Thursday, March 31, 2011

அம்பு விடுதலும் வில் வித்தையும்- அன்பரசி சுப்ரமணியம் மலேசிய ஆளுமை


(Legend of archery-Ms.Anbarasi Subramaniam)

கடந்த 4 நாட்கள் அம்பு விடுதல் விளையாட்டிற்கான பயிற்றுனர் பயிற்சி பட்டறைக்குச் சென்றிருந்தேன்(archery coaching training). இந்த விளையாட்டைப் பற்றி தெரிந்துகொண்டு நம் இந்திய மாணவர்களைப் பயிற்றுவிக்கலாம் எனும் எண்ணம் உருவாகியபோதே இதுவரை அறிந்திராத இந்த விளையாட்டின் மீது விருப்பமும் ஆர்வமும் கூடியிருந்தது. பெரும்பாலும் இந்தியர்களுக்கு விளையாட்டின் மீது ஆர்வம் இருப்பதில்லை அல்லது ஓட்டப்பந்தயமும் காற்பந்தையும் தவிர வெவ்வேறு விளையாட்டுகளில் இந்திய இளைஞர்கள் பங்கெடுப்பதில்லை எனவும் ஒரு பரவலான விமர்சனம் உண்டு. குறிப்பாக விளையாட்டுத் துறையில் இந்தியப் பெண்களின் அடைவும் பங்களிப்பும் என்ன? என்பதையே ஆழமாகச் சிந்திக்கக்கூடிய கேள்வியாகும்.

மலேசிய அம்பு விடுதல் கழகத்தின் முதண்மை பயிற்றுனரான திரு.புவனேஸ்வரன் அவர்களைக் கடந்த வாரங்களில் சந்தித்தப்போது அவரும் இப்படியொரு விமர்சனத்தையுடையவராகவே இருந்தார். நம் இந்திய மாணவர்களுக்கு இந்த விளையாட்டில் நல்ல எதிர்காலம் உண்டு எனவும் இதை அவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் நாம்தான் நமது ஈடுப்பாட்டையும் அக்கறையையும் காண்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மலேசியாவிலேயே அம்பு விடுதல் விளையாட்டிற்கான முதண்மை பயிற்றுனராக பல நாடுகளுக்குச் சென்று தன் திறமையையும் வழிக்காட்டுதலையும் வழங்கி வரும் திரு.புவனேஸ்வரன் நம் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இந்த விளையாட்டை அறிமுகப்படுத்துவதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார். அவரின் மூலமே எனக்கு அம்பு விடுதல் விளையாட்டும் மலேசியாவைப் பிரதிநிதித்து பல நாடுகளில் தன் ஆளுமையை வெளிப்படுத்திய அன்பரசி சுப்ரமணியம்

Monday, March 28, 2011

ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள் -3 (யாங்சே நதிக்கரையின் சோகமும் ஒரு தெரு விட்டுச் செல்லும் குழந்தைகளும் (ஹங்காங் சினிமா: மே மற்றும் ஆகஸ்ட்)

“ஜப்பானிய இராணுவத்தால் எரிக்கப்பட்ட
எங்களின் பெற்றோர்கள்
பின்னர் சாம்பலாகி மேகத்தோடு சேர்ந்து
மழையாகிப் பொழிந்து
இன்று யங்சே நதியில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்”

சீன இசை பின்னணி பெருகி ஒலிக்க சோகம் ததும்ப இரண்டாம் சீன ஜப்பானிய போரில் பெற்றோர்களை இழந்த பல்லாயிரக்கணக்கான சீன சிறுவர்கள் யங்சே நதிகரைக்கு வந்து சேர்கிறார்கள். நதியில் சலனமின்றி ஓடிக்கொண்டிருக்கும் நீரைப் பார்த்து “அப்பா... அம்மா... நாங்கள் உங்களை நேசிக்கிறோம்” என எல்லோரும் கதறுகிறார்கள். அவர்களின் குரல்களைச் சேமித்துக் கொண்டு மீண்டும் எந்தச் சலனமுமின்றி யங்சே நதி தூரமாகத் தெரியும் வானத்தின் பரந்த விரிப்பின் அடியில் மறைந்து ஓட மே மற்றும் ஆகஸ்ட் என்கிற இந்த ஹங்காங் திரைப்படம் நிறைவடைகிறது.

