Wednesday, April 29, 2009
படைப்பாளிகள் எஸ்.ராமகிருஷ்னன் ஜெயமோகன் போன்றவர்களைக் காக்கா பிடிப்பது எப்படி?
எது காக்கா பிடிப்பது என்று சொல்ல முடியும்?
நாம் காரியத்தைச் சாதித்துக் கொள்ள நம் தேவையை நிறைவேற்றிக் கொள்ள காக்கா பிடிக்கலாம். அந்தச் சமயத்தில் சில உத்திகளைக் கையாள வேண்டும் போல. அந்த நமது காக்கா பிடிக்கும் படலத்தில் பலியாகப் போகும் நபரிடம் இல்லாத ஒன்றையும் இருப்பது போல புகழ்ந்து தள்ளுவது அல்லது இருப்பதை மிகைப்படுத்தி சொல்வது, கூடுமான வரை அவரை உச்சத்தில் வைத்துப் புகழ்வது. (உச்சம் என்கிற அளவுகோல் மிக முக்கியம்). சும்மா சாதரண புகழ்ச்சிக்கெல்லாம் சிலர் மயங்கிவிட மாட்டார்கள்.
மேலும் அவரின் மூலம் உங்களை நீங்கள் முன்னிறுத்த வேண்டுமென்றாலும் காக்கா பிடிக்கலாம். இதன் மூலம் உங்களுக்கு மனத்திருப்தியோ அல்லது ஆதாயமோ இருப்பதற்கு வாய்ப்புண்டு.
ஒரு சிலர், அவரை அழைத்துக் கொண்டு போய் அவர் குடிகாரராக இருக்கும் பட்சத்தில் அவருக்கு மலிவான மது முதல் உயர்தர மதுவரை வாங்கிக் கொடுத்து அசத்தி பேர் போட்டுக் கொள்ளலாம்.
முடிந்தால் அவரை அழைத்துக் கொண்டு போய்(சொந்த வாகனமாக இருந்தால் நீங்கள் காக்கா பிடிப்பது அவ்வளவு வெளிப்படையாக தெரியாது) நகரத்தையோ அல்லது புராதான இடங்களுக்கோ செல்லலாம். அவர் உங்களின் நேர விரயத்தையும் தியாகத்தையும் கண்டு மனம் நெகிழும் தருணத்தில் உங்களின் காக்கா பிடிக்கும் படலம் வெற்றி அடைந்துவிட்டது என்று அர்த்தம். சிலர் இப்படித்தான் காக்கா பிடித்துக் கொண்டு அலைகிறார்கள். மிகவும் நுட்பமான முயற்சிகள் இது. யாரும் எளிதில் கண்டு கொள்ளாதவாறு.
நானும் அனுதினமும் பெரும்பாடுபட்டும் பல கோயில்கள் ஏறி இறங்கி, அங்கபிரதேசம் செய்து, இன்றைய தமிழ் கூறும் நல்லுலகின் முக்கிய படைப்பாளிகளான ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களிடம் மின்னஞ்சல் மூலமாக என்னால் முடிந்தவரை இறை அருளால் காக்கா பிடித்துக் கொண்டிருக்கிறேன். ஜெயமோகன் படைப்புகளின் 2 வருட வாசகன் என்கிற முறையில் அவரின் பெரும்பாலான படைப்புகள் என் ஆழ்மனதைப் பாதித்துள்ளன. பலமுறை எதையோ தேடி என்னையே கண்டடையும் பெரும் முயற்சிகளில் ஒரு மகா வெளிக்குள் உள்நுழைந்து பிசகி, தொலைந்து பலமுறை காணாமல் போயிருக்கிறேன் ஜெயமோகன் படைப்புகளில்.
மூத்த படைப்பாளியான அவருக்கு, இன்று மிக பரபரப்பாக அச்சு இதழ்களும், இனையத்திலும் இயங்கிக் கொண்டு ஆழமான தத்துவம் சார்ந்த விவாதங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அவருக்கு, என் மின்னஞ்சல்களெல்லாம் அவர் பதில் போடுவதே நான் செய்த அங்கபிரதேசத்தின் பலன் தான். வேண்டுமென்றால் இந்த வருடம் காவடி எடுத்து 1000 குடங்களை உடலெல்லாம் குத்திக் கொண்டு அடுத்து எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களைக் காக்கா பிடிக்கும் படலத்தில் வெற்றி காணப் போகிறேன். இதனால் எனக்கு ஏற்படும் நன்மைகள் என்னவென்றால், அவர்களின் தரமான படைப்புகள் பற்றி எனது மானசீகமான வாசக மனதை பகிர்ந்து கொள்ள ஒரு சிறு சந்தர்ப்பமே. மேலும் கொஞ்சம் அங்கீகாரமும் கிடைத்துவிடும் போல என்கிற சிறு நம்பிக்கையும். என்ன அங்கீகாரம், “ஆமாம் தம்பி! உங்களோட கதைகளையும் இணையத்திலும் அச்சு இதழ்களிலும் பார்த்து படித்திருக்கிறேன்..” என்கிர சொல்தான். இது கெஞ்சல் அல்ல. நான் நேசிக்கும் படைப்பாளிகளின் கவனம் நம் மீது படாத என்கிற எதிர்ப்பார்ப்பு. சில நல்லுள்ளங்கள், என்றுமே யாரையும் சாராத நல்லுள்ளங்கள் வேண்டுமென்றால் இதைக் கெஞ்சல், காக்கா பிடித்தல் என்றெல்லாம் முழங்கி கொள்ளட்டும். கவலையே இல்லை.
இது ஒரு வாசகனுக்கும் படைப்பாளனுக்கும் உள்ள உறவு, தொடர்பு. வார்த்தைகளால் பிறரின் படைப்பை பற்றி நேர்மையாக சொல்ல பகிர்ந்து கொள்ள எனக்கு வாய் வரவில்லையென்றால், பிறகென்ன படைப்பாளி?
எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்தில் மனதைப் பறிக்கொடுக்காதவர்கள் இருப்பார்களா? இருந்தாலும் இல்லாவிட்டாலும், அது அவர்களின் வாசக மனம் சார்ந்தது. அப்படி அவரின் எழுத்தில் வசம் கொண்டால்தான் என்ன தப்பு? குற்றசெயலா? எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களை நேரடியாகச் சந்திக்கும் போது அவர் தான் ஒரு எழுத்தாளன் என்கிற கர்வத்தையும் எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு நண்பனைப் போல அவரும் கோணங்கியும் புத்தகம் திருடிய கதைவரை பகிர்ந்து கொண்டார்.
இங்கு காக்கா பிடித்தலோ, நரி பிடித்தலோ வெறும் வசை சொல்லாடலாக தேங்கி நின்றுவிடும். மனிதம் மட்டுமே. சக மனிதனிடம் நாம் கொள்ளும் அன்பு, ஒரு படைப்பாளியின் மீது நாம் கொள்ளும் நட்பு, எதிர்பார்ப்பு. . இப்படி வாசக- படைப்பாளி உலகம் தர்க்கத்திற்குள் கட்டுபடாதது.
இறுதியாக எழுத்தாளர் ஜெயமோகனிடம் நான் காக்கா பிடித்து மின்னஞ்சல் அனுப்புவதால், அவர் எனக்கு இலவசமாக ஒரு புத்தகம் போட்டோ, அல்லது தனிபட்ட முறையில் எனக்கு அவர் பணம் அனுப்பியோ, அல்லது இதன் மூலம் எங்களின் பேங்க் பேலன்ஸ் நிரம்பி வழிதலோ, ஆகிவிடாது.
குறிப்பு: சாரு அவரிடம் ஒருமுறை என் கதையை அனுப்பி வைத்தேன். இன்னும் புளோக் அல்லது வலைப்பதிவு இல்லாத காலகட்டம் என்பதால் எப்படிப் பிரரின் பார்வைக்கு மதிப்பீடுகளுக்கு நமது படைப்பைக் கொண்டு போவது என்ற வழி தெரியாததால்தான். பிறகு இப்பொழுதெல்லாம், என் கதைகள் படைப்புகள் யுகமாயினி, உயிரெழுத்து, வார்த்தை போன்ற இதழ்களின் வருவதால், மேலும் திண்ணை.காம், உயிரோசை.காம் போன்ற இணைய இதழ்களிலும் வருவதால், எனகென்று சொந்தமாக ஒரு வலைப்பதிவு இருப்பதாலும் என் கதைத் தனியாக பிரதியாக்கி யாருக்கும் அனுப்ப வேண்டும் என்கிர கட்டாயம் எனக்கில்லை. அப்படியே அனுப்பி கருத்து கேட்டால், யாருக்கு அப்படி என்ன முதுகு வலி?
வாசகர்கள்தான் சொல்ல வேண்டும்.
கே.பாலமுருகன்
Monday, April 27, 2009
சக உயிரின் மரணம் - 2003இல் ஒரு பதிவு
என் கைகளில் பாவத்தின் அறிகுறியும் ஜோனியின் மரணவாடையும் நிலைத்த சூன்யமாய் . . . . . கைகள் இரண்டையும் உதறிப் பார்க்கிறேன் ஜோனி நன்றியுணர்வுடன் என் கைகளைப் பற்றிக் கொண்டு நின்று கொண்டிருக்கிறது. ஜோனியின் வாழ்க்கையின் அரைகுறைகள் என் முதுகிலிருந்து பாவ அடையாளங்களாய் விரிந்துகொண்டிருக்கின்றன. இழந்த சக உயிருக்காக 6 வருடம் கழித்தும் நினைவு கூர்கிறேன். நாய் வளர்ப்பது என்பது நமது பால்ய காலத்தின் மிகப்பெரிய கனவு எனலாம். நாம் வளர்த்த செல்ல பிராணிகளின் வழி நமது பால்யத்தை மீட்டுணரலாம். அதிலும் நாய்கள் காட்டும் நன்றியும் அன்பும் , மனிதர்களோடு ஏன் இந்த இனம் மட்டும் இவ்வளவு நெருக்கமான உறவை வெளிப்ப்படுத்திக் கொள்கிறது என்ற வினாவும் எழுகிறது. சிறுவயது முதல் ஏதாவது ஒரு நாயின் மரணம் நம் வாழ்வின் நீங்க மறுக்கும் பதிவுகளாக பின் தொடர்ந்து வந்திருக்கும். நினைக்கும்போது அது வெறும் நாய்களின் பெயர்கள் அல்ல, அதையும் கடந்த நமது அன்பைப் பகிர்ந்து கொண்ட இன்னொரு உயிரின் அடையாளமாகவே நீள்கிறது. அன்புடன் கே.பாலமுருகன் |
“நெளிந்தோடும் பால்யத்தின் மீதான வார்த்தைகள்”
தேட தேட
முடிவில்லா நதியைப் போல
சப்தங்களை இரைச்சல்களை
விழுங்கியபடி
நெளிந்தோடுகிறது
பால்யம்”
பால்யம் தொட்டு, பல கவிஞர்கள் தமது பதிவை கவிதைகளாக கதைகளாக, பத்திகளாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். எழுத எழுத மீண்டும் மீண்டும் தம்மை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பது பால்யம் மட்டுமே எனக்கூட தோன்றுகிறது. இயக்குனர் சத்ய ஜித்ரே அவர்களின் “பாதேர் பஞ்சாலி” படம், மிக நீள் துயரத்தின் படிமங்களில் மூழ்கி படைப்பின் மிக துல்லிய தருணத்தில் உலகை எட்டிப் பார்க்கும் ஒரு பால்யத்தின் நெடுங்கதைதான்.
அந்தப் பால்ய நதியின் கரைகளில் இன்றும் நமது மூப்பின் பிம்பங்கள் வளர்ந்து விரைத்து, உடைந்து, சிதைந்து, மீண்டு, வற்றாமல் ஓடிக் கொண்டிருக்கும் பால்யத்தின் தரிசனங்களை எவ்வித சலனமுமின்றி நீர் குமிழின் சிறு பிளவுகளைப் போல கடந்து போய்க் கொண்டே இருக்கின்றன. அந்தத் தரிசனங்களுக்கு மத்தியில் ஒரு கானல் நீரைப் பார்ப்பது போன்ற மனோபவத்துடன் வாழ்வு தந்திருக்கும் எல்லாம் சம நெருக்கடிகளையும் போராட்டங்களையும் சமாளித்துக் கொண்டு பால்யத்தை ஒரு கனவு போல எதிர்கொண்டவர்களாய் சிலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
“மிக சுமாரான
ஓர் உறக்கத்தில்
தொலைந்திருந்தபோது
சடாரென துள்ளிக்குதித்து
மிதக்கின்றன பால்யத்தின்
முகங்கள்”
பால்யத்தைக் கவிதைகளில் கையாளும் ஒரு சில எழுத்தாளர்கள், அதன் குறியீடாக பொம்மைகளைக் கொண்டு வருகிறார்கள். எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் கட்டிலுக்கடியில் கிடக்கும் தலை அறுந்த பொம்மைகளைப் பால்யத்தின் நினைவுகளென சொல்கிறார். அந்த மாதிரி எல்லாரின் வீட்டிலும் தமது பால்யத்தை ஏதோ ஒரு பொருளைச் சேமித்து வைத்திருப்பதன் மூலம் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். நான் எனது 6ஆவது வயதில் பயன்படுத்திய பெங்குயின் பொம்மை விளையாட்டு இயந்திரத்தை அப்படியே வைத்திருக்கிறேன். பெங்குயின் பொம்மைகள் அந்த இயந்திரத்தின் மின்சக்தியால் படிகளில் ஏறி சொந்தமாக சறுக்கி விளையாடும். ஸ்காப்ரோ 2-இல் இருக்கும் போது அப்பா வாங்கி வந்து கொடுத்தது.
இப்பொழுது அந்தப் பெங்குயின் பொம்மைகள் சறுக்கி விளையாடும் சக்தியை இழந்து பழுதுபோன பொருளாக கிடக்கின்றன. ஆனால் என்னவோ அந்தப் பொம்மைகளைப் பார்க்கும் போது மனம் தானாக பால்யம் என்கிற படிகளின் வழியாக இறங்கி வந்து என் 5 ஆவது வயதை எட்டிப் பார்க்கத் தூண்டுகிறது.
“பெங்குயின் பொம்மைகள்
போல
இருந்துவிட்டால்
சறுக்காமல் இருந்திருக்கும்
பால்யம்”
இப்படியாகக் கவிஞன் தனது கவிதை மொழியின் வாயிலாக இழந்த பால்யத்தின் கொண்டாட்ட பொழுதுகளை, தோழர்களின் கதறல்களை, தூக்கி வீசி விளையாடிய பொம்மைகளை என்று எல்லாவற்றையும் தமது நிகழ் உலகத்திற்குள் படிமங்களாகக் கொண்டு வந்து மீள் உருவாக்கம் செய்ய முற்படுகின்றான். அவனது பால்யத்தை தமது வார்த்தைகளால் தனக்குள் சேமித்துக் கொள்கிறான். அந்தவேளையில் அவன் முகம் சிறுத்து, கை கால்கள் சுருங்கி, தொலைத்த பால்ய பொம்மையைத் தேடி ஓடுகிறான். ஒவ்வொருவரும் தமது பால்யத்தை நினைவுகூறும் பொழுதெல்லாம் தமக்குள் அடக்கி வைக்கப்பட்டிருந்த உணர்வுகளை மிகவும் சுதந்திரமாக எல்லார் முன்னிலையும் ஒரு குழந்தையைப் போல பகிர்ந்து கொள்கிறார் என்றே தோன்றுகிறது.
“குளுகுளு நான்சுவர் அறையில்
காட்சிக்கு வைக்கப்பட்ட
பொம்மைப் போல
படுத்திருக்கும் என்னை
வாநீர் ஒழுக
வீட்டின் வாசல்படியில்
படுத்துறங்கிய
நாட்களுக்குள்
கொண்டு செல்வது
இந்தப் பால்யத்தின்
மீத நினைவுகளே”
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி
Friday, April 24, 2009
நகரத்தில் வாழும் கிழவர்கள் - ஒரு நகரமும் சில மனிதர்களும்
“ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்”
பழைய சைக்கிள்கடையோரமாக இந்த மாதிரியான பழைய பாடலின் வரிகளைக் கேட்கும் போது சக்கரச் சுழற்சியில் இயங்கிக் கொண்டிருந்த உடல் சட்டென்று சிறிது நேரத்திற்கு நின்றுவிடுகிறது. உள்ளம் அந்த வரிகளைக் கேட்டு என்னவோ செய்துவிடுகிறது. அந்தக் குரலில் தெரிந்த தளர்வும் தனிமையும் மன உணர்வுகளைப் பிளிவது போல் இருக்கும். நிமிர்ந்து அந்தப் பாடல் வந்த திசைகளில் பார்க்கும்போது அது யாரோ ஒரு கிழவராகத்தான் இருக்கும். முகத்தில் சோர்வும் மெலிந்த தேகமாகவும் வெயிலின் உச்சக்கட்ட கொந்தளிப்பில் அமர்ந்துகொண்டு இலேசான சிரிப்புடன் பழைய பாடல்களைப் பாடிக் கொண்டிருப்பார்கள்.
“ஓடம் நதியினிலே
ஒருத்தி மட்டும் தரையினிலே
உடலைவிட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா
வெளியிலேயே!”
நகரத்தில் மிகவும் நேர்த்தியான ஒரு தற்செயலில் நான் சந்திக்கும் கிழவர்கள் ஏதாவது ஒரு பழைய பாடலுடன்தான் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்வில் அந்தப் பழைய பாடல்கள் ஒரு அங்கமாக இன்றளவும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.
நகரம் கொடுக்கும் பயங்கரக் கனவுகளிலிருந்து விடுபட்டு அவர்களைத் தனித்து காட்டுவதே அவர்களின் இந்தப் பழைய பாடல்களின் வரிகள்தான். பெரும்பாலும் கோயிலுக்குச் செல்லும் வழியில் கோவில் மண்டபங்களின் ஓரங்களில் பாலத்தின் அருகேயுள்ள மரத்தடியில் என்று வாழ்விடமின்றி கசங்கிப் போன ஆடைகளுடன் தாடி வளர்ந்து ஒட்டிய வயிறுடன் கிடக்கும் கிழவர்கள்கூட பழைய பாடலின் வரிகளை இராகம் தப்பிப் பாடிக் கொண்டிருப்பதைக் கேட்கும்போதுதான் குற்ற உணர்வு மேலோங்குகிறது. அதற்கு மேல் அவர்களைக் கடக்க முடியாமல் இயந்திரக் கால்கள் நடுங்குகின்றன.
“இயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோருக்கும் சொந்தமடா
எனது உனது என்பதெல்லாம் இடையில் மாறும் பந்தமடா”
வாய் முழுக்கச் சிரிப்பாக பசியையும் கடந்த ஒரு ஏகாந்த நிலையில் அமர்ந்து கொண்டு அந்தக் கிழவர்கள் பாடும் வரியில் பழைய நூற்றாண்டையே தூக்கி வந்து நகரத்தில் எறிவது போல இருக்கும்.
கோவில் மணடபத்தின் ஓரங்களில் அமர்ந்திருக்கும் கிழவர்கள்
அந்தக் கிழவர்களின் முகங்கள் யாவும் கடவுளின் சிந்தனையையே மறக்கடித்துவிடும். உறவுகளைத் தொலைத்த பிறகு ஏதோ ஒரு வெயில்பொழுதில்தான் அவர்கள் அங்கே வந்து என்ன செய்வதென்று தெரியாமல் நகரம் கொடுத்த வெறுமையில் பழைய பாடல்களைப் பாடத் துவங்கியிருக்க வேண்டும்.
நிஜ வாழ்க்கை ஏற்படுத்திய மனஅழுத்தத்தில் சுயத்தெளிவை இழந்து கடந்தகால வாழ்வின் மகிழ்ச்சிகளைச் சமாதானத்திற்காக நினைவுகூறும்போதுதான் எங்கிருந்தோ அந்தப் பழைய பாடல்களின் வரிகள் உதிர்ந்து கொள்கின்றன. மீண்டும் மீண்டும் அவர்களின் இளமைகால சாட்சியாக அந்தப் பாடல்கள் மட்டுமே மீதமிருக்கின்றன.
“உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா கர்ணா!
வருவதை எதிர்க்கொள்ளடா”
கர்ணன், கட்டபொம்மன், கைலாச சிவன், வைக்குண்டத்தின் பெருமாள், தமிழ்க் கடவுள் முருகர், இராகவேந்திரா, சை பாபா, என்று எல்லாரும் அவர்களின் பாடலில் எங்கோ ஓர் இடத்தில் வந்து போகிறார்கள். சமயச் சொற்பொழிவு கொடுக்கும் ஆன்மீகத் தன்முனைப்பைவிட அவர்களின் பாடல் வரிகள் உள்ளூக்குள் எதையோ தட்டி எழுப்பிவிடும்.
அந்தக் குரல்கள் உச்சரிக்கக்கூடிய சொற்கள் சோகத்தின் இசையாக வந்து உடலையும் உள்ளத்தையும் ஆக்கிரமிப்புச் செய்துவிடுகின்றது. கோவிலின் உள்ளே அமர்வதைவிட வெளியே அவர்களின் பாடல்களைக் கேட்டவாறு அவர்களுக்குத் தெரியாமல் அமர்ந்திருப்பதில்தான் மனம் ஆறுதல் கொள்கிறது.
“கெஞ்சோற்றுக் கடன் தீர்க்க- சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா!”
வீட்டுப் பிரச்சனைகள் தரும் பரபரப்பை தாங்க முடியாமல் போகும் கணங்களில் அந்தக் கோவில் பக்கமாகப் போய்விட்டு வர மனம் தூண்டுகிறது. என்னைப் போல பலர் அந்தப் பாடல்களைக் கேட்பதற்காகவே அங்கு அந்த மண்டபத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருப்பார்கள். நகர இருளுக்குள்ளிருந்து அந்தக் கிழவர்களின் பழைய பாடல்கள் ஒலிக்கத் தொடங்கும்.
எப்பொழுதாவது அவர்களை நெருங்கி 5 வெள்ளியோ 2 வெள்ளியோ நீட்டும் போது, பாடலை நிறுத்தாமலே அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு மீண்டும் பாடலை உற்சாகம் நிறைந்த குரலுடன் அவர்கள் தொடரும் போது பிறவி புண்ணியம் அடைந்துவிட்டது போல இருக்கும்.
என்னைப் போல பலர் அந்தக் கிழவர்களின் பாடலைக் கேட்டு, பணம் தந்துவிட்டுப் போவார்கள்.
