Friday, July 9, 2010

மலேசியாவில் சிறுவர் இலக்கியம் படைக்கப்படுவதில்லை

கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலான மலேசிய கல்வியின் உற்பத்தி என்கிற முறையில் நான் கண்டறிந்த ஒரு சில பலவீனங்களை இங்கு முன்வைக்கிறேன். இது ஏற்கனவே எனக்குள் ஒரு கேள்விக்குறியாக மட்டுமே இருந்து வந்தது. சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட ஒரு சிலருடனான சந்திப்பிற்கும் கலந்துரையாடலுக்கும் பிறகு மலேசியாவில் இதுநாள் வரையில் முறையான சிறுவர் இலக்கியம் படைக்கப்படவில்லை. என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

முதலில், மலேசியக் கல்வி பாடத்திட்ட அமைப்பில் படைப்பிலக்கியத்தை ஒரு கூறாக இணைக்கவே இங்குப் பலத்தரப்பட்ட எதிர்ப்பு இருக்கிறது. படைப்பிலக்கியம் அனாவசியமான ஒன்றாகக் கருதப்பட்டு நிராகரிக்கவும் பல முயற்சிகள் எடுக்கப்பட்டுருக்கிறது. தேர்வை முதண்மையானதாக முன்னிறுத்தும் பொது குறிக்கோளைச் சிதைக்கும் அம்சமாகப் படைப்பிலக்கியத்தைக் கருதும் ஒரு கூட்டம் எப்பொழுதும் சிறுவர் இலக்கிய வெளி உருவாக்கத்திற்குத் தடையாக இருந்து வந்திருக்கின்றனர். ஆகையால்தான் இங்கு இலக்கியம் என்பது பெரியவர்களுக்குரிய மொழியில் பெரியவர்களின் உலகத்தைப் பற்றியதாக இருக்கிறது.

பொதுவாகவே இலக்கியத்தைச் சீரமைக்கவும் முறைப்படுத்தவும் கையாள வேண்டியதுதான் இலக்கணம் என்பதையும் இலக்கியம் என்பது மட்டுமே ஒரு மொழியின் ஆன்மா என்பதையும் புரிந்துகொள்ள யாரும் முன்வருவதில்லை. மேலும் மரபார்ந்து வழக்கத்தில் இருக்கக்கூடிய இலக்கியத்திற்குரிய அர்த்தமும் பொருளும்தான் பல நல்ல தரமான புதிய சிந்தனைகளும் புதிய இலக்கிய வடிவமும் தமிழுக்குள் வருவதற்குச் சிக்கலாக அமைந்துவிடுகிறது.(இந்தக் கருத்தை முக்கியமான ஒரு கல்வி பின்புலம் சார்ந்த அதிகாரி தெரிவித்தது). இதை முற்றிலும் நான் ஆமோதிக்கின்றேன். எப்பொழுதும் தமிழுக்குள் கொண்டு வரப்படும் புதிய சிந்தனைகளும் கோட்பாடுகளும், ஏற்கனவே தமிழில் உள்ள மரபார்ந்த அர்த்தங்களுக்கு எதிராகப் புரிந்துகொள்ளப்படுவதால், குறைந்தபட்சம் அதை விவாதத்திற்கு முன்மொழியும் சந்தர்ப்பங்களைக்கூட இழக்க நேரிடுகிறது.

ஆகையால்தான், கல்வி அமைச்சு யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் படைப்பிலக்கியத்தைக் கொண்டு வந்தபோது நாடளவில் அதற்கு எதிர்ப்பு உருவாகியது. சிறுவர்களின் உலகம் கதையால் ஆனவை, பல கதைச் சொல்லிகளைக் கடந்து உருவானதுதான அவர்களின் பால்யக்கால மனங்கள் மற்றும் அவர்களின் உலகத்தில் கதைகளுக்குத் தனித்த இடங்கள் உண்டு எனும் புரிதலுக்கு முற்றிலும் மாறுப்பட்ட எதிர்வினைத்தான் படைப்பிலக்கியத்தைத் தமிழுக்குள் கொண்டு வரக்கூடாது என்று ஒட்டு மொத்தமாக ஏற்பட்ட குரல் எனக் கருதுகிறேன். கதைகளைச் சிறுவர்களின் உலகத்திலிருந்து நிராகரிப்பது மிகப் பெரிய வன்முறையென கருதுகிறேன். அவர்களின் இயல்பான மனங்களைச் சிதைத்து வெறும் சமூக ஒழுக்க பிண்டங்களாகப் பிரதியெடுக்கும் ஒருமுயற்சிதான் கதைகளையும், பாடல்களையும் அவர்களிடமிருந்து பறிக்கும் செயல்.