Saturday, March 26, 2011

கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் இளஞ்செல்வன் இலக்கிய விருதளிப்பு விழாவில் ஆற்றிய உரை

அந்த விழாவில் நான் ஆற்றிய உரையின் ஒரு பகுதி:

நேற்று (25.03.2011) மாலை மணி 4 போல கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கம் இரண்டு மலேசிய எழுத்தாளர்களுக்கு "எம்.ஏ இளஞ்செல்வன் விருது" விருது கொடுத்து கௌரவித்திருந்தது. எம்.ஏ இளஞ்செல்வன் மலேசிய நவீன இலக்கியத்தின் முக்கியமான படைப்பாளி எனத் தொடர்ந்து அடையாளப்படுத்தப்படுவதற்கு இந்த விருதளிப்பு ஒரு சான்றாகும் என இயக்கத் தலைவர் தெரிவித்திருந்தார்.

Saturday, March 19, 2011

பினாங்கு நகரின் மாலையில் – 2


தேவராஜனும் பச்சைபாலனும் அவர்கள் தங்கியிருந்த விடுதியின் முன்பக்க இருக்கைகள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றிருந்தனர். பறை இதழுக்கு அதற்குள் பணம் வசூலித்துவிட்டு என்னிடம் 10 இதழ்கள் வேண்டும் கேட்ட தேவராஜனின் முகத்தில் ஆர்வம் தெரிந்தது. பச்சைபாலன் இதழை வாங்கிப் பார்த்துவிட்டு முகப்பில் கவிதைகள் இடத்தில் அவர் பெயரிருப்பதை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தார். அவர் தொடக்கத்தில் பறை இதழுக்குக் கவிதை அனுப்புவதாகச் சொல்லியிருந்ததால் முகப்பில் அவருடைய பெயரைப் போட்டிருந்தேன்.

Monday, March 14, 2011

பினாங்கு நகரின் மாலையில் -1


அன்று மதியம் எழுத்தாளர் தேவராஜனிடமிருந்து அழைப்பு வந்தது. பினாங்கு மாநிலத்திற்கு பணித்தொடர்பான சந்திப்புக்காக அவர், பச்சைபாலன், மூர்த்தி(மலேசியத் தேர்வு வாரிய அதிகாரி) அவர்களும் அங்கு வந்திருப்பதாகக் கூறினார். உடனே அவர்களைச் சந்தித்து உரையாடலாம் என முடிவெடுத்துவிட்டு, மாலையே பினாங்கிற்குக் கிளம்பினேன். மூர்த்தி எப்பொழுதும் ஒரு சமக்காலப் பிரச்சனையின் மீதான ஆழமான புரிதலையும் புதிய சிந்தனையையும் கொண்டிருக்கக்கூடிய ஒரு சிந்தனையாளர். அவருடன் செலவழிக்கப்படும் ஒவ்வொரு கணமும் படைப்பாளிகளுக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்பதில் எனக்கு எப்பொழுதும் நம்பிக்கை உண்டு.

Saturday, March 12, 2011

பறை ‘குரலற்றவர்களின் குரல்’ (சிற்றிதழ்)

மலேசிய தமிழ் இலக்கியத்தையும் மலேசிய இலக்கியத்தில் உருவாகியிருக்கும் மாற்றுச் சிந்தனையையும் ஒரு களமாக முன்னெடுக்கும் விதமாக அநங்கம் சிற்றிதழ் பங்காற்றி வந்தன. ஜனரஞ்சகத்தின் எல்லா சமரசங்களையும் நிராகரித்துவிட்டு விவாதத்தன்மையுடைய ஆழமான மதிப்பிடுகளுடன் இலக்கியம்-சமூகம்-மொழி-அரசியல் என அனைத்தையும் அழுத்தமாக முன்னெடுக்கும் வகையில் இனி அநங்கம் “பறை” என்கிற அடையாளத்துடன் வெளிவரவிருக்கின்றன.