கிழவர்கள் தொலைத்த வாழ்க்கையைப் பற்றி யாருக்குமே அக்கறை இல்லை. நகர மனிதர்களின் இழுப்பறி வாழ்விற்கும் அவர்களின் நகரப் பிரச்சனைகளுக்கும் அந்தக் கிழவர்கள் பாடக்கூடிய பழைய பாடல்களின் வரிகள் ஏதோ ஒருவகையில் ஆதரவாகவும் கணநேர உற்சாகமாகவும் இருந்துவிடுகின்றன.
“பகவானே மௌனமேனோ?
இது யாவும் நீதிதானோ? பரிதாபம் என்னைக் கண்டு
கருணையில்லாததேனோ?”
ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா
(மக்கள் ஓசை நாளிதழில் தொடராக வந்த கட்டுரை- பகுதி 3)
Thursday, April 23, 2009
எழுத்துலகில் தொடர்ந்து போராடுங்கள்
தங்களின் சிறுகதையை ரசித்துப் படித்தேன். தொடர்ந்து பல நல்ல படைப்புகளை மலேசிய மண்ணில் ஈன்றெடுக்க எனது வாழ்த்துகள்.
அண்மைய காலமாகவே தங்களின் பெயரை கலங்கடிக்கும் வகையில் இணைய ஊடகங்களில் காழ்ப்பு மிகுந்த விவாதங்கள் தலையெடுத்து வருகின்றன. இலக்கிய சர்ச்சை பலருக்கு நன்மையில் முடியும். ஆனால் தனிமனித தாக்குதல்கள் என்றும் யாருக்கு பயனளிக்க போவதில்லை.
தங்களுடைய படைப்புகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவன் என்கிற முறையில் ஒரு சிறிய வேண்டுகோள்.
மனம் தளர வேண்டாம். எழுத்துலகில் தொடர்ந்து போராடுங்கள். வீண் வம்புகளில் நீங்கள் பங்கெடுத்துக் கொள்ள வேண்டாம். தூற்றுவார் தூற்றட்டும்! எழுத்து, பேச்சைவிட கர்மவீரராக இருந்து செயலாற்றுங்கள். உங்கள் மனசாட்சிக்கு சரியென்பதை எண்ணம், எழுத்துகளில் கொண்டுவர துணியுங்கள். பிறரின் தூற்றுதலையும் போற்றுதலையும் உள்வாங்கிக் கொண்டு சுயத்தை இழந்து விடாதீர்கள்!
உங்களை பாலமுருகனாகவே பார்க்கவிரும்புகிறோம். பிறர் வடித்த / வடிக்க நினைக்கும் சிலையாக அல்ல!
என்னைப் போன்ற வாசகர்கள் என்றும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்!
வெற்றி உங்களுக்கே....
அன்புடன்,
கி.சதீசு குமார்
மிகுந்த வருத்தங்களுடன்
இனி வருந்துவதாகவோ மன்னிப்பு கேட்பதிலோ அர்த்தம் ஒன்றும் இருக்கப்போவதில்லை. எனது எழுத்து சார்ந்து தர்கங்களுக்கு மட்டும் என்னை ஒருமுகபடுத்த அதீத காலம் தேவைப்படலாம். இனி அதற்கான சிந்தனைகள் மட்டுமே எனக்குள்.
மிகுந்த வருத்தங்களுடன்
பாலமுருகன்
Wednesday, April 22, 2009
சிறுகதை-இரவு மணி 12- நான் கேசவன் குன்மா பாதுகாவலர்
“ப்பா. . ப்பா. . ஏஞ்சிருங்க”
“என்னங்க. . என்னங்க. . மணியாச்சு ஏஞ்சிருங்க”
சரியாக இரவு மணி 9க்கு வழக்கமாகி போன அதே அழைப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கும். அறையின் இருட்டில் இந்த உடல். 60 வயதான உடல். தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்த அறை மணி நேரத்திற்குள் மஞ்சள் கோட்டுடன் கிளம்பி வீட்டுக்கு வெளியில் நின்று கொள்ள வேண்டும்.
“தொற அங்கிள் ஏசிகிட்டே இருக்காரு, எப்பவும் நீங்க லேட்டாம். . சீக்கிரம் ஏஞ்சி கெளம்புங்க. . ப்பா”
பகலெல்லாம் எதாவது ஒரு காரணத்திற்காக அலட்டலே பிரதானமாக திரிந்து கொண்டிருக்கும் மனிதர்கள் இருக்கும் இந்த வீட்டு வரிசையில் இரவில் எழுந்து பல் துலக்கி கொண்டிருக்கும் வெகுளி அல்லது கிழட்டு காமெடியன் அனேகமாக நானகத்தான் இருக்க முடியும். 10 நிமிடத்திற்கு மேல் குளியலறையில் இருந்து விட்டால், மீண்டும் அதே அழைப்பு. அதே வலியுறுத்தல்கள்.
“என்னாங்க, மணியாயிகிட்டே இருக்கு, இன்னும் என்னா பண்றிங்க? சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க”
எதுவும் பேசுவதற்கு முன்பதாக மனைவி, மேசையில் இரவு உணவைத் தயார்ப்படுத்துவதில் மும்முரமாகிவிடுவாள். அதையும் மீறி பேசிவிட்டால் மீண்டும் அதே வலியுறுத்தல்கள். காது கொடுத்து கேட்கவே வரம்பு மீறிய ஒரு அருவருப்பு. கண்ணாடி கிளாசில் நீர் நிரம்பும் சத்தம்கூட எதையோ அவசரமாக என் மீது சுமத்திக் கொண்டிருப்பது போல இருக்கும். வலுக்கட்டாயமான ஒரு திணிப்பு.
அன்று ரசமாக இருந்துவிட்டாலும் அதையும் கடைசிவரை உறிஞ்சி குடித்துவிட்டுதான் போக வேண்டும். என்றாவது நேரத்தையெல்லாம் சிறிது நேரத்திற்கு மறந்துவிட்டு ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது வரவேற்பறையில் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருக்கும் குலுக்கல் நடனத்தில் இதுவரை மெய்யிழந்து கொண்டிருந்த மகன் திடிர் விழிப்பில் மீண்டும் அதை ஞாபகப்படுத்தி விடுவான்.
“தொற அங்கிளு ஏசிகிட்டே இருக்காரு. . எல்லாரும் மாதிரி அவரும் லேட்டா போவ முடியுமா?. . சீக்கிரம் கெளம்பி போய் நில்லுங்க”
மறுபடியும் ஒர் அமைதி. மீண்டும் குலுக்கல் நடனத்தில் இணைந்து கொண்டிருப்பதற்கான ஆய்த்த நிலை. பிறகு மஞ்சள் கோட்டை எடுத்து மாட்டிக் கொண்டு சரிப்படுத்திக் கொள்ளும்வரை இருக்கையின் கதகதப்பில் சாவகாசமாய் வசதிகளை அனுபவித்துக் கொண்டிருப்பான். கால்களை கீழே இறக்கி நீட்டிக் கொள்வான், கைகளை தலைக்கு மேல் உயர்த்தி உடலை நெளித்துக் கொள்வான். அவனுக்கு மட்டும் இத்தனை வசதியா? அப்படியென்ன ஒரு வசதி தேவைபடுகிறது இவனுக்கு? எங்கே போய் ஒளிந்து கொண்டதோ என்னுடைய முந்தைய அதிகாரங்கள்? வீட்டைச் சுற்றிலும் பார்த்துக் கொண்ட பிறகு மீண்டும் ஒரு தோல்வி.
உனக்கு வயசாச்சிடா கேசவா.. மறந்துட்டியா? இப்ப நீ சின்ன பப்பாடா. . ஒன்ன ஓட ஓட வெரட்டுவாங்க, பால் போத்தைல பால ஊத்தி வாயில திணிப்பாங்க, தொட்டில போட்டு முகத்துல எச்சல் தெரிக்க பாட்டு பாடி தூங்க வைப்பாங்க. . ஒனக்கு வயசாச்சிடா கேசவா. . முதுவுலாம் நோவுமே. . வயிறு எப்பவும் பெரட்டிகிட்டே இருக்குமே. . இன்னும் கொஞ்ச நாள்ல யப்பாடானு சாய போற. . அதுக்குள்ள என்ன அவசரம்? அப்பறம் வசதிலாம் கெடைக்கும், இந்த ஊர்ல இல்லாத கவுர்மெண்டு ஆஸ்பித்திரியா என்ன? ஒனக்கு பக்கத்துல மீட்டர்லாம் ஓடும்டா. . அத நீ கேட்ககூட முடியாது. இருந்தாலும் பரவாலடா கேசவா. . ஒன்னோட ஒடம்பு இப்படி ஆவுதுனு கவலபடறியா? அத மொத விட்டுத் தள்ளு. . அப்பறம் வொயர்லாம் பூட்டி ஒன் ஒடம்ப பாதுகாப்பாங்க குலுகுலு ரூம்புல. . அதுவரைக்குமாது இவுங்க ஒன்ன ஓட ஓட வெரட்டுட்டுமே. . இப்ப என்னா ஆயி போச்சி. . போடா. போடா. . தொற அங்கிள் வரப் போறாருனு அடுத்த வலியுறுத்தல் வர போது”
“மா. . என்னாமா செய்யறாரு இவுரு. . ராஜா மாமா அன்னிக்கே சொன்னாரு. . சும்மா சும்மா தூங்கிகிட்டே இருக்காறாம். . அங்க உள்ளவனுங்களாம் ஏசறானுங்களாம்”
“என்னாங்க. . என்னாங்க. . ரூம்புல இன்னும் என்னா பண்றிங்க. . வாங்க”
“ தோ வந்துட்டேன்” என்றெல்லாம் இந்த குறுகிய அவசரத்திற்கு மத்தியில் நான் அப்படிக் குரல் ஏதும் கொடுத்ததில்லைதான். தூக்கக் கலக்கத்தில் கைகள்கூட பாரமாகி போயிருக்கும். இறுக்கமான ஜீன்ஸ் கால்களைக் கெட்டியாக பிடித்துக் கொண்டு எதையோ வலியுறுத்திக் கொண்டே இருக்கும். எழுந்து நிமிரும் போது பிட்டத்திலிருந்து ஒரு பலமான குசு. அந்த ஜீன்ஸ் சிலுவாரிலிருந்து அவை வெளியேறுவதற்கு கொஞ்சம் தாமதமாகும். இரண்டு கால்களையும் அகல விரித்துக் கொண்டு மறுபடியும் மீதமிருந்த குசுவை வெளியேற்றிவிட்டு அறை கதவைத் திறக்கும் போது 5 நிமிடம்தான் இருக்கும் துறை வருவதற்கு.
“ தாங்க, சோத்த டப்பால போட்டுட்டேன். . நீங்க ஒக்காந்து சாப்டுகிட்டு போறதுக்குள்ள விடிஞ்சிரும். . அப்பறம் அவன் கத்திகிட்டே இருப்பான். . .”
அகலமான ஒரு பிளாஸ்ட்டிக்கில் அந்த சோறு டப்பாவும், பெரிய கைலாம்பும், கொசு மருந்து இரண்டு துண்டுகளும், பிறகு கடைசியாக ஒரு தலையணையும் போர்வையும், எடுத்து வலது கையில் பிடித்துக் கொண்ட போது, தோள் பட்டையில் ஒரு வலி. “யப்பாடா. . ராமகிருஷ்ண பகவானேனு அந்த கூஷன் இருக்கையில் சாய்ந்து கொண்டு மகனுடைய கையிலிருந்த தூர இயக்கியைப் பிடுங்கி தொலைக்காட்சி பார்க்க வேண்டும் போல இருந்தது.
அப்படிச் செய்துவிட்டாலும்.. வலியுறுத்தல்களின் முழு சுயரூபமும் அனல் தெறிக்க என் உடலை ஊதி வெடித்துவிடும். யம்மாடியோ. . என்று சிலிர்த்துக் கொண்டு வீட்டின் முன் வாசலுக்கு நகர்ந்து கொண்டிருக்கும் போது எவ்வளவு வசதியாக ஆடிக் கொண்டிருக்கிறது அவன் தலை தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே.
துணு துணுக்கு துணுக்குனு முன்பு ராஜாவுடன் அவன் வீட்டில் அவனுடைய குழந்தைகள் வேடிக்கை பார்க்க தொப்பை வயிற்றுடன் ஆட்டம் போட்டது ஞாபகத்திற்கு வந்ததும், காலுறைகள் போடும் போது சின்னதாய் கால்களில் ஒரு ஆட்டம். “இப்ப என்னா அவசரம்? எவன் குடி முழுகிற போது” என்று அலட்சியமாய் சொல்லிவிட்டு ஆள்காட்டி விரல்கள் இரண்டையும் முகத்திற்கு நேராக நீட்டிக் கொண்டு, பங்கரா நடனம் ஆட வேண்டும் போல இருந்தது. துணுக் துணுக்கு துணுக் துணுக்கு தா. . தா. . தா. .” மகன் எட்டிப் பார்த்துக் கொண்டான். மனைவி வீட்டு வாசலுக்கு வந்தாள். நான் தொலைந்து போகும்வரை அங்கிருந்து நீங்கமாட்டாதவளாய் முன் வாசல் கேட்டில் கைகளை வசதியாக வைத்துக் கொண்டு நின்றிருந்தாள். அவள் வயதுக்கு இந்த வசதி நியாயமானதுதான்.
பக்கத்து வீட்டு மலாய்க்காரன் கார் கழுவிக் கொண்டிருந்தான் மிகவும் வசதியாக. இந்த நேரத்தில் இவன் கார் கழுவுவதற்குக் காரணம் இருக்கலாம்தான். அவனது வீட்டின் உட்புறத்தை எட்டிப் பார்த்துக் கொண்டேன். அந்த வரவேற்பறையிலும் யாரோ தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கலாம்தான் அல்லது தலையை ஆட்டிக் கொண்டிருந்தாலும் ஆச்சரியமில்லைதான்.
“யா. . கேசவன். . பெர்கி கெர்ஜாகா?” ஒரு நீல வாளியை எடுத்து உயரமாக பிடித்துக் கொண்டு காரின் மேற்பரப்பில் ஊற்றும் போது நான்கு பக்கமும் வழிந்து கொண்டிருந்தது எனக்கென்னமோ அவனது இயலாமைகள் போலதான் தெரிந்தன.
இந்த வீட்டுக்கு வீடு வசதி அனுபவிப்பாளர்களை அனைவரையும் கம்போங் ராஜா ஆற்றில் குவித்து இந்தப் பக்கம் அசுரர்களும் மறுபக்கம் நானும் அந்த மலாய்க்காரனும் நின்று கொண்டு ஊலகுப்பான் பாம்புகளைக் கொண்டு கடைய வேண்டும் போல இருந்தது. இவர்களெல்லாம் எனக்கென்னமோ ஆமைகளாக உருவெடுத்து சோர்ந்து போய் கிடப்பது போலதான் இருந்தது. வசதிகளுக்கு ஓர் அற்புதம் இருக்கிறது போலும். ஆமையைப் போல வசதிகளுக்காக சோம்பலைச் சுமந்து கொண்டு வீட்டின் வரவேற்பறையில் எத்தனை காலம் இப்படி ஊர்ந்து கொண்டிருப்பார்களோ? என்னுடைய மகன்தான் அதற்கும் தலைவனாக இருக்க முடியும்.
“ஐயோ கேசவா என்னா போறாம படறியா?. . ஒனக்கு கெடைக்கலனு போறாம படறியா? வேண்டாம்டா. . விறுவிறுனு வாசல் கேட்டுகிட்ட போய் நில்லுடா. . தொற வரப் போறாரு” முன் வாசல் கதவோடு இலேசாக சாய்ந்து கொள்ளலாம் என்று நினைக்கும் போதுதான் இன்னமும் உடலில் ஏறி அமர்ந்து கொள்ளாத மஞ்சள் கோட் அக்குளில் குவிந்து கிடக்கும். சடாரென அந்தக் கோட்டை உதறிவிட்டு தோளில் சாத்திக் கொண்ட பிறகு, சாய்ந்து கொள்வதற்குள் துறை வந்து கொண்டிருப்பார். அவரும் அந்த மஞ்சள் கோட்டை அணிந்து கொண்டிருப்பார். அந்த மஞ்சள் கோட்டின் பின்புறத்தில் “குன்மா செகுரிட்டி” என்று எழுதப்பட்டிருக்கும். இதுவும் ஒரு வலியுறுத்தல்தான். அந்தக் கோட்டின் நிறம் மஞ்சள் இல்லைதான். ஏறகுறைய என் கண்களுக்கு மஞ்சளாகத்தான் தெரிகிறது போல. எந்தக் கலராக இருந்தால் என்ன? இதுவும் ஒரு வலியுறுத்தல் கலர்தானே.
“வாங்க கேசவன். . கெளம்பலாம் மணியாவுது”
துறையின் ஆர் சி மோடார் அவ்வளவாக எரிச்சலைக் கொடுக்கவில்லைதான். உள்ளேயே மறந்து வைத்துவிட்டிருந்த அந்தக் குறிப்பு புத்தகம், மோட்டாரில் ஏறி அமர்ந்து கொண்ட பின்தான் வலியுறுத்திக் கொண்டிருந்தது.
“தொற தோ இருப்பா. . வந்துர்றேன் புக்க மறந்துட்டேன்” எழுந்து வீட்டுக்குள் புகுந்து அந்தக் குறிப்பு புத்தகத்தை எடுத்துக் கொண்டு வெளியேறுவதற்குள் எத்தனை வலியுறுத்தல்கள். . மோட்டாரில் ஏறி அமர்ந்து கொண்ட பின் துறையிடமிருந்து அந்த முணகல். நன்றாக கேட்டது, இருந்தாலும் எந்த அலட்டலும் இல்லாத அமைதி. அந்தப் பக்கத்து வீட்டு மலாய்க்காரன் தொடர்ந்து காரைக் கழுவிக் கொண்டே இருந்தான். குளிரில் அவனுடைய கால்களிரண்டும் நடுங்கி கொண்டிருப்பதை நான் கவனிக்க விரும்பவில்லைதான். உள்ளேயிருந்த அனைத்து வசதிகளும் தற்காலிகமாய் அவன் துறந்திருக்கலாம், பறிக்கப்பட்டிருக்கலாம். எனக்கென்ன?
“இன்னிக்கு உள்ளது எழுதிட்டிங்களா, , அப்பறம் ராஜா ரவுண்டு வரும் போது கத்த போறாரு. .”
புத்தகத்தை இலேசாக திறந்து பார்த்துக் கொண்டேன். முதல் வரி, இரவு மணி 10- நான் கேசவன் குன்மா பாதுகாவலர் பண்டார் முத்தியாராவில் பதிந்து கொள்கிறேன், என்று மிகச் சரியாக தடுமாறிய எழுத்தில் குறிப்பிட்டிருந்தன. இந்தப் பேனாவைப் பிடித்து வடிவமாக எழுதும் நிதானத்தையெல்லாம் நான் கடந்துதான் இருந்தேன். ஒரு ஓலை கொடுத்திருந்தால் எங்களைப் பற்றிய மகாபாரதம் எழுதிவிட்டிருப்பேன். ஓலை உடைந்திருந்தால் சடாரென, கோரை பல்லைப் பிடுங்கி அதில் எழுதிவிட்டு கம்போங் ராஜா பேச்சு வரலாற்றில் இணைந்திருக்கலாம்தான். பிறகு வசதிகளுக்கா சொல்ல வேண்டும்?
அந்த பண்டார் முத்தியாரா வீட்டுக் குடியிருப்பு பகுதிக்குள் துறையின் மோட்டார் நுழைந்து கொண்டிருந்தது. எந்தவித சலனத்திலும் ஈடுபடித்திக் கொள்ளாமல் அந்தச் சில வீடுகள் ஆழ்ந்த இருளுக்குள் உறங்கி கொண்டிருந்தன. மூச்சிரைப்பை பல நாட்களாக கேட்டுப் பழகிதான் போயிருந்தேன். யார் யாரோ சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள் காதுக்கு சமிபத்தில்.
“ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவ கரட்டா போயிரு கேசவா. . அந்த சீனன்லாம் இல்லாத கொறலாம் சொல்றானுங்க பாத்து” இறுதியான வலியுறுத்தலுடன் நகர்ந்து அடுத்த தாமான்க்குள் மறைந்து கொண்டிருந்தார் துறை என்ற அந்த மற்றுமொரு வலியுறுத்தலின் உருவம் அல்லது வலியுறுத்தபடுவதற்கான காரணி என்றுக்கூட அடையாளப்படுத்திக் கொள்ளலாம். இன்னும் சிறிது நேரத்தில் ஒரு சுற்று போக வேண்டும். அந்தக் காலி வீட்டில் இருக்கும் பழைய கப்சாய் மோட்டாரை எடுத்துக் கொண்டுதான் போக வேண்டும். இது ராஜாவின் வலியுறுத்தல்.
நான்கு வரிசைக் கொண்ட அந்த குடியிருப்பு பகுதிக்குள் அந்த மோட்டாரின் எரிச்சலைத் தூண்டும் சத்தம் அவ்வளவாக கேட்டுவிடக்கூடாது, ஆனால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை யாராவது அதே சத்தத்தைக் கண்டிப்பாக கேட்டிருக்க வேண்டும். அப்பொழுதுதான் நான் வேலை செய்கிறேன் என்ற திருப்தி ஏற்படுமாம். தூக்கத்திலும் நிம்மதியில்லாமல் இப்படியொரு நிம்மதி தேவையா? ஐயோ ஆண்டவா இந்த வலியுறுத்தல்களின் நீளம் எவ்வளவாக இருக்கும்? இன்னும் எத்தனை தளங்களில் இது விரிந்து கிழைவிட்டுக் கொண்டே போக வேண்டும்? மொத்தமாக இருளில் மறைந்துவிட்ட வீடுகளில் அதிகமான கவனம் வைக்க வேண்டுமாம். ஏன்? இருளுக்குள் எதாவது நடந்துவிட்டால்? தற்செயலாக என்னவேண்டுமானாலும் நடந்துவிடலாம்தான்.
மோட்டாரின் சத்தத்தைக் குறைத்துவிட்டு மோட்டாரின் வக்கிளில் இருக்கும் பெரிய கைலாம்பை எடுத்து எல்லாம் வீடுகளிலும் இருமுறையாவது ஒளிப்பரப்ப வேண்டும். இது அடுத்த வலியுறுத்தல். ஒவ்வொரு வரிசை வீடுகளில் நுழையும் போதும் அந்த கைலாம்பு எல்லாம் வீடுகளின் முகத்திலும் பாய வேண்டும். யாராவது திருட்டுப் பயல்கள் இருந்துவிட்டாலும்கூட அதையும் நான் தான் கவனித்து பாதுகாக்க வேண்டும். இந்த வலியுறுத்தல்தான் கொஞ்சம் அசட்டுத்தனமாக இருக்கிறது.