மாணவர்களின் உளவியல் தத்துவங்களை நன்கு உணரக்கூடியவர்கள் மொழி, மரபு என்கிற கணமான மதிப்பீடுகளைக் கொண்டு சிறுவர்களைக் கட்டமைக்கிறோம் என்கிற பெயரில் அவர்களின் உலகத்தை வடிவமைக்க முயல மாட்டார்கள். மொழியின் மகத்துவத்தை உணர்த்தும் அல்லது பாடமாக நடத்துவதில் இருக்கின்ற தீவிரமும் நடவடிக்கைகளும் கதைகளால் ஆன அவர்களின் மனதை மீண்டும் கதைகளால் வளர்த்தெடுக்க முன்வருவதில் காட்டுவதில்லை. இதுவே சிறுவர்களின் மன அமைப்பிற்கு எதிரான வன்முறையாகக் கருதுகிறேன். பெரும்பாலான ஆசிரியர்கள் அவர்களுக்குப் பாடம் நடத்தவே முன்வருகிறார்கள். பாடம் முடிந்ததும் அன்று கற்பிக்கப்பட்ட எல்லாவற்றையும் வெறும் மனனமாகப் பதிக்கப்படுகின்றது. இதுவும்கூட தேர்வை முன்வைத்து உருவான ஒரு செயல்பாடுதான்.

மேலும் தற்பொழுது மட்டுமல்ல பலகாலங்களாக நடப்பில் உள்ள சிறுவர் இலக்கியம் குறித்து மதிப்பீடுகையில் இங்கு சிறுவர் இலக்கியமே இதுவரை படைக்கப்படவில்லை என்பதை உணர முடிகிறது. சிறுவர் இலக்கியம் என்பதற்குச் சிக்கலான புரிதலைக் கொண்டிருக்கும் பலர் சிறுவர்களைக் கதைப்பாத்திரங்களாகக் கொண்டிருக்கும் பெரியவர்கள் வாசிக்கக்கூடிய பிரதிகளைத்தான் கதைகளைத்தான் படைத்திருக்கிறார்கள். சிறுவர்களின் உளவியலுக்கும் மனம் செயல்படும் விதத்திற்கும் எதிரான, சற்றும் பொருந்தாத கதைகளைத்தான் சிறுவர்களுக்குக் கொடுத்து வருகிறோம்.

பெரும்பாலான சிறுவர் கதைகளில் இரண்டு விதமான கூறுகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஒன்று, அந்தக் கதையில் வரக்கூடிய சிறுவன் மிகச் சிறந்த ஒழுக்கச் சீலனாகவும் வெறும் நல்லதை மட்டுமே செய்யக்கூடிய உயர்த்தர நல்லவனாகவும் காட்டப்பட்டிருப்பான். அவனைச் சுற்றி எல்லாமும் மிகச் சிறந்ததாகவும் கொஞ்சம்கூட சிறுவர்களுக்கே உரிய எவ்வித குறிப்புகளும் சேட்டைகளும் விளையாட்டுத்தனங்களும் இன்றி, புனிதமான படைப்பாக முன்வைக்கப்பட்டிருப்பான். இவ்விதமான கதையைப் படிக்கும் மாணவர்களுக்கு நெறித்தவறாத நன்னெறிப் பண்புகளை மட்டும் முன்வைக்கும் இடம்தான் கதைகள் எனும் புரிதல் ஏற்படும். ஆகவே கதை எனும் சிறுவர்களின் கனவு மெல்ல விலகி ஒரு நன்னெறி பிரதியாக மட்டும் நிறுவப்பட்டிருக்கும்.

அடுத்ததாக, சிறுவர் கதையில் வரக்கூடிய சிறார் கதைப்பாத்திரங்கள் பெரும்பாலும் பெரியவர்களால் அறிவுரைக்கப்படுபவர்களாவும், அல்லது கதையில் வைத்து சீர்ப்படுத்தக்கூடியவர்களாகவும் காட்டப்பட்டிருப்பார்கள். சிறுவர் கதைகளில் சிறுவர்கள்தான் முதண்மை கதைப்பாத்திரமாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் இங்குப் பெரும்பாலான சிறுவர் கதைகளில் பெரியவர்கள்தான் கதைநாயகர்களாக வந்து சிறுவர்களைச் சீரமைக்கிறார்கள், சீர்ப்படுத்துகிறார்கள். ஆகவே இங்கும் கதை என்பது அறிவுரைக்கப்படும் இடமாகவும் சீர்ப்படுத்தும் பிரதியாகவும் சிறுவர்களிடமிருந்து விலகி நிற்கிறது.