parai e-magazine :   http://parai.vallinam.com.my/

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல் என அனைத்திலும் பாதுக்காப்பான வெளியை அடைந்த ஒரு சமூகம் அவர்களினும் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களை ஒடுக்குவது நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஒடுக்கப்படுவர்களைப் பற்றி உரையாடுவதற்கும் விவாதிப்பதற்கும் ஒரு களத்தை உருவாக்கி தருவதே பறை இதழின் இலட்சியமாகும். அலட்சியப் படுத்தப்படுபவர்களும் நிராகரிக்கப் படுபவர்களும் புறக்கணிக்கப் படுபவர்களும் குரலற்ற குரலாக ஓங்கி ஒலிக்கும் அத்தனையையும் பறை சேகரித்துப் பிரதிபலிக்கும்.

பறை இதழுக்குப் படைப்புகளை அனுப்ப விரும்புவோர் பின்வரும் மின்னஞ்சலுக்கு உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கலாம்:

bkbala82@gmail.com
bala_barathi@hotmail.com

articles for parai e-magazine: editorparai@gmail.com

மேல் விவரங்களுக்கு:
ஆசிரியர் : கே. பாலமுருகன்
http://bala-balamurugan.blogspot.com/

Wednesday, March 9, 2011

பெலித்தூங் கிராமத்தின் ஆன்மா (இந்தோனேசியா சினிமா: Laskar Pelangi)

*ஒரு காலுடைந்த பழைய பெரிய சைக்கிள்...
*மூன்று பூந்தொட்டிகள்...
*தகரத்தின் சுருங்கிய நிழல்...
*கத்திரிப்பு வர்ணத்தின் முட்டிவரை இழுக்கப்பொட்டிருக்கும் காலுறையை அணிந்துகொண்டிருக்கும் ஹருண். . .
*வழிப்பாதையில் முதலையிடமிருந்து தினமும் தப்பி வரும் லிந்தாங். .

இதுதான் முஹமாதிய கிராமப்பள்ளியின் முகம். . .

உட்புற தீவான பெலித்தூங் எனும் கிராமத்திலுள்ள பழமையான ஒரு பள்ளியின் கதை இது. ஒரு காலக்கட்ட மக்களின் வாழ்வை ஆவணப்படுத்தும்போது இது போன்ற ஆரம்பப்பள்ளிகளின் இருப்பு நீக்க முடியாத வலுவான ஒரு ஞாபகத்தைக் கொண்டிருக்கும். வாழ்வின் எல்லா விதமான தொடக்கங்களையும் இங்கிருந்துதான் கற்றுக்கொண்டிருப்போம். அது போல இந்தோனேசியாவின் வறுமை தேசங்களில், மீதமிருக்கும் மக்களின் நம்பிக்கைகளின் நினைவாக முஹமாதியா கிராமப்பள்ளியைப் போல ஏராளமான பள்ளிகள் அங்கு இருக்கின்றன. அவைகள் யாவும் மாணவர்கள் போதாமையினாலும் ஆசிரியர்கள் இல்லாமையினாலும், பேரிடர்களாலும் மூடப்பட்டு வரும் ஒரு காலக்கட்டத்தில் நிகழும் உண்மை கதையை மையமாகக் கொண்டதுதான் முஹமாதியா கிராமப்பள்ளி.

Monday, March 7, 2011

நாங்கள் தொலைத்துவிட்ட ஞாயிற்றுக்கிழமைகள்

"வீட்டில் மாணவர்களும் சிறுவர்களும் இல்லாத ஒரு ஞாயிற்றுக்கிழமைகளில் பார்ப்பதற்கு யாருமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது தொலைக்காட்சி கார்ட்டூன்கள்."

உலகமே ஞாயிறுக்கிழமையன்று விடுமுறையில் ஓய்வாக இருக்க, கெடா, திரங்காணு மற்றும் கிளாந்தான் மாநிலம் மட்டும் அரசு துறையில் வேலை செய்பவர்களையும் பள்ளி மாணவர்களையும் காலையிலேயே எழுப்பி  துரத்துகிறது. ஓய்வில்லாத ஒரு ஞாயிற்றுக்கிழமையில் சிந்திக்கத் துவங்கினேன். எத்தனை அபத்தமான ஒரு காரியத்தை உலகத்திற்கு எதிராகச் செய்துகொண்டிருக்கிறேன் எனும் குரல் சட்டென ஒலித்தது.

