நிறைய பேரணிகள் நடந்த நாடு இது.
தொடக்கக் காலத்திலேயே சுதந்திரத்திற்காகவும் எதிர்ப்புணர்வுகளைத் தெரிவிப்பதற்காகவும் நாட்டில் அமைதி பேரணி கையாளப்பட்டே வந்துள்ளது. அதில் முக்கியமானதாக கம்னியுஸ்ட் இயக்கத்திற்கு எதிராக 1950-இல் செமென்யேவில் நடத்தப்பட்டப் பேரணியாகும். 100க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டு தங்களின் எதிர்ப்பை அமைதியான முறையில் வெளிப்படுத்தினர்.
துங்கு அப்துல் ரஹ்மான் நினைவகம்
சமீபத்தில் கோலாலம்பூரில் அமைந்திருக்கும் துங்கு அப்துல் ரஹ்மான் நினைவகத்திற்குச் சென்றிருந்தேன். வரலாற்று தொடர்பான சில தகவல்களைத் திரட்ட முடிந்தது. அங்கே ஒரே தமிழ் அதிகாரியாகப் பணியாற்றும் சென்பகவள்ளி அவர்களைச் சந்தித்து உரையாட முடிந்தது. துன் சம்பந்தன் தொடர்பான தகவல்களைத் திரட்டுவதிலும் மலேசிய வரலாற்றில் தமிழ் மக்களின் பகுதிகளை ஆவணப்படுத்த வேண்டும் என்கிற தேடலிலும் உள்ளவர்.
துங்கு அப்துல் ரஹ்மான் நினைவகம் ஆசியாவிலேயே அதிக பரப்பளவு கொண்டதாகும். அங்கே பணியாற்றும் செம்பகவள்ளி துன் சம்பந்தனுக்கான நினைவகத்தை அமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஏழு முக்கியமான தலைவர்களின் நினைவகம் விரைவில் அமைக்கப்படவிருப்பதாகக் கூறினார்.
மலேசியாவின் முதல் பிரதமரும் சுதந்திர தந்தையுமான துன் துங்கு அப்துல் ரஹ்மான் ஆட்சியில் இருந்தபோது தங்கியிருந்த இல்லம். அவருடைய நினைவகமாகப் பிறகு மாற்றப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் இங்கே வந்து இதைப் போன்ற சில வரலாற்று ஆவணங்களை நேரில் கண்டு தகவல் பெற்றுக்கொள்ளும்படி அழைக்கிறார் அங்குப் பணியாற்றும் சென்பகவள்ளி அவர்கள்.
கே.பாலமுருகன்
No comments:
Post a Comment