Saturday, May 14, 2011

செம்பருத்தி இரு மாத இதழ்-மாற்றம்

மலேசிய அரசியலின் விரிவான அலசலையும் பல நல்ல கட்டுரைகளையும் பிரசுரித்துக்கொண்டிருந்த செம்பருத்தி இதழ் பெரிதும் மாற்றம் கண்டு இப்பொழுது பல வண்ணப் பக்கங்களுடம் விற்பனையில் இருக்கின்றது.

மலேசியாவின் மிக முக்கியமான சிறுகதையாளரும் இளைஞருமான சு.யுவராஜன் செம்பருத்தி இதழின் ஆசிரியராகப் புதியதாகச் சேர்ந்துள்ளார். மேலும், பசுபதி, மா.சண்முகசிவா, ம.நவீன், கே.பாலமுருகன்(நான்) இன்னும் சில இளையோர் கூட்டம் செம்பருத்தியின் ஆலோசகர்களாக அவர்களுடன் கைக்கோர்த்துள்ளோம்.


இன்றைய சமூகத்தின் ஒடுக்குமுறைகளையும் போராட்டங்களையும் இலக்கியத்தின் வழி எழுச்சியுடன் பதிப்பித்து உலகிற்குச் சொல்ல முடியும் என்கிற சாத்தியங்களை உணர்ந்து செம்பருத்தியில் பல இலக்கியத்திற்கான பக்கங்களும் இணைக்கப்பட்டுருக்கின்றன. இனி ஒவ்வொரு இதழும் தனி சிறப்பிதழாகக் கொண்டு வரவும் தயார் செய்யப்பட்டுள்ளது. செம்பருத்தி இரண்டாவது இதழ் 'பெண்ணிய சிறப்பிதழாக" வெளியாகியுள்ளது. அடுத்த வரும் இதழ் 'இலக்கிய சிறப்பிதழாக" மலரவுள்ளது. ஆகையால் படைப்பாளிகளையும் இளைஞர்களையும் தங்களின் படைப்புகளை விரைந்து செம்பருத்தி ஆசிரியருக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் இளைஞர்கள் தாங்கள் வாசித்த ஏதேனும் புத்தகங்களைப் பற்றி சுருக்கமாகப் பகிர்ந்துகொள்ள விரும்புபவர்கள், அரை பக்கத்திற்கு எழுதி அனுப்பி வைக்கலாம். பெரிதும் எதிர்ப்பார்க்கின்றேன். email: bkbala82@gmail.com
நன்றி.

கே.பாலமுருகன்

1 comment:

Tamilvanan said...

//மேலும், பசுபதி, மா.சண்முகசிவா, ம.நவீன், கே.பாலமுருகன்(நான்) இன்னும் சில இளையோர் கூட்டம் செம்பருத்தியின் ஆலோசகர்களாக அவர்களுடன் கைக்கோர்த்துள்ளோம்.//

வாழ்த்துக்க‌ள் பால‌முருக‌ன்.