இலக்கியப் பாடத்தையும் நன்னெறிப்பாடத்தையும் ஒன்றாக நடத்தக்கூடிய இயல்புதான் இங்கு நடைமுறையில் இருக்கின்றது. கதைகளில் நன்னெறிகளைப் போதிப்பதில் தவறில்லை, ஆனால் அதையே முதண்மையாக முன்வைத்து பூதாகரமாகக் காட்டி கதைக்குள்ளிருக்கும் நிதர்சனமான தன்மைகளைச் சாகடிக்கக்கூடாது. எனக்குத் தெரிந்த ஒரு கல்வி அதிகாரி அடிக்கடி இப்படியான ஒரு வார்த்தையைச் சொல்லிக் கொண்டே இருப்பார். “என் கட்சிக்காரனான சரவணன் என்கிற சிறுவனை எப்பொழுது ஜெயிக்க வைக்கப் போகிறீர்கள்? எப்பொழுது அவனைக் கதைநாயகனாகக் காட்டப்போகிறீர்கள்? எப்பொழுது அவன் அவனது கதையைக் கொண்டாடப் போகிறான்? எப்பொழுது அவன் அடர்த்தியான சமூக ஒழுக்கப் போதனைகளுக்கு அப்பாற்பட்ட கதைக்களத்தை நுகரப்போகிறான்?

மேலைநாட்டு சிறுவர் இலக்கியங்களை எடுத்துக் கொண்டால் வெறும் மாயங்களை வைத்தே உலகச் சாதனைகளை அடைந்திருக்கிறார்கள். குறிப்பாக harry potter நாவலை எழுதிய R.K.Rowling. இரயில் நிலையத்தில் இருக்கக்கூடிய ஒரு சுவருக்குள் இன்னொரு உலகம் இருப்பதைப் பற்றி இத்துனை மகத்துவமான கற்பனையை உலகமே வியக்கும் வகையில் படைத்துக் காட்டி, மேலும் அதில் இளையோர்களையும் சிறுவர்களையும் அவர்களின் சுயம் களையாமல் காட்டிப் படமாக எடுத்திருப்பதும் பாராட்டக்கூடிய முயற்சியாகும். மேலும் சிங்கப்பூரில் குழந்தைகளுக்கென பிரத்தியேகமாகப் பல சிறுவர் கதை நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன.

78 வயது நிரம்பிய வே.இராமசாமி(சிங்கப்பூர்) 55க்கும் மேற்பட்ட குழந்தைகள் நூலகளை எழுதி அவற்றுள் 25 புத்தகங்கள் தமிழ் மாணவர்களுக்கு துணைப்பாட நூலாக இருக்கின்றன. மேலும் சிங்கப்பூரில் ஆசிய குழந்தை நூல் விழா அவ்வப்போது நடத்தப்படுகிறது, மேலும் சிறுவர் இலக்கியம் குறித்தான இரண்டுநாள் பட்டறைகளும் நடத்தப்படுகிறது. மலேசியாவில் இன்னமும் ஆசிரியர்களின் கைகளில் ஈசாப் நீதி கதை நூல்களும், காகமும் நறியும் நன்னெறிக் கதை புத்தகங்களும்தான் இருக்கின்றன. உலக அளவில் சிறுவர்களுக்கான இலக்கியம் அடுத்தக்கட்டத்தை நோக்கி அவர்களின் கதைகளை அவர்களின் உணர்வுகளைச் சொல்லக்கூடிய களமாக மாறி வருகையில் மலேசியாவில் பல இடங்களில் இன்னமும் ஆமையும் முயலும் மட்டுமே நன்னெறிப் பிம்பங்களாகப் போதிக்கப்படுகின்றன. பரிதாபத்திற்குரிய நம் மாணவர்கள் அவர்களின் சுய உணர்வுகள் பற்றி தெர்ந்துகொள்ளாமல், அவர்களின் உலகத்தில் நடப்பதைப் பற்றி தெரிந்துகொள்ளாமல் சமூகம் கொடுத்திருக்கும் ஆமை முயல் முகமூடிகளை அணிந்து கொண்டு ஏக்கமாக வகுப்பில் அமர்ந்திருக்கிறார்கள்.

