தினமனியில் வந்த செய்தி:
கொழும்பு, மே 29: விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாங்கள் நடத்திய போர் எங்களுக்காக மட்டும் அல்ல, இந்தியாவுக்காகவும்தான் என இலங்கை அதிபர் ராஜபட்ச கூறியுள்ளார்.
"தி வீக்' என்ற ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்திருப்பதாவது:
இந்தியாவுக்காக போரிட்டோம்: விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாங்கள் நடத்திய போர் எங்களுக்காக மட்டும் அல்ல, இந்தியாவுக்காகவும்தான். 18 ஆண்டுகளுக்கு முன்னால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களைப் போரில் சண்டையிட்டு வென்று நீதி வழங்கியிருக்கிறோம்.
பயங்கரவாதத்துக்கு எதிராக தெற்காசிய நாடுகள் மேற்கொள்ள வேண்டிய போரை நாங்கள் நடத்தி முடித்திருக்கிறோம். விடுதலைப் புலிகளை நாங்கள் கொன்றுவிட்டதால் இந்திய அரசு அதற்காகப் போர் நடத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
இந்தியாவுக்கு நன்றி: விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாங்கள் நடத்திய போரை ஆதரித்த பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் இந்திய மக்களுக்கு எங்களுடைய நன்றி. மற்றெல்லாவற்றையும்விட இந்தியா என்ன நினைக்கிறது என்பதற்கே நாங்கள் முக்கியத்துவம் கொடுத்தோம். இந்திய அரசு எங்கள் பக்கம்தான் என்பதால் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்தோம்.
விடுதலைப் புலிகளுக்கு இந்தியர்களிடையே குறிப்பாகத் தமிழர்களிடையே ஆதரவு இல்லை என்பதையே நடந்து முடிந்த தேர்தல் காட்டியிருக்கிறது. விடுதலைப் புலிகளை ஆதரித்த கட்சிகள் தோற்றுவிட்டன; எங்களுடைய நடவடிக்கைகளை ஆதரித்த கட்சியும் கூட்டணியும் வென்றிருக்கிறது. புலிகளை ஆதரித்தவர்களைத் தோற்கடித்து தமிழக மக்கள் நல்ல பாடம் புகட்டிவிட்டார்கள்.
புலிகளுக்கு எதிரான போர் முடிந்ததும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்கள் எங்களைத் தொடர்புகொண்டு பாராட்டினார்கள். அவர்கள் யாரென்று தெரிவிக்க விரும்பவில்லை என்றார் ராஜபட்ச.
//விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாங்கள் நடத்திய போரை ஆதரித்த பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் இந்திய மக்களுக்கு எங்களுடைய நன்றி.//
"ரஜிவ் காந்தியின் சிலைக்கு
முட்டுக் கொடுக்க
ஈழ மக்களின்
பிணங்கள் பரிசாகக்
கொடுக்கப்பட்டதாம்
சோனியா காந்திக்கு
ராஜ பக்சேவால்"
//18 ஆண்டுகளுக்கு முன்னால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களைப் போரில் சண்டையிட்டு வென்று நீதி வழங்கியிருக்கிறோம்.//
அடப்பாவிங்களா. நீதியா? பாண்டிய மன்னன் தவறாக நீதி வழங்கியதற்காக உயிர் துறந்தான், இந்த ராஜ பக்சே செய்த கொலைகளுக்காக எப்பொழுது 10 காசுக்கும் மதிப்பில்லாத அவனது உயிரை விடுவான்? புலிகளின் பேரில் இவன் கொன்று குவித்தது அப்பாவிகளை அல்லவா? எவ்வளவு தந்திரமாக சர்வதேச அளவில் இந்தியாவின் முதுகைச் சொறிந்துவிட துணிந்துள்ளான் இந்த இனப்படுகொலைவாதி.
//புலிகளுக்கு எதிரான போர் முடிந்ததும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்கள் எங்களைத் தொடர்புகொண்டு பாராட்டினார்கள். //
70 000 உயிர்களைக் கொன்ற அவனுக்குப் பாராட்டுத் தெரிவித்தது தமிழக தலைவர்கள் என்றால் அவர்களின் பெயர்களை வெளீயிட்டுப் பாரும். பிறகு தெரியும் விபரீதம். வெட்கம்கெட்ட அரசியல் இரத்தவெறி செந்நாய்கள், தேர்தல் முடிந்ததும், ராஜ பக்சேவின் உள்ளாடையைக்கூட துவைத்துக் கொடுப்பார்கள்.
கே.பாலமுருகன்
3 comments:
பிரபா நாய் தானே பிச்சை போட்டவளின் தாலியே அறுப்பவன்..அவனுக்கு இந்த செந்நாய் பரவாயில்லை :)
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த பிணம் தின்னி மனிதரை நினைத்து விட்டால்
மேலும் ராஜபக்ச , தமிழக தமிழர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்
வாருங்கள் வெத்து வேட்டு & கண்டும் காணான்.
*பிச்சை போட்டவளின் தாலி- என்ன பிச்சைனு வாசகர்கள் அறியும்படி கொஞ்சம் தெளிவா சொல்லிட்டு ஏசுனா நல்லாயிருக்கும்லே
Post a Comment