இரண்டுநாள் பயணத்தில் சுங்கைப்பட்டாணியிலும் குரூணிலும் ராசி அழகப்பன் அவர்கள் மாணவர்களுக்காகத் தன்முனைப்பு கருத்தருங்களில் உரையாற்ற ஏற்பாடு செய்திருந்தேன். முதலில் செவ்வாய்க்கிழமை சுங்கைப்பட்டாணியிலுள்ள சரஸ்வதி தமிப்பள்ளியில் மூன்றாம் ஆண்டு மாணவர்களைச் சந்தித்துப் பேசுவதற்காக அதன் தலைமை ஆசிரியரான திரு.வீரையா அவர்களிடம் கேட்டிருந்தேன். உடனடியாக கவிஞர் அவர்கள் ஒரு மணி நேரம் பேசுவதற்கு அனுமதியளித்தார்.

செவ்வாய்க்கிழமை மதியத்தில் கோலாலம்பூரிலிருந்து சுங்கைப்பட்டணிக்குப் பேருந்திலேயே பயணம் செய்து வந்து சேர்ந்தார். பட்டர்வெர்த் நடரத்தில் இறங்கியவர் அங்கிருந்து ஒரு பழைய பேருந்தில் ஏறி சுங்கைப்பட்டாணி பேருந்து நிலையத்திற்கு வந்தடைந்தார். அப்படியொரு பேருந்தில் ஏறி நானே 10 வருடத்திற்கு மேலாக இருக்கும். எல்லாம் நவீன மையமாகிவ்வப்பிறகும் அந்தப் பேருந்தை வெகு காலத்திற்குப் பிறகு மீண்டும் பார்த்தேன். அதுவும் ராசி அழகப்பனின் வருகையின்போது.
எந்த ஆடம்பர சொகுசுகளையும் சற்றும் எதிர்பாராதவர் ராசி அழகப்பன் அவர்கள். முக்கியமாக இறுதிவரை எந்த நிகழ்விலும் பணத்தை எதிர்பார்க்காமல் உங்களுடனான சந்திப்பே போதுமானது என இருந்துவிட்டார். அவர் ஒரு பயணி அல்லது தேசாந்திரி ஆகையால்தான் சினிமா குறித்தும் இலக்கியம் குறித்தும் மிக ஆழமான விமர்சனங்களையும் புரிதலையும் கொண்டிருக்கிறார்.
-தொடரும்-
ஆக்கம்:கே.பாலமுருகன்
மலேசியா
2 comments:
நல்லபதிவு !
பகிர்வுக்கு நன்றி நண்பரே!!
//தன்னை ஒரு எளிமைக்குரியவன் எனச் சொல்லி மாணவர்களை புத்திசாலியாகக் காட்டியவர் ராசி அழகப்பன்.//
தன்னிலை உணர்ந்தவர்களால் மட்டுமே மற்றவர்களின் திறமையை அடையாளம் காட்ட முடியும்.
இயற்கையாகவே குழந்தைகள் பெரியவர்களைவிட அறிவாளிகள், அதனால்தான் அவர்களால் நம்மை எளிதாய் வசியப் படுத்த முடிகிறது.
Post a Comment