“டேய் கேசவா. . ஒன் கிட்ட இல்லாத சொத்துடா. . சரி சரி இனி இருக்க போறதும் இல்ல. . இருந்தாலும் அதலாம் பாதுகாக்க ஒனக்கு கெடைச்ச பாக்கியம்டா இது. . கருப்பு கண்ணாடி போட்டு எப்படி இருட்டுக்குள்ள ஒளிஞ்சிருக்கானுங்க பாரு. . நம்பிக்கையே இல்லாத பையனுங்க. . அதனாலதான் ஒன்னையும் ஒன் தூக்கத்தையும் வெல பேசிருக்கானுங்க. . போடா. . போடா. . அவனுங்கள போறுத்தவரைக்கும் நீ கோட்டான். . அவன்லாம் ராத்திரி நேரத்து ஆமைங்கடா. . ஊர்ந்துகிட்டு இருப்பானுங்க. . போடா. . போ. . போய். . கைலாம்ப பாய்ச்சி அந்த ஆமைங்களோட ஓட்டுல”
கருப்பு கண்ணாடிகளை வாசல் கதவுகளாக கொண்ட வீட்டில் அந்தக் கருப்பு கண்ணாடியில் கைலாம்பின் வெளிச்சத்தை ஒளிபரப்பக் கூடாது. இதுவும் அடுத்த வலியுறுத்தல்தான். ஒரு தடவை தவறுதலாக அந்த மாதிரி செய்துவிட்டேன். 8ஆம் நம்பர் வீட்டில்தான்.
கைலாம்பிலிருந்து வெளிப்பட்ட மஞ்சள் பல்பின் ஒளி அந்தக் கருப்பு கண்ணாடியில் பாய்ந்த போது, உள்ளேயிருந்த ஒரு தொலைக்காட்சி, அந்தத் தொலைகாட்சியின் வலது புறத்தில் ஆபாசமான ஒரு ஓவியம், மற்றும் திறந்திருந்த அறைக்கதவிலிருந்த ஜன்னல் துணி என்று இப்படி சிதறிய ஒளியிலிருந்து கண்டு கொண்ட காட்சிகள். இப்படி பல முறை அந்த வீட்டின் இருளில் புதைந்து கிடக்கும் இன்னும் சில பொருள்களைக் காண வேண்டும் என்ற சபலம், மறுநாள் வலியுறுத்தல்களாக மாறி, அடுத்த நாளிலிருந்து கைலாம்பின் வெளிச்சம் கருப்பு கண்ணாடியில் தவறியும் ஊடுருவிடக்கூடாது.
“ஜோர்ச் லைட்ட ஒழுங்கா யூஸ் பண்ணனும். கரண்டுலாம் என்ன சும்மாவா வருது. .அங்கட்டும் இங்கட்டும் தேவ இல்லாம அடிச்சிகிட்டு இருக்காதிங்க”
கப்சாய் மோட்டாரை மீண்டும் அந்தக் காலி வீட்டின் முகப்பில் வைக்கும் போது மணி 11 ஆகியிருக்கும். 12 அல்லது 1 மணிவரை குடியிருப்பு பகுதியின் 1ஆம் நம்பர் சாலையில்தான் கொஞ்ச நேரம் திரிந்து கொள்வதும் கொஞ்ச நேரம் அந்தச் சாலையின் விளிம்பில் அமர்ந்து கொள்வதுமாக இருக்க வேண்டும். அந்த நேரத்திலெல்லாம் இரவு வேலையை முடித்துவிட்டு வரும் சீனர்களைப் பார்த்து சிரிக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் தலையசைத்துவிட்டு கையை மேலே உயர்த்தி “உள்ளேன் ஐயா” என்று அசடு வழிய வேண்டும். இதுவும் வலியுறுத்தல்தான். நான் வேலை செய்கிறேனா அல்லது விழிப்பில் இருக்கிறேனா என்ற அடையாளத்தின் வலியுறுத்தல்தான். சிலர் மது போதையில் வந்து சிறிது நேரம் உற்றுக் கவனித்துவிட்டு போவதும் உண்டு.
“ இரவு மணி 12- நான் கேசவன் குன்மா பாதுகாவலர். . அனைத்து வீடுகளும் பாதுகாப்பான சூழ்நிலையில் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன என்று மலாய்மொழியில் வழக்கம் போலவே எழுதிவிட வேண்டும். ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் சுற்று போய்விட்டு வந்த பிறகு இப்படிதான் செய்தாக வேண்டும். சில வேலைகளில் வீட்டிலேயே எல்லாவற்றையும் எழுதிவிட்டுதான் வருவேன். டூங்கே வந்துவிட்ட பிறகு அந்தச் சாலையில் அமர்ந்து கொண்டு எழுதுவது போல் பாவனைச் செய்து கொண்டிருப்பேன். எந்த வீட்டிலிருந்து யார் வேண்டுமாணாலும் பார்த்துவிடலாம்தான்.
அடுத்த ஒரு மணி நேரத்திற்கு என்ன செய்வது? வெறும் இருளும் கைலாம்பின் மஞ்சள் பல்பின் ஒளியும் மேலும் அமைதியான ஒரு சூழ்நிலையும். டூதற்கிடையில் அந்தச் சாலையையொட்டியிருக்கும் திடலில் கட்டப்பட்டிருக்கும் சின்ன உட்காரும் இடம் என்னை அழைத்துக் கொண்டிருக்கும்.
“டேய் கேசவா. . ஒடம்பு நோவுதாடா. . முதுகுலாம் உட்காந்தே வலிக்குதாடா. . அந்த எடத்துல போய் படுத்துகிட்டு கொசு மருந்த பத்த வச்சா சொகமா இருக்கும்னு நெனைக்கிறியா?. வேண்டாம்டா. . இந்த ரோட்டுலே இப்படி ஒக்காந்துகிட்டு தூங்கு. . கொஞ்ச நேரம் தூங்குடா. . அது போதும். . அதான் ஒனக்கு நல்லது”
அப்படியே அந்தச் சாலையின் விளிம்பில் கையில் எப்பொழுதும் தயார் நிலையில் இருக்கும் கைலாம்புடன் விழித்திருக்க முயற்சி செய்து கொண்டிருப்பேன். முடியாதபோது தூக்கம் கண்களை இருட்டிக் கொண்டு வரும். முடியாதுதான். இலேசான தூக்கம். “யப்பா. . ராம கிருஷ்ண பகவானே. . ராத்திரி தூக்கம் எவ்ள சொகமானுது. . வீட்டு கட்டில்ல படுத்து காத்தாடி சுத்த அப்படியே சுருண்டுகிட்டு படுத்தா எவ்ள சொகமா இருக்கும். .”
காரின் மஞ்சள் ஒளி பட்டு, திடிர் விழிப்பு. மணி 2 ஆயிருந்தது. அந்தக் காரிலிருந்து அமர்ந்து கொண்டே கண்ணாடியைத் திறந்தான் அவன். தலையை வெளியே நீட்டிக் கொண்டு ஏதோ வலியுறுத்திவிட்டு போனான். ஒருவேளை திட்டியும் இருக்கலாம்தான். தூங்கி வழிவது இந்த இடத்தில் பெரிய குற்றம்தான். அதற்கான தண்டனைகளை மனு சாஸ்த்திர தொகுப்பில்தான் மேற்கொள்ள வேண்டும் போல. எழுந்து மறுபடியும் அந்தக் காலி வீட்டில் கிடக்கும் மோட்டாரை எடுத்துக் கொண்டு வலம் வர வேண்டும். நான் விழித்திருபதினாலோ என்னவோ அந்த இடத்தின் சில வீடுகளின் நாய்கள் கூட எனக்குத் துணையாக விழித்திருக்கும். முதல் சில நாட்களில் நான் ஊர்வலம் வரும் போதெல்லாம் குறைக்க தொடங்கும் நாய், பிந்தைய நாட்களில் என்னை பழகிக் கொண்டது. எவ்வளவு பெரிய சமரசம் இது? ஆச்சரியம்தான்.
மணி 2ஐ கடந்து கொண்டிருக்கும் போதுதான், அந்த 12ஆம் நம்பர் வீட்டிலிருந்து அந்த நபர் வெளியே வந்து நடந்து கொண்டிருப்பார். தூக்கத்தைத் தொலைத்த மனிதர்தான் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவர் ஒரு ஆன்மீகவாதி என்று பிறகுதான் அடையாளப்படுத்திக் கொண்டேன். கையில் ஒரு துணிப்பையை மாட்டிக் கொண்டு, வாயில் ஏதோ கடவுளின் நாமத்தை உச்சாடனம் செய்துக் கொண்டே அந்தச் சாலையில் நடந்து கொண்டிருப்பார். மூன்று நாட்களுக்கு ஒரு தடவை இப்படி வருவார். அவர் வரும் போதெல்லாம் அவரின் இருப்பும், அந்த ஹரே கிருஷ்ண ஹரே ராம நாமமும் மனதிற்கு ஆறுதலாக இருக்கும்.
இரண்டுமுரை என்னை நெருங்கி விசாரித்துவிட்டு போயிருக்கிறார். பிறகு பார்க்கும் போதெல்லாம் சிரித்துக் கொள்வதுண்டு. “இன்னும் மால முடிக்கல. . அதான்.” என்று குறைவான வார்த்தைகளுடன் என்னை கடந்து அவர் போகும் போதெல்லாம் அவருடைய அந்த இரவு நேர உற்சாகம் ரொம்பவே பிடித்திருந்தது.
மணி 4ஐ நெருங்கி கொண்டிருந்தது. அடுத்த நகர்விற்குத் தயாராக வேண்டும். காலி வீட்டில் நுழைந்து மோட்டாரை எடுத்துக் கொண்டிருக்கும் போது 3ஆவது வரிசை வீடுகளிலிருந்து திடிரென்று ஒரு பயங்கரச் சத்தம். யாரோ அலறிக் கொண்டிருப்பது போன்ற சத்தம். உடனே மோட்டரை அப்படியே போட்டுவிட்டு கைலாம்பின் மஞ்சள் ஒளி சிதறிக் கொண்டிருக்க வேகமாக ஓடிக் கொண்டிருந்தேன். . .
“ இரவு மணி 4- நான் கேசவன் குன்மா பாதுகாவலர். . அனைத்து வீடுகளும் பாதுகாப்பான சூழ் நிலையில் கட்டுப்பாட்டில் இருக்கின்றன” என்று ஏற்கனவே எழுதியிருந்த குறிப்புடன் புத்தகம் சாலையின் விளிம்பில் கிடந்தது.
ஆக்கம்: கே. பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, கெடா
Tuesday, April 21, 2009
அதிகாரம்- ஆணவம்- எதிர்வினை
உங்களுக்கு(நவீன்) மீண்டும் பதிலளிப்பதில் உண்மையில் வெட்கம்தான் படுகிறேன். நான் அனுப்பிய கட்டுரையின் தலைப்பை மாற்றி உங்கள் வசதிக்கு எனது கருத்துகளை சிவப்பு வர்ணத்திலும் உங்கள் கருத்துகளை மிகத் தெளிவான வர்ணத்திலும் போடுவது போல போட்டு உங்கள் நியாயங்களை தர்கிப்பதில் ரொம்பவே அக்கறை காட்டி மழுப்புகிறீர்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். மேலும் நான் அனுப்பிய கட்டுரையில் சில பகுதிகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும் உங்கள் மின்னஞ்சலுக்கு கருத்துகளை அனுப்பினேன் என்று வேறு சொல்கிறீர்கள். இவ்வளவு நாளா என்னையும் உட்பட பலரும் அப்படித்தானே அனுப்புகிறார்கள். இப்பொழுது மட்டும் என்ன திடீர் புலம்பல்?
அஞ்டியை நீங்கள் நிர்வகிப்பதால் எடுத்துக் கொண்ட சந்தர்ப்பம். நீங்கள் சொல்வதெலெல்லாம் உண்மை என்று ஆகிவிடாது.
என்னைப் பற்றிய விஷயங்கள் பேசப்படும் இடத்தில் நான் வந்து பேசுவது தவறென்றால், ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க வேண்டுமா? வராவிட்டால் பயந்து தலைமறவாகிவிட்டேன் என்று ஒரு பலி, வந்துவிட்டால் வெட்கமின்றி ஒட்டிக் கொள்வதாக பேச்சு! அப்படியென்றால் எதற்கு ஆரம்ப கட்டுரையில் புத்திமதி சொல்வது போல் எல்லாவற்றையும் புளோக்கில் போட்டுவிட்டு, போன் செய்து அஞ்சடியைப் பாருங்கள் என்கிற அங்கலாய்ப்பு.
ஜெயமோகன் எஸ்.ராமகிருஷ்ணன் நான் விரும்பி படிக்கும் எழுத்தாளர்கள். அவர்களின் படைப்பு மீது தனி ஈர்ப்பும் அபிமானங்களும் எனக்குண்டு. நான் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி என் கதையைப் படிக்க சொல்வதும், அவர்களின் படைப்புகளைப் பற்றி பேசுவதும் குறித்து உங்களுகென்ன அங்கலாய்ப்பு? அது வாசகன் – எழுத்தாளன் சம்பந்தப்பட்டது. அதில் ஏன் உங்கள் பொறாமை மூக்கை நுழைக்கிறீர்கள். பாவம். .
என்னைக் கேட்காமலேயே என் கவிதையை ஜனசக்தியில் பிரசுரித்தது குறித்து நான் கேள்வி எழுப்பவில்லையே. மேலும் மஹாத்மன் என்னைத் தொடர்புக் கொண்டு கதையை அனுப்பும்படி அவரே கேட்டுக் கொண்டதோடு, மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்தார். அது அவரின் உரிமை / நட்பு என்றால், நானும் அதே பாணியில்தான் என் கதையைப் பிரசுரிக்கும்படி உரிமையுடன் கேட்டேன். (விவாதம் எனது கருத்துகளுத்தான்- எனக்கு அல்ல)
என் முதுகின் வலுவைப் பற்றி தயவு செய்து கவலையை விடுங்கள் நவீன். முதலில் உங்கள் முதுகில் தெறித்துக் கிடக்கும் எச்சங்களைச் சரி செய்ய முயலுங்கள்
நண்பர்கள் என கொஞ்சம் உரிமை எடுத்து மன்னிப்பு கேட்டதற்கு அதை அங்கலாய்ப்பு என கூறி உங்களின் கெட்ட குணத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள். எனது பழைய கட்டுரையை மீண்டும் போட்டு உங்கள் முகத்தை கழுவிக் கொள்கிறீர்கள்.
என் மீது காழ்ப்பா பொறாமையா என்று ஒருவர் கேட்டதற்கு, அது பாலமுருகனுக்கு தெரியும் என்று சொல்லிவிட்டு, உடனே எனக்கு இரகசியமாக குறிந்தகவல் அனுப்பி, “நண்பா எப்படி இருக்கீறீர்கள்? உங்கள் படைப்பாற்றல் பாதிக்கக்கூடாது, பார்த்துக் கொள்ளுங்கள்” என புத்திமதி வேறு. என்ன ஒரு அக்கறை?
ஆமாம் உண்மைதான். உங்களிடம்தான் அந்த விசயங்களில் ஆலோசனை கேட்டேன், அது குலைவு என்றால், என்னை சுங்கைப்பட்டாணியில் ஒரு இதழ் தொடங்குமாறு சொன்னது என்ன குலைவா? இரண்டுமே அக்கறை சார்ந்த விஷயம்தானே. அநங்கத்தைப் பற்றி பேச வேண்டுமென்றால் என்னிடம் பேசியிருக்க வேண்டும் என்றுதானே நான் சொல்லியிருந்தேன். அதை விடுத்து புளோக்கில் பேசியதற்காகத்தான் உங்களுக்கு ஆலோசனை வழங்கும் தகுதி இல்லை என்று சொன்னேன்.
ஒருவர் சொல்லும் கருத்து, நேரடியான முறையில் தீர்மானிப்பது அவ்வளவு சரி இல்லை. அவர் எந்த சூழ்நிலையில் எந்த மனநிலையில், சொல்லியிருக்கிரார் என்பதற்கு கொஞ்சம் மதிப்பளிக்க வேண்டும். மேலும் அந்த ஒரு கருத்தே இறுதியானது என்றும் ஆகிவிடாது.
நுக்மான் விஷயத்தில் அவருக்கு நாதியே இல்லாமல் நான் விட்டுவிடவில்லை. ஏற்கனவே சொல்லிவிட்டேன். அவர் கடாரம் வந்தது, கெடா மாநில எழுத்தாளர் சங்கம் ஏற்பாட்டில் கலந்துரையாடல் நிகழ்விற்கு, அதன் உபரி நிகழ்வுதான் அநங்கம் அறிமுகம். அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு நான் எங்கும் ஓடவில்லை. இன்றளவும் யாரிடமும் மேற்கொண்டு பணம் கேட்காமல் கிடைத்த பணத்தைக் கொண்டே அநங்கத்தை வெளியீட்டுக் கொண்டிருக்கிறேன். மேலும் பணம் கொடுத்து வாங்கும் வாசகர்களின் பணத்தை அடுத்த அநங்கத்தின் தரத்தை உயர்த்தவே பயன்படுத்துகிறேன்.
பகையையெல்லாம் ஏற்படுத்தவில்லை. உங்களின் அம்பலப்படுத்தும் பாணியிலேயே சில உண்மைகளைச் சொன்னேன்.
உங்களின் குறுந்தகவலை சேகரித்து பாதுகாத்து சந்தர்ப்பம் தேடி அலையும் திட்டங்களுக்கு சபாஸ் சொல்கிறேன்.
நீங்கள் மட்டுமே மலேசிய இலக்கியத்தை வளர்ப்பது போல வேறு பேசியுள்ளதோடு இதில் சில மேற்கொள்கள் வேறு. இவர் பாணியில் அவர் பாணியில் என்று.
இதழுக்காக படைப்பு கேட்டு ஒருவர் உங்களை நச்சரிப்பார், நீங்கள் படைப்பைப் பிரசுரிப்பது பற்றியோ அல்லது உங்கள் படைப்பைப் பற்றியோ நண்பர் என்ற முறையில் கருத்து கேட்டால், நாளை ஒரு பிரச்சனை என்று வரும்போது அந்த மின்னஞ்சல்களை மிகப் பத்திரமாக சேமித்து வைத்து உங்களயே அடிப்பார். அப்படியொரு சந்தர்ப்பவாதி தலைநகரத்தில் உள்ளார் நவீன். கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்
கே.பாலமுருகன்
நாடகக் குரலுக்கு எதிரான எனது குரல்
"அஞ்சடியை" இயக்கிக் கொண்டு சுய திருப்தி அடைந்து கொள்ளுங்கள்
எனது நாடகங்களை சிரமம் பாராமல் புலம்பலாக (நிதானமாக என்று அறிவிப்பு வேறு) அம்பலப்படுத்தியதற்கு மிக்க நன்றி நவீன். அது நாடகமா இல்லையா என்பதை பற்றி நான் கவலைப்படுவதற்கில்லை. ஆனால் நீங்கள் ஆடும் தொடர் மெகா சீரியல் நாடகத்தை மிகவும் கவனமாக கையாளுகிறீர்கள். அது என்று வெளிச்சத்திற்கு வரும் என்று காத்திருக்கவும் எனக்கு நேரமில்லை.
12 மணி இல்லை நவீன். சுங்கைப்பட்டாணியிலிருந்து ஜொகூருக்கு 10.30 மணியே கடைசி பேருந்து. என்ன நவீன் நீங்கள்? எதையும் சரியாகக் கவனிக்காமல்தான் பேசுவீர்களோ? ஓடவில்லை நவீன், நல்லா சொகுசாக பேருந்து சீட்டில் அமர்ந்து கொண்டுதான் சென்றேன். பழைய கதை என்று நீங்களே குறிப்பிட்ட பின் அதை மீண்டும் பேச எனக்கு விருப்பமில்லை.
நீங்கள்தானே வல்லினம் ஆசிரியர்? உங்களிடம்தான் படைப்பு குறித்தும் பிரசுரிப்பது குறித்தும் கேட்க வேண்டும் பேச வேண்டும். ஒருவகை ஆணவம்தான் உங்களுக்கு. இதற்கு முன் வல்லினத்திற்க்காக வங்கியில் பணம் சேர்ப்பிக்க 3-4 முறை மின்னஞ்சல் வந்துவிடும். அது எந்தவகைக் கெஞ்சல்? இதழை நடத்த நீங்கள் மீண்டும் மீண்டும் பணம் கேட்டு அனுப்பும் மின்னஞ்சலை, என்னச் சொல்லலாம்? உங்கள் பாணியிலேயே சொல்வதென்றால். தரமான இதழ் வல்லினம்,ஆதலால் அதில் நம் படைப்பு பிரசுரம் ஆகுவது குறித்து நினைவூட்டல் வகையில் கேட்டால், அது என்ன நாடகமா? நாடகம் என்றால் என்ன என்பதில் உங்களுக்குப் பிசகல்.
யுவராஜனுக்கு நன்றி சொல்லும் நீங்கள் அதே அன்றைய தினம், “அவனை (யுவராஜனை) பார்க்க நான் விரும்பலா, பாத்தனா அவன மூஞ்சிலே குத்திருவேன்னு” உங்கள் நண்பரிடம் சொன்னது மறந்து போயிற்றா நவீன்? என்னமா நாடகம் இது?
நீங்கள் செய்தால் அது எதிர்வினையாக்கும், நாங்கள் செய்தால் அது புலம்பலாக்கும். எனக்கான சாவி உங்களிடத்தில் இல்லை நவீன்.
உங்களின் ரெட்டத்தன நாடகமும் அஞ்சடி வாசகர்கள் அறிந்ததுதான். பா.ம விஷயத்தில் மூக்கை நுழைத்து நாட்டாமையெல்லாம் பண்ணிவிட்டு, பிறகு மன்னிப்பு கேட்டதை என்ன “செல்வி” நாடகத்திற்கு இணையான “செல்வன்” நாடகன் என்று சொல்லலாமோ? பா.மவிடம் தொலைபேசியில் பேசிய பிறகு அஞ்சடியில் கூழை கும்பிடுவை நன்றாகவே போட்டுள்ளீர்கள்.
மாணிக்கவாசகம் புத்தகப் பரிசளிப்பு விழா குறித்து எல்லோரையும் எங்களுடன் சேர்ந்து கொண்டு குரலெழுப்புங்கள் என்று ஏன் வற்புறுத்த வேண்டும்? நீங்களே முதுகெலும்பை வளைக்கும் கழகத்தைத் தொடங்கிவிடுவீர்கள் போல?
