இன்று தமிழின் மிக முக்கியமான படைப்பாளியாக அடையாளங்காணப்பட்டு வருபவர்
ஷோபா சக்தி. புனைவு எல்லைக்குள் தங்களின் தீவிரமான மறுவாசிப்பைச் செய்யும்
யாவரும் ஷோபா சக்தியை மிகச் சிறந்த கதைச்சொல்லியாக உணர்கிறார்கள். இவர்
எழுதிய ‘கொரில்லா ‘ மற்றும் ‘ம்’ நாவல் இரண்டுமே தமிழ் இலக்கியச் சூழலில்
பெரிதும் கவனப்படுத்தப்பட்ட படைப்புகளாகும்.
எம்.ஜி.ஆர் கொலை வழக்கும் எம்.ஜி.ஆர்களும்
ஷோபா சக்தியின் நான்காவது சிறுகதை தொகுப்பு இது. தலைப்பைப் படித்ததும் வாசிக்க ஆர்வத்தை உருவாக்கும் வகையில் அமைந்திருந்தது. எம்.ஜி.ஆர் கொலை வழக்கு என்பது இத்தொகுப்பில் உள்ள ஒரு சிறுகதை. இந்தப் பகுதியே கொரில்லா நாவலின் துவக்கம். அந்த நாவலைப் படிக்கும்போதே இந்தப் பகுதி ஒரு சிறுகதைக்குரிய தன்மையில் இருந்ததை உணர்ந்திருந்தேன். இப்பொழுது இதைச் சிறுகதையாக இங்கு வாசிக்கும்போது என் ஊகம் சரியாகியிருப்பதை மீட்டுணர முடிகிறது.