பாப்பா பாடல்களை எழுதி படைத்து வரும் முரசு நெடுமாறனின் பங்கு சிறுவர்களின் இலக்கியத்திற்கு மிக முக்கியமானதாகும். பாடல்களையாவது எங்கோ தமிழ்நாட்டில் இருந்து எழுதும் கவிஞர்கள் போடுவார்கள் என ஏங்கித் தவிக்க வேண்டிய அவசியம் இல்லை. நம் நாட்டிலேயே முரசு நெடுமாறன் எழுதி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் சிறுவர்களுக்கான கதைகள்தான் எழுதப்படுவதில் மிகப்பெரிய தேக்கத்தை அடைந்திருக்கிறோம்.

“என் கட்சிக்காரனான சரவணனுக்கு எப்பொழுது அவனுக்குரிய கதை கிடைக்கும்?” சிறுவர் கதைகள் எழுதுவதற்கு முதலில் அந்த எழுத்தாளன் ஒரு சிறுவனின் மனநிலைக்குத் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். மேலும் சிறுவர்களின் உளவியல் கூறுகளை நன்கறிந்திருக்க வேண்டும். ஒரு சிறுவனை வெறும் நல்லவனாக மட்டும் காட்டும் மரபிலிருந்தும் வெறும் நன்னெறிகளைப் போதித்தால் போதும் என்கிற மரபிலிருந்தும் விடுப்பட வேண்டும். தற்போதைய சமூகத்தில் நிதர்சனத்தில் சிறுவர்களின் உலகில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் கதைகள் எழுதப்பட வேண்டும், அதே வேளையில் பொதுவான ஒழுக்க நெறிகளை மீறாத சிறுவர்களும், கற்பனை வளம் நிரம்பிய சிறுவர்களும் உருவாக்கப்படும் வகையிலும் புதிய கதைகள் எழுதப்பட வேண்டும். சிந்திப்போமாக.


நன்றி: கலந்துரையாடல் அங்கம்
கல்வி அதிகாரி
சக படைப்பாளர்கள்

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

13 comments:

மனோவியம் said...

உண்மைதான் தங்கள் சொல்வது.சிறார் இலக்கியம் எனபது பெருன்பான்மை மரபுவழிச் சார்ந்த ஒரு அமைப்புக்குள் கட்டுப்பட்ட ஒரு கட்டமைப்பாகவே இருக்கின்றது. சிறார்களின் மனமும் அறிவும் சிந்தனைச் சார்ந்த ஒரு படைப்பிலகிக்கியமாக இருக்கவில்லை . அவர்களின் வளரும் சூழலை பகுத்தறியும் தன்மைகளை பிரதிபலிக்கவில்லை என்பது முற்றும் உண்மை. உண்மைநிலை யாதெனில் நாம் இன்னும் இந்திய சுற்றசூழலின் கற்றல் மன நிலையில் நமது சிறார் இலக்கியத்தை வழி நடத்திக்கொண்டு இருக்கின்றோம். வருத்தப்படவேண்டிய ஒரு விடயம்.

கற்றல் நெறியையும் படைபிலக்கியத்தையும் ஒருங்கிணக்கும் போது சிறந்த சமுதாய பார்வைக் கொண்ட கல்விமான்களை, படைப்பிலக்கியவாதிகளையும் உருவாக்கமுடியும் அதி நவின சிந்தனைவாதிகளாக நமது மலேசிய தமிழ் சிறார்கள் மாற்றப்படவேண்டும்
நல்ல ஒரு பதிவு வாழ்த்துக்கள் பாலமுருகன். தெடருங்கள்

மானஸாஜென் said...

