இன்று - 01.09.2013-இல் மலேசிய மின்னல் வானொலியில் ஒலிப்பரப்பாகிய என்னுடைய சிறு நேர்காணலில் கானொலி தொகுப்பு இது. எதிர்வரும் 15.09.2013ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் என் சிறுகதை தொகுப்பு வெளியீடு தொடர்பாக இந்த நேர்காணல் அமைந்திருந்தது. நேர்காணல் செய்தவர் எழுத்தாளரும் மின்னல் வானொலியின் அறிவிப்பாளருமான தயாஜி.
Sunday, September 1, 2013
Friday, August 23, 2013
Elysium - 21 ஆம் நூற்றாண்டை நோக்கிய மிகைக்கற்பனை சினிமா
Neill Blomkamp என்கிற இயக்குனரின் இன்னொரு மகத்தான அறிவியல் புனைவு ' Elysium'. இவர் ஏற்கனவே 'district 9 ' என்கிற படத்தை இயக்கியவர். 21ஆம் நூற்றாண்டில் பூமி மனீதர்கள் வாழத் தகுதியற்ற நிலமாக மாறுகின்றது. ஜனத்தொகை பெருக்கம், நோய்கள் என உலகம் சீரழிகிறது. அப்பொழுது இரண்டு வகையான சூழல் உருவாகின்றது. ஒன்று இந்தச் சிதைவிலேயே வாழ்ந்து சாகும் எளிய மனிதர்கள், இன்னொன்று பூமியைவிட்டு எத்தனையோ மைல்களுக்கு அப்பால் இருக்கும் செயற்கை விண்வெளி உலகத்தில் வாழும் உயர்தர மேல்வர்க்கத்து மக்கள். சக்கர வடிவில் இருக்கும். பூமி அந்த மேட்டுக்குடி வர்க்கத்தால் கண்கானிக்கப்படுகின்றன. அவர்களின் சட்டத்திட்டங்களுக்கேற்ப உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். விண்வெளி உலகத்திலிருந்து வரும் முதலாளிமார்களின் தொழிற்சாலைகளில் வேலை வாங்கப்படுகிறார்கள். குற்றம் இழைத்தவர்கள் சிறைக்குப் பதிலாகத் தொழிலாளிகளாக மாற்றப்பட்டு வருடக் கணக்கில் உழைக்கக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.பூமியில் வாழும் எளிய மக்களின் கனவே அந்த விண்வெளி உலகத்தில் எப்படியாவது ஒருநாள் போய் சேர்ந்துவிட வேண்டும் என்பதே. அங்குள்ளவர்களுக்கு வயதாகுவதில்லை, எந்தவிதமான நோயும் அண்டுவதில்லை. பூமியிலிருந்து கள்ளத்தனமாக அந்த விண்வெளி உலகத்திற்குள் நுழைய நினைக்கும் விமானங்கள் தகர்க்கப்படுகின்றன. ஏறக்குறைய கள்ளக்கூடியேறிகளின் மீது ஒரு நாடு விதிக்கும் அத்தனை தடைகளையும் பூமியில் வாழ்பவர்களின் மீது விதிக்கப்படுகிறது. 20 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த கற்பனையாக இந்தப் படத்தைக் காண்கிறேன்.
Monday, July 8, 2013
சிறுகதை: புத்தகப்பை
பெக்கான் பாரு முற்சந்தி. அடிக்கடி விபத்து நடந்து பழகிப் போய்விட்ட பகுதி. எப்பொழுதாவது யாராவது நகரத்தில் விபத்து எனச் சொன்னால் உடனே ‘பெக்கான் பாரு முச்சந்தியா?’ என்றுதான் கேட்கத் தோன்றும். எல்லாம் நகரங்களிலும் அப்படிப்பட்ட விபத்திற்குப் பேர்போன ஒரு பகுதி இருக்கும்.
