Thursday, May 10, 2012

கவிதை: பொம்மைகளின் உரையாடல்


வட்டத்திற்குள்ளேயே சுழலும்
கரடி பொம்மையும்
கைத்தட்டினால் கூவும் பொம்மை குருவியும்
உதறினால் வெளிச்சம் கக்கும்
நெகிழி உருண்டையும்
கலர் கலர் நீர்த்துப்பாக்கிகளும்
கடைக்கு வெளியே நின்று

நம்மைக் கவர விளையாட்டுக் காட்டும்
சீனக் கிழவிகளும்.
வேண்டாமென மறுக்கும் தருணம்
சட்டையைப் பிடித்து இழுத்து
அவர்கள் விளையாடுவது நம்மிடம் இல்லை.
நம்முடன் வராத நம் வீட்டுக் குழந்தைகளுடன்.

கே.பாலமுருகன்