"வீட்டில் மாணவர்களும் சிறுவர்களும் இல்லாத ஒரு ஞாயிற்றுக்கிழமைகளில் பார்ப்பதற்கு யாருமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது தொலைக்காட்சி கார்ட்டூன்கள்."
உலகமே ஞாயிறுக்கிழமையன்று விடுமுறையில் ஓய்வாக இருக்க, கெடா, திரங்காணு மற்றும் கிளாந்தான் மாநிலம் மட்டும் அரசு துறையில் வேலை செய்பவர்களையும் பள்ளி மாணவர்களையும் காலையிலேயே எழுப்பி துரத்துகிறது. ஓய்வில்லாத ஒரு ஞாயிற்றுக்கிழமையில் சிந்திக்கத் துவங்கினேன். எத்தனை அபத்தமான ஒரு காரியத்தை உலகத்திற்கு எதிராகச் செய்துகொண்டிருக்கிறேன் எனும் குரல் சட்டென ஒலித்தது.