எப்பொழுது வெளியே கிளம்பினாலும் ‘டேய் அந்தப் பெக்கான் பாரு முச்சந்தி பக்கம் பாத்து போ’ என்றுதான் எல்லாம் வீட்டிலும் சொல்வார்கள். நம் வீட்டிலோ அல்லது நண்பர்களிலோ யாராவது அங்கு விபத்துள்ளாகி இறந்திருக்கக்கூடும். அல்லது இடையில் தென்படுவோர் யாரிடம் கேட்டாலும் அந்த முற்சந்தியில் நிகழ்ந்த ஒரு கோரவிபத்துக் குறித்து ஆச்சரியங்களை வைத்திருப்பார்கள்.
கன்சில் சிறிய காரும், எக்ஸ்சோரா பெரிய காரும் அன்று அங்கு பெக்கான் பாரு முற்சந்தியில் மோதிக் கொண்டன. தூரத்திலிருந்து பார்க்கும்போது அதைப் பொருட்படுத்தத் தோன்றவில்லை. வழக்கமான ஒரு காலையை எந்தச் சுரணையுமின்றி கடந்தாக வேண்டும். ஏதோ ஒரு சிலர் மட்டும் காரை ஓரமாக வைத்துவிட்டு விசாரிப்பதற்காக இறங்கிக் கொண்டிருந்தனர். காலை என்பது திட்டவட்டமானது. அதில் ஒரு நிமிடத்தைக்கூட இழக்க யாரும் தயாராக இருப்பதில்லை.
Saturday, July 6, 2013
குவர்னிகா - 41வது இலக்கியச் சந்திப்பு மலர்
தேசிய இனப் பிரச்சினைப்பாடுகளையும் யுத்த மறுப்பையும்
அமைதிக்கான வேட்கையையும் சாதிய எதிர்ப்பையும் பெண்விடுதலையையும் விளிம்புப் பால்நிலையினரின்
குரலையும் வஞ்சிக்கப்பட்ட மாந்தரின்
பாடுகளையும் பேசும் பெருந்தொகுப்பு.
கட்டுரைகள், சிறுகதைகள்,
நேர்காணல்கள், கவிதைகள் என நான்கு பகுப்புகள். பன்னிரெண்டு நாடுகளிலிருந்து எழுதப்பட்ட
எழுபத்தைந்துக்கும் அதிகமான பனுவல்கள்.
இலக்கியச் சந்திப்பின் மரபுவழி கட்டற்ற கருத்துச் சுதந்திரத்திற்கான களம்.
rநிலாந்தன் rசோலைக்கிளி rயோ. கர்ணன் rஅ.முத்துலிங்கம் rதமிழ்க்கவி rமு. நித்தியானந்தன் rசண்முகம் சிவலிங்கம் rந.இரவீந்திரன் rஸர்மிளா ஸெய்யித் rதேவகாந்தன் rபொ.கருணாகரமூர்த்தி rஏ.பி.எம். இத்ரீஸ் rஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் rகற்சுறா rசெல்வம் அருளானந்தம் rலெனின் மதிவானம் rலிவிங் ஸ்மைல் வித்யா rறியாஸ் குரானா rஎம் .ரிஷான் ஷெரீப் rம.நவீன் rஓட்டமாவடி அறபாத்
rஹரி ராஜலட்சுமி rகருணாகரன்
rமா. சண்முகசிவா rகறுப்பி
rமோனிகா rதமயந்தி rபூங்குழலி வீரன் rஎம்.ஆர்.ஸ்ராலின்
r திருக்கோவில் கவியுவன்
rஇராகவன் rலீனா மணிமேகலை rராகவன் rதேவ அபிரா rகே.பாலமுருகன்
Wednesday, June 26, 2013
தமிழ் மொழி பயிற்சிப் பட்டறைகள் - 2013
மலேசியத் தேர்வு வாரியம் தமிழ் மொழி தாள் 2 ஏற்படுத்திய மாற்றங்களுக்கேற்ப சிறுவர் சிறுகதை எழுதுவது குறித்து நாடெங்கும் சென்று மாணவர்களைச் சந்தித்து பட்டறைகள் வழங்கி வருகின்றேன். கடந்தாண்டு மலாக்கா மாநிலம் சென்று தமிழ் ஆசிரியர்களுக்குச் சிறுகதை பட்டறை வழங்கியதன் விளைவாக பல மாணவர்கள் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டதோடு சிறுகதை எழுதும் ஆற்றலையும் பெற்றுள்ளனர்.
