1 இனி என் வீட்டில் இருக்கப்போவது நான் மட்டுமே என்கிற தீர்மானங்களுடன் கரைகிறது எனக்கான வெறுமை 2 எனது பொழுதுகளை தொலைத்துவிட்டு சன்னலில் எக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் அமைதியாக இயங்கிக் கொண்டிருக்கும் உலகை 3 இனி யார் வரப்போகிறார் என்கிற விரக்தியில் கதவு அடிக்கடி சாத்திக் கொள்ளும் பழக்கத்திற்கு ஆளாகியிருந்தது |
Saturday, February 28, 2009
தனிமையின் உக்கிரம் சுமக்கும் வீடுகள்
தனிமையின் வீதி
1 யாரோ அழைக்கிறார்கள் . . . . சூன்ய வெளிக்குள் புகுந்தபின் இன்னும் என்ன அழைப்பு? பிரமை! கடந்துவிடுகிறேன் 2 மீண்டும் உற்பத்திக்கும் ஆற்றல் இருந்திருந்தால் அந்த 14 நாட்களின் தொடக்கத்தை உருவாக்கியிருப்பேன் 3 எல்லாமும் நடந்தேறிவிட்டது இனி நான் யார் என்ற கேள்விகளுடன் நிற்கிறது எனது சாலை |
அமரர் சுஜாதா அறிவியல் புனைகதைப் போட்டி
அமரர் சுஜாதா அறிவியல் புனைகதைப் போட்டி
ஆழி பதிப்பகம்12, முதல் பிரதான சாலை யுனைட்டட் இந்தியா காலனி கோடம்பாக்கம் சென்னை 600024 |
சிங்கப்பூர் தங்கமீன் பதிப்பகத்தின் நூல் வெளியீடு சைபீர் அவர்களின் சிறுகதை தொகுப்பு
22.02.09 அன்று சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் தங்கமீன் பதிப்பகத்தால் வெளியிடபட்ட மலேசிய எழுத்தாளர் சை.பீர்முகமுது - வின் பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் வெளியீடப்பட்டது. நான், திரு கோ.புண்ணிய்வான் மேலும் வித்யசாகர் அவர்களும் நிகழ்வில் கலந்துகொள்ள சிங்கப்பூர் சென்றிருந்தோம்.