கெடா
மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் ஏற்பாட்டில்
கே.பாலமுருகனின்
சிறுவர் சிறுகதை நூல் வெளியீடு
‘தேவதைகளின் காகிதக் கப்பல்’
எழுத்தாளரும் ஆசிரியருமான கே.பாலமுருகன் அவர்களின் சிறுவர்
சிறுகதை தொகுப்பான ‘தேவதைகளின் காகிதக் கப்பல்’ நூல் கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின்
ஏற்பாட்டில் எதிர்வரும் 07.10.2012(ஞாயிற்றுக்கிழமை) அன்று சுங்கைப்பட்டாணியில் மாலை
வெளியீடு காணவிருக்கின்றது. மலேசியாவில் உள்ளூர் எழுத்தாளரால் எழுதப்பட்டு வெளியீடு
காணும் முதல் மலேசியத்தன்மைமிக்க சிறுவர் சிறுகதை தொகுப்பு இது.
மலேசியத்
தேர்வு வாரிய அதிகாரிகளின் மறுபார்வைக்குப் பிறகே 10 மாதிரி சிறுவர் சிறுகதைகள், சிறுவர்
சிறுகதை எழுதுவது தொடர்பான வழிகாட்டி மற்றும் மாணவர்களுக்கான பயிற்சி எனப் பன்முகத்தன்மை
வாய்ந்ததாக இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நூல் மாணவர்களுக்குப் பயனுள்ளதாக அமையும். கற்பனைவளம் என்பது ஒரு தலைமுறைக்குக்
கிடைத்த வரமாகும். அதனை நாம் மாணவர்களிடமிருந்து பறித்துவிடக்கூடாது. கற்பனைவளமற்ற
ஒரு தலைமுறை உருவாவதற்கு நாமும் கல்வி உலகமும் காரணமாக இருந்துவிடக்கூடாது என்ற நோக்கத்திலேயே
இந்த நூல் படைக்கப்பட்டு வெளியீடப்படுகின்றது. திரண்டு வந்து ஆதரவு தரும்படி கேட்டுக்
கொள்கிறோம். நிகழ்ச்சியின் விவரங்கள் பின்வருமாறு: