பெருநகர் கவிதை 2: விடைப்பெறுதல்
இலேசான மழையில்
இன்றொரு விடைப்பெறுதல்.
வெகுநாட்களுக்குப் பிறகு வந்து
உடனே திரும்பும் பெரியப்பாவாகவோ
அல்லது கடன் வாங்க வந்துவிட்டுப்
போகும் பெரிய மாமாவாகவோ இருக்கலாம்.
விடைப்பெறுதல்
ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றது.
பொய்யான சிரிப்பு
அன்றாடங்களைத் தின்று சலித்த கண்கள்
உயிரிற்ற கையசைப்பு.
விடைப்பெறுதலுக்கு முன் துக்கமான ஒரு முகம்.
பெரிய மாமாவிற்கும் பெரியப்பாவிற்கும் யாராகினும்
விடைப்பெறுதல் எந்த நினைவுமற்று மறைகிறது.
எதையும் பெற்றுக்கொள்ளாமல்
எதையும் கொடுத்துவிடாமல்
பத்திரமாக முடிகின்றது.
- கே.பாலமுருகன்
இலேசான மழையில்
இன்றொரு விடைப்பெறுதல்.
வெகுநாட்களுக்குப் பிறகு வந்து
உடனே திரும்பும் பெரியப்பாவாகவோ
அல்லது கடன் வாங்க வந்துவிட்டுப்
போகும் பெரிய மாமாவாகவோ இருக்கலாம்.
விடைப்பெறுதல்
ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றது.
பொய்யான சிரிப்பு
அன்றாடங்களைத் தின்று சலித்த கண்கள்
உயிரிற்ற கையசைப்பு.
விடைப்பெறுதலுக்கு முன் துக்கமான ஒரு முகம்.
பெரிய மாமாவிற்கும் பெரியப்பாவிற்கும் யாராகினும்
விடைப்பெறுதல் எந்த நினைவுமற்று மறைகிறது.
எதையும் பெற்றுக்கொள்ளாமல்
எதையும் கொடுத்துவிடாமல்
பத்திரமாக முடிகின்றது.
- கே.பாலமுருகன்





















பிரான்ஸ் காலனிய ஆட்சிக்குக் கீழ் இருந்த பாண்டிச்சேரி பார்ப்பதற்கே ஒரு குட்டி பிரான்ஸ் மாதிரித்தான் இருக்கும். பாண்டிச்சேரியில் மிருகக்காட்சி சாலையை வைத்துப் பராமரித்து வரும் ஒரு குடும்பத்தின் கடைசி மகனான ‘பை’ என்பவனின் கதைத்தான் இது. பை-யின் அப்பா வைத்திருக்கும் மிருகக்காட்சி சாலையின் நிலத்தை உள்ளூர் அரசாங்கம் மீட்கவே, மிருகக்காட்சி சாலையை விற்றுவிட்டு மிருகங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு பை-யின் அப்பா கனடாவிற்குச் செல்லத் தீர்மானிக்கிறார். இடையில் மிருகங்களை நல்ல விலைக்கு விற்றுவிடுவதாகத் திட்டம். இந்தியாவை விட்டுச் செல்ல ‘பை’க்கு மனமில்லை. ஜப்பான் கப்பல் ஒன்றில் மிருகங்கள் அனைத்தையும் ஏற்றிக் கொண்டு புறப்படும்போது பை சக்தியின்றி அழுகிறான்..jpg)