¯ñ¨Á À¡ÄÓÕ¸ý! ¿¡§Á À¨¼ì¸ Á¢Ìó¾ ¦À¡ÚôÒ½÷×õ «÷ôÀ½¢ôÒ½÷×õ §¾¨Å. ÌðÊ þÇÅúý §À¡ýÈ Òò¾¸íì¸û ÌÈ¢ò¾ ´Øí¸¡É «È¢Ó¸õ ܼ þýÉÓõ þø¨Ä. (¾Á¢ú ¿¡ðÊø «È¢× ƒ£Å¢¸Ù츢¨¼Â¢ø §Å.º¢È£Ã¡Á¢ý ¾Á¢ú ¦Á¡Æ¢¦ÀÂ÷ôÀ¢ý ãÄÁ¡¸. «öì¡ ¿¡¼¸ì ÌØÅ¢ý ãÄÁ¡¸ ¿¡í¸Ùõ §Á¨¼§ÂüÈ¢ þÕ츢§È¡õ, ±ýÈ¡Öõ, º¢È¡÷¸Ùì̸¡É¨Å «øÄ.) §ÅֺÎý(¾Á¢ú ¿¡Î) §À¡ýÈ ¿¡¼¸ì ¸¨Äïº÷¸Ç¢ý À½¢ À¡Ã¡ð¼ò ¾Ìó¾Ð. º¢ÚÅ÷¸Ùì¸¡É ¿øÄ À¼ì¸¨¾¸û ܼ ¾Á¢ú ÝÆÄ¢ø ¸¢¨¼Â¡Ð. À¡¼¾¢ð¼íì¸Ç¢ý °¼¡¸ «È¢Ó¸Á¡Ìõ ¾Á¢Æ¢ý ãÄÁ¡¸ ¾Á¢¨Æ ¦ÅÚìÌõ ÌÆ󨾸§Ç ¾Á¢ú ¿¡ðÊø ¯ÕÅ¡¸¢È¡÷¸û. º¢í¸ôâ÷ ÀÚ¢ø¨Ä.

ÍôÀ¢ÃÁ½¢Âý çÁ‰.

கே.பாலமுருகன் said...

மேலேயுள்ள எழுத்துரு படிக்க முடியாததால், எழுத்தாளர் சுப்பிரமணியன் ரமேஷ் அவர்களின் கருத்து பின்வருமாறு:

உண்மை பாலமுருகன்! நாமே படைக்க மிகுந்த பொறுப்புணர்வும் அர்ப்பணிப்புணர்வும் தேவை. குட்டி இளவரசன் போன்ற புத்தகங்க்கள் குறித்த ஒழுங்கான அறிமுகம் கூட இன்னமும் இல்லை. (தமிழ் நாட்டில் அறிவு ஜீவிகளுக்கிடையில் வே.சிறீராமின் தமிழ் மொழிபெயர்ப்பின் மூலமாக. அய்க்யா நாடகக் குழுவின் மூலமாக நாங்களும் மேடையேற்றி இருக்கிறோம், என்றாலும், சிறார்களுக்குகானவை அல்ல.) வேலுசரவணன்(தமிழ் நாடு) போன்ற நாடகக் கலைஞ்சர்களின் பணி பாராட்டத் தகுந்தது. சிறுவர்களுக்கான நல்ல படக்கதைகள் கூட தமிழ் சூழலில் கிடையாது. பாடதிட்டங்க்களின் ஊடாக அறிமுகமாகும் தமிழின் மூலமாக தமிழை வெறுக்கும் குழந்தைகளே தமிழ் நாட்டில் உருவாகிறார்கள். சிங்கப்பூர் பரவாயில்லை.

சுப்பிரமணியன் ரமேஷ்.

கே.பாலமுருகன் said...

@மனோகரன்

அருமையான சிந்தனை. வாழ்த்துகள். இனி தொடர்ந்து மலேசியாவில் சிறார் இலக்கியங்கள் படைக்கப்படும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

விஷ்ணுபுரம் சரவணன் said...

அன்புமிக்க பாலமுருகன்...

உங்கள் கட்டுரை வாசித்தேன். சிறுவர் இலக்கியம் குறித்து என் கருத்துக்களுக்கு மிக நெருக்கமாக இருந்தது உங்கள் கட்டுரை. மலேசியாவில் மட்டுமல்ல தமிழகத்திலும் சிறார்களுக்கான கதைகளுக்கு பஞ்சமாகவே இருந்துவருகிறது. தமிழகத்தின் பெரும் முக்கிய‌ தினசரிகள் வாரந்தோறும் சிறுவர்களுக்கான இணைப்பு புத்தகத்தை தந்தபோதிலும் அவை இதுவரை கட்டமைத்துவைத்திருக்கும் வரையறையை தாண்டாமல் நீதி போதிப்பதும் கிச்சு கிச்சு மூட்டுவதுமாக இரண்டு விதமாகவே போய்க்கொண்டிருக்கிறது. பத்திரிக்கையாளர் ஞாநி சொல்வதுபோல "தற்போது சிறுவர் கதை எழுதுபவர்கள் பெரியவர்கள் அவர்கள் தங்களின் பால்ய காலத்தை எழுதிப்பார்க்கிறார்கள் அது எப்படி இன்றைய சிறுவர்களுக்கான கதைகளாக முடியும்" என்பார்.

