மெரினா கடற்கரை – பசிக்கிறது எனும் ஓர் ஆதி செயலை எதிர்க்கொள்ள எத்தனை வகையான போராட்டம், வாழ்தல், தப்பித்தல், சுரண்டல், புறக்கணிப்பு நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. உலகத்தின் ஒரு பகுதியான மெரினா எனும் பகுதியில் நடந்து முடிந்த பல்லாயிரம் கணக்கான வாழ்வின் மீதத்தைப் பற்றிய கதை.
வழக்கம் போல பாண்டிராஜ் படத்தில் வரும் கதையின் மையத்தைவிட்டு நகரும் கிளைக்கதைகள் இப்படத்திலும் வந்து போகின்றன. காதல் இப்படத்தில் கேலி செய்யப்பட்டுள்ளது, விமர்சிக்கப்பட்டுள்ளது. மெரினாவிற்கும் காதலுக்கும் நீண்ட நெடிய தொடர்பு இருப்பதைச் சித்திரமாக வரைந்து வைத்திருக்கிறது மெரினா வாழ்வு. காதலர்கள் வாங்கி உண்பதற்காகச் சுண்டல் விற்கப்படுகிறது. அந்தச் சுண்டல்களை விற்று ஏதோ கொஞ்சமாக