Thursday, December 20, 2018

தமிழில் 21ஆம் நூற்றாண்டின் சாதனை நூல்






21ஆம் நூற்றாண்டு கற்றல் கற்பித்தலில் 'கற்பனை வளம்' ஒரு தலையாய சிந்தனைக் கூறாகும். ஆனால், கற்பனை வளத்தினை வகுப்பறையில் போதிக்கும் வழிமுறைகள் பற்றி நமக்கு தெளிவான விரிவான வழிகாட்டுதல் இல்லை என்கிற அதிருப்தி இருந்து கொண்டிருந்தது. அவ்வகையில் சிறுகதை போதித்தல், கற்பனைக் கட்டுரை, கருத்துணர்தல் பாகம் இரண்டு, வாக்கியம் அமைத்தல் போன்றவற்றை போதிப்பதில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கி வந்த அனைத்துச் சிக்கலுக்குமான தீர்வுடன் '21ஆம் நூற்றாண்டு கல்விமுறை ஓர் அறிமுகம்' என்கிற ஆசிரியர் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் 2019ஆம் ஆண்டின் சிறந்த அறிமுகமாக வெளிவரவிருக்கின்றது.

இந்நூலில். சிறுகதை கற்றல் கற்பித்தலின் வழியாகக் கற்பனை வளத்தினை வளர்க்கும் பல படிநிலைகளைத் தெளிவாக ஆராய்ந்து பரிந்துரைத்துள்ளது. 2018ஆம் ஆண்டுக்கான பாரதி விருது பெற்ற நாடறிந்த எழுத்தாளர், தமிழ்மொழித் திறன்மிகு ஆசிரியர் திரு.கே.பாலமுருகன் இயற்றிய இக்கட்டுரை நூல் இனி சிறுகதை எழுத நினைக்கும் மாணவர்களுக்கு, ஆசிரியர்களும் பெற்றோர்களும்கூட வழிகாட்ட முடியும் என்கிற வாய்ப்பை வழங்கியுள்ளது.

- சிறுகதை தொடக்கம்
- சிறுகதை வர்ணனை
- வசனம் எழுதுதல்
- சிறந்த முடிவை ஊகித்தல்
- கற்பனை கட்டுரை போதித்தல்
- வாக்கியம் அமைத்தல்
- கேள்வித் தயாரிக்கும் முறைகள்
- கருத்துணர்தல் பாகம் இரண்டு எழுதும் வழிமுறைகள்
- மாதிரி சிறுகதைகள்
- மாதிரிக் கட்டுரைகள்

என்று பல வகையான தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலுக்கான கட்டுரைகள், விளக்கங்கள் அடங்கிய இந்நூலை ‘Pre order’ மூலம் வாங்கி ஆதரவுத் தெரிவிக்கவும். ஒரு நூலின் விலை ரி.ம 10.00 மட்டுமே. உங்கள் பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இந்நூலை விண்ணப்பிக்கவும்.


இந்நூலின் பின்னணியில் உள்ள ஆய்வும் உழைப்பும் இத்தொகையைவிட பன்மடங்காகும். தொடர்பிற்கு 016-4806241.
இந்நூலைப் பள்ளிகளுக்கும் அன்பளிப்பாகக் கொடுத்து, 21ஆம் நூற்றாண்டு புதிய கல்வி அணுகுமுறையை விதைப்போம்.



No comments: