2012 ஆம் ஆண்டில் தமிழ்
படங்களின் மீதான பொது அலசல்
ஒன்று செய்யலாம் என நினைக்கிறேன். இன்றும்
ஒரு சில நண்பர்கள் என்
சினிமா விமர்சனத்தின்
மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். நான் தமிழ் சினிமாவைக்
குறை கூறுபவனோ அயல் சினிமாவைப் புகழ்ந்து
பேசுபவனோ இல்லை. நான் சிறுவயது
முதல் 'பயங்கர சினிமா பைத்தியம்'.
தொலைக்காட்சி முன் படம் பார்த்துக்
கொண்டேத்தான் உறங்குவேன். என் சினிமா விமர்சன
நூலிலும் நயனம் பேட்டியிலும்கூட அதைப்
பற்றிச் சொல்லியிருப்பேன். ஆகையால், சினிமா என் வாழ்நாள்
இரசனை. அதை ஒரு கலையாகத்
தரிசிப்பவன்.
அடுத்த ஆண்டு முதல்
வல்லினத்தில் 'கலை சினிமாவின் மாற்றுத்
தரிசனம்' எனும் சினிமா தொடரைத்
தொடங்கியுள்ளேன். சினிமா ஒரு பக்கம்
தொழில்ரீதியானதாகக் கருதப்பட்டாலும் இன்னொரு பக்கம் அதன்
வெளிப்பாடு குறித்தும் அரசியல் குறித்தும் எப்பொழுதுமே
விமர்சிக்க/விவாதிக்க வேண்டிய சூழல் உள்ளது.
விமர்சனமும் விவாதமும் மட்டுமே சினிமாவை உயர்த்த
முடியும்.