Monday, December 6, 2010

மலாய் மொழிப்பெயர்ப்புக் கவிதை: H.Hisham (தமிழில்: கே.பாலமுருகன்)

தெரியப்படுத்துங்கள் எல்லோரிடமும்
நான் ஓர் அடிமையென
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் வருவது போல
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சென்றும் விடுகிறேன்
நான் அழைக்கப்படவும் இல்லை
சென்றபோது தடுக்கப்படவுமில்லை
எனக்கு அளிக்கப்பட்ட வாழ்வுடன்
என் அடிமைப்பாதையைத் தேடி நகர்வதற்கு
விடப்பட்டேன்.

என் அன்பை
அனைவரிடமும் தெரியப்படுத்துங்கள்
என் வேண்டுதல்களும் என் ஞாபகங்களும்
நாம் கைக்குலுக்கிக்கொண்ட குறிப்புகளும்
நாம் சகோதரர்களாக இருந்த தருணங்களும்
இவையனைத்தும் தங்கிச் செல்லும் நினைவுகளாக
தேவையும் பயணமும் வெவ்வேறாக இருந்தபோதும்
இன்றைய பயனத்தில் தொடர்கிறது.

நாம் எதிர்பார்த்திராத ஒரு நாளில்
மீண்டும் சகோதரர்களாக ஒரே பயணத்தில்
சந்தித்துக் கொள்வோம்.
நம் வேட்கையும் நம் போராட்டமும்
நம் தேடலும் நம் இலட்சியமும்
ஒன்றுசேர நம் இலக்கை
உறுதிப்படுத்தி பயணத்தின்
எல்லையை வந்தடையும்.

3 comments:

முனைவர் மு.இளங்கோவன் said...

வணக்கம் பாலா
மொழிபெயர்ப்பு இயல்பாக உள்ளது.
இதனை ஒரு வேள்வியாக நினைத்துச்செய்யுங்கள்
மலாய் படைப்புகள் தமிழுக்கு வரட்டும்.
தங்களைப் போன்றவர்களால்தான் அதனைச் செய்யமுடியும்.
வாழ்த்துகளுடன் காத்திருக்கிறேன்.
மு.இளங்கோவன்,
புதுச்சேரி

H.Hisham.H said...

Thanks to Mr Balamurugan for your time and dedication to translate my poem in Tamil.

amaran said...

மிகவும் அருமை,இதைப் போல் ஆயிரம் கவிதைகள் வந்து விட்டாலும்,புத்தம் புதிய கவிஞரிடமிருந்து புதிய வார்த்தையில் கேட்கும் போது அதிசையமாக இருக்கிறது...