மலேசியாவுக்கு வந்து சேர்ந்த புகைப்படக்காரர்கள் பல மாதங்கள் இங்கு இருந்து தங்களின் புகைப்பட ஆய்வையும் வரலாற்றையும் பதிவு செய்தார்கள். குறிப்பாக தோம்சன் எனும் புகைப்படக்காரர் பினாங்கு மாநிலத்தில் 10 மாதங்கள் தங்கி அந்த மாநிலத்தையும் மனிதர்களையும் புகைப்படம் எடுத்துச் சேகரித்தார்.
பிஷோப் சாலையும் அங்கு வாணிபம் செய்து கொண்டிருக்கும் சீனர்களும். யாரோ ஒரு முக்கியமான நபரின் வருகைக்காக பினாங்கு சாலைகள் விஷேசமான வரவேற்பை மேற்கொண்டிருப்பதைப் போல இருக்கிறது. பினாங்கு மாநிலம் 18 ஆம் நூற்றாண்டில் நான்கு பிரிவாக அமைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் கூறப்படுகிறது. அதாவது Light, Beach, Chuliah and Pitt streets. இன்று “பாடாங் கோத்தா, gurney street” என அழைக்கப்படும் இடங்கள் யாவும் Beach பகுதியைச் சேர்ந்தவை. பினாங்கின் இந்தியர் பகுதி முன்பு Light பகுதியைச் சேர்ந்தவை எனக் கருதப்படுகிறது.
1955க்குப் பிறகு வந்து சேர்ந்த வரலாற்றுப் புகைப்படக்காரர்களான K.Fielberg மற்றும் Thompson ஆகியோர் தங்களின் அதிகமான காலத்தைப் பினாங்கு பழைய நகரத்தில்தான் செலவழித்தார்கள். ஒரு நகரத்தை ஆவணப்படுத்துவது என்பது அதன் புகைப்படங்களிருந்தே தொடங்கும். இன்று old town white coffee யின் வணிக வெற்றிக்குக் காரணம் அங்கு ஒரு கலை அம்சம் போல நிறுவப்பட்டிருக்கும் பழைய நகரத்தின் காப்பி கடைகளின் புகைப்படங்கள்தான். ஆனால் அது வெறும் வணிக நோக்குக்காக மட்டுமே கலை என்கிற போர்வையின் மீது அவர்கள் பூசி மொழுகியிருக்கும் ஒரு உத்தி மட்டுமே. ஆனால் வரலாற்று புகைப்படக்காரர்கள் அதை ஓர் ஆவணப்படுத்துவதற்கான முயற்சியாக மட்டுமே நாடு நாடாகப் பயணித்தார்கள்.
No comments:
Post a Comment