சாவி தொலைந்துவிட்டால், ஒரு பூட்டைத் திறக்க முடியாமல் போகும் நெருக்கடி மட்டும் நிகழ்வதற்கில்லை.
வீட்டின் முன் கதவு பூட்டிற்கு என்னிடம், அப்பாவிடம், அம்மாவிடம் சாவி இருந்தது. அம்மாவிடமிருந்த சாவி தொலைந்து போய் 1 வாரம் ஆகியிருக்கும். இன்று அக்கா வீட்டிலிருந்து வீடு திரும்பியவர், வீட்டில் யாரும் இல்லாததால், பூட்டைத் திறக்க முடியாமலும் போனதால், இரும்பு வேலியைக் கடந்து உள்ளே குதிக்க முயன்றிருக்கிறார். அம்மா உயரமானவர் அல்ல. மிகவும் குட்டையானவர். அந்த வேலியைக் கடக்கும்போது கூர்மையான இரும்பு கம்பியில் வலது கையின் சதைப் பிடிப்புள்ள பகுதியில் கம்பி சொருகிக் கொண்டது. கீழே விழுந்தபோது சொருகிவிட்ட கம்பி தோலை ஆழமாகக் கிழித்துவிட்டது.
அடுத்த 2 நிமிடத்திலேயே நான் வீடு திரும்பியிருந்தேன். கிழிந்த அம்மாவின் தோல், தொங்கிக் கொண்டிருக்க, இரத்தம் வீட்டின் தரை முழுக்க ஒழுகியிருந்தது. சதைக் கிழிந்து தொங்கிய கோலத்தைப் பார்த்ததும் பதறிவிட்டேன். வயதானவர்களின் தோல் சுருக்கமும் தளர்வும் கொண்டது. பெரிய ஓட்டை போல உள்ளுக்குள்ளிருந்து ஏதேதோ வெளியே தொங்கிக் கொண்டிருந்தது.
உடனே அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அதற்குள் அப்பாவின் நண்பர்கள் சிலர் மருத்துவமனைவரை வந்துவிட்டிருந்தனர். (மருத்துவமனையில் அரைமணி நேரம் காக்க வேண்டிய சூழல் – பெருநாள் காலம் என்பதால் இப்படியொரு நெருக்கடி, அவர்களிடம் போய் கத்தியும் பயனில்லை. எல்லாம் மிக மெதுவாகவே நடந்தது)
வாழ்வின் முக்கால்வாசியை அம்மா என் அக்காவிற்காகவும் அக்கா பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வதிலும், தேய்ந்து போனவர். யாரையும் நம்பியிருக்காமல் அவரே சுயமாக இயங்கக்கூடியவர். எவ்வளவு தூரமானாலும் நடந்தே வந்துவிடுவார்.
ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி எனக்குள். ஓருவேளை அம்மா வீட்டிற்கு வந்த நேரம் நான் இருந்திருந்தால், முன் கதவைத் திறந்துவிட்டிருப்பேன். இது ஒரு அசம்பாவிதம். விபத்து. அம்மாவிற்கு ஏற்படும் 17 ஆவது விபத்தாக இருக்கக்கூடும். ஏற்கனவே கீழே விழுந்து உடைந்த கைதான் அது.
நண்பர்கள், அவர் சீக்கிரம் குணமாகி வர உங்களின் அன்பைச் செலுத்துங்கள். உங்களின் அன்பான எண்ணங்கள் அவரைச் சீக்கிரம் குணப்படுத்தும். நன்றி.
கே.பாலமுருகன்
21 comments:
Wishing her Speedy recovery.
Praying god.
everyhing will be ok, don't worry
கவலைப்படாதீர்கள்,உங்கள் அம்மா விரைவில் குணமடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.
விரைவில் அம்மா பூரணகுணமடைய ப்ரார்த்திக்கிறேன்.கவலைப்படாதீங்க சகோதரரே!!
தங்கள் அம்மா சீக்கிரம் குணமடைய பிரார்த்தனைகள்!!
தாயின் உடலும் உள்ளமும் விரைவில் தேறி புத்துணர்ச்சியோடு சகஜ வாழ்க்கைக்கு திரும்புவார் எனும் நம்பிக்கையோடு அவரை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள் அன்பரே..
she will be alright at the earliest. Don't worry.......
She will be alright.Dont worry!
அம்மா பற்றிய இத்தகவல் மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.
எனது பிரார்த்தனைகளும் என்றுமுண்டு.
அம்மா விரைவில் குணமடைவார்.
நன்றி நண்பர்களே. கூட்டாக பல பேர் என் தாயின் நலம் குறித்து சிந்துக்கும்போது, அதைவிட மிகப் பெரிய சக்தி வேறொன்றும் இல்லை என நம்புகிறவன் நான்.
பிறர் வாழ பிறர் நலனுக்காக அக்கறை கொள்பவன் கடவுளாகக் கருதப்படுவான். அதிர்விலிருந்து கொஞ்சம் மீண்டு வருவதாக தோன்றுகிறது, என் வீட்டை வந்து சேர்ந்திருக்கும் உங்களின் நல்லெண்ணங்கள்தான். நன்றி சகோதர்களே.
Dont worry Bro...
She will be allright..
Pray God!!
மிகவும் வேதனையான செய்தி!
தங்கள் தாயைக் கவனித்துக் கொள்ளுங்கள்!
மிகவும் வேதனையான விக்ஷயம், அம்மா விரைவில் நலம் பெறவும், அவர் கரம் முன்புபோல் சுகம் பெறவும் இறையருளை பிரார்த்திக்கின்றோம்! எங்கள் அன்பும் பிரார்த்தனையும் என்றும் அவருக்காக...
அம்மா விரைவில் நலம் பெற பிரார்த்திப்போம்.மிக முக்கியம் மாற்று சாவியை உடனே செய்யவும.
மிக்க நன்றி உங்களின் அன்பிற்கு, @ சமுராய்,@ ஜோதிபாரதி , @ தமிழ்வானன், @ சிவனேசு.
தங்கள் அம்மா சீக்கிரம் குணமடைய பிரார்த்தனைகள்!!
விரைவில் அம்மா பூரணகுணமடைய ப்ரார்த்திக்கிறேன்.கவலைப்படாதீங்க சகோதரரே!!
I'll pray to God that she gets well soon!
கவலைப்படாதீர்கள் பாலமுருகன்.
அம்மா நலமடைந்து திரும்புவா.
அம்மா விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன்
சென்ஷி @ நாடி @ மாதங்கி, சந்தரவதனா @ ஜோ @ நலம் விசாரித்தமைக்கும் பிரார்த்தனைகளுக்கும் மிக்க நன்றி
Post a Comment