முதலிலிருந்து ஒரு பாலர் பள்ளி மாணவனுக்கு சொல்வது போல சொல்ல வேண்டும் போல உங்களுக்கு. போலி கண்ணிரும் அநங்கமும் என்கிர கட்டுரையின் மூலம் நான் அநங்கத்தின் நிலைபாடுகளைச் சொன்னதற்குக் காரணமே உங்களின் முதல் கட்டுரையும் அதன் பிறகு வந்த நக்கல் கட்டுரையும்தான். ஆலோசனை வழங்க உங்களுக்குத் தெரியவில்லை. எப்படி ஒரு இதழ் குழுவை அணுக வேண்டும் தெரியாமல் புத்திமதி சொல்லும் அளவிற்கு வளர்த்துவிட்டதாக மமதை வேறு. ஆமாம் நீங்கள் இதழியல் துறையின் மிகப் பெரிய தூண். நீங்கள் விலகுவதால் மனம் வலிக்கத்தான் செய்கிறது. அட போங்கப்பா!
'இறுதியாக நவீனுக்கு: அதுதான் மின்னஞ்சலிலேயே அநங்கத்தின் ஆலோசகரிலிருந்து விலகுவதாகச் சொல்லிவிட்டீர்களே! பிறகு ஏன் இங்கேயும் பதிவு செய்ய வேண்டும்? பகீங்கரமாக எல்லோரும் அநங்கத்தைவிட்டு வெளியேறுவதை இப்படிப் பொதுவில் அம்பலப்படுத்த வேண்டுமா?
இதற்கே இன்னும் பதிலில்லை. ஏற்கனவே நீங்கள் பேசுவதெல்லாம் காழ்ப்பு என்றுதான் நினைக்கத் தூண்டியது. சக நண்பருக்கு புத்திமதி சொலவது போன்ற ஒரு நாடகத்தை அஞ்சடியில் அரங்கேற்றி அதில் பலரின் கவனம் பெற வேண்டும் என்பதற்காக எனது அஞ்சடி புளோக்கைப் பாருங்கள் என்று குறுந்தகவல் பிரச்சாரம் வேறு.
ஒருவரின் எழுத்தை வெகுசன எழுத்து என்று ஒட்டு மொத்தமாக முடிவுக்கட்டும் அளவுக்கு அவ்வளவு நுட்பமாக யாரும் சொல்ல இயலாது. தமது எழுத்தில் எங்கேனும் சில சமயங்களில் வெகுசன அம்சங்களோ வணிகத்தனமான சொல்லாடல்களோ வெளிப்படலாம். அதை தொடர் பயிற்சியின் மூலமே நீக்கவோ குறைக்கவோ இயலும்.
அஞ்சடியை இயக்கிக் கொண்டு சுய திருப்தி அடைந்து கொள்ளுங்கள். நீங்கள் என்ன உண்மையைப் போட்டுக் கிழித்தாளும் - படைப்பும் படைப்பாளனும் அவன் சார்ந்த சுதந்திரத்துடன் எதிர்வினைகளுக்குப் பயந்து தன்னை ஒடுக்கிக் கொள்பவன் அல்ல. அதிகாரத்திற்கு இரண்டு முகம் இருப்பது போல ஒருவரின் நியாய-கற்பிதம்-உண்மைக்கும் கூட இரண்டு முகங்கள் உண்டு.
கூட்டணி சேர்த்து எப்படா சந்தர்ப்பம் கிடைக்கும் என்று எல்லாம் மின்னஞ்சல்களையும் மிகப் பத்திரமாக இன்னும் தொலைபேசியில் வைத்திருபதற்க்காக மிக்க நன்றி.
ஒன்றத் தெரிந்து கொள்ளுங்கள். படைப்பாளன் உருவாக்கப்படுவதில்லை. அவனே உருவாகுகிறான், பல தளங்களில், வெவ்வேறு சூழலில், வெவ்வேறு மனநிலைகளுடன். உங்கள் ஆதிக்கத்தனத்தை, கிண்டல் கேலியை, மாற்று சிந்தனை என்கிற போர்வையில் நாடகமாடுகிறீர்கள் என்றால் நடத்திக் கொள்ளுங்கள். வாழ்த்துகள்.
கே.பாலமுருகன்
Monday, April 20, 2009
கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கம்- 2008-2009க்கான சிறந்த சாதனையாளராக தேர்வு
(எழுத்தாளர் கே.பாலமுருகனுக்கு டத்தோ சுப்ரமணியம் சிறப்பு நினைவு பரிசினை எடுத்து வழங்குகிறார்)
கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் பொதுக்கூட்டத்தில் என்னுடைய 2009ஆம் ஆண்டின் சாதனைகளையொட்டி சிறப்புச் செய்யப்பட்டது. வழக்கம் போல பல புதிய தீர்மானங்கள் எழுத்தாளர் கூட்டத்தில் பேசப்பட்டு முடிவுச் செய்யப்பட்டன. மேலும் சக அரசு சார்பாற்ற இயக்கத்திலிருந்து வந்திருந்தவர்களும் கல்வி இலாகாவைச் சேர்ந்தவர்களும் எழுத்தாளர் சங்கத்திற்கு முழு ஒத்துழைப்பையும் தருவதாகக் கூறியிருந்தார்கள்.
இயக்கம் ஒரு சமூகத்தின் குரலாக இருக்க வேண்டும். இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்லவும் மக்களை வாசகர்களை எழுத்தாளர்களை ஒருங்கிணைக்கும் வகையில் எழுத்தாளர் இயக்கம் தொடந்து வலுவான செயல்பாடுகளுடன் இயங்க வேண்டும் என்று முடிவுச் செய்யப்பட்டது. இயக்கம் அரசியல் சார்ந்து இல்லை, இலக்கியம் சார்ந்துதான் இருக்கின்றது என்பதை எல்லோரும் உணர வேண்டும்.
கெடா மாநில எழுத்தாளர் இயக்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் பல இளம்-மூத்த எழுத்தாளர்கள் பங்கு கொண்டு வெற்றியடைந்து, இன்றைய தினத்தில் அவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன. முதல் பரிசுக்குரிய வெற்றியாளர் தவிப்புகள் எனும் கதையை எழுதிய திரு.இலட்ச பிரபு அவர்கள். பாடாங் செராயாய் சேர்ந்த தமிழாசிரியர்.
மலேசிய தேசிய பல்கலைகழகம் நடத்திய கவிதை போட்டியில், சி.கமலநாதன் சுழற் கிண்னத்தை வென்றதோடு, உலக அளவில் நடத்தப்பட்ட சுஜாதா நினைவு அறிவியல் புனைக்கதை போட்டியில் ஆசியா-பசிபிக் பிரிவில் சிறந்த சிறுகதைக்கான பரிசை வென்றதையொட்டி சிறந்த 2008-2009 ஆண்டிற்கான சாதனையாளர்-எழுத்தாளர் என்று கௌளரவிக்கப்பட்டு நினைவு கேடயமும் வழங்கப்பட்டது எனக்கு. சால்வையும் மாலையும் இல்லாமல், இந்த வழக்கத்தைத் துறந்த கெடா மாநில எழுத்தாளர் இயக்கத்திற்கு சபாஷ்!
Saturday, April 18, 2009
பனிப்பாதையில் உனது ரத்தச் சுவடு கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்
பகல் பொழுது சாய்ந்து இரவு தொடங்கி விட்டிருந்த சமயம், அவர்கள் அந்த நகர எல்லையை அடைந்த போது, திருமண மோதிரம் அணிந்திருந்த அவளது விரலிலிருந்து இன்னும் இரத்தம் கசிந்து கொண்டிருப்பதை நேநா டாகொண்ட்டே உணர்ந்தாள். முரட்டுத் தோலால் ஆன தனது மும்முனைத் தொப்பியை கடினமான கம்பளிப் போர்வை மறைத்தபடி இருக்க பிரனீஸிலிருந்து அடிக்கும் ஆக்ரோஷ காற்றில் தன் பாதங்களை திடமாய் ஊன்றிக் கொள்ளப் போராடிக் கொண்டு, கார்பைட் விளக்கின் வெளிச்சத்தில், அவர்களது அரசாங்க பாஸ்போர்ட்டுகளை பரிசோதித்தார் அந்த சிவில் பாதுகாவல் அதிகாரி. அந்த இரண்டு பாஸ்போர்ட்டுகளும் முழுமையான ஒழுங்கில் இருந்த போதிலும், அந்தப் புகைப் படங்கள் அவர்களை ஒத்திருக்கின்றனவா என்று நிச்சம் செய்து கொள்ள அந்த விளக்கினை உயரே தூக்கிப் பிடித்தார். நேநா டாகொண்டே கிட்டத்தட்ட ஒரு குழந்தையைப் போல இருந்தாள், மகிழ்ச்சியான ஒரு பறவையின் கண்களுடன், சோகம் கப்பிய ஜனவரி மாதத்தின் மங்கிய ஒளியில் அவளது வெல்லப்பாகு போன்ற சருமம் இன்னும் பளபளப்பாக இருந்தது. அந்த எல்லையோரப் படையின் முழு வருடச் சம்பளத்தையும் கொடுத்தாலும் கூட வாங்க முடியாத மின்க்கின் மென் தோலால் ஆன கோட் கன்னம் வரை அவளை போர்த்தியிருந்தது. அந்தக் காரை ஓட்டிக் கொண்டிருந்த அவள் கணவன், ஓராண்டு இளையவனாக அதற்குரிய அழகுடன், ஒரு பேஸ்பால் தொப்பியுடன், வண்ணக்கோடுகளால் கட்டங்கள் இழைத்த கோட் அணிந்திருந்தான். அவனது மனைவி போலன்றி அவன் உயரமாக, உடல் வலிமையுடனும், அச்சமூட்டும் அடியாள் ஒருவனின் இரும்பு போன்ற இறுகிய தாடையும் கொண்டிருந்தான். ஆனால் எது அவர்கள் இருவரின் அந்தஸ்த்தை சிறப்பாக வெளிப்படுத்தியது என்றால், உயிருள்ள விலங்கு போல மூச்சுவிட்டுக் கொண்டிருப்பதான உட்பகுதி அமைந்த அந்த வெள்ளி நிறக் கார் வளம் குறைந்த எல்லைப் பகுதி வழியே என்றுமே காண முடியாத ஒன்று அது. அந்தப் பின்புற இருக்கை மிகப் புதிய பெட்டிகளாலும், மேலும் இன்னும் திறக்கப்பட்டிராத பல பரிசுப் பொருள் அடங்கிய பெட்டிகளாலும் நிறைந்து வழிந்தது. அவளின் அமைதி குலைத்த கடற்கரை முரடனின் மென்மையான காதலுக்கு அவள் அடிபணியும் முன்னர், நேநா டாகொண்டேவின் வாழ்வில் அடக்க இயலாத, மற்ற அனைத்தையும் விட முக்கியத்துவம் வாய்ந்ததாயிருந்த, அந்த உயர்ஸ்வர சாக்ஸபோனையும் அந்தக் கார் தாங்கியிருந்தது.
முத்திரையிட்ட பாஸ்போர்ட்டுகளை அந்த அதிகாரி திரும்பக் கொடுத்தவுடன், பில்லி சான்ஷெஸ் அவனது மனைவியின் விரலைக் குணப்படுத்த மருந்துக்கடை ஏதாவது தென்படுமா என்று அவரிடம் கேட்டான். அதற்கு அந்த அதிகாரி பிரெஞ்சுப் பகுதியான ‘ஹென்டே’யில்தான் அவர்கள் விசாரிக்க இயலும் என்று காற்றினூடே கத்தியபடி கூறினார். ஆனால் ஹென்டேயில் இருந்த பாதுகாவலர்கள், வெதுவெதுப்பான, நன்றாக ஒளியூட்டப்பட்டிருந்த அவர்களுக்கான பிரத்யேகமான சதுரமான கண்ணாடி எல்லைக் காவல் அறைக்குள், மேஜையில் அமர்ந்தபடி, கையில்லாச் சட்டையுடன் சீட்டு விளையாடிக் கொண்டு, பெரிய கண்ணாடிக் குவளைகளில் இருந்த மதுவில் ரொட்டித் துண்டுகளை முக்கி எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் அப்போது பார்க்க வேண்டியிருந்ததெல்லாம், ஃபிரான்சுக்குள் செல்ல கையசைத்து அனுப்ப வேண்டியிருந்த அந்தக் காரை, அதன் அளவினை, தயாரித்த கம்பெனியை மாத்திரமே. பில்லி சான்ஷெஸ் ஹார்னை பலமுறை அழுத்தினான், ஆனால் அவன் அவர்களை அழைக்கிறான் என்று அந்த காவலர்கள் புரிந்து கொள்ளவில்லை. மேலும், அவர்களில் ஒருவன் ஜன்னலைத் திறந்து, காற்றைவிட அதிக சீற்றத்துடன் அலறினான்
“Merde! Allez-vouz-en!”
காதுகள் வரை மேல்கோட்டால் போர்த்தப்பட்டிருந்த நேநா டாகொண்டே பிறகு காரை விட்டு வெளியே இறங்கி அந்தக் காவலரிடம் சுத்தமான ஃபிரெஞ்சில் மருந்துக்கடை எங்கே உள்ளது என்று கேட்டாள். அவனது வழக்கம் போல வாய் நிறைய ரொட்டியுடன், அது அவன் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை என்றும், அதுவும் இது போன்ற புயல் நேரத்தில் மிகக்குறைந்த பட்சம் கூட இல்லை என்றும் பதலளித்தான் பிறகு ஜன்னலை மூடினான். ஆனால், பிறகு அவன் சற்று கூடுதல் கவனத்துடன், மின்க்கின் இயற்கையான மினுமினுப்பு மிக்க தோலால் முழுவதும் போர்த்தப்பட்டிருந்த அந்தப் பெண்ணை நோக்கினான் அந்த பயங்கர இரவில் காயம் பட்ட தன் விரலை சப்பிக் கொண்டிருந்தவளை ஏதோ ஒரு மந்திரக் காட்சியாக அவன் நினைத்திருக்க வேண்டும் காரணம் அவனுடைய மனநிலை உடனடியாக மாறியது. மிகவும் அண்மையிலிருக்கும் நகரம் ‘பியாரிட்ஸ்’ என்றும், ஆனால் அந்த மத்திய குளிர்காலத்தில், ஓநாய்களைப் போல ஊளையிடும் அந்தக் காற்றில், சற்றுத் தொலைவிலுள்ள ‘பேயோன்’ பிரதேசம் செல்லும்வரை, திறந்திருக்கும் ஒரு மருந்துக் கடையையும் அவர்களால் கண்டு பிடிக்க இயலாது என்று விளக்கினான்.
‘‘மிகவும் மோசமான நிலையா?”, என்று கேட்டான்.
‘‘அது ஒன்றுமில்லை,” நேநா டாகொண்டே புன்னகைத்துக் கொண்டே சொன்னாள். நுனியில், ஏறத்தாழ கண்ணுக்குப் புலப்படாத சிறிய ரோஜா முள் கீறலுடனான, வைர மோதிரம் அணிந்திருந்த விரலை அவனிடம் காண்பித்தாள். ‘‘அது வெறும் முள்”.
அவர்கள் ‘பேயோனை’ அடையும் முன்னரே பனிமழை பெய்யத் தொடங்கியது மறுபடியும். ஏழு மணியாகவில்லை எனினும் தெருக்கள் நடமாட்டமின்றி காட்சியளித்தன. புயலின் சீற்றத்தையொட்டி வீடுகள் மூடப்பட்டிருந்தன. பல மூலை முடுக்குகள் சென்று திரும்பிய பிறகும் ஒரு மருந்துக்கடையும் தென்படாது போகவே, அவர்கள் தொடர்ந்து செல்ல முடிவு செய்தனர். இந்த முடிவு பில்லி சான்ஷெஸை சந்தோஷப்படுத்தியது. கார்களுக்கென, அபூர்வமான, திருப்தியுறாத ஒரு ஆவல் கொண்டிருந்தான் அவன், மேலும் அவனுக்கு பல குற்றவுணர்வுகள் கொண்ட ஒரு அப்பா இருந்தார், மேலும் அவனது இஷ்டத்தையெல்லாம் திருப்திப்படுத்த அவரிடம் வசதியிருந்தது திருமணப் பரிசாக அவனுக்கு அளிக்கப்பட்டிருந்த, மேல் பகுதியை மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க பென்ட்லி வகைக் காரை அவன் இதுவரை ஓட்டியிருக்கவில்லை.
ஸ்டீயரிங் பிடிப்பதனால் உண்டான அவனது அதீதப் பேரானந்தத்தின் காரணமாக எவ்வளவு தொலைவு ஓட்டினானோ, அதற்கேற்ப குறைந்த பட்சமே அசதியடைந்தான். அந்த இரவே ‘போர்டோ’வை அடைந்து விட விரும்பினான். ‘ஸ்ப்லென்டிட் ஹோட்டலில்’ மணப் பெண்ணுக்கான தொடர் அறைகளை அவர்கள் முன்பதிவு செய்திருந்தனர். மேலும், மாறி மாறி வீசும் பலத்த காற்றும், பனியுடனான ஆகாயமும் அவனைப் பிடித்து நிறுத்திவிட முடியாது. இதற்கு மாறாக, மேட்ரிட்லிருந்து தொடங்கிய அந்த நீண்ட நெடுஞ்சாலையின் கடைசி நீட்சியில்–குறிப்பாக ஆலங்கட்டிப் புயல் அடித்துத் தாக்கும், மலை ஆடுகளுக்கு ஏற்ற செங்குத்தான பாறையின் விளிம்புப் பகுதியில்– நேநா டாகொண்டே உற்சாகம் தீர்ந்து விட்டிருந்தாள். எனவே பேயோனுக்குப் பிறகு அவள் ஒரு கைக்குட்டையை மோதிர விரலில் சுற்றிக் கொண்டாள் அழுத்தமாக, அமுக்கி, இன்னும் வழிந்து கொண்டிருந்த ரத்தத்தை நிறுத்திவிட. பிறகு ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கினாள். நடு இரவு நெருங்கும் வரை, பனி அடித்து முடிந்திருந்ததையும், சடாரென ஊசி இலைக் காட்டில் காற்று நின்று விட்டதையும், மேய்ச்சல் நிலத்தில் உறைந்த நட்சத்திரங்கள் ஆகாயத்தை நிறைக்கும் சமயத்தை எட்டியதையும் பில்லி சான்ஷெஸ் கவனிக்கவில்லை. ‘போர்டோ’வின் தூங்கி வழியும் விளக்குகளைக் கடந்து விட்டிருந்தான். ஆனால் நெடுஞ்சாலையின் வழியே பெட்ரோல் நிலையம் ஒன்றில் எரிபொருள் கலத்தை நிரப்பிக் கொள்ள மட்டும் நிறுத்தினான். மேலும், பாரீஸ் வரை நிறுத்தமின்றி வண்டி ஓட்டுவதற்கான தெம்புடனிருந்தான் அவன் போலவே உணர்ந்தாளா என்று அவளிடம் கேட்டுக் கொள்ளவில்லை அவன். அவனது பெரிய 25000 பவுண்ட் ஸடெர்லிங் பெறுமானமுள்ள பொம்மையினால் அவன் அவ்வளவு களிப்படைந்திருந்ததால்–அவனருகில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அவள்–இரத்தம் தோய்ந்திருந்த மோதிர விரலின் கட்டு அவளது வளர்பிராயத்துக் கனவுகளை முதல் முறையாக நிச்சயமின்மையின் மின்னல் தீற்றல்கள் துளைக்க–அந்த ஜீவனும் அப்படியே உணர்ந்தாளா என்று அவன் தனக்குத்தானே கேட்டுக் கொள்ளவில்லை.
மூன்று தினங்களுக்கு முன்பாகத்தான் அவர்கள் திருமணம் செய்து கொண்டிருந்தனர், பத்தாயிரம் கிலோமீட்டர் தொலைவிலிருந்த, ‘கார்த்தஜீனா த இன்டியாஸ்’ இல்–அவன் பெற்றோர்கள் வியப்படையவும், அவளது மதிமயக்கம் நீங்கவும், மற்றும் ஆர்ச் பிஷப்பின் தனிப்பட்ட ஆசிர்வாதத்துடனும். அந்தக் காதலின் உண்மையான அஸ்திவாரத்தையோ அல்லது முன்கூட்டியே கண்டறிந்திராத தோற்றுவாயையோ இவர்கள் இருவரைத் தவிர வேறு யாரும் புரிந்து கொள்ளவில்லை. அந்தத் திருமணத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே அது துவங்கியிருந்தது, கடலோரத்தில் ஒரு ஞாயிறன்று பில்லி சான்ஷெஸின் குழுவினர் மார்பெல்லா கடற்கரையில் பெண்களின் உடையணியும் அறைகளை புயல் போல தாக்கிய தருணத்தின் போது. நீனா அப்போதுதான் பதினெட்டு வயது நிரம்பியிருந்தாள் ஸ்விட்சர்லாந்தில் உள்ள ‘செயின்ட்-பிளேய்ஸ்’ என்னுமிடத்தில் ‘ஷேட்டல் லெனி’ பள்ளியிலிருந்து வந்திருந்தாள் நான்கு மொழிகளில் சீர் அழுத்தமற்ற உச்சரிப்புடன் பேசிக் கொண்டும், உயர்ஸ்வர சாக்ஸபோனில் தேர்ச்சி பெற்ற அறிவுடனும் மேலும் இது, அவள் திரும்பி வந்ததிலிருந்து, அந்தக் கடற்கரைக்கு அவளது முதல் ஞாயிறு வருகை. சருமம் தெரிய உடைகள் அனைத்தையும் உரிந்து விட்டிருந்தாள் அவள் பக்கத்து உடைமாற்றும் அறைகளிலிருந்து கடற் கொள்ளையரின் கூக்குரலும் பீதியுற்ற ஜனங்களின் நெருக்கடி சந்தடியும் கேட்கத் தொடங்கிய பொழுது அவளது நீச்சல் உடையை அணியப் போன நேரத்தில், என்ன நடந்து கொண்டிருந்தது என்பதை அவள் புரிந்து கொள்ளவில்லை–அவள் கதவுத் தாழ்ப்பாள் உடைந்து நொறுங்கும் வரை கற்பனைக்கெட்டக்கூடிய மிக அழகான கொள்ளைக்காரன் அவள் முன் நிற்கும் வரை. போலி சிறுத்தைப்புலித் தோலால் ஆன கயிற்று உள்ளாடை ஒன்றைத் தவிர அவன் வேறெதுவும் அணிந்திருக்கவில்லை. மற்றும் அவன் சமுத்திரத்திற்கருகில் வாழ்பவர்களின் சமாதானமான, நெகிழ்தன்மை மிக்க தேகம் கொண்டிருந்தான். வலது மணிக்கட்டில் உலோகத்தாலான ரோமானிய வாட்போர் சண்டியனின் உருவம் பொறித்த காப்பு அணிந்திருந்தான். வலது முஷ்டியைச் சுற்றி ஒரு இரும்புச் சங்கிலியைப் பிணைத்திருந்தான் அதை அவன் ஒரு அபாயகரமான ஆயுதமாகப் பிரயோகப்படுத்தினான். அவன் கழுத்தைச் சுற்றி எந்த புனிதனின் உருவமும் பொறிக்கப்படாத ஒரு பதக்கம் தொங்கியது –அவன் இதயத்தின் துரித ஓட்டத்தில் மௌனமாய் அதுவும் துடித்தது. அவர்கள் இருவரும் ஒரே தொடக்கப்பள்ளிக்கு சென்றிருந்தனர், அதே பிறந்தநாள் விருந்துகளில் பல ‘பினாட்டாக்களை’(லத்தீன் அமெரிக்க திருவிழாக்களில் சிறு பரிசுப் பொருள்கள் மற்றும் இனிப்புகள் கொண்ட அலங்கரிக்கப்பட்ட, மேற்கூரையிலிருந்து தொங்கவிடப்படும் கலங்கள் –அவற்றை கோலால் உடைத்து பரிசுகளைப் பெற வேண்டும்) உடைத்திருந்தனர், ஏனெனில், குடியேற்ற நாட்களிலிருந்து அந்த நகரத்தின் தலை எழுத்தை தங்களது இஷ்டம்போல அமைத்துக் கொண்டிருந்த, குறிப்பிட்ட மாகாணத்தைச் சார்ந்த குடும்பத்திலிருந்து வந்திருந்தனர் அந்த இருவருமே. ஆனால் அத்தனை வருடங்களாக அவர்கள் பார்த்துக் கொள்ளாததால் ஆரம்பத்தில் அவர்கள் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. நேநா டெகொண்டே அசைவின்றி அவளது அதீதமான நிர்வாணத்தை மறைத்துக் கொள்ள எதுவும் செய்யாது, நின்று கொண்டேயிருந்தாள். பிறகு பில்லி சான்ஷெஸ் சிறுபிள்ளைத்தனமான சடங்கை நடத்தினான் தன் சிறுத்தைப்புலித்தோல் உள்ளாடையை கீழிறக்கினான். பிறகு மரியாதைக்குரிய, விரைப்பான அவனது ஆண்மையைக் காட்டினான். அவள் நேராக அதை நோக்கினாள், வியப்புக்கான அறிகுறிகளின்றி.
