Tuesday, March 3, 2009

மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் சிறுகதை பயிலரங்கம்



கடந்த மாதம் 14-15 ஆம் திகதிகளில் தேசிய பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் இரண்டு நாள் சிறுகதை பயிலரங்கம் கோலாலம்பூரில் நடந்தது. நாட்டின் மூத்த எழுத்தாளரான ரெ.கார்த்திகேசு அவர்கள் பட்டறையை வழிநடத்தினார். சுமார் 20 இளைஞர்கள் இந்தப் பட்டறையில் கலந்துகொண்டனர்.






சல்மா, முனிஸ்வரன்(மலாயாப்பல்கலைக்கழகம்), காமினி கணபதி, விக்னேஸ்வரன், ஈஸ்வரி, சத்யாவாணி போன்ற இளையவர்கள் இலக்கியத்தின் பால் ஆர்வமுள்ளதால் இந்தப் பட்டறையில் கலந்துகொண்டு முழுநேர ஈடுபாட்டை வெளிப்படுத்தினர்.






முதல்நாள் பட்டறையில் சிறுகதையின் தொடக்கம், மொழிநடை, உலக சிறுகதைகள் ஒரு பார்வை என்று விரிவாகப் பேசப்பட்டது. இரண்டாம் நாள் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. அந்தக் கருத்தாரங்கில், ரெ.கார்த்திகேசு, மா.சண்முகசிவா, சை.பீர்முகமது, நான் என்று நால்வரும் பயிலரங்கத்தில் கலந்து கொண்ட இளைஞர்களுடன் இலக்கியம் குறித்தான எங்கள் மனநிலைகளையயும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டோம்.



என் அனுபவ பகிர்வு பெரும்பாலும் நவீன இலக்கியம் குறித்த விழிப்புணர்வை இவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கிலே அமைந்திருந்தது. உலகத் திரைப்ப்படன்ங்களில் கையாளப்ப்படும் உத்திகளை மேற்கோள் காட்டி அவர்களின் பார்வைக்கு அறிமுகப்படுத்தினேன். இன்றளவும் அகிரா குரோசாவா, சத்ய ஜித்ரே, அடூர் கோபாலகிருஷ்ணன் போன்றவர்களின் சினிமாக்கள் வாழ்வை மிக நெருக்கமாக அணுகுவதுடன், வாழ்வை பார்வையிடும் உத்திகளை மாற்றுக் கோணத்தில் காண்பிப்பத்துடன், பார்வையாளனின் கவன நோக்குகளையும் வளர்த்தெடுக்க்கக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளது எனலாம். இங்கிருந்து நவீன உத்திகளைப் புரிந்து கொள்ள தொடங்கினாலும், அது சிறப்பானதாகவே கருதலாம்.



2 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

இம்மாதிரியான நிகழ்வுகள் பற்றிய தகவல்களை நமது வலைப்பதிவர் குழுமத்தில் கொடுத்தீர்கள் என்றால் பலருக்கும் பயனாக அமையுமே?

ஆ.ஞானசேகரன் said...

கருத்தரங்கில் சொல்லப்பட்ட கருத்துகளையும் சொன்னால் நன்றாக இருக்கும்.