Wednesday, June 10, 2009

நவீனத்தமிழ் இலக்கியக் கருத்தரங்கமும் - “கடவுள் அலையும் நகரம்” கவிதை தொகுப்பு வெளியீடும்


சிங்கப்பூர் தங்கமீன் பதிபகத்தின் வெளியீட்டில் கே.பாலமுருகனின் “கடவுள் அலையும் நகரம்” கவிதை தொகுப்பும் ஜாசின் தேவராஜன் அவர்களின் “அரிதாரம் கலைந்தவன்” சிறுகதை தொகுப்பும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (14.06.2009) சிங்கப்புரில் வெளியீடு காணவுள்ளது. நவீனத்தமிழ் கருத்தரங்கம் எனும் தலைப்பில் பிரபல மலேசிய எழுத்தாளர்கள் சை.பீர்முகமது, கே.பாலமுருகன், தேவராஜன், சிங்கப்பூர் எழுத்தாளர்கள் ஜெயந்தி சங்கர், கண்ணபிரான், சித்ரா ரமேஸ் போன்றவர்களின் நவீன இலக்கியம் குறித்த உரைகளுடன், கலந்துரையாடல் நிகழ்வில் தொலைபேசியின் வாயிலாக இந்திய எழுத்தாளர்கள் நிகழ்வில் சிறப்பு பேச்சாளர்களாகத் தொடர்புக் கொண்டு உரையாடுவார்கள். நிகழ்வின் விவரங்கள் பின்வருமாறு:



திகதி: 14.06.2009 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம் : மாலை மணி 4.00க்கு

இடம் : தேசிய நூலகம், 14ஆவது தளம், (POD) 100, விக்டோரியா ஸ்ட்ரீட்

(புகிஸ் எம்.ஆர்.டி நிலையம் அருகில்) சிங்கப்பூர்

தொடர்புக்கு : 016-4806241 (கே.பாலமுருகன்)/ 012-6194140 (ஏ.தேவராஜன்)

+6582793770 (பாலுமணிமாறன் - சிங்கப்பூர்)

5 comments:

சென்ஷி said...

வாழ்த்துக்(கள்)கள் பாலமுருகன் மற்றும் ஜாசின் தேவராஜன்!!

M.Rishan Shareef said...

நிகழ்வு சிறக்க எனது அன்பான வாழ்த்துக்கள் நண்பரே !

VIKNESHWARAN ADAKKALAM said...

நிகழ்ச்சி வெற்றியடைய வாழ்த்துகள்.

கே.பாலமுருகன் said...

thanks to you all, shenshi, viknes and rishan.

balamurugan

ரா.கிரிதரன் said...

வாழ்த்துக்கள் நண்பரே!