“பிரகாசமாக எரிந்து பின் அழிந்துவிடும்
கணநேர தீக்குச்சி இல்லை வாழ்க்கை”
மலேசிய இளம் இயக்குனர் செந்தில் அவர்களின் இயக்ககத்தில் ஐந்து பாகங்களாக ‘ஜெராந்துட் நினைவுகள்’ நாடகம் படமாக்கப்பட்டுள்ளது. இதுவரை மலேசிய தமிழ் நாடக வரலாற்றில் காட்சிப்படுத்தப்படாத பல விசயங்களைச் செந்தில் கவனப்படுத்தியிருப்பதே நாடகத்தின் தனித்துவம் எனக் கருதுகிறேன். நாடகம் தொடங்கும் இடமும் முடியும் இடமும் அழுத்தமான நினைவுகளை நம்மீது விட்டுச் செல்கின்றன. எந்தப் பரப்பரப்புமின்றி தொடங்கும் நாடகம் ஐந்தாவது பாகத்தில் முடியும்போது பார்க்கப்படாத எத்தனையோ கதைகள் இந்த மண்ணில் ஜெராந்துட் சிறுநகரத்தைப் போல எங்கேங்கோ உறங்கிக் கொண்டிருப்பதை நினைவுப்படுத்துகின்றது. வாழ்க்கை ஒளித்து வைத்திருக்கும் கதைகளைத் தூண்டிவிட்டு சமூகத்தின் பார்வைக்குக் கொண்டு வருபவன்தான் கலைஞன். செந்தில் இந்த மண்ணில் உருவாகியிருக்கும் நல்ல கலைஞன் என்பதை ‘ஜெராந்துட் நினைவுகள்’ நிறுபிக்கின்றது.
மேலும் வாசிக்க:
நன்றி: மலைகள் இணைய இதழ்