இந்தாண்டும், பினாங்கு, கெடா, கூலிம் எனப் பல பட்டறைகள் நடத்தினேன். கடந்த வாரம் வெள்ளி, சனிக்கிழமைகளில் ஜொகூர் மாநிலத்திற்குச் சென்று அங்குள்ள துன் அமீனா தமிழ்ப்பள்ளியில் தமிழ் மொழி பயிற்சிப் பட்டறையை வழிநடத்தினேன். மாணவர்கள் கற்பனைவளமிக்கவர்களால இருந்தனர். ஆகையால் அவர்களுக்குப் பயிற்சி வழங்குவதில் எளிமையாக இருந்தது.

Friday, June 7, 2013
2012ஆம் ஆண்டின் கவனம் பெற்ற நல்ல தமிழ் திரைப்படங்கள்
2012 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவின் விமர்சகன் அல்லது பார்வையாளன் என்கிற முறையில் பலர் அந்த வருடத்தில் வெளிவந்த திரைப்படங்களை வரிசைப்படுத்தினார்கள். அவர்களின் வரிசைப்படுத்தல்களுக்குப் பலவிதமான பின்புலம் இருந்தன. ஆனால், ஒட்டுமொத்தமாக எல்லாம் படங்களையும் ஒரே விமர்சனப் பார்வையில் வைத்து மதிப்பிடுவது தமிழ் சினிமாவைப் பொருத்தவரை சாத்தியமில்லை.
2012ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களைப் பல வகைகளில் பிரித்து விமர்சிக்க வேண்டும். விஜய் விருது விழாவிலும் கூட முக்கியமான படங்கள் ஏதும் விருதுகள் பெறாமல் போனதற்கும் இதுதான் காரணம் என நினைக்கிறேன். மக்கள் இரசனையை முன்னிட்டுத்தான் சிறந்த படங்களைத் தேர்ந்தெடுக்க முடியும் என கட்டாயம் நேர்ந்தால் கண்டிப்பாக விஜய் படமான 'துப்பாக்கி' படத்திற்குத்தான் அனைத்து ஓட்டுகளும் போய் சேரும். ஆனால், சமரசமே இல்லாத தீவிர விமர்சனப் போக்கில் தமிழ்ப்படங்களை அணுகினால் மட்டுமே சல்லடை செய்து மிக முக்கியமான கலையையும் சமூகப் பொறுப்புமிக்க படங்களையும் அடையாளம் கண்டு மக்களின் இரசனையைப் புதுப்பிப்பதோடு சினிமா இயக்குனர்களுக்கு உற்சாகத்தையும் கொடுக்க இயலும். இப்படித்தான் படம் எடுக்க வேண்டும் என்கிற புத்திமதியாக விமர்சனம் ஒருபோதும் இருக்கக்கூடாது. காரணம் சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு, அல்லது கலை மட்டும் அல்ல, அது ஒரு தொழிலும்கூட.
