Wednesday, June 23, 2010

அடுத்து வரப்போகும் பிரதிகள்

எனது வலைத்தலத்தில் விரைவில்(தாமதமும் ஆகலாம்) பிரசுரமாகப்போகும் பிரதிகள் பின்வருமாரு:

1. சுயத்தம்பட்டமும் பின்நவீனகோமாளி எம்.ஜி.சுரேஸும்
( எம்.ஜி அவர்களின் அறிவானது ஆங்கிலேய பின்நவீன ஆளுமைகளின் பிரதியின் மூலம் உருவாக்கப்பட்ட மிகப் பிழையான ஒரு பிதற்றல்)
(அவர் பின்நவீனம் என்கிற குறியீட்டில் ஒளிந்துகொண்டிருக்கும் ஒரு சாதாரண கலாச்சார அதிகாரி அல்லது ஒழுக்கவாதி)
(வெறும் பின்நவீன பிரதிகளைப் பாடமாகப் படித்து வளர்ந்த சிறுபிள்ளை எம்.ஜி க்கு இந்த அறம் என்ற வார்த்தை தெரிந்திருப்பதே பெரிய விஷயம் என்பதால் அவரை மன்னித்துவிடலாம்) . . . இன்னும் பல பக்கங்களுடன்.

2.மலேசிய திரைப்பட ஆளுமையான மறைந்த யஸ்மின் அமாட் அவர்களின் கடைசி சினிமாவின் திரைவிமர்சனம்

3. புலம் பெயர் அரசியலைக் கேலி செய்யும் குடியேறி எனும் அடையாளத்திற்குள் ஒளிந்து விளையாடும் சிங்கப்பூர் "புனைவர்" லஷ்மி

4. சிறுகதை: மூன்றாவது முறை கதவைத் தட்டும்பொழுது

காற்பந்து பருவம் எனக்கான நேரத்தைச் சுரண்டிக் கொள்வதால் மேற்கண்ட பிரதிகள் எப்பொழுது பிரசுரமாகும் என்கிற கேள்விகளுடன். . .

மேலும்: அநேகமாக இந்தத் தடவை அர்ஜெண்டினா அல்லது பிரசில் (காகா எனும் விளையாட்டாளரை இழந்துவிட்டதால்- சந்தேகம்தான்) அல்லது போர்த்துகல் இதில் ஏதாவது ஓர் அணி உலகக் காற்பந்து கோப்பையை வெல்ல வாய்ப்புண்டு என உங்களுடன் சேர்ந்து இந்த அனுமானிக்கும் வித்தையில் நானும் கலந்துகொள்கிறேன்.Goal Goal. . . .

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

1 comment:

Tamilvanan said...

பிரேசிலின் காகா ஒரு ஆட்ட‌த்திற்கு ம‌ட்டும்தான் த‌டை செய்ய‌ப் ப‌ட்டுள்ள‌தாக‌ அறிகிறேன். பிரேசிலின் ம‌ற்ற‌ ஆட்ட‌க்கார‌ர்க‌ளும் சிற‌ப்பான‌ ஆட்ட‌த்தை வெளிப்ப‌டுத்த‌க் கூடிய‌வ‌ர்க‌ளே. இருப்பினும் முத‌ல் சுற்றுக்கு பிற‌கு ந‌டைப் பெறும் போகும் தோல்வியில் வெளியேரும் சுற்றுக்க‌ளில் தென் அமெரிக்கா நாடுக‌ளின் ஆட்ட‌ங்க‌ளின் த‌ர‌ம் ஆட்ட‌ங்காண்ப‌தாக‌வே இருக்கும்.