Saturday, September 15, 2012

கே.பாலமுருகனின் சிறுவர் சிறுகதை நூல் வெளியீடு ‘தேவதைகளின் காகிதக் கப்பல்’


கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் ஏற்பாட்டில்
கே.பாலமுருகனின் சிறுவர் சிறுகதை நூல் வெளியீடு
‘தேவதைகளின் காகிதக் கப்பல்’

எழுத்தாளரும் ஆசிரியருமான கே.பாலமுருகன் அவர்களின் சிறுவர் சிறுகதை தொகுப்பான ‘தேவதைகளின் காகிதக் கப்பல்’ நூல் கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 07.10.2012(ஞாயிற்றுக்கிழமை) அன்று சுங்கைப்பட்டாணியில் மாலை வெளியீடு காணவிருக்கின்றது. மலேசியாவில் உள்ளூர் எழுத்தாளரால் எழுதப்பட்டு வெளியீடு காணும் முதல் மலேசியத்தன்மைமிக்க சிறுவர் சிறுகதை தொகுப்பு இது.

மலேசியத் தேர்வு வாரிய அதிகாரிகளின் மறுபார்வைக்குப் பிறகே 10 மாதிரி சிறுவர் சிறுகதைகள், சிறுவர் சிறுகதை எழுதுவது தொடர்பான வழிகாட்டி மற்றும் மாணவர்களுக்கான பயிற்சி எனப் பன்முகத்தன்மை வாய்ந்ததாக இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நூல் மாணவர்களுக்குப் பயனுள்ளதாக அமையும். கற்பனைவளம் என்பது ஒரு தலைமுறைக்குக் கிடைத்த வரமாகும். அதனை நாம் மாணவர்களிடமிருந்து பறித்துவிடக்கூடாது. கற்பனைவளமற்ற ஒரு தலைமுறை உருவாவதற்கு நாமும் கல்வி உலகமும் காரணமாக இருந்துவிடக்கூடாது என்ற நோக்கத்திலேயே இந்த நூல் படைக்கப்பட்டு வெளியீடப்படுகின்றது. திரண்டு வந்து ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறோம். நிகழ்ச்சியின் விவரங்கள் பின்வருமாறு:


நாள் : 07.10.2012 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : மாலை மணி 5.30க்கு
இடம்: வள்ளலார் மன்றம் சுங்கைப்பட்டாணி
      (தாமான் ரியா- கால்டெக்ஸ் எண்ணெய்க்கடை பின்புறம்)

பினாங்கு ஆசிரியர் பயிற்றகத்தின் விரிவுரையாளர் திரு.த.குமாரசாமி அவர்களும், ஆசிரியரும் இளம் எழுத்தாளருமான குமாரி.சு.தனலெட்சுமி அவர்களும் ஆறாம் ஆண்டு மாணவர் ஒரு சிலரும் நூல் வெளியீட்டின் ‘விமர்சன அரங்கில்’ நூல் தொடர்பான விமர்சனங்களை முன்வைப்பார்கள். சிறப்புரையும் உண்டு. வழக்கத்திற்கு மாறான நூல் வெளியீட்டு சடங்குகளைத் தவிர்த்த ஒரு மாற்று முயற்சியாக இந்த நூல் வெளியீடு இருக்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.

4,5 & 6 ஆம் ஆண்டு மாணவர்களுக்காகவே இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இப்பொழுதே அவர்களைப் பயிற்றுவிக்கவும். பின்னர், அவர்களே அவர்களுக்கான சவாலை எதிர்க்கொள்வார்கள்.
.
தொடர்புக்கு: எழுத்தாளர் கே.பாலமுருகன் (016-4806241)

2 comments:

Tamilvanan said...

வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…
Follower ஆகி விட்டேன்… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_5410.html) சென்று பார்க்கவும்...

நன்றி...