Thursday, June 6, 2013
After earth: திரைவிமர்சனம்
After Earth : ஒரு அறிவியல் புனைக்கதையாக இருந்தாலும்கூட வாழ்க்கை குறித்த பற்பல விசயங்களை உரையாடியுள்ளது. மேற்குலகு சிந்தனையுடைய ஒரு பிரமாண்டமான அறிவியல்/ scinece fiction இயக்குனரால் அப்படிப் படைத்துவிட முடியும் என்பது குறைவான சாத்தியம்தான். ஆனால், இப்படத்தை இயக்கிய night syamalan கீழை சிந்தனையுடைய பின்புலத்திருந்து சென்றவர். 'ஆபத்து என்பதுதான் உண்மை ஆனால் அதன் முன்னால் நாம் அடையும் பயம் என்பது நம்முடைய தேர்வாகும்' என்பது தொடங்கி, எதிர்காலத்தைக் குறித்து ஒருவேளை இல்லாமலே போகக்கூடிய கற்பனைகளை உருவாக்கி அதைக் கண்டு பயப்படுவதுதான் மனித இயல்பு என வில் ஸ்மித் குறிப்பிடுவது வரை, தன் இளைய மகனை அவர் உற்சாகப்படுத்த உபயோகிக்கும் அனைத்துமே தத்துவம்.
'பூமிக்கு அடுத்தது' எனும் தலைப்பில் இரண்டு விசயங்கள் அடங்கியுள்ளன. அது கதையினூடாகவும் வந்துவிடுகின்றன. ஒன்று, பூமியில் பண்டைய காலத்தில் நிகழ்ந்த உயிர் பரிணாமம் மீண்டும் மனித உயிர்கள் முற்றிலுமாக அழிந்துவிடுகையில் தலைக்கீழாக நடக்கிறது. எஞ்சியிருக்கும் உயிர்வாழிகள் மீண்டும் டைனசோர் காலத்திற்குட்பட்ட உயிர் பரிணாமத்தை அடைகின்றன. அப்படியொரு சமயத்தில்தான் வேற்றுக்கிரகத்திலுள்ள மனிதர்கள் பூமிக்கு வருவதாகக் காட்டப்படுகிறது. எப்பொழுதும் வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வருவதைக் காட்டுவார்கள். ஆனால் இப்படத்தில் பூமியே ஒரு வேற்றுக்கிரகமாக இருக்கின்றது. பிரபஞ்சத்தில் இதைப் போல எண்ணற்ற சூரிய குடும்பங்கள் இருக்கலாம் என்றும் ஆங்கே பூமியைப் போலவே மனிதர்கள் வாழக்கூடும் என்றும் நம்பிக்கைகள் உள்ளன. அதன் அடிப்படையிலேயே இன்னொரு உலகத்திலிருந்து மனிதர்கள் பிரபஞ்ச எல்லையை உடைத்துக்கொண்டு பூமிக்கு வருகிறார்கள்.

Saturday, June 1, 2013
நான் புகைப்படக்காரன் - 1
மூன்று மாதத்திற்கு முன்புத்தான் நிக்கோன் புகைப்படக்கருவி வாங்கினேன். பல நாள் சேமிப்பிற்குப் பிறகு நிக்கோன் D3200 மட்டுமே வாங்க முடிந்தது. ஏறக்குறைய 8 வருடத் திட்டம் இது. புகைப்படக்கலையில் ஆர்வம் இருந்தும் அதை முறையாகக் கற்றுக்கொள்ள முதலில் ஒருவனுக்கு புகைப்படக்கருவி தேவை.
சராசரியாக நாம் காணும் காட்சிகளை அழகுப்படுத்தி அதன் அற்புதமான தருணங்களை காட்சியாக்கி நிறுத்தி நம்மிடம் காட்டுபவனே புகைப்படக்காரன். சிரிப்பு, அழுகை, நகரம், மரங்கள், மனிதர்கள் என அவனுடைய கண்கள் அலையும் தேசம் அனைத்தையும் உராய்ந்துகொண்டே நகர்கின்றன.