இன்றைய சிறார்களுக்கான கதைகளை எழுத நிகழ்கால சிறார்களோடு தொடர்ந்த உரையாடல் தேவைப்படுகிறது. தொலைக்காட்சி வருவதற்கு முன்னாவது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடாவது பேசிக்கொண்டிருந்தார்கள். இப்போதெல்லாம் பேச்சு பயிலாத குழந்தைகள் கூட தொலைக்காட்சியோடுதான் பொழுதை கழிக்கவேண்டியிருக்கிறது. பள்ளிக்கூட ஆசிரியர்கள் குழந்தைகளோடு உரையாட வாய்ப்பு பெற்றவர்கள் ஆனால் பள்ளி கல்வித்திட்டம் அவர்களை தேர்விற்கு தயார் செய்யும் இயந்திரமாக்கி வைத்திருக்கிறது. தமிழகத்தில் மிக அபூர்வமாக தென்படும் சிறுவர் கதை படைப்பாளிகளின் படைப்புகள் பெரிதாக கவனிப்பு பெறாமல் புறக்கணிக்கப்படுகிறது.

நானும் சிறுவர் கதைகளை எழுத முனைந்துவருகிறேன். விரைவில் அது குறித்து உங்களோடு தொடர்ப்பு கொள்கிறேன்.

விஷ்ணுபுரம் சரவணன்

கே.பாலமுருகன் said...

@சரவணன்

தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. தாங்கள் சொல்வதும் உண்மைதான். தோடர்ந்து சிறுவர் இலக்கியம் படைப்பவர்களை அடையாளப்படுத்தி அங்கீகரிப்போம். மீண்டும் வருக.

Unknown said...

comments from facebook
srivijaya sahah alam

"//சிறுவர் கதையில் வரக்கூடிய சிறார் கதைப்பாத்திரங்கள் பெரும்பாலும் பெரியவர்களால் அறிவுரைக்கப்படுபவர்களாவும், அல்லது கதையில் வைத்து சீர்ப்படுத்தக்கூடியவர்களாகவும் காட்டப்பட்டிருப்பார்கள்.//

// சிறுவர் கதைகளில் சிறுவர்கள்தான் முதண்மை கதைப்பாத்திரமாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் இங்குப் பெரும்பாலான சிறுவர் கதைகளில் பெரியவர்கள்தான் கதைநாயகர்களாக வந்து சிறுவர்களைச் சீரமைக்கிறார்கள், சீர்ப்படுத்துகிறார்கள்.//

//ஆகவே பரிதாபத்திற்குரிய சிறுவனை வெறும் நல்லவனாக மட்டும் காட்டும் மரபிலிருந்தும் வெறும் நன்னெறிகளைப் போதித்தால் போதும் என்கிற மரபிலிருந்தும் விடுப்பட வேண்டும்//

//மலேசியாவில் இன்னமும் ஆசிரியர்களின் கைகளில் ஈசாப் நீதி கதை நூல்களும், காகமும் நறியும் நன்னெறிக் கதை புத்தகங்களும்தான் இருக்கின்றன. உலக அளவில் சிறுவர்களுக்கான இலக்கியம் அடுத்தக்கட்டத்தை நோக்கி அவர்களின் கதைகளை அவர்களின் உணர்வுகளைச் சொல்லக்கூடிய களமாக மாறி வருகையில் மலேசியாவில் பல இடங்களில் இன்னமும் ஆமையும் முயலும் மட்டுமே நன்னெறிப் பிம்பங்களாகப் போதிக்கப்படுகின்றன.//

பாலமுருகன் :சிந்தையை சலவை செய்யும் அற்புதமான பதிவு இது. சிறுவர்களின் உலகம் இன்று அதிக ஏ'க்களை நோக்கிப்போய்க்கொண்டிருப்பதால் தான் அங்கேயும் தற்கொலை முயற்சி தலைவிரித்தாடுகிறது.