‘‘இன்னும் பெரிய, விரைப்பானவை நான் பார்த்திருக்கிறேன்” என்றாள் அவள், அவளது பெரும் பீதியை அடக்கிக் கொண்டு. ‘‘ஆகவே நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்பதைப் பற்றி மறுபடியும் யோசி, ஏனெனில் என்னிடம் நீ ஒரு கறுப்பனை விடச் சிறப்பாக இயங்க வேண்டியிருக்கும்”.
உண்மையாய் நேநா டாகொண்டே ஒரு கன்னி மட்டுமின்றி, அந்த நிமிடம் வரை நிர்வாணமாக ஒரு ஆண்மகனையும் பார்த்திருக்கவில்லை. எனினும் அவளது சவால் பயனுள்ளதாயிருந்தது. என்ன செய்ய வேண்டும் என்று பில்லி சான்ஷெஸால் எண்ணமுடிந்ததெல்லாம் அவனது சங்கிலி சுற்றப்பட்டிருந்த முஷ்டியை சுவர் மேல் மோதி, பிறகு கையை முறித்துக் கொண்டதும்தான். மருத்துவமனைக்கு தனது காரில் அவனைக் கூட்டிச் சென்றாள். பிறகு அவனுக்கு காயம் ஆறி உடல் தேறும் காலத்தைப் பொறுத்துக் கொள்ள உதவி செய்தாள். அதன்பின், இறுதியில் எப்படி சரியான முறையில் காதல் செய்வது என்பதை அவர்கள் சேர்ந்தே கற்றுக் கொண்டனர். கடினமான ஜ÷ன் மாத பகல் நேரங்களை நேநா டாகொண்டேவின் புகழ் பெற்ற மூதாதையர் ஆறு தலைமுறையாக எந்த இடத்தில் காலமாகியிருந்தனரோ அந்த வீட்டின் உட்புறமாக இருந்த மாடியில் கழித்தனர். ஹேம்மக்கில் படுத்தவாறு, விட்டு விடுதலைப்படாத மழுங்கடிக்கப்பட்ட உணர்வோடு அவன் அவளைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தான். அவள் சாக்ஸபோனில் பிரபலமான பாடல்கள் இசைத்தாள். அந்த தரைக்கும் கூரைக்குமாக வியாபித்த எண்ணிலடங்கா ஜன்னல்கள் கொண்டதும் மேலும் ‘லா மாங்கா’ மாவட்டத்திலேயே மிகப் பெரியதும், புராதனமானதுமான அந்தக் கட்டிடம் சந்தேகத்திற்கிடமின்றி மிகவும் அசிங்கமானது. ஆனால் எங்கிருந்து நேநா டாகொண்டே இசைத்தாளோ, கட்டம் போட்ட தரை ஓடுகள் பதித்த அந்த மேல் மாடி நான்கு மணி வெய்யிலில் ஒரு பாலைவனச் சோலையாய் இருந்தது மேலும் அது வீட்டோடு சேர்ந்த மாமரம் மற்றும் வாழை மரங்களின் தாராளமான நிழல்களோடு கூடிய முற்றத்தை நோக்கித் திறந்து கொண்டது. அதனடியில் ஒரு பெயரற்ற கல்லறைக்கல்லுடன் ஒரு கல்லறை இருந்தது அந்த வீடு மற்றும் அந்தக் குடும்ப நினைவுகளை விடவும் மிகப் பழமையானதாக. இசைபற்றி எதுவும் அறிந்திராதவர்கள் கூட அப்படிப்பட்ட உன்னதமான ஒரு வீட்டில் அந்த சாக்ஸபோன் கால முரண்மிக்கது என்றே நினைத்தார்கள். ‘‘அது ஒரு கப்பல் போல சத்தமிடுகிறது”, முதன் முறையாக அதை கேட்ட போது நேநா டாகொண்டேவின் பாட்டி கூறினாள். சௌகரியத்தின் பொருட்டு அவளது குட்டைப் பாவாடை தொடை சுற்றி உயர்த்தியபடி தொடைகளை அகற்றிக் கொண்டு இசைக்கு ஒவ்வாத ஒரு காமத்துவ உணர்வுடன் அல்லாது வேறுமுறையில் அதை அவளை வாசிக்கச் செய்ய நேநா டாகொண்டேவின் அம்மா பயனின்றி முயற்சி செய்தாள். ‘‘நீ எந்த இசைக்கருவி வாசிக்கிறாய் என்பதைப் பற்றி எனக்கு அக்கறையில்லை”, அவள் கூறுவதுண்டு, ‘‘உன் கால்களை அகட்டாமல் நீ வாசிக்கும் வரை.”
ஆனால் நேநா டாகொண்டேவின் அந்தக் கப்பல் பிரிவுபசாரப் பாடல்களும் மற்றும் அந்த காதல் விருந்தும்தான் பில்லி சான்ஷெஸை சுற்றியிருந்த அந்தக் கோபம் மிகுந்த வெளிப்புற ஓட்டினை உடைத்துக் கொண்டு வெளிவர அனுமதித்தது. பெரும் வெற்றியுடன் அவன் தூக்கிப் பிடித்திருந்த படிப்பறிவற்ற காட்டுமிராண்டி என்று பெயருக்கு அடியில்–இரண்டு புகழ் பெற்ற குடும்பங்களின் பெயர்களின் சங்கமத்தில் –பயந்து போன மென்மையான ஒரு அனாதையைக் கண்டு பிடித்தாள் அவள். கை எலும்புகள் கூடிக் கொண்டு வருகையில் அவளும் பில்லி சான்ஷெஸும் ஒருவரையொருவர் அறிந்து கொள்ள அவ்வளவு நன்றாகக் கற்றனர். தங்கு தடையின்றி ஏற்பட்ட காதலின் ஓட்டத்தில், ஒரு மழைக்கால பகல் நேரத்தில் அவர்கள் அந்த வீட்டில் தனிமையில் இருந்த சமயம் அவள் அவனை அவளது கன்னிப்படுக்கைக்கு இட்டுச் சென்றபோது அவனே கூட ஆச்சரியப்பட்டான். ஒவ்வொரு நாளும் அதே நேரத்தில் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக, அந்த வரலாற்றுப் புகழ் பெற்ற படுக்கையில், சொர்க்கத்தை அவர்களுக்கு முன்பே சென்றடைந்து விட்ட திருப்தியுறாத பாட்டிகள் மற்றும் சிவில் போர்வீரர்களின் மார்பளவு சித்திரங்களின் வியப்பான, ஊன்றிய பார்வைக்கடியில் அவர்கள் களித்துக் கூத்தாடினர்– உணர்ச்சியுடனும், நிர்வாணமாயும். வளைகுடாவிலிருந்து வரும் கப்பல்களிலிருந்து வெளியேறி நீரில் மிதந்து செல்லும் கழிவுக் காற்றினைச் சுவாசித்தபடி, அதன் மல துர்நாற்றம், மற்றும் மௌனத்தில் வீட்டு முற்றத்தினின்று வரும் தினப்படி சப்தங்களுடன், சாக்ஸபோன் கேட்டுக் கொண்டு, வாழை மரத்தடி தவளையின் அந்த ஒற்றைச் ஸ்வரம், எவரின் கல்லறை மீதும் வீழ்ந்திடாத அந்த நீர்த்துளி, வாழ்வின் இயல்பான அசைவுகளில் கற்றுக் கொள்ள இதற்கு முன்னர் அவர்கள் பெற்றிடாத சந்தர்ப்பங்கள் என, காதலின் நடுவே, சிறிய இடைவேளைகளில் கூட அவர்கள் ஜன்னல்களை திறந்து வைத்துக் கொண்டு நிர்வாணமாகவே இருந்தனர்.
அவளுடைய பெற்றோர் வீடு திரும்பிய சமயம் நேநா டாகொண்டேவும் பில்லி சான்ஷெஸும் காதலில் எந்த அளவுக்கு முன்னேறியிருந்தார்கள் என்றால் இந்த உலகமே வேறு எதற்கும் தேவையான அளவு பெரிதாக இல்லாமல் போயிருந்தது அவர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் காதல் செய்தனர், ஒவ்வொரு முறையும் அதை மறுகண்டுபிடிப்பு செய்ய முயன்றபடி. பில்லி சான்ஷெஸின் தந்தை தன் குற்ற உணர்வுகளை அமைதிப்படுத்த அவனுக்குத் தந்திருந்த அந்த ஸ்போர்ட்ஸ் காரில்தான் முதலில் அவர்கள் போராடினார்கள் பிறகு, கார்கள் அவர்களுக்கு மிகவும் சுலபமாக ஆனவுடன், இரவில், எங்கே விதி அவர்களை முதன் முதலில் ஒன்றிணைத்ததோ அந்த வெறிச்சோடிப் போயிருந்த மார்பெல்லா உடைமாற்றும் அறைக்குள் அவர்கள் செல்வதுண்டு. நவம்பர் மாத களியாட்ட விழாக்களின் போது, மாறு வேட உடையில், ஒரு சில மாதங்களுக்கு முன்னர் வரை, பில்லி சான்ஷெஸையும் அவனது ஆயுதச் சங்கிலி கையாளும் குழுவினரையும் பொறுத்துக் கொள்ளக் கடமைப்பட்டிருந்த தலைமை தாதிகளின் பாதுகாப்பின் கீழ், பழைய அடிமை மாவட்டமான ஜெஸ்தமனியில் இருந்த வாடகை அறைகளுக்குச் செல்வதுண்டு. அவன் ஒரு கறுப்பனைப்போல இயங்க வேண்டியிருக்கும் என்று அவள் உணர்த்தியதை, அவளது மூர்க்கம் தணிந்த கொள்ளையன் கடைசியாக புரிந்து கொள்ளும் வரை, ஒரு சமயம் சாக்ஸபோன் மீது அவள் வைத்திருந்த வெறிமிகுந்த ஈடுபாடு போலவே, நேநா டாகொண்டே தன்னை ஒரு ரகசியக் காதலுக்குத் தந்திருந்தாள். திறமையுடனும் அதே உற்சாகத்துடனும் அவளுக்கு எப்போதும் அவன் காதலைத் திரும்ப வழங்கிக் கொண்டிருந்தான். அவர்கள் திருமணம் முடிந்தவுடன், ஒருவருக்கொருவர் செய்து கொண்ட சபதத்தின்படி அட்லாண்டிக்கைக் கடந்து செல்லும்போது காதல் புரிவதை நிறைவேற்றினார்கள். அந்த விமான பணிப்பெண்கள் உறங்கிய பொழுது விமான கழிப்பறைக்குள் இருவரும் தங்களைத் திணித்துக் கொண்டு, களிப்பை விட சிரிப்பினால் அதிகம் ஆட்கொள்ளப்பட்டனர். அப்பொழுதுôன் அவர்கள் அறிந்தனர் திருமணம் முடிந்து இருபத்து நான்கு மணிநேரம் கழித்து நேநா டாகொண்டே இரண்டு மாதம் கர்ப்பமாகயிருக்கிறாள் என்பதை.
ஆக, அவர்கள் மாட்ரிட் நகரை அடைந்த போது, திகட்டிப் போன காதலர்களாயிருப்பதிலிருந்து வெகு தொலைவிலும், ஆனால் புதுமணத் தம்பதிகள் போல நடந்து கொள்வதற்கான போதுமான உசிதங்களும் கொண்டிருந்தனர். அவர்களின் பெற்றோர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். விமானத்திலிருந்து இறங்குவதற்கு முன், அதிகாரப் படிநிலை நிர்வாக மரபு அதிகாரி ஒருவர் அவளுடைய பெற்றோர் அவளுக்களித்த திருமணப் பரிசான, ஓரங்களில் கறுப்பு நிறத்தில் பளிச்சென்று அலங்கரிக்கப்பட்ட வெண்ணிற மின்க் கோட்டை நேநா டாகொண்டேவிடம் கொடுக்க முதல் வகுப்பு அறைக்கு வந்தார். விமான நிலையத்தில் அவனுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் காத்துக் கொண்டிருந்த காரின், அடையாளம் குறிக்கப்படாத சாவிகளை பில்லி சான்ஷெஸுக்கு தந்தார். மேலும் அந்தக் குளிர் காலத்தில் ஃபேஷனின் உச்சத்திலிருந்த ‘ஷெர்லிங்’(மயிர் கத்தரிக்கப்பட்ட, ஒரு வருடத்திற்குள்ளான குட்டி ஆட்டின் பதனிடப்பட்ட தோல்) மேல்கோட்டு ஒன்றையும் கொடுத்தார்.
நிர்வாக வரவேற்பறையில் அவர்களது வெளி உறவுத்துறை குழு அவர்களை வரவேற்றது. நேநா டாகொண்டேவுக்காக காத்துக் கொண்டிருந்த அந்த தூதரும் அவரது மனைவியும் இரண்டு குடும்பங்களின் நண்பர்கள் மட்டுமல்லாது, நேநா டாகொண்டே பிறந்தபோது பிரசவம் பார்த்த மருத்துவரும் கூட. அவர் ரோஜாக்கள் நிறைந்த பூங்கொத்துடன் அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்–அவை அவ்வளவு புத்தம் புதியதாயும் ஒளிர்வுமிக்கதாயும் இருந்ததால் பனித்துளிகள் கூட செயற்கையானவையோ என்று தோன்றின. பொய் முத்தங்களுடன் அவர்கள் இருவருக்கும் அவள் வாழ்த்து தெரிவித்து, பிறகு கொஞ்சம் உரிய காலத்தை முந்திவிட்ட மணப்பெண் என்ற அவளது அந்தஸ்த்து பற்றி அசௌகரியமான உணர்வுடன் அந்த ரோஜாக்களை வாங்கிக் கொண்டாள். அவற்றை அவள் எடுத்துக் கொண்ட போது விரல் ஒரு முள்ளின் மேல் பட்டுக் குத்தியது. ஆனால் அந்த அசம்பாவிதத்தை அவள் ஒரு வசீகர சாதுர்யத்துடன் கையாண்டாள்.
‘‘நான் வேண்டுமென்றுதான் அப்படிச் செய்தேன்” அவள் கூறினாள், ‘‘அப்போதுதான் நீங்கள் என் மோதிரத்தைப் பார்ப்பீர்கள்.”
மெய்யாகவே அந்த வெளி உறவுத்துறை குழு முழுவதுமே அந்த மோதிரத்தின் அழகைக் கண்டு வியந்தது–அது கிட்டத்தட்ட ஒரு வாழ்நாள் வருவாயையே விலையாகக் கொண்டிருக்க வேண்டும்–அந்த வைரங்களின் தரம் காரணமாகவன்றி நன்கு பேணப்பட்டிருந்த அதன் புராதனத்தன்மைக்காக. ஆனால் எவருமே அவள் விரலில் ரத்தம் கசியத் தொடங்கியதைக் கவனிக்கவில்லை. அவர்கள் அனைவரும் அந்த புதிய காரின் மேல் தங்கள் கவனத்தை திருப்பினர். அந்த அரசு தூதுவரின் வேடிக்கையான திட்டத்தின்படி, அதை செலோஃபன் காகிதத்தில் சுற்றி, பிறகு அதை ஒரு மிகப் பெரிய தங்க ரிப்பன் கொண்டு கட்டி விட்டிருந்தார். பில்லி சான்ஷெஸ் அவரது புனைவுத் திறனை கவனிக்கவே இல்லை. அவன் அந்தக் காரைக் காண மிகவும் ஆவலாக இருந்ததால் அதைச் சுற்றியிருந்த காகிதத்தை உடனடியாகக் கிழித்தெறிந்து விட்டு மூச்சற்று நின்றான். மேற்புரம் மாற்றி அமைத்துக் கொள்ளும்படியான வசதியுள்ள, அசலான தோல் இருக்கை உறைகளுடன் கூடிய அந்த வருடத்திய பென்ட்லி கன்வெர்ட்டிபிள் கார் ஆகும் அது. ஆகாயம் சாம்பல் போர்வை போல காட்சியளித்தது. துளைத்தெடுக்கும் குளிர் காற்று வீசிய பொழுது வெளியே இருப்பதற்கான உகந்த நேரம் அதுவாக இல்லாத போதிலும், பில்லி சான்ஷெஸ் குளிர் பற்றிய சிந்தனை ஏதுமில்லாதிருந்தான். வெளியே இருந்த வண்டி நிறுத்தத்திலேயே அந்த அரசுக் குழுவை நிறுத்தி வைத்திருந்தான், மரியாதை நிமித்தம் அவர்கள் விறைக்கும் குளிரில் இருப்பதை அறியாமல், அந்தக் காரின் மிகச் சிறிய நுணுக்கத்தையும் விடாமல் பார்த்து முடிக்கும் வரை. பிறகு அந்தத் தூதுவர் அவனருகில் அமர்ந்தார், அவர்களின் அதிகாரபூர்வமான தங்குமிடத்திற்கு வழிகாட்டியபடி. அங்கு மதிய உணவு தயாரிக்கப்பட்டிருந்தது. வழியில், அந்த நகரத்தின் மிகவும் சிறப்பு வாய்ந்த பல காட்சிகளைச் சுட்டிக் காட்டினார், ஆனால் பில்லி சான்ஷெஸ் அந்தக் காரின் மந்திரத்தில் மாத்திரமே ஈர்க்கப்பட்டவன் போலிருந்தான்.
அவனுடைய நாட்டுக்கு வெளியே அவன் பிரயாணம் செய்வது அதுவே முதல் முறையாகும். ஞானஸ்நானம் பெறப்படாத குழந்தைகள் சுவர்க்கத்திற்கும் நரகத்திற்குமாக அலைக்கழிக்கப் படுவதைப் போல, மறதியின் அசட்டையில் இலக்கின்றி மிதக்கும் வரை, எல்லாத்தனியார் மற்றும் பொதுப்பள்ளிகள் வாயிலாக திரும்பத் திரும்ப ஒரே வகுப்பில் பயிற்சி பெற்றான். அவனுடைய இடத்தைப் போலன்றி அந்த நகரில் அவனுக்குத் தென்பட்ட ஆரம்பக் காட்சிகள்–நடுப்பகல் பொழுதில் எரிய விடப்பட்டிருந்த விளக்குகளுடனான சாம்பல் நிற வீடுகளின் வரிசைகள், இலைகளற்ற மரங்கள், தூரத்து சமுத்திரம் –இவை எல்லாமே அவனது இதயத்தின் ஓரத்தில் அவன் கட்டுப்படுத்தி வைக்க யத்தனித்த பாழாய்ப்போய் விட்டதான உணர்வை அதிகரித்தன. ஆனால் சீக்கிரமே அவை பற்றிய பிரக்ஞை இல்லாமல் அவன் மறத்தலின் முதல் வலையில் வீழ்ந்தான். அந்தப் பருவ காலத்தின் மிக ஆரம்பத்திய, ஒரு தீடீர் மௌனப் புயல் தலைக்கு மேல் வெடித்திருந்தது. மதிய உணவிற்குப் பின் அந்த அரசு தூதரின் வீட்டிலிருந்து ஃபிரான்சு நோக்கிய அவர்கள் பயணத்தை தொடங்கிய பொழுது, அந்த நகரம் ஒளிரும் கெட்டிப் பனியால் போர்த்தப்பட்டிருப்பதைக் கவனித்தனர். அப்பொழுது பில்லி சான்ஷெஸ் அந்தக் காரை மறந்தான். மற்ற ஒவ்வொருவரும் கவனித்துக் கொண்டிருக்க, அவன் சந்தோஷ மிகுதியில் கூச்சலிட்டான். முஷ்டி மடங்கிய கை நிறைந்த பனிக்கட்டியை தன் தலைக்கு மேலே வீசி எறிந்து, அந்தத் தெருவின் நடுவே தான் அணிந்திருந்த புதிய கோட்டுடன் உருண்டான்.
