Wednesday, July 1, 2009

யார் இந்த Anonymous?

புளோக்கர்களி‎ன் பதிவில் இந்த “அனாதமேய” பெயர் அல்லது பெயரில்லாத நபர்களின் பதிவுகளைப் பார்க்கலாம். இவர்களில் இரண்டு வகை உண்டு. ஒரு சிலர் புளோக் வைத்திருக்க மாட்டார்கள். அவர்கள் நண்பர்களின் பதிவில் கருத்துரைக்க “Anonymous” என்கிற குறியீட்டைத் தேர்ந்தெடுப்பார்கள். கீழே அவர்களின் பெயரைக் குறிப்பிடவும் செய்வார்கள்.

அடுத்தபடியாக வருபவர்கள் பெயரை வெளியீட மறுக்கும் கருத்து கந்தசாமிகள். அவர்களில் சிலரின் பதிவு அல்லது கருத்து ஆரோக்கியமானதாக இருக்கின்றது. பெயர் வெளியீட முடியாதவர்கள் கெட்ட வார்த்தையில் கேட்பது, அசிங்கமாகப் பேசுவது என்று கீழ்த்தரமான செயல்களிலும் ஈடுபட துணிவார்கள் இந்த அனாதமேய பேர்வழிகள். ஆதலால் பெயரில்லாமல் வரும் கருத்துகளைப் பிரசுரிப்பதில் கவனம் வேண்டும்.

தைரியமிருந்தால் பெயருடன் முன் வர வேண்டும். பெயரில்லாமல் வந்து பதிவிட்டு பிறரை அவமானப்படுத்த வேண்டும் என்ற வக்கிர புத்தியுடன் உள்ளே நுழைபவர்களை எதைக் கழற்றி அடிக்க வேண்டும் என்று பதிவாளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இந்த மாதிரி தத்திகளிடம் நான் கேட்க நினைக்கும் சில கேள்விகள் உண்டு.

“உனக்கெல்லாம் எதுக்கு பேரு வச்சாங்க?”
“கருத்து சொல்ற முன்னுக்கு தொடை நடுங்குதான்னு பாரு”

தர்க்கம் சார்ந்து பேச முடியாமல் போகும் இடத்தில் சிலர் தனிமனித குனாதிசயங்களையும் அவர்களின் பலவீனங்களையும் அம்பலப்படுத்தி கேலி செய்வது அனாதமேய பேர்வழிகளின் உத்திகளில் ஒன்று. அல்லது கெட்ட வார்த்தையில் திட்டி தனது பிளவாளுமையைக் காட்ட முயல்வது. உனக்கு புத்தி பேதலித்து விட்டதால் பிறரை ஏன் கேலி செய்கிறாய்? உனக்கு வேண்டியது ஒரு கழகம். அதை அமைத்துக் கொண்டு ஒரு கூட்டத்தையும் சேர்த்துக் கொண்டு சாலையின் நடுவீதியில் நின்று கொண்டு போவோர் வருவோரையெல்லாம் கத்தி கூப்பாடு போட்டு திட்டு. அங்கு உனக்கொரு அடையாளம் கிடைக்கும். பிறர் மனநிலை ஆய்வாளன். ஒழுக்கிய மன்னன் என்றெல்லாம்.

பெயர் வெளியீடக்கூட தைரியம் இல்லாத கோழைகளின் கருத்துகளை நிராகரிக்கும் ஆற்றல் நமக்கு வேண்டும். நம் பதிவுக்குள் நுழைந்து நம்மையோ நம்மைச் சார்ந்த மனிதர்களையோ கெட்ட வார்த்தையிலோ கேவலப்படுத்தும் வகையான சொற்களிலோ பேசும் ஒரு மண்ணாங்கட்டியின் பதிவை நாம் பிரசுரிப்பது என்று அதில் குளிர் காய ஒரு சுயநலம் நமக்கு இருப்பது போன்றுத்தான் தெரியும்.

ஆமாம். நமக்குப் பிடிக்காதவனை பிறர் யாராவது திட்டி பேசினால் அதைக் கண்டு கேட்டு உச்சிக் குளிரும் மனப்பான்மைப் பலருக்கு உண்டு. இதிலும் அந்த மாதிரி சிலர் படைப்பாளராகவும் எழுத்தாளராகவும் உலா வருவது வேதனைக்குரிய விஷயம். படைப்பு சக்தி ஒவ்வொரு உற்பத்தியிலும் நம்மைப் பக்குவப்படுத்தும், நமது ஆளுமையை விரிவாக்கும், இருத்தலியல் சார்ந்து நமது இருப்பை பலமாக்கும். பிறரை கெட்ட வார்த்தையில் ஏசி, கேலி செய்து கும்மாளம் அடிப்பதில் எங்கிருக்கிறது ஆளுமை?

கே.பாலமுருகன்
மலேசியா

4 comments:

மதிபாலா said...

இன்னொரு பிரிவும் உண்டு.

அது பின்னூட்ட டுபுரித்தனத்துக்காக. .

ஆமாம் அனானிக்காக இம்புட்டு பொங்கின நீங்களே இன்னும் அனானி ஆப்சனை திறந்து வச்சிருக்கீங்களே?

காமராஜ் said...

ரொம்ப சரி பாலமுருகன்

எதையோ நினைத்து வந்தால் இங்கே
வெறும் கிசு கிசு, குழாயடிச்சண்டை, ஈகோ
போட்டிகள், ஏத்திவிடுதல் அப்புறம் இந்த அனானிகள்-
கக்கூஸ் கருத்தாளர்கள்.

நல்லா உறைக்கும்படியான பதிவு கொஞ்சம் ஆறுதலாக இருக்கு.

கே.பாலமுருகன் said...

வணக்கம் மதி. பதிவுக்கு நன்றி. என்ன செய்வது, எனது நண்பர்கள் சிலர் இன்னும் புளோக் வைருத்திருக்காதவர்கள், கருத்துரைக்க "அனானி"யைத்தான் நாடுகிறார்கள். ஆனால் அவர்களின் பெயரைக் கீழே குறிப்பிட மறவாதவர்கள்.


வணக்கம் காமராஜ். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. அனானிகள் எப்பொழுதும் தொல்லைத்தான்

sivaperianan said...

bala,

cinna tirutham. anonymous-i turn off seitalum, name/url endra option-i payanpaduti karuthukkalai sollalam endru ninaikiren. try to turn it off n c.