பெற்றோர்களுக்கு குழந்தைகளின் மதிப்பெண்களே குறிகோள்..! இன்றய மாணவர்கள் உள்ளபடியே பரிதாபத்திற்குரியவர்கள். முன்பு நம்முடைய காலம் போல் இல்லை..! இப்போது கல்வி குழந்தைகளின் இயல்பு நிலையை குழிதோண்டி புதைத்து வருகிறது.. இப்படியே போனால் வருங்கால சந்ததிகள், ரசனையற்றவர்களாக இருப்பார்கள்..! இலக்கியம் காதல் போன்றவைகளுக்கெல்லாம் சாவு மணிதான்!!"

Unknown said...

comments from facebook
meera krishnan

//enakku avlovaa puriyale bala....but i think neengga nalla vishayattai thaan sollirukkingge...ennal entha comennum kodukka mudiyale.. but todarattum unggal pani....//

Unknown said...

Padittheen Bala..Arumaiyaaga eluziyirukkiriirgal. Vaalthukal! Izu poozaazu. Innum niraiya elazanum.Niraiya sollanum.Thodarnzu valiyuritthik kondee irukkanum. Niraiya padaippaaligal izu kuritthu kalanzuraiyaadal seiyanum. Oru thiirkkamaana mudivukku varanum. Thiiviramaaga SIRUVAR SIRUKAZAI padaikkanum..Aanaal azarku munbu,(azaavazu Siruvar Sirukazai eluzat thodangguvazarku munbu) avargal MAARA veendum- mutraaga MAARA veendum! 360 paagai MAARA veendum! HYPNOTISM muraiyiloo,TRANCE nilaiyiloo allazu TIME MACHINEnil(kaalatthai pinnookki selutthumkaruvi) thanggalai utpadutthik kondu SIRUVAR ULAGUKKEE sendru, SIRUVAR poolavee maari, SIRUVAR poolavee sinthitthu,SIRUVAR poolavee SUTTITANAM kondu, SIRUVAR poolavee ellavizamaana SEETTAIyum VILAIYAATTU thanamum kondu, SIRUVAR piraziniziyaaga, SIRUVAR unarvugalaiyum, sanzooshang galaiyum, urimaigalai yum,saazanaigalaiyum, ezirpaarpuga laiyum, thinam thinam-GANANTHOORUM avargalukku ilaikkappadum kodumai galaiyum,avargal manatthil eerpa dum kaayanggalaiyum, RANANGGALAI yum eduthuraikkira- VALAKURAINYAR aaga(VAAZIyaaga), SIRUVARgalai JEYIKKA seigira, siruvargalai jeyikkavittu THOOTRU poogira periyavargalaaga MAARIYAAGA veendum! ENID BLYTHON, WALT DISNEY,ROWLING (Harry Potter) ivargalaip poondra manasaip pera veendum! SIGMUND FREIGHT poondra ULAVIYAL MEEZAIGAL eluziyaa nuulgalaip paditthu ULAVIYAL arivai nirambab peraveen dum ..Kurippaaga KULANZAI ULAVIYALai karaitthu kudithirukka veendum..Enza vayazu siruvargal enzaviza ualaviyalai kondiruppar gal endru therinzu vaitthirukka veendum..Azanpiraguzaan eluzat thodangganum...Appoozuzaan naam EZIRPAARKKIRA, niingal unggal katturaiyil kuripitta anzavagai SIRUVAR ILAKKIYAM(Siruvar Sirukazai)kidaikkum! Elutthaalargal, thaanggal kaalaa kaalamaaga kondirukkum KOOTPAADU adippadaiyileeyee, manappaaanmaiyi leeyee,elutthu muraiyilee yee,MOLINADAIyileeyee irunzukondu eluza varuvaargalaanaal, namakku inza JENMAM MULUVAZUM siruvar sirukazai kidaikkap poovazillai! PARADIGM SHIFT nigala veendum.. MAATTHI YOOSI thatthuvatthirku thirumba veendum... THINK OUT OF THE BOX sitthaanzatthirku thirumba veendum.. ENGLISHkaaran, thanggal siruvargalukkaaga padaittha SIRUVAR ILAKKIYATThai NIRAIYA padikka veendum..allazau padikkatthaan mudiyavillai endraal, ENGLISHkaaran thayaaritthu veliyiddirukkiraa NUUTRUkanakaana SIRUVAR thiraippadanggal @ ANIMATION FILMs ullana..Azaiyaavazu paartthu katru kolla veendum.Edutthuk kaattukku, FINDING NEMO, SHARK TALES, LIONS KING,UPs,STUART LITTLE, BROTHER BEAR,HAPPY FEET,BARN YARD,Staying Alone...ippadi adukkik kondee poogalaam..Aaga motthatthil,ooor URUPPADIYAANA sinthanai VIZAIyai INAIYATTHIL thhuvi vittirukkirirrgal BALA- paarppoom vizai mulaikkirazaa endru..Vizai mulaippazu kuuda mukkiyamillai..mulaitthu 2 ilai vidugira poozu azarku niir vittu,veeli poottu,paazukaatthu piragu theevaiyaana poozellaam nalla URAMITTU valarthu selippura seivazuzaan migap periya paniyaaga irukkum! INDRAIYA siru VIZAIzaan naalaiya PERIYA VIRUTCHAMaaga maarap poogirazu enngira nambikkaiyoodu irangguvoom!
"Your Highness, En KATCHIKKAARARukku nyaayam kidaikka veendum!Inza samuzaaya niizimandartthil avarukku nallazoru thiirppai valangguviirgal enngira nambikkaiyoodu en vaazattt\hai muditthuk kolgireen!" PMM

