நண்பர் பாண்டித்துரை, பூங்குன்றன் பாண்டியன், அப்துல்காதர் ஷாநவாஸ் அவர்களின் முயற்சியில் இவ்வருடம் அக்டோபர் முதல் தனி இலக்கிய இதழ் வெளிவரத்துவங்கியுள்ளது. கடந்த வருடங்களில் வெளிவந்துகொண்டிருந்த ‘நாம்’ சிங்கப்பூர் இலக்கிய சிற்றிதழ்தான் இப்பொழுது மாற்று அடையாளங்களுடன் மேலும் பல மாற்றங்களுடன் வெளிவருகின்றது. அய்யப்பன் மாதவன், மாதங்கி, எம்.கே குமார், இராம கண்ணபிரான், ஷாநவாஸ் எனப் பலர் எழுதியிருக்கின்றனர்.
சிங்கப்பூர் மலேசிய இலக்கியத் தொடர்பிற்கு பல சமயங்களில் களமாக இருந்து வருவது இது போன்ற சிற்றுதழ் முயற்சிகள்தான். கடந்த வருடம் சிங்கப்பூர் வாசகர் வட்டம் மலேசிய அநங்கம் சிற்றிதழை அங்கு அறிமுகப்படுத்த களம் அமைத்துக் கொடுத்தது வரை அந்த உறவு எப்பொழுதும் தொடர்கிறது. அதற்கும் முன்பு காதல் இதழ் ஒருமுறை அங்கு அறிமுகம் கண்டுள்ளது என்பதையும் நினைவுக்கூர்கிறேன். தனி இதழில் தொடர்ச்சியான மலேசிய இலக்கியவாதிகளின் பங்களிப்பு அவசியமானது. படைப்புகளை அனுப்ப விரும்புவோர் இந்த மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்:
கவிஞர் பாண்டித்துரை : thanimagazine@gmail.com