Thursday, May 23, 2013
Gandhi Is My Father – ஓர் இந்துத்துவ தந்தையின் அதிகாரம்

வரலாற்றில் பற்பல முறை உடைத்து உடைத்து மீண்டும் கட்டியெழுப்பப்பட்டவர் காந்தி. எழுத்தாளர் ஜெயமோகன் முதல் நடிகர் கமல்ஹாசன் வரை எல்லோராலும் மீண்டும் மீண்டும் புனையப்பட்ட அடையாளம்தான் காந்தி. சிலர் காந்தியின் அமைதி போராட்டத்தை வைத்து இந்தியாவின் மிகச் சிறந்த எதிர்ப்புணர்வு உண்ணாவிரதம்தான் எனக் கூறினார்கள். சிலர் காந்தியைச் சுதந்திர தந்தை என அடையாளப்படுத்தினார்கள். இன்னும் சிலர் காந்தி தன் ஆண்மையைத் தன் பேத்திகளிடமே பரிசோதித்துப் பார்த்தவர் என அவரின் ஒழுக்கத்தை விமர்சித்தார்கள். மேலும் சிலர் காந்தியின் அரசியல் தவற்றை வன்மையாகக் கண்டித்தனர். சிலர் காந்தியை இராமருக்கு நிகரான சமய அடையாளமாகப் புனைந்தார்கள். ஒரு பக்கம் அவரைக் கட்டியெழுப்பியவர்களும் இன்னொரு பக்கம் அவரை நிர்முலமாக்கியவர்களும் காலம் முழுக்க இருக்கவே செய்தார்கள்.
காந்தியின் வரலாற்று படமான ‘காந்தி’ 1982-இல் வெளியாகி ஆஸ்கார் விருதுகளைப் பெற்றது. ஒரு வழக்கறிஞர் எப்படி இந்தியாவின் மிகச் சிறந்த அரசியல்வாதியாக மாறுகிறார் எனும் வரலாற்றை தகவல்கள் அடிப்படையில் மட்டுமே கொண்டு போய் சேர்த்த அப்படத்தை விட்டுவிடலாம். காந்தி குறித்து எந்தக் கேள்வியுமே எழுப்பாத முயற்சி அது. ஆனால், பிறகு வெளிவந்த இரு முக்கியமான படங்கள் கவனத்திற்குரியவை. இரண்டுமே இந்தி திரைப்படங்கள் ஆகும். இவ்விரண்டு படத்தையும் புரிந்து கொள்வதற்கு நமக்கு காந்தியைப் பற்றிய குறிப்புகளும் அவரின் அரசியல் ஈடுபாடுகளும் தெரிந்திருக்க வேண்டும்.

Saturday, May 11, 2013
சூது கவ்வும் திரைவிமர்சனம்: புத்திசாலித்தனமில்லாத குற்றம்
சூது கவ்வும்: நலன் குமரசாமி இயக்கத்தில் வெளியான, 'பீட்சா' , 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' வரிசையில் விஜய சேதுபதியின் அடுத்த முக்கியமான திரைப்படம். திரைக்கதை எவ்வித கொள்கையும் இலட்சியமும் இல்லாமல் வெறுமனே நம்மை இழுத்துக் கொண்டு நகர்கிறது. மிகப்பெரிய மிரட்டலான ஆள் கடத்தலை, சிதறுண்டு சிறிய அளவில் கடைப்பிடிக்கும் விஜய சேதுபதியுடன் சென்னையில் பிழைப்பின்றி போகும் மூன்று இளைஞர்கள் இணைகிறார்கள்.
அதில் ஒருவன் திருப்பூரில் நயந்தாராவிற்குக் கோவில் கட்டிவிட்டு மக்களால் அடித்துத் துரத்தப்பட்டவன். மற்றொருவன் காலையிலேயே சீக்கிரமாக எழுந்து குளித்துவிட்டு தண்ணியடிப்பவன், மற்றொருவனும் ஒரு பெண்ணால் வேலையைப் பறிக்கொடுத்தவன். சென்னையில் உதாசினப்படுத்தப்பட்ட இளைஞர்கள் எப்படி வாழ்வின் விளிம்புக்குத் தள்ளப்பட்டு குற்றவாளிகளாக மாறுகிறார்கள் என்பதை மிதமானபோக்கில் அலட்டலில்லாமல் காட்டிச் செல்கிறது.
Subscribe to:
Posts (Atom)