இவ்வருடம் வல்லினம் பதிப்பில் வரும் மூன்றாவது புத்தகம், கே.பாலமுருகனின் 'தீர்ந்து போகாத வெண்கட்டிகள்'. மலேசியாவில் முதன் முதலாக உலக திரைப்படங்கள் குறித்த கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. வல்லினம் இணைய இதழில் இந்த வருடம் கே.பாலமுருகன் எழுதி 10 தொடர்களாக வந்த கட்டுரைகளைத்தான் இதில் தொகுத்துள்ளோம். - வல்லினம்
சினிமா என்பது கலை என மீண்டும் மீண்டும் நிருபிக்க வேண்டியிருக்கிறது. அசலான படைப்புக்கும் உலக சினிமாக்களைக் காப்பியடித்து மறுபிரதியெடுக்கும் கற்பழித்தல் முயற்சிக்கும் மத்தியில் எது உண்மையான படைப்பு எது சினிமா என அரைகுறை அறிவுக்கூட இல்லாதவர்களிடம் தொடர்ந்து சினிமா சார்ந்து உரையாட வேண்டியிருக்கிறது. சினிமா என்ற கலையைக் காலம்தோறும் மழுங்கடிக்கும் ஒரே விசயம் 'வெகுசன இரசனைத்தான்'. இன்னும் நூற்றாண்டு பல கடந்தாலும் சினிமா என்பதை அக்குளில் கிச்சுகிச்சு மூட்டி மகிழ்ச்சிப்படுத்தும் ஒன்றாக மட்டுமே புரிந்துகொள்ளப்படும் அவலம் இங்கிருக்கிறது. (மாற்று இரசனைக்குத் தயாராக வேண்டும்)
- கே.பாலமுருகன்