அந்தப் புயலுக்குப் பின்னர் ஒளி ஊடுருவித் தெரியும்படியாக மாறிய ஒரு பகற் பொழுதில், அவர்கள் மாட்ரிட் நகரை விட்டுக் கிளம்பும் வரையில் நேநா டாகொண்டே தனது விரலில் இரத்தம் கசிந்து கொண்டிருந்ததை உணரவில்லை. அலுவலக நிமித்த மதிய உணவுகளின் போது சாக்ஸபோனில் அரசாங்க விருந்துகளுக்குப் பிறகு இத்தாலிய இசை நாடக பாடல்களைப் பாட விழையும் அந்த அரசு தூதுவரின் மனைவியுடன் சென்று சாக்ஸபோன் வாசிக்கும் போது அவள் விரல் சிரமம் கொடுத்திருக்கவில்லை என்பதால் இது அவளை ஆச்சரியப்படுத்தியது. பிறகு, எல்லைப் பகுதிக்குச் செல்லும் குறுக்குப் பாதைகளை கணவனிடம் சொல்லிக் கொண்டிருந்த பொழுது, அவள் தன் போதமின்றி ஒவ்வொருமுறை ரத்தம் கசிந்த போதும் அந்த விரலைச் சப்பினாள், மற்றும் அவர்கள் ‘பிர்ரனீஸ்’ பகுதியை அடைந்த பொழுதுதான் ஒரு மருந்துக்கடையைத் தேட வேண்டியதை யோசித்தாள். பிறகு அவள் கடந்த சில நாட்களின் அதிகப் படியாய் தங்கிப்போன கனவுகளுக்குள் ஆழ்ந்து மூழ்கிப் போனாள். திடுக்கிட்டு, கார் தண்ணீரின் ஊடாகச் செல்வதான ஒரு அச்சுறுத்தும் கனவுப்பீதியின் மனப்பதிவில் கண்விழித்த சமயம், விரலைச் சுற்றியிருந்த கைக்குட்டையின் ஞாபகம் அவளுக்கு வந்தபோது நீண்ட நேரமாகியிருந்தது. காரின் டேஷ்போர்டில் இருந்த ஒளியூட்டப்பட்டிருந்த கடிகாரத்தை அவள் பார்த்த போது மணி மூன்று ஆகியிருந்தது. மனக்கணக்குப் போட்டவள் பிறகுதான் ‘போர்டோ’வையும் அது போல, ‘லாய்யர்’ நதியின் நீண்ட வெள்ளப் பெருக்கு தடுப்பு மதிலை ஒட்டி சென்று கொண்டிருந்ததையும், ‘அங்கோலேம்’þஐயும் ‘பாய்ட்டியர்ஸ்’ ஐயும் கடந்து விட்டிருந்ததை உணர்ந்தாள்–மூடுபனி வழியே வடிந்து இறங்கியது நிலா ஒளி, அந்த கோட்டைகளின் நிழல் வடிவங்கள் பைன் மரங்களின் ஊடாக ஏதோ மாயக்கதைகளில் வருவது போன்ற தோற்றமளித்தன. அந்தப் பிரதேசத்தை மனப்பாடமாக அறிந்திருந்த நேநா டாகொண்டே பாரீசிலிருந்து மூன்று மணி நேரத் தொலைவில் இருக்கிறோம் என்று கணித்தாள். மேலும் பில்லி சான்ஷெஸ் அசந்துவிடாமல் இன்னும் ஸ்டியரிங்கிலேயே இருந்தான்.
‘‘நீ ஒரு முரட்டு ஆசாமி” அவள் கூறினாள். ‘‘நீ பதினோரு மணி நேரமாக கார் ஓட்டிக் கொண்டிருக்கிறாய், மேலும் நீ எதுவும் சாப்பிடவில்லை.”
அந்தப் புதுக்காரின் போதை அவனை செலுத்திக் கொண்டிருந்தது. விமானத்திலும் அவன் அதிகம் உறங்கியிருக்கவில்லை. ஆனால் விடிவதற்குள் பாரீஸ் நகரை அடையத் தேவையான கூர்ந்த விழிப்புடனும் தேவையான தெம்புடனும் இருந்தான். ‘‘அந்த தூதரக மதிய உணவு இன்னும் என் வயிறு நிரம்ப இருக்கிறது”, என்றான் அவன். பிறகு மேலோட்டமான தர்க்கம் ஏதுமின்றி தெளிவாகக் கூறினான், ‘‘அத்தனைக்கும் மேலே, கார்த்தஜீனாவில் அவர்கள் இப்பொழுதுதான் திரைப்படம் முடிந்து செல்கிறார்கள். பத்து மணிக்குப் பக்கமாகத்தான் இருக்கும்.”
என்றாலும் கூட அவன் ஸ்டியரிங்கிலேயே உறங்கிவிடுவானோ என்று நேநா டாகொண்டேவுக்கு பயமாயிருந்தது. மாட்டிரிடில் அவர்கள் பெற்றுக்கொண்ட பல பரிசுப் பொருட்களில் ஒன்றைப் பிரித்தாள் அவள். பிறகு, இனிப்பூட்டி பதனம் செய்யப்பட்ட ஆரஞ்சு ஒன்றை அவன் வாய்க்குள் வைக்க முயன்றாள். ஆனால் அவன் திரும்பிக் கொண்டான்.
‘‘உண்மையான ஆண்கள் இனிப்பு சாப்பிடுவதில்லை” என்றான் அவன்.
ஆர்லியன்ஸுக்கு சற்று முன்னதாகவே அந்த மூடு பனி விலகியது. பனிபடர்ந்த வயல் வெளிகளை மிகப் பெரிய சந்திரன் ஒளியூட்டியது. ஆனால் போக்கு வரத்து மிகவும் சிக்கலாக ஆகியது–காரணம் பாரீஸுக்கு சென்று கொண்டிருக்கும் உற்பத்திப் பொருட்களை ஏற்றிச் செல்லும் எல்லா பெரிய ட்ரக்குகளும், ஒயின் ஏற்றிச்செல்லும் வண்டிகளும் அந்த நெடுஞ்சாலையில் இணைந்தன. நேநா டா கொண்டே காரோட்டுவதில் அவள் கணவனுக்கு உதவி செய்ய விரும்பினாள் என்றாலும் அதை குறிப்பால் உணர்த்தி விடக் கூட தைரியமின்றி இருந்தாள் முதல் முறையாக அவர்கள் இருவருமாக வெளியே சென்றிருந்த சமயம் ஒரு மனைவி காரோட்ட கணவன் பயணம் செய்வது போல அவமானப்படுத்தக் கூடியது வேறு எதுவும் இல்லை என்று அவன் அவளிடம் தெரிவித்திருந்தான். ஐந்து மணிநேர ஆழ்ந்த அமைதியான உறக்கத்திற்குப் பின்னர் அவள் மனம் தெளிவாகியிருந்தது. மேலும், சிறிய வயதினளாக இருந்ததிலிருந்தே அவள் பெற்றோருடன் எண்ணற்ற முறை செய்த பயணங்களால் அவள் அறிந்திருந்த பிரெஞ்சு மாகாணத்தில் அந்த குறிப்பிட்ட உணவகத்தில் கூட நிற்காமல் வந்தது குறித்து சந்தோஷப்பட்டாள். ‘‘இதைப் போல அழகான நாட்டுப் புறம் இந்த உலகில் வேறு எங்கேயும் கிடையாது” அவள் கூறினாள் ‘‘ஆனால் ஒரு குவளை நீர் இலவசமாய் கொடுக்கும் ஒருவரைக்கூட காண முடியாது தாகத்தினால் செத்தே விடுவோம்.” இதுபற்றி அவள் அவ்வளவு உறுதிப்பாட்டுடன் இருந்ததால் கடைசி நிமிடத்தில் அவள் ஒரு சோப்புக் கட்டியையும், கழிவறைகளில் பயன்படும் பேப்பர் ஒரு கட்டும் அவளது ஓரிரவுக்குத் தேவையான பொருட்கள் வைக்கும் பையில் எடுத்து வைத்துக் கொண்டாள் காரணம் பிரெஞ்சு உணவகங்களில் எப்போதும் சோப்புக்கட்டி இருந்ததேயில்லை, குளியலறைகளில் காணப்படும் பேப்பர் கூட முந்தைய வாரத்தின் செய்தித்தாள்கள் சிறு சதுரங்களாக கத்தரிக்கப்பட்டு ஒரு ஆணியில் தொங்க விடப் பட்டிருக்கும். அந்த கணம் அவள் வருந்தியது ஒரே ஒரு விஷயத்திற்காக மட்டுமே, அதாவது, புணர்ச்சியின்றி அந்த முழு இரவையும் வீணடித்ததற்காக. அவள் கணவனின் பதில் உடனடியாய் வந்தது.
‘‘நான் இப்போதுதான் நினைத்துக் கொண்டிருந்தேன், பனியில் புணர்வது எத்தனை அற்புதமாயிருக் கக்கூடும் என்று.” அவன் கூறினான் ‘‘இதே இடத்தில், நீ விரும்பினால்.”
நேநா டாகொண்டே அதுபற்றி தீவிரமாக யோசித்தாள். அந்த நெடுஞ்சாலையின் விளிம்பிலிருந்த நிலவொளியூட்டப்பட்ட பனி, பஞ்சு போன்றும் வெதுவெதுப்பாகவும் தோன்றியது. ஆனால் அவர்கள் பாரீஸின் புறநகர்ப் பகுதிகளை நெருங்கியபோது, போக்குவரத்து நெரிசல் அதிகமாயிற்று. அங்கே இருந்தவை வெளிச்சமிடப்பட்டிருந்த கொத்துக் கொத்தான தொழிற்சாலைகளும், மிதி வண்டிகளில் பெரும்பான்மை தொழிலாளிகளும்–குளிர் காலமாக இல்லாதிருந்தால் அது ஒரு பட்டப் பகலாக ஆகியிருக்கும் இந்நேரம்.
‘‘பாரீஸ் செல்லும் வரை நாம் சற்று பொறுத்திருப்போம்” என்றாள் நேநா டாகொண்டே. ‘‘மணமான ஜோடிகள் போல, சுத்தமான விரிப்புகளுடனான ஒரு படுக்கையில், நன்றாக, வெதுவெதுப்பாக.”
‘‘இதுதான் முதல்முறையாக நீ என்னை மறுப்பது,” என்றான் அவன்.
‘‘அப்படித்தான்”, அவள் பதில் அளித்தாள், ‘‘நாம் முதல்முறையாக திருமணம் செய்து கொண்டிருப்பதும் இப்பொழுதுதான்.”
விடியலுக்கு சற்று முன்னர் அவர்கள் தெருவோர உணவகத்தில் தங்கள் முகங்களை கழுவிக் கொண்டு சிறுநீர் கழித்தபின், ட்ரக் ஓட்டுனர்கள் காலை உணவுடன் சிவப்பு ஒயின் குடித்துக் கொண்டிருந்த ஒரு கவுண்ட்டரில் காபியும், வெட்டி மடிக்கப்பட்டிருந்த சூடான ரொட்டித் துண்டுகளையும் சாப்பிட்டனர். நேநா டாகொண்டே குளியலறையில் அவள் குட்டைப் பாவாடையிலும், ரவிக்கையிலும் ரத்தக் கறைகள் இருப்பதைக் கண்டாள். ஆனால் அதைக் கழுவி நீக்கிவிட யத்தனிக்கவில்லை. இரத்தக் கறை படிந்த கைக்குட்டையை குப்பைக் கூடைக்குள் எறிந்தாள். திருமண மோதிரத்தை இடது கைக்கு மாற்றிக் கொண்டாள். பிறகு சோப்பு கொண்டு நீரில் காயம் பட்டிருந்த விரலைக் கழுவினாள். அந்தக் கீறல் ஏறக்குறைய கண்ணுக்குப் புலப்படாததாகவே இருந்தது. இருப்பினும் அவர்கள் காருக்குத் திரும்பிய உடனேயே மீண்டும் அது ரத்தம் கசியத் தொடங்கியது. ஜன்னலுக்கு வெளியே நேநா டாகொண்டே தன் கையைத் தொங்க விட்டாள்–வயல்களிலிருந்து வீசும் குளிர்ந்த காற்றுக்கு ரத்தக் கசிவை நிறுத்தும் தன்மை உண்டென்ற நிச்சயத்துடன். இந்த சாமர்த்தியமும் பலனளிக்காது போயிற்று, ஆனால் அவள் அதுபற்றி இன்னும் அக்கறையின்றி இருந்தாள். ‘‘யாராவது நம்மை கண்டுபிடிக்க விரும்பினால் அது மிகவும் சுலபம்”, இயல்பான வசீகரத்துடன் கூறினாள் அவள், ‘‘அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்தப் பனியின் மேல் படிந்த என் ரத்த சுவடை பின் தொடர வேண்டியதுதான்.” பிறகு, அவள் என்ன கூறியிருந்தாளோ அதைப்பற்றி ஆழ்ந்து சிந்தித்தாள். விடியலின் முதல் வெளிச்சத்தில் அவள் முகம் மலர்ந்தது.
‘‘கற்பனை செய்”, அவள் கூறினாள். ‘‘மாட்ரிட்டிலிருந்து பாரீஸ் வரையிலான வழியெங்கிலும் பனியில் ரத்தச் சுவடு. அது ஒரு நல்ல பாடலைத் தரலாமில்லயா?”
மறுபடியும் சிந்திக்க அவளுக்கு நேரம் இருக்கவில்லை. பாரீஸின் புறநகர்ப் பகுதிகளில் அவள் விரல் கட்டுக்கடங்கா வெள்ளம்போல ரத்தமாய்க் கசிந்தது, மேலும் அந்தக் கீறலின் வழியே அவளது ஆன்மாவே வெளியேறிச் சென்று கொண்டிருப்பதைப் போல உணர்ந்தாள். தனது பையில் கொண்டு வந்திருந்த, கழிவறையில் பயன்படுத்தப்படும் தாள்கள் கொண்டு அந்த வழிதலை நிறுத்த முயற்சி செய்தாள் –ஆனால் ரத்தம் தோய்ந்த தாள்களை ஜன்னலுக்கு வெளியே வீசி எறிவதைவிட அவள் விரலில் அவற்றை சுற்றி விடுவதற்கு அதிக நேரம் பிடித்தது. அவள் அணிந்திருந்த ஆடைகள், அவள் கோட், அந்தக் கார் இருக்கைகள் எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக, சீர் செய்ய இயலாத வகையில் ரத்தத்தால் நனைந்து போய்க்கொண்டிருந்தன. பில்லி சான்ஷெஸ் மெய்யாகவே பயந்து போயிருந்தான். ஒரு மருந்துக்கடை தேடுதலை வற்புறுத்தினான். ஆனால் அவள் அதற்குள்ளாக அறிந்திருந்தாள் இது மருந்துக் கடைக்குட்பட்ட விஷயம் அல்லவென்று.
‘‘நாம் கிட்டத்தட்ட ‘போர்ட் த ஆர்லியன்ஸ்’ இல் இருக்கிறோம்”, அவள் கூறினாள், ‘‘நேரே மேலே போகவேண்டும், ‘ஜெனரல் லெக்லெர் அவென்யூ’ வழியாக, நிறைய மரங்கள் நிறைந்த அந்த பெரியது, பிறகு நீ என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்கிறேன்.”
அந்தப் பயணத்தின் மிக சிரமமான பகுதி இதுதான். மத்திய சந்தைகளை அடைய முற்பட்டுக் கொண்டிருந்த சிறிய கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பெரிய ட்ரக்குகளால் ஆன ஒரு முடிச்சுடன் இரண்டு பக்கங்களிலும் அந்த ‘ஜெனரல் லெக்லெர் அவென்யூ’ நெரிசலடைந்திருந்தது. பயனற்ற ஹார்ன்களின் ஒலி ஆரவாரம் பில்லி சான்ஷெஸை அவ்வளவு கொதிப்படையச் செய்திருந்ததால், அவன் பல ஓட்டுநர்களை சங்கிலிþதாக்கும் குழுவின் வசை மொழியில் திட்டினான். மேலும் காரை விட்டு வெளியேறி அவர்களில் ஒருவனை தாக்கக் கூட முயன்றான். ஆனால் பிரெஞ்சுக்காரர்கள் உலகிலேயே இங்கிதமில்லாதவர்கள் என்ற போதிலும், அவர்கள் எப்போதும் முஷ்டிச் சண்டையிட்டதில்லை என்று நேநா டாகொண்டே அவனை நம்ப செய்தாள். அது அவளின் சிறப்பான கணிப்பின் ஒரு நிரூபணமாக இருந்தது, ஏனெனில் அந்தக் கணத்தில் நேநா டாகொண்டே சுய நினைவு இழக்காமலிருக்க போராடிக் கொண்டிருந்தாள்.
‘லியோன் த பெல்ஃபோர்ட்’டின் போக்குவரத்து வட்டத்தைச் சுற்றி வரவே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர்களுக்கு ஆயிற்று. ஏதோ இரவு போல சிற்றுண்டிச் சாலைகள் மற்றும் கடைகள் வெளிச்சமிடப்பட்டிருந்தன, அது ஒரு சராசரி செவ்வாய்க் கிழமை –மேகங்கள் மூடிய இருள் சூழ்ந்திருந்த அசுத்தமான பாரீஸ்தன்மையான ஜனவரி மாதத்தில், இடைவிடாது பெய்து, பனிக்கட்டியாய் உறையாத மழையுடன். ஆனால் ‘டென்ஃபெர் ரோஷரூ அவென்யூ’ வில் போக்குவரத்து குறைவாயிருந்தது. அதற்கு அடுத்த ஒரு சில வரிசைக் கட்டிடங்கள் தள்ளி, நேநா டாகொண்டே அவள் கணவனிடம் வலது புறம் திரும்பச் சொன்னாள், பிறகு அவன் ஒரு பெரிய, இருளடர்ந்த மருத்துவ மனையின் அந்த அவசர சிகிக்சைப் பிரிவின் நுழைவாயிலுக்கு வெளியே காரை நிறுத்தினான்.
காரிலிருந்து வெளியே வருவதற்கு அவளுக்கு உதவி தேவைப்பட்டது. இருப்பினும் அவள் தனது அமைதியையோ அல்லது தெளிவையோ இழக்கவில்லை. சக்கரங்கள் பொருத்திய ஸ்ரெட்சர் வண்டியில் படுத்தபடி, பணி நேர மருத்துவருக்காக காத்துக் கொண்டிருந்த போது, அவள் அவளைப் பற்றிய அடையாளக் குறிப்புகள் மற்றும் மருத்துவ ரீதியான வரலாற்றுக் குறிப்புகள் பற்றிய செவிலியின் வழக்கமான கேள்விகளுக்கு பதிலளித்தாள். பில்லி சான்ஷெஸ் அவள் பையை சுமந்து வந்தான், அவளது திருமண மோதிரத்தை அணிந்திருந்த அந்த இடது கையை இறுகப் பற்றினான் அது தளர்ச்சிடைந்து குளிர்ந்திருந்தது. அவள் உதடுகள் அவற்றின் நிறமிழந்திருந்தன. அந்த மருத்துவர் வந்து சேரும் வரை, அவளது காயம்பட்ட விரலை ஒரு சிறிய பரிசோதனை செய்யும் வரை அவள் கையை பிடித்தபடியே அவன் அவளருகிலேயே இருந்தான். அந்த டாக்டர் மிகுந்த இளவயதுக்காரராக இருந்தார், மழிக்கப்பட்டிருந்த தலையுடனும், பழைய தாமிர உலோக நிறத் தோலுடனும். நேநா டாகொண்டே அவரிடம் தன் கவனத்தைத் தரவில்லை. ஆனால் ஒரு வெளிறிய புன்னகையை தன் கணவன் மேல் திருப்பினாள், ‘‘பயப்படாதே”, அவள் சொன்னாள், அவளது வெல்வதற்கரிய நகைச்சுவை உணர்வுடன், ‘‘நடக்கக் கூடிய ஒரே விஷயம் என்னவென்றால் இந்த நரமாமிசன் என் கையை வெட்டி தின்றுவிடுவதுதான்”
அந்த டாக்டர் பரிசோதனையை முடித்தார். பிறகு மிகச் சரியான ஸ்பானிய மொழியில் ஒரு வித்தியாசமான ஆசிய உச்சரிப்புடன் பேசி அவர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
‘‘இல்லை குழந்தைகளே,” அவர் கூறினார். ‘‘இந்த நரமாமிசன் இப்படி ஒரு அழகான கையை வெட்டுவதை விட பசியால் இறந்து போவான்.”
அவர்கள் தர்ம சங்கடத்திற்குள்ளானார்கள், ஆனால் ஒரு இணக்கமான அசைவில் அவர்களை அமைதிப்படுத்தினார் அந்த டாக்டர். பிறகு அவர் அந்த கட்டிலை நகர்த்திச் செல்லப் பணித்தார். தன் மனைவியின் கைகளைப் பிடித்தபடி பில்லி சான்ஷெஸ் பின் தொடர முயன்றான். டாக்டர் அவன் கைகளை எடுத்துக் கொண்டு அவனைத் தடுத்து நிறுத்தினார்.
‘‘நீ கூடாது,” அவர் சொன்னார். ‘‘அவள் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்கிறாள்.”
நேநா டாகொண்டே அவள் கணவனை நோக்கி மறுபடியும் புன்னகைத்தாள், விடை பெறுவதற்காய் அந்த நடைகூடத்தின் முடிவில் பார்வையிலிருந்து அவள் மறையும் வரை கையசைத்தவாறு இருந்தாள். அந்த டாக்டர் கிளிப் பொருத்திய எழுது பலகையில் அந்த நர்ஸ் எழுதியிருந்த குறிப்புகளை படித்துக் கொண்டிருந்தார். பில்லி சான்ஷெஸ் அவரை அழைத்தான்.
‘‘டாக்டர், அவள் கர்ப்பமாக இருக்கிறாள்” அவன் கூறினான்.
‘‘எவ்வளவு நாளாய்?”
‘‘இரண்டு மாதங்கள்”
இந்த தகவலுக்கு பில்லி சான்ஷெஸ் எதிர்பார்த்த அளவு டாக்டர் முக்கியத்துவம் தரவில்லை. ‘‘நீ என்னிடம் சொல்வது சரிதான்,” அவர் கூறினார். பிறகு கட்டிலைத் தொடர்ந்து நடந்தார். நோயாளிகளின் வியர்வை நாற்றமடித்த, துக்கம் தோன்றச் செய்யும் அந்த அறையில் பில்லி சான்ஷெஸ் நின்றவாறே தனித்து விடப்பட்டான். நேநா டாகொண்டேவை அழைத்துச் சென்றிருந்த அந்த கீழ் நோக்கிய, வெறிச்சோடிய நடைகூடத்தில் என்ன செய்வதென்று அறியாது விடப்பட்டிருந்தான். பிறகு மற்றவர்கள் காத்துக் கொண்டிருந்த அந்த மர பெஞ்சில் உட்கார்ந்தான். அவன் எவ்வளவு நேரம் அங்கு உட்கார்ந்திருந்தான் என்பதை அறியவில்லை, ஆனால் அந்த மருத்துவமனையை விட்டு வெளியேற அவன் தீர்மானித்த போது மறுபடியும் இரவாகியிருந்தது, மேலும் இன்னும் மழை பெய்து கொண்டிருந்தது, இந்த உலகின் பாரத்தால் அமுக்கப்பட்டு, அவன் தான் என்ன செய்யவேண்டுமென்று இன்னும் அறியாதிருந்தான்.
