பெயர்: கே.பாலமுருகன்
6 ஆண்டு காலம் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். 2006 முதல் மக்கள் ஓசை பத்திரிக்கையில் “ஒரு வீடும் சில மனிதர்களும்” எனும் கட்டுரைத் தொடர் மூலம் அறிமுகமானவன். 2004 தொடக்கம் கல்லூரியில் நடத்தப்பட்ட சிறுகதை போட்டிகளின் வழி வெற்றிப்பெற்று அடையாளப்படுத்தப்பட்டேன்.
1. 2008ஆம் ஆண்டு ஆஸ்ட்ரோ தொலைக்காட்சியும் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும் நடத்திய தமிழ் நாவல் எழுதும் போட்டியில் முதல் பரிசு- “நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்”
2. 2008 ஆம் ஆண்டு தோட்ட தொழிலாளர் சங்கமும் நில நிதி கூட்டுறவு சங்கமும் இணைந்து நடத்திய தமிழ் நாவல் எழுதும் போட்டியில் மூன்றாவது பரிசு: ‘உறவுகள் நகரும் காலம்’
3. மலாயாப்பல்கலைக்கழகம் நடத்திய சிறுகதை போட்டிகளில்:
2007: முதல் பரிசு: போத்தக்கார அண்ணன்
2008: இரண்டாவது பரிசு: கருப்பாயி மகனின் பெட்டி
2009: ஆறுதல் பரிசு: சுப்பையாவுடன் மிதக்கும் ஆங்கில கனவுகள்
4. மலேசிய தேசிய பல்கலைக்கழகம் நடத்திய சிறுகதை-கவிதை போட்டிகளில்:
2007: சிறுகதை முதல் பரிசு: ‘நடந்து கொண்டிருக்கிறார்கள்’
2008: சிறுகதை: இரண்டாவது பரிசு: ‘பழைய பட்டணத்தின் மனித
குறிப்புகள்
நான்காவது பரிசு: ‘உறங்கிக் கொண்டிருப்பவர்கள்’
கவிதை முதல் பரிசும் சி.கமலநாதன் விருதும் கிடைத்தது.
2009: சிறுகதை: இரண்டாவது பரிசு: இருளில் தொலைந்தவர்கள்
கவிதை முதல் பரிசும் எம்.ஏ.இளஞ்செல்வன் விருதும் கிடைத்தது.
5. மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தால் இரண்டு சிறுகதைகள் 2008 ஆம் ஆண்டின் மாதந்திர கதை தேர்வில் சிறந்த கதைகளாகத் தேர்வு செய்யப்பட்டன.
அலமாரி , அய்யப்பன் நாதர் இறப்பதற்கு ஒரு மணி நேரம் இருந்தது.
6. இந்திய தமிழ்நாட்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதை போட்டியில்: நான்காவது பரிசு: “11மணி பேருந்து”
7. சுஜாதா நினைவாக நடத்தப்பட்ட உலகளாவிய அறிவியல் புனைக்கதை போட்டியில் ஆசிய பசிபிக் பிரிவுக்கான சிறந்த கதை/ சிறப்புப் பரிசு: “மனித நகர்வும் இரண்டாவது பிளவும்” தேர்வுப்பெற்றன.
8. மாவட்டக் கல்வி இலாகா – “சிறந்த ஆக்கச்சிந்தனைமிக்க எழுத்துக்கான” அங்கீகாரத்தை, ஆசிரியர் தினக் கொண்டாட்டம் 2009-இல் அளித்தது.
9. கவிதை தொகுப்பு: சிங்கப்பூர் தங்கமீன் பதிப்பகத்தின் மூலம் வெளியீடப்பட்டது. தலைப்பு: கடவுள் அலையும் நகரம்.
10. தொடர்ந்து தனது சொந்த வலைப்பக்கத்தில் சினிமா விமர்சனம், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதி வருகிறேன். (http://bala-balamurugan.blogspot.com/)
11. அநங்கம் என்கிற மலேசிய தீவிர சிற்றிதழை நடத்தியும் வருகிறேன், தற்போது அந்த இதழ் குரலற்றவர்களின் குரலைச் சுமந்துகொண்டு “பறை” என வெளிவருகிறது.
12. அண்மையில் என்னுடைய முதல் நாவலான “நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்” எனும் நாவலுக்கு தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகமும் சிங்கப்பூர் முஸ்த்தப்பா அறக்கட்டளையும் இணைந்து கரிகாற் சோழன் விருதை வழங்கியுள்ளது.
http://bala-balamurugan.blogspot.com/2011/01/2010.html
13. மாநில கல்வி இலாகா '2012ஆம் ஆண்டின் புத்தாக்க ஆசிரியர் விருதை' வழங்கியது.
14. 2012ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் மாநிலத்தின் 'கலை கலாச்சார விருதை' நாவல் பிரிவில் கிடைக்கப்பெற்றது.
15. 'வீட்டைத் தொலைத்தவர்கள்' எனும் சிறுகதை தினக்குரல் பத்திரிகையின் ஆதி குமணன் சிறுகதை போட்டியில் சிறந்த சிறுகதையாக ஏப்ரல் மாதத்தில் தேர்வானது.
13. மாநில கல்வி இலாகா '2012ஆம் ஆண்டின் புத்தாக்க ஆசிரியர் விருதை' வழங்கியது.
14. 2012ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் மாநிலத்தின் 'கலை கலாச்சார விருதை' நாவல் பிரிவில் கிடைக்கப்பெற்றது.
15. 'வீட்டைத் தொலைத்தவர்கள்' எனும் சிறுகதை தினக்குரல் பத்திரிகையின் ஆதி குமணன் சிறுகதை போட்டியில் சிறந்த சிறுகதையாக ஏப்ரல் மாதத்தில் தேர்வானது.