பெருங்கதையாடல் நிகழ்த்த வேண்டிய அத்துனை சந்தர்ப்பங்களையும் சாமர்த்தியங்களையும் தருணங்களையும் குறைந்த நிமிடங்களிலேயே குறும்படம் மூலம் நிகழ்த்த வேண்டிய சவால் குறும்பட இயக்குனர்களுக்கு உண்டு. “அலட்டலின்றி, மிகை இன்றி, போலித்தனமின்றி, ஒப்பனையின்றி இந்த வாழ்வையும் மனிதர்களையும் பார்க்கிறேன்” என உலக திரைப்பட இயக்குனர் அகிரா குரோசாவா தன் வாழ்நாள் புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பது போல குறும்படம் அத்தகையதொரு கண்ணோட்டத்தையும் உள்ளடக்கத்தையும் பின்பற்றுவதன் மூலமே உச்ச கலை படைப்பாக வெளிப்பட முடியும்.
சினிமா மூலம் உருவாக்கப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்களையும் போலித்தனங்களையும் தூக்கி எறிந்துவிட்டு வாழ்க்கைக்கு மிகத் தொலைவாகப் போய்விட்ட நிதர்சனத்தைத் தன் அடர்த்தியின் மூலம் மீட்டுக் கொண்டு வருவதற்காகவே குறும்படம் என்கிற வடிவம் உருவானது என திரையுலகமும் குறும்பட வட்டமும் ஒப்புக்கொள்கின்றன. இந்த அளவுக்கோலை முன்னிறுத்தியே இன்றைய குறும்படங்களை மதிப்பிடும் ஆற்றலை நாம் பெற்றிருக்க வேண்டும் எனக் கருதுகிறேன். தொடர்ச்சியாக 4 குறும்படங்களை இயக்கியதன் மூலம், நான் அடைந்த தோல்வியையும் பலவீனங்களையும் 3 வருடத்திற்கும் மேலான குறும்படம் சார்ந்த எனது தேடல்களின் மூலம் வாசிப்பின் மூலம் சரிப்படுத்தியுள்ளேன். இது போன்ற தேடலும் உலகின் முக்கியமான குறும்படங்களைப் பார்ப்பதன் மூலம், பார்த்த அந்தக் குறும்படங்கள் குறித்து உரையாடுவதன் மூலமும் தரமான ஒரு படைப்பை நம்மால் அடையாளம்காண இயலும்.
கடந்த மூன்று வருடமாக ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி நிறுவனம் மலேசியாவின் இளம் படைப்பாளர்களை / திரைப்படக் கலைஞர்களை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் குறும்படப் போட்டியை நடத்தி வருகிறது. 2006 ஆம் ஆண்டு முதலில் நடத்தப்பட்ட குறும்படப் போட்டியில் தேர்வான குறும்படங்கள் கதை சார்ந்தும் தொழிட்நுட்பம் சார்ந்தும் பலவகையான போதாமைகளைத் தழுவியிருந்தது. மேலும் குறும்படத்திற்குரிய கலை அம்சங்களும் அவற்றில் காணப்படவில்லை. தமிழகத்தில் ஒரு குறும்படம் போட்டி நடத்துவதற்கு முன்பாக அங்குள்ள ஆர்வம் நிறைந்த இளைஞர்களுக்குக் குறும்பட பட்டறை நடத்தி, உலகில் சிறந்த குறும்படங்களைத் திரையிட்டு, அவர்களுக்குப் போதுமான அனுபவமும் தகவல்களும் அளிக்கப்படுகின்றன. ஆகையால் அங்கிருந்து சிறந்த படைப்புகளும் விமர்சனங்களும் வந்துகொண்டே இருக்கின்றன. இங்கு அப்படி ஒரு சூழல் இல்லாததையொட்டி போட்டியை மட்டும் நடத்துவதில் தொடர்ச்சியாக இளைஞர்களின் படைப்பு தரத்தை மேம்படுத்த இயலுமா என்கிற கேள்வி ஆஸ்ட்ரோ நிறுவனத்திற்குத் தோன்றியிருக்கக்கூடுமா?
இருந்தபோதும் தொடர்ந்து இந்தப் போட்டி நடத்தப்படுவதால், குறும்பட வடிவத்தில் ஆர்வம் ஏற்பட்டவர்கள், அதனைச் சார்ந்து தன் அனுபவங்களையும் அறிவையும் சுயமாக வளர்த்துக் கொண்டார்கள் என்பதை இவ்வாண்டு தேர்வான குறும்படங்களில் காண முடிகிறது. ஓரளவிற்குத் தன்னையும் தன் குழுவையும் கலை நுண்ணறிவு சார்ந்து முன்னகர்த்தி, அடையாளப்படுத்தக்கூடிய சில முயற்சிகளை மலேசிய கலைஞர்கள் மேற்கொண்டுள்ளார்கள். ஒட்டுமொத்தமாக இவ்வாண்டின்
குறும்படங்களில் பெரும்பாலும் காட்சிகளை வித்தியாசமாகப் பதிவு செய்ய வேண்டும் என்கிற முயற்சி மேலோங்கி, குறும்படத்திற்கான எளிமையிலும் கதைச்சொல்லல் முறையிலும் வலுக்குறைந்து போயிருக்கின்றன.
குறும்படங்களில் பெரும்பாலும் காட்சிகளை வித்தியாசமாகப் பதிவு செய்ய வேண்டும் என்கிற முயற்சி மேலோங்கி, குறும்படத்திற்கான எளிமையிலும் கதைச்சொல்லல் முறையிலும் வலுக்குறைந்து போயிருக்கின்றன.
இவ்வாண்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட குறும்படங்கள் கையாண்டிருக்கும் உத்திகளையும் கதையின் கருவையும், அந்தக் கருவை கதையின் மையத்தை எப்படி அவர்கள் வளர்த்துள்ளார்கள் என்பதைப் பற்றியும் விரிவாகப் பேசலாம்.
(குறிப்பு: இது என்னுடைய தர வரிசை அல்ல.)
1. School சப்பாத்து
செல்வன் இயக்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இந்தக் குறும்படம் சில காட்சிகளில் கேமரா இயக்கம் சார்ந்து குறும்படத்திற்கான உச்சத்தைத் தொட்டிருக்கிறது என்றே சொல்லலாம். ஆனால் முழுவதுமாக இந்தக் குறும்படம் பல
இடங்களில் செயற்கையின் பிரதிபலிப்பாக தனது வலுவை கதைப்பாத்திரங்களின் பலவீனமான வெளிப்பாடுகளால் இழக்க நேரிடுங்கின்றன.
இடங்களில் செயற்கையின் பிரதிபலிப்பாக தனது வலுவை கதைப்பாத்திரங்களின் பலவீனமான வெளிப்பாடுகளால் இழக்க நேரிடுங்கின்றன.