பல வருடங்களுக்குப் பின்னர் அந்த மருத்துவமனை பதிவேட்டிலிருந்து நான் அறிந்து கொண்டபடி ஜனவரி ஏழாம் தேதி செவ்வாய்க் கிழமையன்று நேநா டாகொண்டே 9.30 மணிக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டாள். அந்த முதல் நாள் இரவில், பில்லி சான்ஷெஸ் அவசர சிகிச்சை பிரிவு நுழைவாயிலின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த அந்தக் காரில் உறங்கினான். பின் அடுத்த நாள் அதிகாலையில், மிக அருகாமையில் அவன் கண்டுபிடிக்க முடிந்திருந்த உணவகத்தில் ஆறு வேக வைத்த முட்டைகள் சாப்பிட்டான், இரண்டு கோப்பை காப்பியும் அருந்தினான், ஏனெனில் மாட்ரிட்டிலிருந்து அவன் முழுமையான உணவு உண்டிருக்கவில்லை. பிறகு அவன் அந்த அவசர சிகிச்சைப் பகுதிக்குச் திரும்பச் சென்றான். ஆனால் அவன் பிரதான வாயிலைப் பயன்படுத்த வேண்டுமென்பதை அவனுக்குப் புரியச் செய்தனர். நேநா டாகொண்டே மெய்யாகவே அந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தாளா என்று உறுதி செய்து கொண்ட பின், பார்வையாளர்கள் செவ்வாய்க் கிழமைகளில் ஒன்பது மணியிலிருந்து நாலு மணிவரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்–அதாவது மற்ற ஆறு தினங்களில் இல்லை என்று கூறிய அந்த பெண் வரவேற்பாளரிடம் பேசுவதற்கு ஒரு அஸ்ட்டூரிய பராமரிப்புப் பணியாளன் அவனுக்கு உதவி செய்தான். மழிக்கப்பட்ட தலையுடனான ஒரு கறுப்பன் என்று அவன் வர்ணித்த, ஸ்பானிய மொழி பேசும் அந்த டாக்டரைப் பார்க்க முயன்றான். ஆனால் இந்த மாதிரியான இரண்டு எளிய அடையாளங்களின் அடிப்படையில் அவரைப் பற்றி எவராலும் எதுவும் கூற இயலவில்லை.
அந்தப் பதிவேட்டில் நேநா டாகொண்டே இருப்பதை மறு உறுதி செய்து கொண்டவன் காருக்குத் திரும்பினான். ஒரு போக்குவரத்து அதிகாரி, இரட்டைப்படை எண் வரிசைப் பகுதியில், மிகக் குறுகலான ஒரு தெருவில் அவன் வண்டியை இரண்டு வரிசைக் கட்டிடங்களுக்கு அப்பால் நிறுத்தச் செய்தார். தெருவின் அப்பால் ஒரு புதுப்பிக்கப்பட்ட கட்டிடம் ஒன்று ‘ஹோட்டல் நிக்கோல்’ என்ற வாசகத்துடன்–அது ஒரு நட்சத்திர அந்தஸ்து மட்டுமே பெற்றிருந்தது, மேலும் அதன் வரவேற்பு பகுதி மிகச் சிறியதாக இருந்தது, அதில் ஒரே ஒரு சோபா மற்றும் ஒரு பழைய, கம்பீரமான பியானோ இருந்தது. குழல் போல உச்சஸ்தாயி குரல் கொண்ட அந்த உரிமையாளர், பணம் இருக்கும் பட்சத்தில் எந்த வாடிக்கையாளரையும் எந்த மொழியிலும் புரிந்து கொள்ள முடிந்தவராயிருந்தார். பில்லி சான்ஷெஸ் தனது பதினோரு பெட்டிகள் மற்றும் ஒன்பது பரிசுப் பெட்டிகளுடன் காலியாக இருந்த அந்த ஒரே அறையை எடுத்துக் கொண்டான். ஒன்பதாவது தளத்தில் இருந்த ஒரு முக்கோண வடிவ அட்டாளி அறைக்குச் செல்லும், வேக வைத்த காலிஃப்ளவர் நெடி வீசிய வட்டவடிவ படிக்கட்டுகளை ஒரே மூச்சில் தாவி ஏறினான். மங்கலான தாள்களால் சுவர்கள் மூடப்பட்டிருந்தன, மேலும் ஒரு பக்கத்து ஜன்னலருகில் எதற்குமே இடமில்லாதிருந்தது, ஆனால் உட்புறமாயிருந்த முற்றம் போன்ற பகுதியிலிருந்து அந்த மங்கலான வெளிச்சம் வருவதற்கு தவிர. இரட்டைப் படுக்கை, ஒரு உயரமான அலமாரி, ஒரு சாய முடியாத நேரான பின்பகுதியுடைய நாற்காலி, கையோடு சுலபமாக எடுத்துச் செல்லக்கூடிய ஒரு ‘பிடெட்’ (பிறப்புறுப்புக்களைக் கழுவுவதற்கான பீச்சும் நீர்இணைப்பு கொண்ட அமைப்பு) ஒரு வாஷ்பேசின், நீர் மொள்ளும் பாத்திரம் ஆக அந்த அறையில் இருப்பதற்கு ஒரே வழி அந்தப் படுக்கையில் படுத்துக் கொள்வதுதான். பழையவை என்பதற்கும் மோசமாக எல்லாப் பொருள்களுமே கைவிடப்பட்டவையாய்த் தோன்றின, ஆனால் ஆரோக்கியமளிக்கவல்ல ஒரு சமீபத்திய மருந்து நெடியுடன்.
அவனது வாழ்வின் எஞ்சிய பகுதியை அந்த கருமித்தனத்திற்கான திறமையில் நிர்மாணிக்கப்பட்டிருந்த அந்த உலகின் புதிர்களை புரிந்து கொள்ளும் முயற்சியில் கழித்திருந்தாலும் சான்ஷெஸ் அவற்றை விடுவித்திருக்க முடியாது. அவனது தளத்தை அவன் அடையும் முன்னரே அந்தப் படிக்கட்டு விளக்கு அணைந்து போய்விடும் புதிரை அவன் ஒரு போதும் விடுவிக்க இயலவில்லை, மேலும் அவன் அதை மறுபடியும் எப்படி எரிய விடுவதென்று கண்டுபிடிக்கவும் இல்லை. ஒவ்வொரு தளத்தை அடையும் போதும் கழிவறையுடனான ஒரு சிறிய அறை இருந்ததையும், ஒரு சங்கிலி இழுப்பில் அது கழிவுகளைத் தள்ளி விடுவதையும் அறிந்து கொள்ள அவனுக்கு ஒரு காலை நேரத்தின் பாதிப் பகுதி தேவையாயிருந்தது மற்றும் அவன் அதை இருள் நேரத்தில் உபயோகிக்க முடிவு செய்திருந்தான். அப்போதுதான், உள்ளே தாழ்ப்பாள் போடப்பட்டால் அந்த விளக்கு எரியத் தொடங்கியதும் அதனால் யாருமே அதை மறுபடி அணைக்க மறந்து போக நேரிடாது என்பதையும் அவன் கண்டு பிடித்தான். யதேச்சையாக, அந்த நீண்ட ஹாலின் ஒரு கோடியில் இருந்த ஷவரை, அவன் சொந்த நாட்டில் உபயோகிப்பது போல, ஒரு நாளில் இரண்டு முறை அதை உபயோகப்படுத்த உறுதி செய்து கொண்டான். அதற்கென தனியே பணம் கொடுக்க வேண்டியிருந்தது, கைப்பணமாக, மற்றும் அந்த அலுவலக கட்டுப்பாட்டில் இருந்த அந்த சுடுநீர் மூன்று நிமிடங்களில் நின்று போனது. இருப்பினும் பில்லி சான்ஷெஸ் தேவையான தெளிவுடன் தனதிலிருந்து வேறுபட்டு இந்த விதமாகக் காரியங்களைச் செய்வது பற்றி அறிந்து கொண்டான். எப்படிப் பார்த்தாலும் ஜனவரி மாதத்துக் குளிரில் வெளியே இருப்பதை விடவும் இது மிகவும் சிலாக்கியமானது. மற்றும் அவன் மிகவும் குழப்பமாகவும், தனிமையாகவும் உணர்ந்தான் அதாவது நேநா டாகொண்டேவின் உதவியும், பாதுகாவலும் இன்றி அவனால் எப்படி வாழ்ந்திருக்க முடிந்தது என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
புதன் கிழமை காலை அறைக்குச் சென்ற பின், கோட்டுடன் படுக்கையில் முகம் கவிழ்ந்து வீழ்ந்தான். இரண்டு வரிசை கட்டிடங்கள் தள்ளி அப்பால், இன்னும் ரத்தம் சிந்திக் கொண்டிருக்கும் அந்த அற்புதப்படைப்பைப் பற்றி எண்ணியவாறே, அவன் உடனே ஒரு மிக இயல்பான உறக்கத்துள் வீழ்ந்தான். விழித்தபோது அவன் கைக்கடிகாரம் 5 மணி என்றது, ஆனால் அவனால் அது பகலா, காலையா அல்லது வாரத்தின் எந்த நாள் அது என்பது பற்றியோ அல்லது அது எந்த நகரம் என்பதையோ அவனால் கணிக்க இயலவில்லை, இன்னும் ஜன்னல்களைக் காற்றும் மழையும் விளாசிக் கொண்டிருக்க. காலைப்பொழுது தொடங்கிவிட்டது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் வரை, படுக்கையில் விழித்தபடி, எப்போதும் நேநா டாகொண்டேவை நினைத்துக் கொண்டே அவன் காத்திருந்தான். பிறகு அவன் முந்தைய நாள் போலவே அதே உணவகத்தில் காலை உணவு சாப்பிடச் சென்றான். அன்று வியாழக்கிழமை என்று அங்கே தெரிந்து கொண்டான். பிறகு அந்த மருத்துவமனையில் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன, மற்றும் மழை நின்றிருந்தது. அதனால் அவன் பிரதான நுழைவாயிலின் வெளியே இருந்த அந்த செஸ்ட்நட் மரத்தின் அடிப்பாகத்தின் மீது சாய்ந்து கொண்டான். எங்கே டாக்டர்களும் நர்சுகளும் வெண்ணிற கோட்டுடன் உள்ளும் புறமும் நடந்தபடி இருந்தனரோ, அங்கே நேநா டாகொண்டேவை சேர்த்த அந்த ஆசிய டாக்டரை காணலாம் என்ற நம்பிக்கையுடன். அப்பொழுதும் மற்றும் மதிய உணவிற்குப் பிறகும் அவன் அவரைக் காணவில்லை. மேலும் அவன் வெளியே நின்று குளிரில் உறைந்து கொண்டிருந்தால் அவனது கண் காணித்தலை முடித்துக் கொள்ள வேண்டிய தருணமாயிற்று. ஏழு மணிக்கு அவன் இன்னுமொரு லைட் காபியைக் குடித்து, கடினமாக வேக வைக்கப்பட்ட இரண்டு முட்டைகளைச் சாப்பிட்டான்–இரண்டு நாட்களாக ஒரே இடத்தில் ஒரே மாதிரியான பொருட்களைச் சாப்பிட்ட பின்னர் காட்சிக் கவுண்ட்டரிலிருந்து விருப்பப்படி அவனாகவே எடுத்துக் கொண்டான். தூங்குவதற்காக ஹோட்டலுக்குச் சென்ற போது அந்தத் தெருவின் ஒரு பகுதியில், மற்ற கார்கள் யாவும் எதிர்த்திசையில் நிறுத்தப் பட்டிருக்க, அவனுடைய காரின் முன்புறக் கண்ணாடியில் ஒட்டப்பட்ட ஒரு அபராதச் சீட்டுடன் அவனது கார் தனியே இருப்பதைக் கண்டான். ஒற்றைப்படை எண் நாட்களில் ஒற்றைப்படை எண் பகுதியில் நிறுத்தலாம் என்றும், இரட்டைப் படை எண் நாட்களில் மற்றொரு பகுதியில் நிறுத்தலாம் என்பதை அவனுக்கு விளக்குவது ஹோட்டல் நிக்கோலின் அந்த சுமை தூக்கும் கூலிக்கு ஒரு சிரமமான காரியமாக இருந்தது. அப்பேர்ப்பட்ட பகுத்தறிவுத்தனமான யுக்திகள் சீரிய பிறப்பில் வந்த சான்ஷெஸ் டி அவிலாவுக்கு புரிந்து கொள்ள இயலாதவையாக இருந்தன. ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்கு முன்பாக அந்த துணிகரமிகுந்த போலீஸ்காரர்கள் அருகில் நின்றிருக்க, மேயரின் அலுவலகக் காரை ஏறக்குறைய அருகில் இருந்த திரைப்பட அரங்கினுள் ஓட்டிச் சென்று முழுநாசம் உண்டாக்கியிருந்தான். அந்தக் கூலி அவனை அபராதப்பணம் செலுத்த அறிவுறுத்திய போதும், அந்தக் குறிப்பிட்ட மணி நேரத்தில் காரை நகர்த்த வேண்டாம் என்று சொன்ன போதும்–காரணம் அவன் அதை மறுபடியும் நள்ளிரவில்தான் நகர்த்த முடியும் என்பதையும்–இன்னமும் குறைவாகத்தான் புரிந்து கொண்டான். உறங்க முடியாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த போது, முதன் முறையாக நேநா டாகொண்டே பற்றி மட்டுமல்லாது, கரீபியனின் ‘கார்த்தஜீனா’வில் பொதுச் சந்தையில் இருந்த உற்சாக மதுபானக் கடைகளில் வேதனை தந்த அவனது இரவுகள் பற்றியும் நினைத்தான். ‘அரூபா’விலிருந்து வந்த பாய்மரங்கள் கொண்ட மரக்கலங்கள் நங்கூரமிட்ட அந்த கப்பல் துறைக்குள் இருந்த உணவகங்களில் தேங்காய் சாதம் மற்றும் வறுக்கப்பட்ட மீன் ருசியையும் அவன் நினைவு கூர்ந்தான். காட்டு பான்ஸி மலர்ச் செடிகள் நிறைந்த தனது வீட்டின் அந்த சுவர்களை, அங்கே முந்தைய இரவில் 7 மணியே ஆகியிருக்கும்–அவன் வீடு, மேலும் மேல் மாடியின் குளிர்ச்சியில், பட்டு பைஜாமாவில் அவன் தந்தை செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருப்பதையும் நினைவில் கண்டான் அவன்.
அவன் தன் அம்மாவை நினைத்துக் கொண்டான் –எவருக்குமே அவள் எங்கே இருப்பாள் என்று தெரியாதிருந்தது, என்ன சமயமாக இருந்த போதிலும்–அவனது விரும்பத்தகுந்த, வாயாடித் தாயார் இரவு வேளையில் காதுக்குப் பின்னால் ஒரு ரோஜாவுடனும், மூச்சுத்திணற அடிக்கும் உஷ்ணமான அந்த சுமையான, மிகச் சிறப்பாக நெய்யப்பட்ட துணியில் ஒரு ஞாயிற்றக் கிழமைக்கான உடையில் புழுங்கியபடி அவனுக்கு ஏழு வயதாகியிருக்கும் போது, ஒரு மதியம், அவன் கதவைத் தட்டாமல் அவளறைக்குச் சென்றிருந்தான், பிறகு அவளது அவ்வப்போதான காதலர்களில் ஒருவனுடன் நிர்வாணமாய் அவளைப் படுக்கையில் கண்டான். இருவருமே சுட்டிக்காட்டிப் பேசாதிருந்த, அந்த விரும்பத்தகாத விபத்து, அன்பை விட உபயோகமானதாய், உடந்தைத்தனமான ஒரு உறவை அவர்களுக்கிடையில் நிறுவியது. ஆனால் அவன் அது பற்றியோ, அல்லது ஒற்றைக் குழந்தைக்கான அவனது தனிமையால் ஏற்பட்ட பல பயங்கரங்கள் பற்றியோ உணர்வில்லாதிருந்தான். ஒரு துயரார்ந்த பாரீஸ் நகர அட்டாளி அறையில் அவனை அந்த இரவு படுக்கையில் தள்ளி வீசியிருப்பதை கண்டு, அவன் வருத்தங்களைச் சொல்வதற்கு யாருமின்றி, தன் மீதே கொண்ட ஆக்ரோஷ கோபத்தில், அழ வேண்டும் என்ற இச்சையை அவனால் கட்டுப்படுத்த முடியாமல் போனது.
அது ஒரு நன்மை பயக்கும் தூக்கமின்மை. வெள்ளியன்று படுக்கையை விட்டு எழுந்து, அவன் கழித்திருந்த அந்த மோசமான இரவினால் புண்படுத்தப்பட்டு, ஆனால் தன் வாழ்வுக்கு ஒரு வரையறை தர தீர்மானமாக இருந்தான். அவர்களது பெரும்பான்மை பணமும், விலாசப் புத்தகமும் –ஒரு வேளை பாரிஸில் அவர்களுக்குத் தெரிந்த யாராவது ஒருவரின் எண்ணை அவன் கண்டு பிடித்திருக்கலாம்þசாவிகள் எல்லாம் நேநா டாகொண்டேவின் பையில் இருந்ததால் இறுதியில் அவன் தன் பெட்டியின் பூட்டை உடைக்கவும் பிறகு உடைமாற்றிக் கொள்ளவும் முடிவு செய்தான். வழக்கமாக சாப்பிடும் உணவகத்தில் அவன் பிரெஞ்சில் ‘ஹலோ’ சொல்லவும், பன்றிக் கொழுப்பு, இறைச்சிக்கு இடையே வைக்கப்பட்ட ரொட்டித் துண்டுகள் இவைகளை கேட்டுப் பெற்றுக் கொள்ளவும் கற்றுக் கொண்டிருந்தான். இதை உணர்ந்து கொண்டவன், வெண்ணெயோ அல்லது எந்த வகை முட்டை வேண்டும் என்றோ கேட்க ஒருபோதும் இயலாது என்பதை அறிந்திருந்தான். ஏனெனில் அவன் வார்த்தைகளை உச்சரிக்க ஒருபோதும் கற்கவில்லை ஆனால் ரொட்டியுடன் எப்போதும் வெண்ணெய் பரிமாறப்பட்டது மேலும் கடினமாக வேக வைத்த முட்டைகள் அந்தக் கவுண்ட்டரில் வைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்து அவன் அவைகளை கேட்க வேண்டிய அவசியம் இன்றி தானே எடுத்துக் கொள்ள முடிந்தது. அதற்கு மேலும், மூன்றாவது நாளின் போது, அந்தப் பணியாளர்கள் அவனை அடையாளம் கண்டு அவன் புரிந்து கொள்ளப்பட மேற்கொண்ட எல்லா முயற்சிகளின் போதும் அவனுக்கு உதவினர். பிறகு வெள்ளிக்கிழமை மதிய உணவு வேளையில் அவனை சரியாக இருத்திக் கொள்ள முயன்றபோது, எலும்புகள் அகற்றிய கன்றிறைச்சியுடன் வறுத்த உருளைக் கிழங்குகள், மற்றும் ஒரு குவளை ஒயின் ஆகியவற்றுக்கு ஆர்டர் செய்தான். அவ்வளவு சௌகரியமாய் உணர்ந்தவன், மேலும் ஒரு பாட்டிலுக்கு ஆர்டர் செய்து அதில் பாதியைக் குடித்த பிறகு, திடமான தீர்மானத்துடன் அந்தத் தெருவைக் கடந்து மருத்துமனைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தான். நேநா டாகொண்டேவை எங்கே பார்ப்பதென்று அவன் அறியவில்லை, ஆனால் அவன் நினைவில் அந்த ஆசிய டாக்டரின் தெய்வாதீனமான உருவம் நிலை பெற்றிருந்தது, மேலும் அவரைக் கண்டுபிடித்துவிட முடியும் என்பதில் அவன் உறுதியாக இருந்தான். அந்தப் பொதுக் கதவு வழியாக உள்ளே செல்லாமல், மாறாக, சற்று குறைவான கவனத்துடன் கண்காணிக்கப்பட்டதாக அவனுக்குத் தோன்றிய அந்த அவசர சிகிச்சை பிரிவு நுழைவாயிலை உபயோகித்தான். ஆனால் நேநா டாகொண்டே விடை பெற கை அசைத்துச் சென்ற அந்த நடைகூடத்தை தாண்டிச் செல்ல இயலவில்லை. இரத்தத் தெறிப்புகளால் கறைபடிந்திருந்த தளர்ந்த ஆடையணிந்திருந்த ஒரு காவலன், அவன் நடந்து சென்ற போது ஏதோ கேட்டதை பில்லி சான்ஷெஸ் கவனிக்காமல் சென்றான். அந்த மனிதன் இவனை பின் தொடர்ந்தான் மீண்டும் அதே கேள்வியை திரும்பத் திரும்ப ஃபிரெஞ்சில் கேட்டவாறே. இறுதியில் அவ்வளவு வேகத்தில் இவன் கையைப் பற்றியதால் இவன் எதிர்பாராது நிறுத்தப்பட்டான். அவனை உதறித் தள்ள முயன்றான் பில்லி சான்ஷெஸ், ஒரு சங்கிலித் தாக்குதல் தந்திரத்துடன். பிறகு அந்த காவலர் பிரெஞ்சு மொழியில், மலங்கழிக்கும் தளமோவென இவன் தாயைப் பழித்துப் பேசி, சுற்றி வளைத்துக் கொண்ட ‘சுத்தியல் பிடியில்’ இவன் கையை தோள் வரையில் முறுக்கி, மறக்காமல் ஓராயிரம் முறை அவன் மலங்கழிக்க தளமான அவனது பரத்தை தாய் என்றவாறே இவனைக் கதவுவரை ஏறக்குறைய தூக்கிச் சென்று, வலியால் துடித்துக் கொண்டிருக்க, உருளை கிழங்குகள் அடைத்த ஒரு மூட்டையைப் போல தூக்கி வீசினான் அந்தத் தெருவின் நடுவில்.
