புகள் முன் வர வேண்டும்.

kingraj said...

தமிழகத்தில் பல கருத்துள்ள நூல்களை அனைத்து பள்ளிகளிலும் வழங்கப்பட்டுள்ளன....ஆனால் பயன்பாட்டில் உள்ளதா என்பது தான்.............சந்தேகம்.சிறந்த கருத்துக்கள் .வாழ்த்துக்கள்.