Monday, February 15, 2010

கவிதை: திரும்பவும் ஒரு பறவை

சுவர்களில் படிந்திருந்த
வெயிலை விழுங்கத் துவங்கினார்கள்
சில பரபரப்புகளுடனும் சில அவசரங்களுடனும்
ஒருவரை ஒருவர் கடந்து சென்று கொண்டிருந்த
நிர்பந்தத்தில்




நேற்றைய அனுபவங்களும் இரைச்சல்களும்
பெரும் கூச்சலுடன்
ஒரு பறவையைப் போல
நகரம் திரும்புகிறது

மீண்டும் முதலிலிருந்து
அடுக்கத் துவங்கினேன்
தொலைந்தவர்கள் பற்றியும்
தொலைத்தவர்கள் பற்றியும்
தவறவிட்ட
சிறகுகளையும் உறவுகளையும்
எடுத்துச் செல்ல
நகரத்திற்குள் வந்திருக்கும் பறவை
கொத்திக் கொத்தித் தின்றது
பரபரப்பையும் சாமான்யனின் அவசரத்தையும்

(2010- மலேசிய தேசியப் பல்கலைக்கழகம் நடத்திய கவிதை போட்டியில் முதல் பரிசும் எம்.ஏ இளஞ்செல்வன் கோப்பையையும் வென்ற கவிதை)

கே.பாலமுருகன்
மலேசியா

6 comments:

Unknown said...

"""சுவர்களில் படிந்திருந்த
வெயிலை விழுங்கத் துவங்கினார்கள்
சில பரபரப்புகளுடனும் சில அவசரங்களுடனும்
ஒருவரை ஒருவர் கடந்து சென்று கொண்டிருந்த
நிர்பந்தத்தில்"""

நல்ல உருவகம் ,நல்லபதிவு வாழ்த்துக்கள் தொடருங்கள் ..

தேவரஜ் விட்டலன்

கே.பாலமுருகன் said...

@விட்டலன்
மிக்க நன்றி நண்பரே.

மயூ மனோ (Mayoo Mano) said...

//நகரத்திற்குள் வந்திருக்கும் பறவை
கொத்திக் கொத்தித் தின்றது
பரபரப்பையும் சாமான்யனின் அவசரத்தையும்//

இந்த உலகில் இப்படித்தான் வாழ்க்கை சாத்தியப்படுகிறது பலருக்கு... சிறப்புப் பெற்ற கவிதைக்கு வாழ்த்துக்கள்...

Tamilvanan said...

ந‌க‌ர‌ வாழ்க்கை ந‌ர‌க‌ வாழ்க்கையாகிக் கொண்டிருக்கிற‌து.ப‌ரிசு பெற்ற கவிதைக்கு வாழ்த்துக்கள்

கே.பாலமுருகன் said...

@நதியானவள் / @தமிழ்வாணன்

அன்பிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

மாற்றுப்பிரதி said...

nalla kavithai