அந்தப் பிற்பகல், அவன் பெற்ற தண்டனையால் வேதனை அடைந்து பில்லி சான்ஷெஸ் கொஞ்சம் முதிர்ந்த மனிதாக இருக்கத் தொடங்கினான். அரசு தூதுவரை நாடிச் செல்லலாம் என்று தீர்மானித்தான், நேநா டாகொண்டே அப்படித்தான் செய்திருந்திருப்பாள். அந்த ஹோட்டல் பணியாளன் சுமுகமற்ற தோற்றம் கொண்டிருப்பினும் மிகவும் உதவியாக இருந்தான். மொழிகள் குறித்த மிகுந்த பொறுமை கொண்டிருந்த அந்தப் பணியாளன் அந்த தூதரக அலுவலக எண், முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகிவற்றை தொலைபேசி புத்தகத்திலிருந்து கண்டு பிடித்து ஒரு அட்டையில் அவற்றை எழுதியும் கொடுத்தான். ஒரு சுமுகமான பெண் தொலை பேசியில் பதிலளித்தாள். அவளது நிதானமான, ஈர்ப்பில்லாத ‘ஆன்டஸ்’ சொற்களை உடனேயே அடையாளம் கண்டு கொண்டான். அவனது முழுப் பெயரையும் கூறி தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள ஆரம்பித்தான். நிச்சயமாய் அந்த இரண்டு சிறப்பான குடும்பங்கள் அந்தப் பெண்மணி கருத்தில் பதிந்திருக்கும், ஆனால் தொலைபேசியில் அந்தக் குரல் மாறவில்லை. மனப்பாடம் செய்து வைத்திருந்த தனது பாடத்தை அவள் ஒப்பித்ததை கேட்டான் அவன் மாண்புமிகு அரசு தூதுவர் அவரது அலுவலகத்தில் அந்தச் சமயத்தில் இல்லை, நாளை மறுநாள் வரை எதிர்பார்க்க முடியாது, ஆனால் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் முன் அனுமதியின்றி அவரைக் காண இயலாது , அதுவும் அசாதாரணமான-அவசர சூழ்நிலைகளில் மட்டுமே அவரைப் பார்க்க இயலும் என்று சொல்வதை கேட்டான். இந்த வழியிலும் நேநா டாகொண்டேவை பார்க்க முடியாது என்று பில்லி சான்ஷெஸ் அறிந்து கொண்டான். பிறகு அந்த செய்தியை எப்படி மனதுக்கினிய வகையில் அவள் கொடுத்தாளோ அதே உணர்வுடன் அவன் அவளுக்கு நன்றி கூறினான்.
பாரீஸின் மிக அமைதியான மாவட்டங்களில் ஒன்றில், பில்லி சான்ஷெஸை ஈர்த்த ஒரே இடமான ‘22ரூ த ஷேம்ப்ஸ் எலிஸீஸ்’ இல், பல வருடங்களுக்குப் பிறகு என்னிடம் அவனே ‘கார்த்தஜீன டி இன்டியாஸ்’ இல் கூறியது போல, அவனது வருகைக்குப் பின்னர் முதன் முறையாக சூரிய ஒளி கரீபியனில் இருப்பது போலப் பிரகாசமாக இருந்தது. மற்றும் அந்த ஈஃபில் டவர், பிரகாசமான வானின் குறுக்கே, அந்த நகரத்தின் மேலே உயர்ந்து நின்றது. அரசு தூதுவரின் சார்பாக அவனை அழைத்துப் பேசிய அந்த அதிகாரி ஏதோ ஊறு விளைவிக்கவிருந்த நோயிலிருந்து சமீபத்தில்தான் மீண்டு வந்தவரைப் போல் தோற்றமளித்தார்–அவரது கறுப்பு காற்சட்டை, கோட்டினால் மட்டுமல்லாது, உறுத்தலான காலர், துக்கம் அனுஷ்டிக்கும் டையும் மட்டுமின்றி, அவரது விவேகமான அங்க அசைவுகளும், குரலும் அமைதிப்படுத்துவதான தன்மையும் சேர்த்து. பில்லி சான்ஷெஸின் அக்கறையை அவர் புரிந்து கொண்டார். ஆனால் அவனது பகுத்தறியும் உசிதங்கள் எதையும் இழந்துவிடாமல் காட்டுமிராண்டி ‘அமெரிக்காக்களுக்கு’ முரணாக –அங்கே அவர்கள் உள்ளே நுழைவதற்கு ஒருவர் செய்ய வேண்டிய தெல்லாம் மருத்துவ விடுதியின் வாயில் காவலருக்கு லஞ்சம் தருவதொன்றே–இங்கே ஒரு நாகரிகமடைந்த நாட்டில் இருப்பதாகவும் அதன் கடுமையான வரையறைகள் மிகவும் புராதனமான, கற்றறிந்த அடிப்படைகள் மீது கண்டறியப்பட்டன என்றும் அவனுக்கு நினைவு படுத்தினார். ‘‘இல்லை, அன்புச் சிறுவனே” அவர் சொன்னார். காரணத்தின் ஒழுங்குக்கு அவன் தன்னை உட்படுத்திக் கொண்டு செவ்வாய்க் கிழமை வரை காத்திருப்பது மாத்திரமே அவனது ஒரே ஒரு புகலிடம்.
‘‘போகட்டும், இன்னும் நான்கு நாட்கள் தானே இருக்கின்றன” அவர் முடித்தார். ‘‘அதற்குள்ளாக லூவர் மியூசியத்துக்குப் போ. பார்க்கவேண்டிய இடம் அது.”
வெளியே வந்தவன், ‘பிளேஸ் த லா கன்கார்ட்’ இல் தான் இருப்பதைக் கண்டு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. ஈஃபில் டவரை அந்த மேற் கூரைக்கும் மேலே கண்டான். பிறகு அது மிகவும் அருகில் இருப்பதாகத் தோன்றியது. அதனால் கப்பல்துறை வழியாக அங்கு நடந்து செல்ல முயன்றான். ஆனால் உடனே உணர்ந்து கொண்டான் அது தோன்றிய தொலைவை விட இன்னும் கூடுதல் தொலைவில் உள்ளது என்றும், மேலும் அவன் அதைத் தேடும் சமயத்தில் அது தன் இருப்பு நிலையை மாற்றிக் கொண்டே இருந்தது என்றும். அதனால் அவன் நேநா டாகொண்டேவை பற்றி நினைத்தபடி அந்த ‘சியென்’ சாலையில் ஒரு நீண்ட கல் இருக்கையில் அமர்ந்தான். அவனுக்கு படகுகள் போலன்றி அலைந்து திரியும் வீடுகள் போல காட்சியளித்த அந்த சிறு நீராவிப்படகுகள் சிவப்புக் கூரைகள், மற்றும் ஜன்னல்களில் பூந்தொட்டிகள், தளம் குறுக்கே துணிக் கம்பி வரிசைகளுடன், பாலங்களுக்கு அடியில் கடந்து செல்வதைக் கவனித்துக் கொண்டிருந்தான். அசைவற்ற மீன்பிடி கோல், அசைவற்ற மீன் தூண்டில் நரம்புடன் அசைவற்றிருந்த ஒரு மீனவனை பார்த்தான். ஏதாவது அசையக் காத்திருந்த களைத்துப் போனான், இருட்டத் தொடங்கும் வரையிலும். பிறகு ஒரு டாக்ஸி பிடித்து ஹோட்டலுக்குச் செல்லத் தீர்மானித்தான். அப்போதுதான் பாரீஸின் எந்த இடத்தில் அந்த மருத்துவமனை இருக்கிறது என்று தனக்குத் தெரியாமல் இருப்பதையும், அதன் பெயர் அல்லது விலாசம் தெரியாது என்பதையும் உணர்ந்தான்.
பெரும் பீதி மற்றும் மழுங்கடிக்கப்பட்ட உணர்வுடன் அவன் கண்ணில் பட்ட முதல் உணவகத்திற்கு சென்று உயர்ரக ‘கான்யாக்’ பிராந்தி கேட்டு, பிறகு அவன் எண்ணங்களை ஒரு சீராக வைத்துக் கொள்ள முயன்றான். அவன் சிந்தனை செய்து கொண்டிருந்த போது பல்வேறு கோணங்களில், சுவர்களில் இருந்த எண்ணற்ற கண்ணாடிகளில் அவன் திரும்பத் திரும்பத் தோன்றுவதைக் கண்டவன், தான் தனிமையாகவும், பயந்துபோயும் இருப்பதைக் கண்டான். மேலும் அவன் பிறந்ததிலிருந்து முதன் முறையாக இறப்பின் நிதர்சனத்தை பற்றி எண்ணினான். ஆனால் இரண்டாவது கோப்பை பிராந்தியுடன் கொஞ்சம் தெம்பாக உணர்ந்தான், மற்றும் அந்த தூதரக அலுவலகத்திற்குச் திரும்பிச் செல்வதற்கான தெய்வாதீனமான உத்தேசம் வந்தது. அவன் பாக்கெட்டுக்குள் விலாசத்துடன் இருந்த அந்த அட்டையை பார்த்தான், பிறகு மறு பக்கத்தில் அந்த ஹோட்டலின் பெயர் மற்றும் தெரு எண் ஆகியவை அச்சிடப்பட்டிருப்பதைக் கண்டு பிடித்தான். அந்த அனுபவத்தினால் உலுக்கப்பட்டவனாக அந்த வார இறுதி முழுவதும் சாப்பிடுவதற்கும், ஒரு புறமிருந்து மறு புறத்திற்கு காரை நகர்த்தி நிறுத்துவதற்கும் தவிர அவன் அறையை விட்டு வெளியே செல்லவே இல்லை. அவர்கள் அங்கு வந்து சேர்ந்த காலையில் பெய்தது போலவே மோசமான மழை மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. இதுவரையில் முழுமையாக ஒரு புத்தகமும் படித்திராத பில்லி சான்ஷெஸ் படுக்கையில் படுத்துக் கொண்டு, சலிப்பு உணர்விலிருந்து அவனை தற்காத்துக் கொள்ள அப்போது ஒரு புத்தகம் இருந்தால் தேவலாம் என்று விரும்பினான். ஆனால் அவன் மனைவியின் பெட்டிகளில் அவன் கண்டவை எல்லாம் ஸ்பானிய மொழி தவிர ஏனைய மொழிகளில் இருந்தவையே. ஆக, செவ்வாய்க் கிழமைக்காக காத்திருந்தான், சுவர்க் காகிதங்களில் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்த மயில்கள் பற்றி சிந்தித்துக் கொண்டும் மற்றும் எப்போதும் நேநா டாகொண்டே பற்றி எண்ணிக்கொண்டும். திங்களன்று, அந்த அறையைச் சீராக்கினான். அந்த நிலையில் அதைக் கண்டால் அவள் என்ன சொல்லக் கூடும் என்று வியந்தான். அப்பொழுதுதான் அந்த மின்க் கோட், காய்ந்த இரத்தக்கறையுடன் இருப்பதைக் கண்டு பிடித்தான். அவளுடைய ஓரிரவுக்கான பொருட்கள் வைக்கும் பையில் இருந்த வாசனை சோப்பால் அதைச் சுத்தம் செய்வதில் அந்தப் பகல் முழுவதையும் செலவழித்தான். மாட்ரிடில், முன்பு விமானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டபோது அது இருந்த நிலைக்கு அதனை மீட்டுக் கொண்டு வந்தான் வெற்றிகரமாக.
செவ்வாய் விடிந்தது மேகமூட்டத்துடனும், சில்லிடும் குளிருடனும், ஆனால் மழையின்றி. ஆறுமணிக்கு விழித்தெழுந்த பில்லி சான்ஷெஸ், நோயாளிகளுக்கு பூங்கொத்துகளும் பரிசுப் பொருட்களும் கொணர்ந்த உறவினர்கள் கூட்டத்துடன் மருத்துவமனையின் நுழைவாயிலில் காத்திருந்தான். கூட்டத்துடன் உள்ளே சென்றான், தன் கை மேல் இருந்த அந்த மின்க் கோட்டை எடுத்துக் கொண்டு, எந்த ஒரு கேள்வியும் கேட்காது, நேநா டாகொண்டே எங்கிருக்க முடியும் என்ற எந்த ஒரு கருத்தும் இன்றி, ஆனால் அந்த ஆசிய டாக்டரை சந்திக்கலாம் என்ற நிச்சயத்துடன். ஒரு மிக விஸ்தாரமான உட்புறமுற்றத்தின் ஊடாக– பூக்கள் மற்றும் காட்டுப் பறவைகளுடன்– அதன் இருபுறமும், வார்டுகள் இருந்தன. பெண்களுக்கு வலது புறமும் ஆண்களுக்கு இடது புறமும். மற்ற பார்வையாளர்களைப் பின் தொடர்ந்து பெண்களுக்கான பகுதியில் நுழைந்தான். ஜன்னல்களின் பெரும் வெளிச்சத்தினால் ஒளியூட்டப்பட்டிருந்த அவரவரது படுக்கையில் மருத்துவ சீருடையில் அமர்ந்திருந்த பெண் நோயாளிகளின் நீண்ட வரிசையைக் கண்டான் மற்றும் வெளியிலிருந்து கற்பனை செய்திருக்க முடிந்ததை விட அதெல்லாம் கூடுதல் சந்தோஷத்துடன் இருந்ததைப் பற்றியும் கூட அவன் நினைத்தான். அந்த நடைகூடத்தின் இறுதியை எட்டியவன் அந்த நோயாளிகளில் நேநா டாகொண்டே இல்லை என்று நிச்சயப்படுத்திக் கொண்ட பின் திரும்பி நடந்தான். பிறகு, அந்த வெளிப்புற அரங்கைச் சுற்றி நடந்தான் அவன் தேடிக் கொண்டிருந்த டாக்டரை அடையாளம் கண்டுவிட்டதாக தோன்றும் வரை, ஆண்கள் பகுதியின் ஜன்னல்கள் ஊடே நோக்கியபடி.
நிஜத்தில் அவன் கண்டிருந்தான். அந்த டாக்டர் ஒரு நோயாளியை, மற்ற சில டாக்டர்கள் மற்றும் நர்சுகளுடனும் பரிசோதித்துக் கொண்டிருந்தார். பில்லி அந்த பகுதிக்குள் சென்றான், அந்த கூட்டத் தினின்று நர்சுகளில் ஒருத்தியை விலக்கிவிட்டு, அந்த நோயாளி மேல் குனிந்திருந்த அவரை நோக்கியவாறு நின்றான். அவன் அவரிடம் பேசினான். டாக்டர் தன் சோகம் கப்பிய கண்களை உயர்த்திப் பார்த்து, ஒரு நொடி யோசித்து, பிறகு அவனை அடையாளம் கண்டு கொண்டார்.
‘‘ஆனால் எங்கே போய்த் தொலைந்தாய் நீ?” அவர் கேட்டார்.
பில்லி சான்ஷெஸ் குழப்பமடைந்தான்.
‘‘அந்த ஹோட்டலில்”, அவன் சொன்னான். ‘‘இதோ இங்கேதான், அந்த திருப்பத்தில்.”
பிறகு அவன் தெரிந்து கொண்டான். அந்த வியாழக்கிழமை மாலை 7 மணி 10 நிமிடத்திற்கு, ஜனவரி ஒன்பதாம் தேதி, ஃபிரான்சின் மிகத் தேர்ச்சி பெற்ற சிறப்பு மருத்துவர்களின் அறுபது மணிநேர முயற்சிகள் தோற்றுப் போக, நேநா டாகொண்டே ரத்தம் வருவது நிற்காமல் இறந்து விட்டிருந்தாள். கடைசிவரை தெளிவுடனும், அமைதியுடனும் இருந்திருக்கிறாள் அவள். அவளும் பில்லி சான்ஷெஸும் முன்பதிவு செய்து கொண்டிருந்த ‘ஏதென்னே பிளாசாவில்’ அவள் கணவனை தேடுவதற்கு அவர்களுக்கு அறிவுரைகள் கொடுத்தபடி, மேலும் அவள் பெற்றோரை தொடர்பு கொள்ள தேவையான தகவல்களை அவர்களுக்குத் தந்து கொண்டும். ஏற்கனவே நேநா டாகொண்டேவின் பெற்றோர் பாரீஸுக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்த பொழுதில், வெள்ளிக் கிழமை அந்த அயல் நாட்டு அலுவலகத்தில் ஒரு துரிதமான தகவல் தரப்பட்டிருந்தது. அந்த அரசு தூதுவர் தாமே, பிணத்தை நறுமண மூட்டிப் பாதுகாத்து வைப்பதிலும் பிறகு இறுதி யாத்திரை போன்றவை சம்பந்தப்பட்ட சடங்குகளிலும் அதிகார எல்லைக்குள் பாரீசின் போலீஸ் அமைப்புடன் தொடர்பு கொண்டு பில்லி சான்ஷெஸை தேடும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார். அவனை வர்ணித்த ஒரு நெருக்கடி நிலை அதிகார அறிக்கை வெள்ளிக் கிழமையிலிருந்து ஞாயிறு மதியம் வரை வானொலி வாயிலாகவும் தொலைக்காட்சி வாயிலாகவும் ஒலிபரப்பப்பட்டது மேலும் அந்த நாற்பது மணி நேரமும் பிரான்ஸில் மிகவும் தேவைப்பட்ட மனிதனாக இருந்தான் அவன். நேநா டா கொண்டேவின் கைப்பையில் கண்டெடுக்கப்பட்ட அவனது புகைப்படம் எல்லா இடத்திலும் காட்சிக்கு வைக்கப்பட்டது. மாற்றியமைத்துக் கொள்ளும் வசதி பெற்ற ஒரே மாதிரியான மூன்று பென்ட்லி கார்கள் கண்டுபிடிக்கப்பட்டன, ஆனால் அவற்றில் ஒன்றுகூட அவனுடையதில்லை.
சனிக்கிழமை மதியம் நேநா டாகொண்டேவின் பெற்றோர் வந்து சேர்ந்திருந்தனர். பிறகு அந்த மருத்துவமனை தேவாலயத்தில் அந்த உடலருகே அமர்ந்தனர், கடைசி நிமிடம் வரை பில்லி சான்ஷெஸ் கண்டுபிடிக்கப்படுவான் என்ற நம்பிக்கையுடன். அவனது பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பாரீஸுக்கு விமானத்தில் புறப்படத் தயாராக இருந்தனர், ஆனால் கடைசியில் தந்திகளில் ஏற்பட்ட ஏதோ சில குழப்பங்களால் அவர்கள் புறப்படவில்லை. இருநூறு மீட்டரே தள்ளியிருந்த, அந்தத் தரம் குறைந்த ஹோட்டலின் அறையில், நேநா டா கொண்டேவின் காதலுக்கான தனிமை தந்த மன வேதனைகளுடன் பில்லி சான்ஷெஸ் கிடந்திருந்தபோது, ஞாயிறு பிற்பகல் இரண்டு மணிக்கு இறுதிச் சடங்கு நடந்தது. அந்த தூதரக அலுவலகத்தில் அவனை வரவேற்ற அதிகாரி பல வருடங்கள் கழித்து, அந்த அயல் நாட்டு அலுவலகத்திலிருந்து வந்திருந்த தந்தியை, பில்லி சான்ஷெஸ் அந்த அலுவலகத்தை விட்டு வெளியேறிய ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் அவர் பெற்றுக் கொண்டதையும், பிறகு அவனைத் தேடும் பொருட்டு ‘ரூ த ஃபார்பக் செயின்ட் ஹானர்’ வழியெங்கும் உள்ள மது, உணவு அருந்தும் கடைகளுக்குச் சென்றதையும் என்னிடம் கூறினார். கடற் பிரதேசத்து பையன் ஒருவன், அனுகூலமான, சிறப்பு மிக்க ஒரு தோற்றம் கொண்டிருக்க வேண்டியவன், பாரீஸின் புதுமையில் தாக்கப்பட்டு இப்படி தகுதிக்கு ஒவ்வாத ‘ஷெர்லிங்’ கோட் அணிந்திருந்த ஒருவன் அவ்வளவு பெருமை மிக்க பாரம்பரியத்தைச் சேர்ந்தவனாக இருக்க முடியுமா என்று கற்பனை செய்ய முடியாமலிருந்ததை என்னிடம் ஒப்புக் கொண்டார்.
ஆத்திரத்துடன் அழவேண்டும் என்றெழுந்த ஆசையை அவன் அடக்கிக் கொண்ட அன்றிரவு, நேநா டாகொண்டேவின் பெற்றோர் அந்த தேடுதலை நிறுத்திவிட்டு, ஒரு உலோகச் சவப்பெட்டியில் நறுமணமூட்டப்பட்டு, பாதுகாக்கப்பட்டிருந்த உடலைக்கொண்டு சென்றனர், மற்றும் அதைக் கண்டவர்கள், இப்படி ஒரு அதீத அழகிய பெண்ணை, இறந்தோ உயிருடனோ ஒரு போதும் பார்த்திருக்கவில்லை என்று திரும்பத் திரும்பக் கூறினர். செவ்வாய்க்கிழமை காலை பில்லி சான்ஷெஸ் கடைசியாக அந்த மருத்துமனைக்குள் நுழைந்த போது, அந்த சவ அடக்கம் ஏற்கனவே முடிந்திருந்தது, அந்த துக்கமான ‘லா மாங்கா’ கல்லறையில்–எந்த வீட்டில் அவர்களது சந்தோஷங்களின் முதல் திறவு கோல்களைக் கொண்டு திறந்து விடுவித்திருந்தனரோ அந்த இடத்திலிருந்து ஒரு சில மீட்டர் தள்ளி. அந்தத் துயரத்தை பில்லி சான்ஷெஸிடம் கூறிய அந்த ஆசிய டாக்டர் அந்த மருத்துவமனையின் காத்திருப்பு அறையில் அவனுக்கு அமைதி தரும் தூக்க மருந்துகள் சில தர விரும்பினார். ஆனால் அவன் மறுத்துவிட்டான். போய் வருகிறேன் என்று சொல்லாமல் பில்லி சான்ஷெஸ் புறப்பட்டான். நன்றி என கூறுவதற்கு ஏதுமின்றி, அவனது தனிப்பட்ட துரதிர்ஷ்டத்தை பழிவாங்கும் பொருட்டு பெரும் அவசரத்துடன் யாராவது ஒருவரைக் கண்டுபிடித்து, மூளை தெறித்து வெளியேறும்படி, சங்கிலியால் அடித்து நொறுக்க மட்டுமே அவன் யோசனை கொண்டிருந்தான். அந்த மருத்துவமனையை விட்டு வெளியேறியபோது, புறாக்களின் மென்மயிர் போர்த்திய இறகுகள் போன்ற பனி, மென்மையான பளீரென்று சிறு துணுக்குகளாக, இரத்தச் சுவடு ஏதுமின்றி வானத்தினின்றும் வீழ்ந்து கொண்டிருந்ததை அவன் உணரவில்லை, மற்றும் பத்து வருடங்களில் அதுதான் பெரிய, முதல் பனிவீழ்வு என்பதால் பாரீஸ் நகர தெருக்களில் விழாக்கால தோற்றமிருந்ததையும் கூட.