கே.பாலமுருகன் said...

@paul / PMM

தங்களின் நீண்ட கருத்திற்கு மிக்க நன்றி ஐயா. தீர்க்கமான உரையாடல்களும் சிறுவர் கதைகளும் இனி தொடர்ந்து என் சார்பிலிருந்து படைக்கப்படும். மற்றவர்களும் இந்தக் களத்தில் இறங்குவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

Justin Jeevaprakash said...

உண்மை நண்பரே....உண்மை!
தமிழ்ப்பள்ளி ஆசிரியரான எனக்கும் உங்கள் கருத்தில் உடன்பாடு உண்டு...
சிறுவர்களை நம் உலகத்திற்கு வரவழைக்கத்தான் நாம் முயன்று கொண்டிருக்கிறோமே தவிர, அவர்களின் உலகத்திற்கு நாமும் செல்வதில்லை;அவர்களையும் செல்ல விடுவதில்லை... குழந்தைகளின் எல்லையில்லா கற்பனா சக்திக்கு முட்டுக்கட்டையாகிறது நமது வரையறுக்கப்பட்டப் பாடத்திட்டம்!
அதுமட்டுமா, நீங்கள் கூறுவது போல் நம் காலத்தில் நாம் புசித்த ஆமையும் முயலும் என்ற கதைத்தான் இன்றைய குழந்தைகளும் புசிக்கின்றார்கள்! அன்றிருந்த மாணவர்களின் நிலை வேறு...இன்றிருக்கிற மாணவர்களின் நிலை வேறல்லவா.... மாணவர்கள் பள்ளிக்கூடத்தில் காலடி எடுத்து வைக்கும் முன்பே பல படங்களுக்குள்(குறிப்ப்பாக 3D)வாழ்ந்து வந்திருப்பார்கள்! தங்களுக்கென ஒரு உலகத்தை சஞ்சலமித்திருப்பார்கள்! ஆனால் அவர்களை நமது உலகத்திற்கே அடித்து இழுத்துக் கொண்டிருக்கிறோமே....

Dr. முனீஸ்வரன் குமார் said...

அபாரமான சிந்தனை, அர்புதமான எழுத்து. இந்தக் கட்டுரை மலேசிய இலக்கிய உலகில் சிறு தாக்கதையாவது ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள் பற்றாக்குறை எனும் குறைபாட்டை ஒரு புறம் தள்ளிவிட்டுப் பார்த்தால், இன்னொரு புறம் பெற்றோர்கள் எந்த அளவு சிறுவர்களுக்கு கற்பனை வளக்கும் இலக்கியத்தை வாங்கித்தர தயாராய் இருக்கிறார்கள் என்பதையும் யோச்சிக்கத்தான் வேண்டியுள்ளது. மாயாஜாலக் கதை, நன்னெறிக்கதை, பாடதுணைநூல், இம்மூன்றில் பெற்றோரின் கவனம் எங்கே போய் குவிகிறது? இதை என்னத்தைச் சொல்லி மாற்றுவது?

நல்லதொரு படைப்பு பாலமுருகன். தொடரட்டும் உங்கள் ஆக்கங்கள்.

தனிமரம் said...

அருமையான் கட்டுரை இனிச்சரி மலேசியா ஊடாக இளையோருக்கு ஏற்ற படைப்புக்கள் வெளி வரட்டும் பிரார்த்திப்போம்.