மரணத்தின் கைகள்
தனது விரல்களின் இடுக்குகளில்
மரணித்த மனிதர்களின்
முந்தைய அனுபவங்களுடன்.
இனி மீள முடியாத
ஆழத்தினுள் புதைந்துவிட்ட
மரணித்தவர்களின் புகைப்படங்கள்
ஒவ்வொன்றாக வேர்களின் பிடியிலிருந்து
தவறி வருகின்றன.
யாருமற்ற
மனித நடமாட்டங்களை நிராகரித்துவிட்ட
நீராவிப்போல கணமிழந்து
வெளியேறுகின்றன
இறந்தவர்களின் கடைசி சில சொற்கள்.
மரணம்
தனது முகங்களைக்
கழற்றி எறிந்துவிட்டு
மௌனத்தின் உடலென
நெளிந்துக்கொண்டிருக்கின்றன
நிர்வாணமாக நிரந்திரமாக
சூன்யமாக.
ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா
2 comments:
மரணத்தின் பிடிகள் மிக கொடியது நமக்கு.மரணத்திற்கு மரணத்தை தரும் நமது சித்தர்கள் பார்வையில் மரணம் என்பது ஒரு பயனம்.புரியாதவர்களுக்கு மரணம் கொடிய நிகழ்வு,புரிந்தவர்களுக்கு மரணம் ஒரு பெரு வாழ்வு....சுவர்+அகத்தின் (சுவர்கம்/சொர்க்கம்)நிறவுக்கோல்....நன்று உங்கள் கவிதை நண்பரே...பெரிய தத்துவத்தை சிறு கவிதையில் வரைந்துவிட்டீர்.....இந்த வாழ்க்கையை உணர்ந்து வாழ்வதும் மரணப் பாதையை திறந்து வாழ்வது ஒன்றுதான், மரனம் நமது நிழல்..
வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்...
கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி மனோகரன். மரணம் குறித்த பயத்திலிருந்தும் பதற்றத்திலிருந்து மீள முடியாத வரலாற்று பலவீனங்கள்தான் அதனையொட்டி பல தத்துவங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.
இன்னமும் மரணம் என்கிற ஆழத்தின் பிடிகள் வலுவாக இருக்கின்றன.
Post a Comment