Thursday, March 3, 2011

மலேசிய - சிங்கப்பூர் தமிழிலக்கிய உறவுப்பால மாநாட்டில் நான் ஆற்றிய உரை


மேடை சடங்குகளில் எங்களுக்கு எப்பொழுதும் உடன்பாடில்லை. அதில் சிக்கிக்கொள்ளும் நம் தமிழ் நிகழ்வுகள் இன்னமும் அலங்காரங்களையே தற்காத்து வைத்திருக்கின்றன. மாற்றுச்சிந்தனையாளர்களுக்கு இம்மாதிரியான மேடை ஒவ்வாத ஒன்றுதான். சமீபத்தில் இத்தனை தமிழ் மக்களைத் தமிழ் சார்ந்து ஒன்றாக இணைத்துச் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். இத்தனை ஏற்பாடுகளுக்கு மத்தியிலும் எங்களுக்கு இங்குப் பேசுவதற்கு வாய்ப்பளித்த வாசுதேவன் அவர்களுக்கும் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவிற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலக்கியத்தின் தேவை என்ன? நம் சமூகம் கொண்டிருக்கும் இலக்கியம் என்பதன் அர்த்தம் என்ன? எனும் கேள்வி எப்பொழுதும் எனக்கு எழுவதுண்டு. எதற்காக இலக்கியம் தொடர்ந்து படைக்கப்படுகிறது? காலம் காலமாக இலக்கியத்தின் அவசியத்திற்கு நம் சமூகம் கொண்டிருக்கும் விளக்கம், இலக்கியம் பண்பாட்டு ரீதியில் மனிதனைச் செம்மைப்படுத்துகிறது, அவனுடைய மனதையும் செயலையும் ஒழுக்க ரீதியில் கட்டமைக்கிறது, சிதறுண்டு கிடக்கும் நம் சமூகத்தைச் சீர்ப்படுத்துகிறது என நீண்டு கொண்டே போகின்றன.

Tuesday, March 1, 2011

குறும்பட விமர்சனம்: 'வாழ்க்கையை உரையாடுதல்' - சஞ்சய் குமார் பெருமாளின் ஜகாட் (Jagat)

“கடவுள் நம் குற்றங்களை மன்னிக்கலாம் - ஆனால்
மனிதர்கள் உருவாக்கிய நியதிகள் அவ்வாறு மன்னிப்பதில்லை”
- வில்லியம் ஜேம்ஸ்

ஒரு ஒதுக்குப்புறமான உணவகம். அரை இருள் எங்கும் பரவியிருக்கிறது. எந்தப் போலியான ஒப்பனையும் இல்லாத உண்மையான இரு மனிதர்கள். மது அருந்தி கொண்டே உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உரையாடலிலிருந்து காட்சிகள் இன்னொரு வாழ்க்கைக்குள் இழுத்துக் கொண்டு போகின்றன. இன்னும் சொல்ல‌ப்போனால் இது உரையாட‌ல் வ‌ழியே வாழ்வை அறிமுக‌ப்ப‌டுத்தும் குறும்ப‌ட‌ம் வ‌ச‌ன‌ங்க‌ளுக்கு மிக‌ முக்கிய‌த்துவ‌ம் கொடுத்து ந‌க‌ர்த்த‌ப்ப‌ட்டுள்ள‌து.

1) தனியனின் உரையாடல்

எது குற்றம் என்பதைப் புரிந்துகொள்வதைவிட யார் அதைச் செய்தார்கள் என அடையாளம் காட்டுவதிலும் அவர்களுக்குத் தண்டனை வழங்குவதிலும் பழக்கமாகிவிட்ட சமூகத்தின் நியதிகளுக்கு முன், வைக்கப்படும் ஓர் உரையாடல்தான் சஞ்சய் பெருமாளின் இந்த “ஜகாட்”